Pages

Tuesday, November 13, 2012

நானும் விஞ்ஞானிதான்...!! (தொடர் பதிவு.)

                   பல நாட்களா என்ன எழுதன்னு தெரியாம மண்ட காஞ்சு போயி இருந்த நேரத்துல என்றும்பதினாறு அக்கா ( ஆமா உங்க நிஜப் பேரு என்ன? ) ஒரு பதிவப்போட்டு தொடர் பதிவு எழுத சொல்லி என்னையும் கோர்த்து விட்டுட்டாங்க..! திண்ணைல படுத்து கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்வு அப்படிங்குற மாதிரி... ஆத்தா டாபிக் கெடச்சுருச்சேன்னு ஒரு நிமிஷம் துள்ளி குதிச்சுட்டேன் :) நன்றி அக்கா நன்றி...! ( எந்த தைரியத்துல அக்கா ன்னு கூப்புடுறேன்னு சண்டைக்கு எல்லாம் வந்துரப்புடாது ஆமா சொல்லிப்புட்டேன் :))

அப்படி என்னத்துக்கு தொடர்பதிவுன்னு தெரியாம கூட்டத்துல தொலைஞ்ச பாப்பா மாதிரி முழிக்கிற சிலருக்காக ஒரு குட்டி வெளிச்சம் பின்னாடி இதோ..! (பிளாஷ்பேக் ன்னும் சொல்லிக்கலாம்..! ஹிஹிஹி :)

சின்ன வயசுல நம்ம பாக்குற விஷயங்கள நம்மளோட அப்போதைய அறிவ வச்சு ஓரளவுக்கு புரிஞ்சு வச்சு இருப்போம் அதே விஷயத்த பத்தி நம்மளோட பார்வை வளர வளர மாறும் அப்பறம் ஒரு நாள் நின்னு திரும்பி பார்த்தோம்ன்னா... சின்ன வயசுல நம்ம எவ்ளோ காமெடியா புரிஞ்சி வச்சு இருக்கோம் ஒரு விஷயத்தை அப்படின்னு தெரிய வரும் இல்லையா? அது பத்திதான் என்றும் பதினாறு நாம எல்லாரும் விஞ்ஞானி தான் அப்படின்னு ஒரு பதிவு எழுதி என் அறிவுக்கண்ண படார்னு திறந்துட்டாங்க ஹிஹிஹி

ஓகே மொக்க போட்டது போதும்ம்னு நீங்க எல்லாம் கதறுறது காதுல விழுந்துருச்சு...! என்ன பண்ண உங்க  தலை எழுத்து இந்த கொடுமை எல்லாம் நீங்க அனுபவிச்சு தான் ஆகணும் :)

எங்க ஊருல நிறைய பேரு வேலை அல்லது தொழில் விஷயமா மலேசியா விற்கு அதிகமாக பயணம் செய்த நேரம் அது...  அதுக்கு இப்ப என்னன்னு கேக்குரிங்களா? அங்கேதானே மேட்டரே இருக்கு..! சின்ன வயசுல பிளைட் பறந்தாலே அண்ணாந்து பாக்குறது டாட்டா காட்டுறதுன்னு அந்த வயசுல நீங்க எல்லாம் செஞ்சத தான் நானும் செஞ்சேன் ஆனா ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா? நான் அப்போவே பெரிய ஜீனியஸ் இல்லையா? (நோ நோ கல்ல கீழ வைங்க கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் என்னாகுறது அவ்வ்வ்வ் ) சோ நான் என்ன நெனசுக்குவேன்னா பிளைட் அப்படியே பறந்து போயி வானத்துல லேண்ட் ஆகும் போல...! மலேசியா அங்கதான் இருக்குது போல..! (வெயிட் வெயிட் அம்புட்டு அறிவாளியா நீயி அப்படின்னு இப்போவே ஆனந்த கண்ணீர் விட்டா எப்புடி? ) இப்புடி ஏகப்பட்ட கற்பனைகள் என் மனசுல..! அப்படி அங்க வானத்துல இருக்குற ??!! மலேசியா ல உள்ள மண்ணு எல்லாம் ஏன் நம்ம தலைல கொட்ட மாட்ட்டேன்கிறது அப்புடின்னு எல்லாம் யோசிச்சு என் மண்டை காஞ்சதுதான் மிச்சம்..! ஹிஹிஹி இப்போ நெனச்சாலும் அம்புட்டு அப்பாவியா நீயி பாவி..! அப்புடின்னு ஒரு மைண்டு வாய்சு கேக்கும் :)

நான்தான்  சின்ன வயசுல உலக மகா அறிவாளியா இருந்துருக்கேன்ன்னு பார்த்தா எங்க மம்மி என்னை எல்லாம் விட பெரிய விஞ்ஞானியா இருந்துருப்பாங்க போல.. இதோ அவங்களோட வெளிச்சம் பின்னாடி...! அட அதாங்க பிளாஷ்பேக் :))

எங்க அம்மா சின்ன வயசுல அப்போதான் ரேடியோ வந்த புதுசுன்னு நெனைக்கிறேன்... அப்போ அவங்க இந்த பொட்டிக்குள்ள  இருந்து பேசுற குட்டி குட்டி மனுஷங்க (??) எல்லாம் எப்படி சாப்புடுவாங்க.... இயற்கை தேவைக்கு எல்லாம் என்ன பண்ணுவாங்க.... இப்புடி எல்லாம் யோசிப்பாங்கலாம்.... ரொம்ப யோசிச்சு மண்டை குழம்பாம ஒரு வேளைநம்ம தூங்குனதுக்கு அப்பறமா நைசா வெளில வந்து சாப்ட்டுட்டு போயிடுவாங்க போல அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாங்களாம்..... ஹஹஹஹஹா :)

டிஸ்கி: பதிவே டிஸ்கி சைஸ்ல தான் இருக்கு..இதுல டிஸ்கி வேறயா?? ஐயோ அய்யோ :))

Friday, November 02, 2012

உனக்கென நான் எனக்கென நீ...!

