Pages

Monday, January 19, 2015

கருத்து சுதந்திரம் எனப்படுவது யாதெனின்....!

ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக..!
                         
                               ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ன்னு சொல்லுவாங்க.. கேள்விப்பட்டு இருக்கேன்.. இன்னிக்கு கண்கூடா பாத்தேன்..! எங்க தெரியுமா? இப்போதான் கொஞ்ச நேரம் முன்னாடி முகநூலில் உலவிக்கொண்டு இருக்கும்போது..! ஒரு பேஜில் சேர் செய்யப்பட்டு இருந்த வீடியோ கண்ணில் பட்டு தொலைத்தது.. அந்த பேஜ் அட்மின் அந்த வீடியோவுடன் இணைத்து இருந்த வாசகங்கள் என்னை  அந்த வீடியோவை பார்க்க தூண்டியது..!!
                                

                    அது ஒரு பிரபலமான பஞ்சாயத்து நிகழ்ச்சி...  இது போன்ற நாட்டாமை நிகழ்ச்சிகளை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும் பார்க்க தூண்டியது பெண்களை கேவலமாக வசவு பாடிய அதன் தலையங்கம்..!


அந்த நிகழ்ச்சியின் சுருக்கம் இதுதான் ஒரு கணவர் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பே..?!! இதற்கு காரணம் என்றும்  புகார் கொடுத்து இருக்கிறார் ...! அதை நாட்டாமை அம்மா விசாரிக்கிறார் அந்த கணவன் சொல்லும் அனைத்தும் அப்படியே இவன் போல ஒரு உத்தம புத்திரன் உண்டா என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு பாசக்கார கணவனை எப்படி இந்த பெண் பிரிந்தாள் என்று யோசிக்க வைக்கும் நேரத்தில் அந்த பெண் அழைக்கப்படுகிறார்..! அந்த பெண் வந்ததும் இந்த கணவன் செய்த கொடுமைகளை விவரிக்கிறாள் அப்போது அந்த பெண்ணின் மேல் பரிதாபம் ஏற்படுகிறது..! இவரிடமிருந்து பிரியவே நான் எனக்கும் அந்த பெண்ணுக்கும் தவறான உறவு இருந்தது என்று சொன்னேன் என்கிறாள் அந்த பெண் உடனே நாட்டாமை அம்மா மிரட்டுகிறார்..!!


                          

             


                   உண்மையை சொல்ல சொல்லி நிகழ்ச்சியை நடத்தும் அந்த நடுத்தர வயது பெண் மிரட்டும் தொணியில் கொடுத்த டார்ச்சரில் அந்த பெண் குற்ற உணர்வில் கூனி குறுகி ஆம் எங்களுக்குள் எல்லை மீறிய ஒரு உறவு இருந்தது உண்மைதான் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்த நாங்கள் காலப்போக்கில் இப்படி ஒரு தவறான சூழலில் சிக்கி கொண்டோம் என்று கூறுகிறார்..! இப்பொழுது சம்மந்தப்பட்ட அந்த எதிர்வீட்டு பெண் அழைக்கப்படுகிறார்.. ! அவரிடம் நாட்டாமை அம்மா விசாரிக்கிறார்... அந்த பெண்ணுக்கு இங்கே நடந்த விசாரணை எது பற்றியும் முன்கூட்டியே தெரியவில்லை போலும்.. நானும் இந்த பெண்ணும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறுகிறார்..! அப்பொழுது இல்லை உங்கள் இருவருக்குமான உறவை பற்றி உங்கள் தோழி கூறி விட்டார் எனும் பொது அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் பதட்டமும்.. இருக்கிறதே ! விவரிக்க வார்த்தைகள் இல்லை..!! சத்தியமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் மேல் அளவில்லா கோபம வந்தது....! இது அவர்கள் குடும்ப பிரச்சினை..! அதுவும் இரு பெண்கள் சம்மந்தப்பட்டது...! இதை அவர்களாகவே பேசி தீர்த்து கொள்ள முடியும்..! முடியாத பட்சத்தில் கோர்ட் இருக்கிறது ... இவர்கள் யார்? நாட்டாமை பண்ண? அட்லீஸ்ட் பாதிக்கப்பட்டவர்களின் முகங்களை மறைத்தாவது ஒளிபரப்ப வேண்டாமா?? அந்த பெண்கள் தவறை உணர்ந்து திருந்தி விட்டோம் என்கிறார்கள்..! இன்றோ அவர்கள் முகம் ஊரறிந்த ஒன்றாகி விட்டது..  அவர்களை காட்டியது மட்டும் இன்றி அந்த பெண்ணின் இரு குழந்தைகளின் முகங்களையும் சேர்த்து ஒளிபரப்புகிரீர்கள்..!! இது அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதித்து விடாதா??அவர்கள் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா?? இதுதானா உங்கள் ஊடக சுதந்திரம்? அடுத்தவன் வீட்டு பிரச்சனையை ஒளிபரப்பி லாபம் பார்க்க நினைக்கிறீர்களே உங்களுக்கு வெக்கமாக இல்லையா?
                 அந்த பெண்கள்  செய்தது சரியா பிழையா என்ற வாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை..! அவர்கள் செய்தது நிச்சயமாக தவறுதான்....ஆனாலும் அதை ஊரறிய மேடை ஏற்றி காட்டிய இவர்கள் சூழ்நிலை கைதிகளாய் ஆன அந்த பெண்களை காட்டிலும் மோசமானவர்கள்..! கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் இங்கே நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பார்க்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை...!உங்கள் சகோதரி 
ஷர்மிளா ஹமீத் 

      

Thursday, May 22, 2014

உங்கள் குழந்தைகள் தட்டில் உணவா? விஷமா?