           
3-11-2000
     நேற்றுதான் என் மாமத்தா என் கையை பிடித்து அவர் கையில் கொடுத்தது மாதிரியும் இவர் கழுத்து நிறைய மாலையும் முகத்தில் வழியும் வியர்வையுமாக என் கழுத்தில் மகர் சங்கிலியை போட்டு விட்டது மாதிரியும்  இருக்கிறது... ஹ்ம்ம்ம்ம்ம்ம் அதற்குள் ஆகி விட்டது முழுதாக 12 வருடங்கள்...! அல்ஹம்துலில்லாஹ்...!
               கல்யாணம் என்றால் என்ன குடும்பம்  என்றால் என்ன என்று ஒரு சிறிய யோசனை/கற்பனை கூட பண்ணிப்பார்த்திராத  சிறு வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த உடனேயே திருமண ஏற்பாடு செய்து விட்டார்கள்..! மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையை கூட அழுத்தி சொல்ல தெரியாத அப்பிராணி நான் :)  ( அது அப்போ)         அவருக்கும் எனக்கும் பத்து வருட வயது வித்தியாசம் இதானலோ என்னவோ அவரிடம் இருந்த மெச்சூரிட்டி, புரிந்துணர்வு பொறுப்பு இதெல்லாம் அப்போ என்னிடம் பேருக்கு கூட இல்லை..! (இப்போ மட்டும்? )ஆனாலும் என் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களை நடவடிக்கைகளை பெரிய மனதுடன் பொறுத்து கொண்டார்... ( இன்னமும் அப்படித்தேன் வேற வழி?? )
                அவர் சாப்பிடும் போது நான் அருகில் அமர்ந்தால் நான் கேட்காமலே ஊட்டி விடும் அன்பாகட்டும்...!
நான் காலையில் எந்திரிக்க  தாமதமானால் என்னை தொந்தரவு பண்ணாமல் பிள்ளைகளை பள்ளிக்கு அவரே ரெடி பண்ணி அனுப்புவதாகட்டும்...!
தனது பிசியான வேலைக்கு மத்தியிலும் நேரத்திற்கு போன் பண்ணி சாப்பிட்டியா என்று கேட்பதும் இல்லை என்றால் அவரே அருகில் உள்ள கடைக்கு அழைத்து சாப்பாடு அனுப்ப சொல்லும் கனிவாகட்டும்...
எனக்கு உடம்பு சரி இல்லை என்றால் விடிய விடிய விழித்து இருந்து கவனிக்கும் கருணை ஆகட்டும்...
அவருக்கு நிகர் அவரே....! :)

எனக்கோ பிள்ளைகளுக்கோ எதுவும் தேவை (சில சமயங்களில் தேவை இல்லை என்றாலும்)என்றால் கேட்ட உடனே வாங்கி தரும் அவருக்கு தனக்கு என்று எதுவுமே வாங்கி கொள்ள தெரியாது அல்லது தோணாது...... கோபத்தை கூட கோபமாக காட்ட தெரியாத அப்பாவி  அவரது கோபத்தில் கூட அப்படி ஒரு நிதானம் இருக்கும்...!


இத்தனை வருடத்தில் எத்தனை சந்தோசங்கள், சண்டைகள், எத்தனை கருத்து வேறுபாடுகள் ,எத்தனை எத்தனை இம்சைகள் ( என்னால் அவருக்கு)இருந்தாலும் நான் இன்றி அவராலோ அவர் இன்றி என்னாலோ இருக்க முடியாது என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தி இருக்கிறான்.. அல்ஹம்துலில்லாஹ்..!

என் அம்மாவோ என் அண்ணனோ கூட என்னை கோவமாக ஒரு வார்த்தை சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமல் துடிக்கும் அவரை , என் கண்கள் கலங்கினால் தானும் சேர்ந்து கலங்கும் அவரை சில/பல முறைகள் காயப்படுத்தி இருக்கிறேன் நிதானம் அற்ற என் பேச்சால் என் செயல்களால்... அதற்கெல்லாம் சேர்த்து இப்பொழுது இங்கே மன்னிப்பு கேட்க தோன்றுகிறது எனக்கு...!

என்னை மன்னிச்சுடுங்க மச்சான்....! (இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்னு உறுதியா சொல்ல முடியாது ஏன்னா என்னைப்பத்தி என்ன விட உங்களுக்கு நல்லா தெரியும்... :) ஆனாலும் என்னால முடிஞ்ச வரை உங்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன்..! உங்க மேல எனக்கும்  ஒரு சில வருத்தங்கள் இருந்த்துச்சு ஆனா அதெல்லாம் தங்கு தடையின்றி நீங்க காட்டும் அன்பின் முன்னால் தூள் தூளா ஆகிடுச்சு..! அல்ஹம்துலில்லாஹ்..!

டிஸ்கி : ஆனந்த கண்ணீரால் நிறைந்த கண்களை தவிர வேறொன்றும் இல்லை இந்த பதிவை எழுதி முடிக்கும் வேளையில்...!

இது என் சுயவாழ்க்கையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல..!! என் வாழ்க்கையின் பக்கங்களில் பதியப்பட வேண்டிய ஒன்று என நான் விரும்பியது..! என்னவரை பற்றி அவரிடம் நான் கூற வேண்டும் என விரும்பி நேரடியாக கூற முடியாமல் போனது ..!அட வெக்கம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க சில விஷயங்கள் நேரில் சொல்வதை விட எழுத்தில் சொல்வதுதான் நல்லா இருக்கும்...! அதுக்காக ஒரே வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு நான் அவருக்கு லெட்டரா போட முடியும்?? அதான் இப்படி ஹஹஹ்ஹா :)) பின்னாளில் இதை என் பிள்ளைகளே பார்க்க நேரலாம்...! (பார்க்க வேண்டும்..) என்பதே என் ஆசை...!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Tuesday, September 25, 2012

இப்புடித்தான் இருக்க வேண்டும் ஆம்பளை ...!!

அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்..!

என்னடா இது எப்போ பார்த்தாலும் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்குற உரிமைகள் , கடமைகள் பத்தியே பேசிக்கிட்டு இருக்கோமே..! ஆனா ஒருத்தர் கூட இந்த இஸ்லாமிய ஆண்கள் எப்படி இருக்கணும்? அவங்களோட உரிமைகள் கடமைகள் என்னன்னு சொல்ல மாட்டேன்கிறாங்களே அப்படின்னு மிகப்பெரிய குறை ஒன்னு இம்புட்டு நாளா மனச அரிச்சுகிட்டே இருந்துச்சுங்க..!

                      இன்னிக்கு சகோதரி நாசியா அவர்கள் இஸ்லாமிய பெண்மணியில் பகிர்ந்த பதிவு அந்த குறையை எல்லாம் அடிச்சு தூள் தூளாக்கிடுச்சு போங்க..!

ஒரு சில ஆண்கள் என்னதான் இஸ்லாம் இஸ்லாம் ன்னு வாய் கிழிய பேசுனாலும் நடைமுறைன்னு வரும் பொது சில விஷயங்கள்ல அலட்சியமா இருந்துர்றாங்க..! அதுல முதலாவதா வர்றது தாடி..! அது சுன்னத் தானே வாஜிப் இல்லையே என்ற அலட்சிய மனப்பான்மை பெரும்பான்மை ஆண்களிடம் இருக்கிறது..! மேலும்   வீட்டு வேலை என்றாலே எல்லா வேலையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்..! ஆண் என்பவன் பெண்ணுக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருக்க தேவை இல்லை என்று அசால்டாக (ஆணாதிக்க திமிருடன்) இருப்பவர்களும் உண்டு.. அது போன்ற ஆண்களுக்கெல்லாம் நறுக்கென்று தலையில் கொட்டு வைத்தது போல் இருக்கும் இந்த சகோதரியின் பதிவை பார்த்தால்..! அதிலும் மனிதர்குல மாணிக்கம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்... அவர்களே வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருந்தார்கள் என்பதை படிக்கும் உண்மையான முஸ்லிம் ஆண்கள் இனிமேல் மனைவிக்கு, தாய்க்கு, சகோதரிக்கு உதவியாக இருக்க போட்டி போட்டு வேலை செய்வார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை..!!

முஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?! "உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே"

சகோதரி நாஸியாவின் பதிவை முழுவதும் வாசிக்க... >>இங்கே <<<

Monday, September 24, 2012

யூட்யூப் புறக்கணிப்பு.. !! சாத்தியமா??!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே..!
                    சர்ச்சைக்குரிய திரைப்படமான innocense of muslimsஎன்ற திரைப்படத்தின் ட்ரைலரை யூட்யூப் நீக்கும் வரை யூட்யூபை முழுவதுமாக  புறக்கணிக்குமாறு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்படுகிறது..! என்னை பொறுத்தவரையில் இது தவறான முடிவாகவே தோன்றுகிறது.. ஏன் என்பதை பார்ப்பதற்கு  முன் ஒரு சின்ன  பிளாஷ் பேக்..! 

                                 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட youtube தளம் ஆரம்பம் முதலே சூடு பிடிக்கத் தொடங்கியது...நிறுவனத்தை தொடங்கிய மூன்று இளைஞர்களில் ஒருவர் முஸ்லிம் என்பது கூடுதல் தகவல் :) . 2006 ஆம் ஆண்டு , அதாவது youtube தொடங்கி  ஒன்றரை வருடம் ஆன உடனே , Google நிறுவனம் அதை வாங்கியது...ஒன்றரை வயதான நிறுவனத்துக்கு google கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? 1 .65 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பின் படி சுமார் 7000 கோடி ரூபாய்க்கும் மேல். அந்த நேரம் வெறும் 100 பேர் கூட அந்த நிறுவனத்தில் பணிபுரியவில்லை... அப்படியெனில் ஒரு பணியாளருக்கு தலைக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பு...!!!

                                வெறும் ஒன்றரை வயதான, நூறு பேர் கூட மொத்த பணியாளர்கள் இல்லாத, மூன்று கத்துக்குட்டிகளால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு ஏன் இவ்வளவு தொகையை கூகிள் அள்ளிக் கொடுத்தது ??? இதுதான் இன்டர்நெட் இன் அடுத்த பரிணாமம் என்பதை கூகிள் யூகித்தது தான் காரணம். நினைத்தபடியே youtube அசுர வேகத்தில் வளர்ந்தது. லாபத்தை அள்ளிக் கொடுத்தது.
google அல்லது youtube நிறுவனம் காணொளிகளை போட்டு யாரையாவது பார்க்கச் சொன்னதா? "இல்லை.. காணொளிகளை போடுவதும் பொதுமக்கள் தான்...அதைப் பார்ப்பதும் பொதுமக்கள் தான்" அதுதான் youtube இன் பலம்.

                                   இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த ஊடகத்தை முஸ்லிம்கள் கொஞ்சம் சரியாகப் பயன்படுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்...மைக், ஆடியோ, வீடியோ, தொலைக்காட்சி , சினிமா என்று உலகில் அவ்வப்போது தோன்றிய எல்லா ஊடங்கங்களையும் கொஞ்சம் மெதுவாகவே பயன்படுத்த ஆரம்பித்த முஸ்லிம்கள் இந்த youtube தளத்தை நன்றாகவே பயன்படுத்தினார்கள். மாஷா அல்லாஹ்..!  எல்லா விஷயங்களிலும் இங்கே கிடைக்காத மார்க்க அறிஞர்களின் கருத்தே இல்லை எனலாம்...!

தற்போதைய நிலவரம்..

                                 Innocence of muslims என்ற பெயரில் பெருமானார் ஸல் அவர்களை இழிவுபடுத்த முயன்ற ஒரு வீடியோ இன்று நம்மை இந்த தளத்துக்கு எதிராக திரும்ப வைத்துள்ளது. உண்மையில் இந்தப் படம் வெறும் ஒரு சாம்பிள் மட்டுமே...பெருமானாரை பற்றிய மோசமான கருத்துடைய காணொளிகள் ஆயிரக்கணக்கில் இந்த தளம் முழுவதும் கிடைக்கிறது... பெருமானார் ஸல் அவர்கள் மட்டுமல்ல , ஈசா (அலை) , மூஸா (அலை) தொடங்கி இந்துக்களின் கடவுள்கள் என்று தொடங்கி எல்லா கடவுள் கொள்கைகளையும் விமர்சிக்கும், இடித்துப் பேசும், இழிவுபடுத்தும் வீடியோ க்கள் இந்த தளத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை நாம் கண்டுகொண்டால் இதற்கே ஆயுள் முழுவதும் போகும் சகோஸ்..அது தான் உண்மை...!!

                                சர்ச்சைக்குரிய படம் முழுவதும்(சுமார் இரண்டு மணி நேரத் திரைப்படம் ) எடுக்கப்பட்டு கலிபோர்னியா மாகாணத்தில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது...படம் முழுவதும் விஷம் என்பதால் அமெரிக்கர்கள் இந்தப் படத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை... முழுக்க முழுக்க காலியான திரையரங்குகளில் சில நாள் மட்டுமே ஓடி பெட்டியில் படுத்துக் கொண்டது...இந்த விஷ சினிமாவுக்கு (இப்போது பிரபலமாக உள்ள 14 நிமிட வீடியோ அல்ல...முழுத் திரைப்படம் ) அமெரிக்கர்கள் கொடுத்த பேராதரவு அவ்வளவு தான்...!! இது புரியாமல் அமெரிக்கா என்றாலே இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் ஒரு கொடுங்கோல் கூட்டம் என்று ஒரு சில  சகோக்கள் சொல்கிறார்கள்... சின்னப் படங்களுக்கு கூட review எழுதுபவர்கள் கூட இதனை கண்டு கொள்ளவில்லை.

                                  திரைப்படம் ஓடவில்லை என்றவுடன் படம் எடுத்த விஷமிகளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. திரைப்படத்தை விட சிறந்த ஊடகமான youtube தளத்தை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது? உ டனே களத்திலிறங்கி திரைப்படத்தின் சில பகுதிகளை வெட்டி ஒட்டி ஒரு பதினான்கு நிமிட கிளிப்பிங் ஆக்கி youtube தளத்தில் உலாவ விட்டார்கள்...மறுபடியும் யாருமே கண்டு கொள்ளவில்லை...!!
              என்ன youtube தளத்தில் கூட யாருமே கண்டு கொள்ளவில்லை...என்ன செய்யலாம் என்று யோசித்த சதிக் கும்பல் மெகா திட்டம் ஒன்றை தீட்டியது...அதுதான் அதனை அரபியில் மொழி பெயர்த்து வெளியிடுவது என்பது...!!
                அரபியில் வெளியான திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக மின்னஞ்சல்கள் மூலமாகவும் facebook போன்ற தளங்கள் மூலமாகவும் பிரபலம் அடைய துவங்கியது...நெஞ்சைத் தொட்டுச் சொன்னால் பிரபலம் அடைய வைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும்...உச்ச கட்டமாக எகிப்தின் சில முன்னோடி தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ வின் பகுதிகள் காட்டப் பட்டன...
                       விளம்பரம் இல்லாமல் சதிகாரர்களின் வீடியோ வுக்கு நாமே விளம்பரம் செய்து, நமது தொலைக்காட்சியிலேயே காமித்து பெரும் விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம்...பின்னர் நடந்தவை அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்...