              அய்யே பாலா அதெல்லாம் என் பிள்ளைங்க குடிக்காதுங்க.. !!
            முட்டையா உவ்வே.... ஓடியே போயிருவாங்க...!
அப்போ காய்கறி?
அதெல்லாம் என் பசங்க கண்ணுல கூட பாக்காதுங்க.... !


                     இப்படி சொல்லிவிட்டு பிள்ளைகளுக்கு இன்ஸ்டன்ட் நூடுல்சும் , செயற்கை குளிர்பானங்களும்,பாக்கட்டில் அடைத்த உணவுப்பண்டங்களும், பிஸ்கட்டும் கேக்கும் தருவது இப்பொழுது பெற்றோர்கள் மத்தியில் ஒரு பேஷனாகவே ஆகி விட்டது.. இன்னும் சொல்லப்போனால் அது அவர்களுக்கு ஒரு பெருமை தரக்கூடிய விஷயம் என்று நினைத்துக்கொள்ளும் மனப்பான்மையை இன்று பெரும்பாலும் பார்க்க முடியுது...
           
               இந்த மாதிரி உணவுகள்ல உள்ள கெடுதல்கள், பற்றி எடுத்து சொல்லி இதெல்லாம் சாப்டாதிங்கன்னு சொல்லப்போனா நம்மள எதோ வேற்றுக்கிரகத்துல இருந்து வந்து இறங்குன வினோத உயிரினத்த பாக்குற மாதிரி பாக்குறாங்க..! :(
           
                    ஒரு சில வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு செயற்கை உணவுகள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்றவை அவர்கள் வேலைப்பளுவை குறைப்பதால்  யூஸ் செய்றதா சொல்றாங்க..! இன்னும் சிலரோ எப்போதாச்சும் ஒரு தடவை தானே.. ?? புள்ள ஆசைப்பட்டு கேக்கும் போது தராம இருக்க முடியுமா அப்படி எல்லாம் கேட்டு வாதாடுவாங்க.. அவங்ககிட்ட நான் ஒரே ஒரு கேள்விதான் கேப்பேன்... இப்புடி கேக்குறதுக்கு என்னை மன்னிக்கணும்..! வேலை அதிகமா இருக்குன்னு அல்லது பூச்சிக்கொல்லி மருந்து அழகான பாட்டில்ல ஊத்தி இருக்கு அத பார்த்து உங்க புள்ள ஆசைப்பட்டு கேக்குதுன்னு  கொஞ்சூண்டு தானேன்னு குடிக்க சொல்லுவிங்களா? கிட்டத்தட்ட இதே போல சொல்லப்போனா பூச்சிகொல்லியை  விட பல மடங்கு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் தான் நீங்கள் புள்ள ஆசப்படுதுன்னு வாங்கி கொடுக்கும் செயற்கை உணவுகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கு....!


       


                      ஏற்கனவே நம்ம சாப்புட்ற இயற்கையான உணவுகள் லேயே அளவுக்கு அதிகமான உரங்களும் பூசிக்கொல்லிகளும் சேர்த்து நம் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமா விஷமாக்கிக்கிட்டு இருக்காங்க.. இது போதாதுன்னு  இது போல செயற்கை உணவுகள நம்ம குழந்தைகளுக்கு கொடுத்து அவங்க உடம்ப விஷமாக்கி வேண்டாத நோய்களுக்கு வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமா?
                         
                                 நோய் வந்த பின் டாக்டர் தர்ற மருந்துகளை எவ்ளோ    சிரமப்பட்டு  எப்பாடுபட்டேனும்  குழந்தைகளை சாப்பிட வைக்க முயற்சி செய்யும் நாம்..,  அதே முயற்சியை, சிரமத்தை..நோய் வராமல் காக்க உதவும் இயற்கை உணவுகளை, காய்கறி,பழங்கள் போன்றவற்றை தருவதில் ஏன் எடுப்பதில்லை?
           
                             சிந்திங்க..! செயல்படுங்க..! முடிந்த வரை செயற்கை உணவுப்பொருட்களை உங்கள் குழந்தைகளுக்கு தராதிங்க..! நீங்களும் சாப்டாதிங்க.. ப்ளீஸ்..!!!!


உங்கள் சகோதரி ,
ஷர்மிளா ஹமீத்.