      சரி துவக்கத்திற்கு மீண்டும் வருகிறேன்...சர்ச்சைக்குரிய வீடியோ "சாம் பசிலே " என்ற பெயரில் upload செய்யப்பட்டது...இன்றும் நம்மில் சிலர் சொல்வதைப் போன்று அல்லாமல் அந்த காணொளியை youtube நீக்கி பல நாட்கள் ஆகி விட்டது...
This video has been removed as a violation of YouTube's policy against spam, scams, and commercially deceptive content 
என்று தெரிவித்திருக்கிறது... ஆனாலும் இந்த தருணத்தை எதிர்பார்த்து இஸ்லாமிய எதிரிகள் இதனை டவுன்லோட் செய்து வைத்திருந்தனர்... அதனை இன்று வெவ்வேறு பெயர்களில் upload செய்கின்றனர்... copyright பிரச்சினைகளால் youtube தினமும் ஆயிரக்கணக்கில் வீடியோ க்களை நீக்குகிறது...நீக்கப்படும் ஒவ்வொரு வீடியோ வும் அடுத்த வினாடி மற்றொரு பெயரில் வெளி வருகிறது...இது அவர்களால் தடுக்க முடியாத ஒன்று...ஏன் தடுக்க முடியாத ஓன்று என்று அறிய அவர்கள் தளத்தின் புள்ளி விவரம் நான் தரவேண்டும்...youtube தளம் ஒவ்வொரு நாளும் மூன்று பில்லியன்(சுமார் முன்னூறு கோடி ) தடவை ஹிட் ஆகிறது... ஒவ்வொரு நிமிடமும் ..ஆம் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 48 மணி நேரம் நீளும் வீடியோக்கள் upload செய்யப்படுகின்றன...!
              இதே யூட்யூபில் எத்தனையோ தாவா செய்திகள் அனுதினமும் பதியப்படுகின்றன..! எத்தனையோ ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பகிரப்படுகின்றன..! அதை நமக்கு சாதகமாக உபயோகிப்போமே..!? நாம் உண்ணும உணவில் சிறு கல் தென்பட்டால் வீசி எறிய வேண்டியது அந்த கல்லைத்தானே ஒழிய ஒட்டு மொத்த உணவையும் அல்ல..! 

                 ஒரு பிரச்சனை என்று வந்த உடன் அந்த இடத்தை விட்டு ஒதுங்குவது விவேகமாகாது..! அதே இடத்தில் இருந்து அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப வேண்டும் அதுதான் நம் இப்போதைய கடமையும் கூட..! 
                                         அதெப்படி இந்த மோசமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப இயலும் என்கிறீர்களா?
இதுக்கும் ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கு..!
                   சர்ச்சைக்குரிய படம் வெளியாகி  ஒரு வித பதட்டமான சூழலில் உலகம் இருந்த போது கடந்த வாரம் உலகின் பிரசித்தி பெற்ற அமெரிக்க சஞ்சிகைகளில் ஒன்றான NEWSWEEK  கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டது. அதன் தலைப்பு  MUSLIM RAGE (முஸ்லிம் வெறி அல்லது முஸ்லிம் கொலை வெறி ). எழுதியவர் அயான் ஹிர்சி அலி.. இந்தப் பெண்மணி கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பாளர்.   போராட்டங்கள் நடந்த உடன் இஸ்லாத்தை விமர்சிக்கும் முன்னாள் முஸ்லிம் பெண்மணி ஒருவரை வைத்து பிரபல பத்திரிகை கட்டுரை வெளியிடுகிறது என்றால் எந்த அளவு முஸ்லிம்கள் மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..!
                அதன் தலைப்பின் கீழ் " நான் எப்படி முஸ்லிம் வெறியிலிருந்து தப்பித்தேன்? எப்படி இந்த வெறியை முடித்து வைக்கலாம் " என்றெல்லாம் கேள்விகள் வைக்கப்பட்டுள்ளது... ஆனா மேட்டர் அதுவல்ல..! NEWS WEEK இன் இந்த சதியை எப்படி சமயோசிதமாக நம் சகோதரர்கள் முறியடித்தார்கள் என்பதுதான் ஹைலைட்..!

                           நியூஸ் வீக் பத்திரிக்கையின் கட்டுரை வந்த உடனே ஆரம்பித்தார்கள் வேலையை. twitter தளத்தில் நீங்கள் ஒரு தலைப்பிற்கு உடைப்பது நீங்கள் tweet செய்தால் # குறி போட்டு அந்த தலைப்பை நீங்கள் குறிப்பிட வேண்டும். இதே தலைப்பில் வேறு பலரும் tweet செய்தால் அது எல்லாமே ஒரு இடத்தில் வரும். #muslimrage என்ற தலைப்பில் உலக அளவில் தூதரகங்கள் எதிரில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் , வன்முறைகள் குறித்தும் கருத்து பகருங்கள் என்று நியூஸ் வீக் கூறியிருந்தது,
உடனே சுதாரித்த முஸ்லிம்கள் (மிகக் குறிப்பாக அமெரிக்க முஸ்லிம்கள் :)) இந்த தலைப்பில் நகைச்சுவை கலந்த செய்திகளை எழுதிக் குவித்தார்கள். அதில் பல செய்திகள் உண்மை . பல செய்திகள் நகைச்சுவை... இந்த தலைப்பு பிரபலம் அடைந்ததும் நிறைய மாற்று மத சகோஸ் கூட கருத்துத் தெரிவித்தார்கள்.

சில சாம்பிள்கள் உங்கள் பார்வைக்கு :


Man next to me on subway reading Koran on his Samsung Galaxy tablet just offered his seat to an older lady. #MUSLIMRAGE truly affects us ஆல்
சுரங்கப் பாதை train (Subway ) பயணத்தில் குரானை சாம்சுங் சிலேட்டுக் கணினியில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் தனது இருக்கையை ஒரு வயதான பெண்மணிக்கு விட்டுக் கொடுத்தார். #muslimrage முஸ்லிம் வெறி எல்லாரையும் பாதிக்கிறது :)


எனது நண்பரின் சின்ன வயது மகன் விமான நிலையத்தில் தொலைந்து விட்டான்...எப்படி கத்தி அவனை கூப்பிடுவது? அவனோட பேரு வேற ஜிஹாத் :) #muslimrage


குழந்தைகளுடன் பூங்கா ஒன்றில் அமர்ந்து ஒரு பெரிய முஸ்லிம் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது..எல்லோரும் ஒரே தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுகிறார்கள். நிறைய முஸ்லிம் வெறி இங்கே தென்படுகிறது என்று ஒருவர் அந்த புகைப்படம் போட்டு நக்கல் அடிக்கிறார்.
"There's a lot of #MuslimRage going on in this photo,")


நியூஸ் வீக் பத்திரிக்கையை இப்படி முஸ்லிம்கள் கோமாளி ஆக்கியது யாருக்குத் தெரியும் என்று நீங்கள் கேக்கலாம். எல்லோருக்குமே தெரிந்தது என்பது தான் சூப்பர் டூப்பர் வெற்றி :)

உலகின் பிரபல பத்திரிக்கைகள் இதனை கவர் செய்தன :)

உதாரணம்
http://www.salon.com/2012/09/17/newsweeks_muslim_rage_invites_muslim_humor/


அறிவியல் கட்டுரைகளில் உலகின் பிரதான பத்திரிகைகளில் ஒன்றான WIRED சஞ்சிகை கூட இவ்வாறு செய்தி வெளியிட்டது... (எதிர்க்குரல் Aashiq Ahamed இன் பதிவுகளில் WIRED பத்திரிக்கையை அவர் நிறைய மேற்கோள் காட்டுவார். ) http://www.wired.com/threatlevel/2012/09/muslimrage/

Comedy Ensues as Twitter Users Hijack Newsweek's #MuslimRage Hashtag | Threat Level | Wired.comwww.wired.com

                                     நாம் செய்யவேண்டியது எல்லாம் இதுதான் அவர்கள் நமக்கெதிராக செய்யும் சதிகளை கண்டு உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக யோசித்து அந்த சதிகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விடுவதும் அதனை நகைப்புக்கு உள்ளாக்கி அவர்களை காமெடி பீசாக்குவதும் தான் 

வன்முறைகள் நமக்குத் தேவையே இல்லை.. !!!
                        இணையம் என்பது மாபெரும் கடல்...சந்தேகமே இல்லை... இந்த மாபெரும் கடலில் தான் நாம் மீன் பிடிக்க வேண்டும்...சுறாக்களையும் திமிங்கலத்தையும் கூட பிடிக்கலாம். நாம் சில குப்பைகளைப் பார்த்து விலகப் போகிறோமா? அது சரியா?
நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது எனதருமை சகோதர சகோதரிகளே..! சிந்தியுங்கள்..! செயல்படுங்கள்..!

டிஸ்கி : சமூக வலைத்தளத்தில் எங்கள் டீக்கடை குழுமத்தில் பதிவர் பீர் முஹம்மது அவர்கள் பகிர்ந்த பதிவை அவரின் வேண்டுகோளுக்கிணங்க சிலபல மாற்றங்களுடன் இங்கே மீள்பதிவாக இட்டு இருக்கிறேன்..! 

சகோதரர் பீர் உடைய வலைப்பூ முகவரி >>>இங்கே  <<<<

Saturday, September 22, 2012

அடப்பாவிங்களா..! இதுல கூடவா போலி தயாரிப்பாங்க ??


மார்க்கெட்டில் இருக்கும் பிரபல பொருட்கள் போலவே  தரம் குறைவான பொருட்களை உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பது சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல..!! அது நமக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இவர்கள் தற்பொழுது சில காலங்களாக மக்களின் அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உணவுப்பொருட்களிலும் தங்கள் கை வரிசையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்??? இது சற்றே பழைய தகவல் என்றாலும் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவே இந்த பதிவு..!

கடந்த சில மாதங்கள் முன்பு இங்கே மலேசியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போலி முட்டைகள் விற்கப்படுகிறது என்ற தகவலை கேள்விப்பட்ட போது நான் அது வெறும் வதந்தி என்றே நினைத்துக்கொண்டு இருந்தேன் தொலைகாட்சியில் அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடும் வரை..! ( அந்த செய்தி பார்த்ததில் இருந்து வீட்ல இருந்த முட்டைய எல்லாம் ஒரு சைன்டிஸ்ட் ரேஞ்க்கு ஆராய்ச்சி பண்ணது எல்லாம் வேற விஷயம் :) அந்த முட்டை முழுக்க முழுக்க கெமிக்கல்கள் மூலமாக உருவாக்கப்பட்டதாம்..!

போலி முட்டையை கண்டறிவது எப்படி ??

இப்பொழுதுதான் அந்த முட்டை பற்றிய பரபரப்பு எல்லாம் ஓய்ந்து பலர் அதை மறந்தும் விட்ட நேரத்தில்..! இன்று ஒரு மாத இதழில் படித்த செய்தியால் ஒரு சில நிமிடங்கள்  மூச்சே நின்று விட்டது..!

ஆம்..! பலவேறு இன மக்களின் அன்றாட உணவான அரிசியிலேயே இவர்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்..!! கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!


மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!


என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??
எவன் எக்கேடு கெட்டால் என்ன ?? எனக்கு தேவை பணம் என்று சுயலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அடுத்தவரின் உயிருக்கும் அவருடைய உடல் நலத்திற்கும் கேடு வரும் என்று தெரிந்தே இது போன்ற செயல்களை செய்பவர்களை என்னவென்று சொல்வது..!!!? :(

வியாபாரம் செய்வதில் இஸ்லாம் கூறும் நெறிமுறைகள் என்ன??

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.
(அல்-குர்ஆன் 4:29)

அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!
அல்-குர்ஆன் 55: 7 8 மற்றும் 9
வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிக்கவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. உதாரணமாக நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தோமேயானால் அவர்களுக்கு அல்லாஹ் நபித்துவம் வழங்குவதற்கு முன்னரும், அவர்கள் மக்களிடையே பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தான் ஈடுபட்ட வியாபாரத்தில் காட்டிய நேர்மையும், மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் செயல்பட்ட காரணத்தினாலும்தான். எனவே அவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றும் நாமும் வியாபாரத்தில் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்.அல்லாஹ்வின் கோபத்திற்குறிய மூன்று நபர்களை பற்றி நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனையுமுண்டு என்று கூறினார்கள். நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? என கேட்டபோது செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன். தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன். தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.)


பொய் சத்தியம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி  தரமிழந்த பொருட்களை விற்பவர்கள், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டும் மறுமையில் தூரப்படுத்தப்படுவார்கள். கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்றபோது ஒரு வியாபாரியின் தானியக் குவியலுக்கருகே வந்து தனது கையை அந்த தானியக் குவியலில் விட்டபோது விரல்களில் ஈரம் பட்டது. அப்போது உணவு வியாபாரியே! இது என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள் மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்)
மேலும் சிலர் அதிக லாபத்துக்காக உணவுப்பொருட்களை பதுக்குவது உண்டு..! அப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது..!

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா). 
இறுதியாக வியாபாரம் செய்பவர்களே உங்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுததான் இறைவனை அஞ்சிகொள்ளுங்கள்..! வியாபாரப்பொருட்களில் கலப்படம் செய்து அல்லது போலிகள் தயாரித்து அடுத்தவரின் உயிரோடு விளையாடாதீர்கள்..!!

உங்களின் வியாபாரம் செழிக்க இறைவன் போதுமானவன்..!

வஸ்ஸலாம்
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி..!
ஷர்மிளா ஹமீது.

Tuesday, September 18, 2012

உலக முஸ்லிம்களே..! உஷார்..!!!

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு "என்பார்கள் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிலும் அடிபடும் அந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை பற்றிய செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும்போதும்..!!

பதிவுக்கு செல்லும் முன் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிக்க எண்ணி அவரை பற்றிய அவதூறான படத்தை தயாரித்து வெளியிட்டவர்களுக்கு என் கண்டனங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் .!!

சம்மந்தப்பட்ட படத்தை பற்றிய தகவல்கள் கசிய தொடங்கியதும் ஒவ்வொரு சராசரி முஸ்லிமுக்கும் எந்த அளவு கோபம வந்ததோ அதை விட பன்மடங்கு  கோபம் எனக்குள்ளும் வந்தது..! ஆனால் அதை விட அதிகமான கோபம்  அந்த படத்திற்கு எதிரான வன்முறைகளில் இறங்கிய என் சகோதரர்கள் மீது வந்தது..!!

கோபப்பட்ட சகோதரர்களை குறை சொல்வதல்ல என் நோக்கம்..! அவர்களின் கோபம் நியாயமானதே..! ஆனால் அந்த கோபத்தை அவர்கள் வன்முறையாக வெளிப்படுத்திய விதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!!

இதுவா நம் மார்க்கம் நமக்கு சொல்லி தந்தது? இதுவா நம் தூதர் நமக்கு கற்று தந்தார்கள்???


அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்
 


இறைதூதரை இழிவுபடுத்தியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவே வன்முறையில் இறங்கினோம் என்பவர்கள் சிந்திக்க மாட்டார்களா?? இழிவுபடுதினால் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதான் நல்ல முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி இருக்க வேண்டியதுதான் அதுதான் ஒரு உண்மை முஸ்லிமின் கடமையும் கூட...! ஆனால் தேவையற்ற வன்முறையில் இறங்கி இதில் சம்மந்தப்படாத மனித உயிர்களை குடித்தது எந்த வகையில் இறுதி தூதர் மீதான உங்கள் அன்பை பிரதிபலித்திட முடியும்? அப்பாவியான ஒரு உயிரை கொல்வது மனித இனத்தையே கொன்றதற்கு ஒப்பாகும் என்ற இறை வசனம் கூட இவர்களுக்கு மறந்தது ஏனோ? கோபம் கண்ணை மறைத்த காரணம் தானோ?

அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134 
 

இந்த இறை வசனம் கூடவா நினைவுக்கு வரவில்லை சகோதரர்களே?

இது போன்ற அவசர நடவடிக்கைகளால் யூத அரசாங்கம் விரித்து வைத்துள்ள வலையில் தாங்களாக போயி  சிக்கிக் கொள்ளாதீர்கள் என் அன்பு சகோதர சகோதரிகளே..! அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இது போன்ற உங்கள் எல்லை மீறிய கோபத்தையும் அதன் மூலம் நீங்கள் அரங்கேற்றும் வன்முறைகளையும் தான்..! அதன் மூலமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் உலகின் பார்வையில் வன்முறையாளர்கள் என சித்தரித்து நாம் அனைவரும் தீயவர்கள் என்ற விஷ விதையை உலக மக்களின் மனதில் விதைப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்,...!
இதை உணராமல் அவசரகதியில் செயல்களில் இறங்கி விட்டு நீங்கள் சிக்கிக்கொள்வதொடு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்திற்கே தீவிரவாதிகள். என்ற பட்டத்தை உங்கள் முன்யோசனை இல்லாத செய்கையால் பெற்று தந்து விடாதீர்கள் என்பதே உங்கள் அன்பு சகோதரியின் தாழ்மையான வேண்டுகோள் ..!!

எவனோ ஒருவன் படம் எடுத்தான் என்பதால் அமெரிக்க தூதரகத்தை தாக்குகிறோம் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு அவர்களின் அரசாங்க காரியங்களுக்கு நாம் இடைஞ்சலாக இருந்து விட்டோம் சகோதர சகோதரிகளே.. அவர்களுக்கு எல்லாம்  ஏற்பட்ட பொருள் இழப்பு, உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இவை எல்லாம் சேர்ந்து இஸ்லாம் மீதான எதிர்மறையான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விடாதா?? யூதர்களின் கனவும் அதுதானே அதை நாமே முன்னின்று நிறைவேற்றியது போல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே..!

இதுவா நான் இஸ்லாத்தை மற்றவர்க்கு எடுத்து செல்லும் விதம்?? இதுவா இஸ்லாம் இனிய மார்க்கம் என்று மற்ற மக்களை நினைத்து அவர்களை இஸ்லாத்தின் பக்கம் நெருங்க வைக்கும்??

நாளையே இந்த படம் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு விடுகிறது என்றே வைத்துக்கொள்வோம்.. வன்முறையில் சிக்கி பலியான  உயிர்களுக்கு நாம் என்ன பதில் வைத்து இருக்கிறோம்??

எனவே சகோதர்களே இது போன்ற சென்சிடிவான எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் முன் நம் மனதின் கூச்சலிடும் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இது போன்ற சம்பவங்கள் நடக்க என்ன காரணம் என்பதை நம் மூளைக்கு அதாவது நம் அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்து யோசிப்போம்..! யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் அவர்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் நம் அருமை நாயகம் கண்மணி (ஸல்) அவர்களுடைய கண்ணியத்துக்கு எவராலும் இழுக்கு ஏற்படுத்தி விட முடியாது.. அவர்களின் நயவஞ்சக எண்ணம எல்லாம் இஸ்லாமியர்களை மற்ற மதத்தவர்களிடம் இருந்து பிரித்து ஒதுக்குவதே..! அதற்கு அவர்களிடம் தகுந்த காரணம் இல்லாத காரணத்தாலேயே நம்மை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தி ஒதுக்கும் வேளையில் இரகசியமாக பல திரைமறைவு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன..விவேகமில்லாத வீரம் ஒன்றுக்கும் உதவாது என்பதை நினைவில் வைத்து அடுத்த அடியை கவனமாக எடுத்து வையுங்கள் என் அருமை சகோதர சகோதரிகளே ...!

நம் கண்மணி நாயகம் மீது நமக்குள்ள அன்பை வெளிப்படுத்த அவர்கள் கற்றுதந்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது... அவர்கள் காட்டி தராத வன்முறையில் இறங்கி நம் சமுதாயத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என் அருமை சொந்தங்களே..! 

என் அருமை சகோதர சகோதரிகளே மீண்டும் சொல்கிறேன் கண்மணி நாயகம் அவர்கள் மீதான நம் அன்பை நாம் வெளிபடுத்தும் விதம் அவர்களின் வாழ்கையை இம்மி பிசகாமல் பின்பற்றி வாழ்வதே ஆகும்..! அதுவே உலகிற்கு சிறந்த தாவா என்பதை நினைவில் வையுங்கள்..!


யார் மனதும் புண்படும்படி என் கருத்துகள் அமைந்து இருந்தால் ஏக இறையின் பொருட்டால் என்னை மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..!

இறுதியாக சமூக வலை தளத்தில் சகோதரர் ஒருவர் பதிந்து இருந்த துவாவுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்

யா அல்லாஹ் !!! சர்வ சக்தியும் படைத்த ரஹ்மானே...இதயங்களைப் புரட்டக் கூடியவனே ...

டெர்ரி ஜோன்ஸ் , நகுலா போன்றவர்களின் இதயங்களை இஸ்லாத்தின்பால் புரட்டுவாயாக !!

எங்கள் பொக்கிஷத்தை கொல்லப் புறப்பட்ட உமரின் இதயத்தை புரட்டியவனே !!! கண்மணி நாயகத்தின் குட்டியாப்பாவின் இதயத்தை அறுத்து தின்ற ஹிந்தாவின் இதயத்தைப் புரட்டியவனே !! கயமைத் தனனத்தில் மூழ்கிப் போயிருக்கும் இந்த இருவரின் இதயங்களை சத்திய இஸ்லாத்தின் பால் புரட்டுவாயாக !!!
எங்கள் வாட்கள், எங்கள் கோஷங்கள், எங்கள் போராட்டங்கள், எங்கள் இருபது கோடிகள் இதை சாதிக்காது ரஹ்மானே...உனது அருள், உனது வல்லமை மட்டுமே இதைச் செய்ய முடியும் யா அல்லாஹ் !!!

 ஆமீன் ஆமீன் .. யாரப்பல் ஆலமீன்..!


வஸ்ஸலாம்
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி

ஷர்மிளா ஹமீது

டிஸ்கி : இங்கே மலேசிய அரசாங்கமே யூட்யூபில் சம்மந்தப்பட்ட தரப்பிடம் பேசியதில் அந்த வீடியோவை இங்கே தடை செய்து விட்டார்கள்.. இருந்தாலும் யுட்யூபில் இருந்து அந்த வீடியோவை  நீக்காமல் இருப்பது குறித்து அரசாங்கம் வருத்தம் தெரிவித்து உள்ளது..! அந்த வீடியோவை நீக்க வலியுறுத்தி அரசாங்க தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது..! விரைவில்  அந்த வீடியோ நீக்கப்படவேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..!

சம்மந்தப்பட்ட இந்த பிரச்சனைக்கு எவ்வாறு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்பதை என் சகோதரி அன்னு அருமையாக விளக்கி ஒரு பதிவிட்டு உள்ளார் அதையும் தவறாமல் வாசிக்கவும் அந்த பதிவிற்கான லிங்க் கீழே ..!

எப்படி பதில் தந்திருக்க வேண்டும்? 

இது போன்ற அவதூறுகளை எதிர்கொள்வது எப்படி என்பதை மிக தெளிவான முறையில் விளக்கிய என் சகோதரி நாசியாவின் பதிவு..!

அவதூறை எதிர்கொள்வது எப்படி?


Wednesday, August 29, 2012

தேசிய திருக்குர்ஆன் மாநாடு , மலேசியா -3 இறுதி பாகம்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே...!

மலேசியாவில் நடைபெற்ற தேசிய திருக்குர் ஆன்  மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இனி...

உலக மயமாக்கலின் தாக்கத்தால் முஸ்லிம்களுக்கு நேர்ந்துள்ள அனுபவங்களும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் மெளலானா அப்துல் குத்தூஸ் அஸ்ஹரி (தலைவர் ஜாமியத்துள் உலமா , ஆஸ்திரேலியா ) அவர்களும் மெளலவி அப்துல் மாலிக் தேவ்பந்தி (இமாம் ஜாமியா சோலியா மஸ்ஜித் ,சிங்கப்பூர் ) அவர்களும் மெளலவி முஹம்மது மின்ஹாஜ் பேராசிரியர், ஆயிஷத்துல் சித்திகா பெண்கள் கல்லூரி , இலங்கை ) அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்..
இதில் உலகமயமாக்கலின் தாக்கத்தில் முக்கிய அம்சமாக அவர்கள் குறிப்பிட்டது

முதலாவது நாகரிக மோகத்தின் மூலம்  இஸ்லாமியர்களின்  உடையை சீரழிப்பது
இரண்டாவது அவர்களை அறியாமலே செய்யும் சிறு சிறு விஷயங்களில் ஷிர்க்கை கலப்பது..
மூன்றாவதாக உண்ணும உணவுகளில் ஹராமை கலப்பது... இவற்றை எல்லாம் சீரழித்து முஸ்லிம்களை அவர்களின் சுய அடையாளத்தை தொலைக்க வைத்து வேரருப்பதே உலக மயமாக்கலின் அடித்தளம் என்று அவர்கள் கூறியது எனக்கு புதியதொரு தகவலாய் இருந்தது...!!
இளையதலைமுறை நாகரிக மோகத்தில் சிக்குண்டு சீரழியாமல் இருக்க தலைமுறை இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என மெளலவி மின்ஹாஜ் அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள்...

அடுத்ததாக மனித சமுதாயத்தில் திருக்குர்ஆன் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற தலைப்பில் பேசிய மெளலவி கம்பம் பீர் முஹம்மது பாகவி (எழுத்தாளர்,அழைப்பாளர்,கோலாலம்பூர் ) அவர்கள் நம் மக்கள் குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத வேண்டியதன் அவசியத்தை மிகத்தெளிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.. அவரை தொடர்ந்து பேசிய அஷ்ஷேக் அகார் முஹம்மது (துணை இயக்குனர்,நளீமியா பல்கலைக்கழகம் ,இலங்கை ) அவர்கள் நம் இஸ்லாமிய பெருமக்கள்
திருமறையை வெறுமனே வாசிக்க மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள்
திருமறையில்  இருந்து கற்றுக்கொள்வதற்காக வாசிக்கவில்லை  என்று வருத்தத்துடன் கூறினார்கள்.. !

குர் ஆன் வசனங்கள் மனிதர்களிடம் மட்டும் அன்றி தாவரங்களிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை துருக்கியில்  2003 ஆம் ஆண்டில் நடந்த திருக்குர்ஆன் மாநாட்டில் அங்கீகாரம் பெற்ற ஒரு ஆய்வை பற்றி தகவல்களை தெரிவித்தார்கள் மிகவும் சுவாரசியமான அந்த செய்தியில்... ஒரு ஆய்வுக்காக ஐந்து கோதுமை செடிகள் எடுத்துக்கொள்ளப்பட்டதாம்
அதில் முதல் செடிக்கு அருகில் குர்ஆன் வசனங்கள் மட்டுமே ஒலிபரப்பப் பட்டதாம் இரண்டாம் செடிக்கு அருகில் சாதாரண அரபி மொழியில் பேசும் உரையாடல்களும் ,மூன்றாம் செடிக்கு அருகில் எதையுமே ஒலிபரப்பாமலும் ,நான்காம் செடிக்கு அருகில் இசையும் , ஐந்தாம் செடிக்கு அருகில் மோசமாக திட்டக்கூடிய வசனங்களும் ஒலிபரப்பப் பட்டதாம் 


ஆய்வின் முடிவில் வியக்க வைக்கும் விஷயமாக மற்ற  செடிகளை விட குர்ஆன் வசனம் ஒலிபரப்பப்பட்ட செடி செழித்து வளர்ந்து இருந்ததாம்....!! :) சுபுஹானல்லாஹ்..!

அடுத்ததாக "இஸ்லாம் போபியா -விஷமங்களும் வெளிப்பாடுகளும்" -திருக்குர்ஆன் வழியில் முஸ்லிம்களின் கடமைகள் என்ற தலைப்பில் மிகவும் சிறப்பான முறையில் உரையாற்றிய பாரதி கிருஷ்ணகுமார் (எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் ,சென்னை ) அவர்கள் தம உரையில்...
இஸ்லாமியர்களுக்கு எதிரான மொழி ஊடகங்களின் வழி எப்படி சிறுக சிறுக மக்களின் மனதில் விதைக்கப்பட்டது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கினார்...

ஆங்கிலேயர்,டச்சுக்கரர்கள், போர்த்துகீசியர் ஆகியோரின் படையெடுப்புகளை வருகை என்றும்.. இஸ்லாமியர்களின் வருகையை படையெடுப்பு என்றும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு போதிக்கும் போதே  இஸ்லாம் மீதான வெறுப்பை விதைக்கும் வேலை   தொடங்கி விடுகிறது என்றார் அவர்.. மேலும்.. இஸ்லாமோபோபியாவுக்கு காரணம் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியே தவிர வேறில்லை என்றும்... இஸ்லாமியர்கள் என்றாலே நான்கு மனைவிகள் கொண்டவர்கள் என்றும் , தீவிரவாதிகள் என்றும் மேற்குலக ஊடகங்கள் மக்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கும் அவலத்தை துடைத்தொழிக்க வேண்டும் என்றார்..!

இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் பல இஸ்லாமிய புத்தகங்கள் காணாமல் போனது எத்தனை பேருக்கு தெரியும் என்று கேள்வி எழுப்பிய அவர்... பெட்ரோலை தாமிரத்தை இரும்பை திருடியவனே அந்த புத்தகங்களையும் திருடி  இருப்பான் என்று கூறிய போது கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது..

குஜராத்தில் சிப்பாய் கழகத்தில் வாளேந்தி முன்னிலை வகித்து தேச பக்தியோடு போராடிய முஸ்லிம்களுக்கு  இன்று அதே குஜராத்தில் நடக்கும் அநியாயங்கள் பற்றி வருத்தம் தெரிவித்த அவர்.. மேலும் பேசுகையில்..

சினிமாவிலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை கடுமையாக சாடினார்.. அப்படிப்பட்ட படங்களை  பார்த்து அப்படி படம் எடுக்குறவன் நடிக்கிரவன் மூஞ்சில காரி துப்பிட்டு வந்தா அவன் ஏன் அரசியல் கட்சி ஆரம்பிச்சு நாட்ட கொள்ளையடிக்க போறான் என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பிய அவர் உங்களுடன் அமர்ந்து தலைக்கு தொப்பி அணிந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவன் எல்லாம் உங்கள் நண்பர்கள் அல்ல... உண்மையாக இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் அவர்களே உங்கள் உண்மையான நண்பர்கள் என்றார்... இறுதியாக

குறை சொல்வதற்கு இஸ்லாத்தில் ஒன்றும் இல்லை.. எனவே தீவிரவாதி என்ற முத்திரை திட்டமிடப்பட்டு மேற்குலகத்தால் முஸ்லிம்கள் மீது குத்தப்பட்டு சமூகத்தில் இருந்து அவர்களை மெல்ல மெல்ல பிரிக்கும் வேலை ஊடகங்கள் மூலமாக நடந்து கொண்டு இருக்கிறது அதை முறியடிப்பதே நம் கடமை என்றார்..

பிறப்பால் ஹிந்துவாக இருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை இல்லை.. எனினும் ஒற்றுமை எனும் கயிற்றை உங்களோடு பற்றிப்பிடித்து என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாதுகாவலனாக என்றென்றும் இருப்பேன் என்று கூறி தன்னுரையை அவர் நிறைவு செய்த பொது எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது... இது போலவே அணைத்து மாற்று மத சகோதரர்களும் இஸ்லாத்தை இஸ்லாமியர்களை விளங்கி கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைப்பும் மனதின் ஓரம் எழாமல் இல்லை...!!

இறுதியாக பேச வந்தவர் மதிப்பிற்குரிய டாக்டர் கேவிஎஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள்.. இஸ்லாமோ போபியாவுக்கு காரணியாக விளங்கும் சில விஷயங்களை முன்வைத்தார்..!
அமெரிக்காவுக்கு எப்பொழுதும் ஒரு போது எதிரி தேவையாக இருந்து வந்திருகிறது என்ற வரலாற்றின் சில பக்கங்களை பற்றி எடுத்து உரைத்தார்..!
இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் கோவில்களை இடித்தார்கள் என்று சொல்லியே இஸ்லாத்தின் மீதான வெறுப்பை வளர்க்கிறார்கள்..! ஆம் இஸ்லாமியர் கோவில்களை இடித்தார்கள்.. அந்த கலாகட்டத்தில் வெற்றியின் அடையாளமாக அவர்களின் மதிப்பு மிக்க இடங்களை பறிப்பது வழக்கத்தில் இருந்த ஒன்று.! ஹிந்துக்களும் இதையே செய்தனர்.. அன்றைய காலகட்டத்தில் கோவில்கள் வழிபாட்டு தளமாக மட்டும் இருக்கவில்லை.. பல அரசு அலுவல்கள் நடைபெறும் இடமாகவும் இருந்ததால் அவற்றை அழிப்பது போரில் வெற்றியின் அடையாளமாக இருந்ததே தவிர வேறில்லை என்றும்... ஒளரங்கசீப் உடைய தளபதி ஒரு ஹிந்து இது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும்.. வரலாற்றை திசை திருப்பி விட்டதன் மூலம் இஸ்லாமிய மக்கள் மீதான ஒரு காழ்ப்புணர்ச்சியை வேண்டும் என்றே மக்கள் மனதில் விதைக்கப்பட்டது எனவும் கூறினார்..!!

இஸ்லாமோபோபியாவுக்கு அடுத்த காரணியாக அவர் கூறியது மீடியாக்கள்..!!

மீடியாக்கள் எவ்வாறு மக்களை உண்மை செய்திகளை விட்டும் திசை திருப்பி கொண்டு இருக்கின்றன என்பதை ஒரு சில நிகழ்வுகளின் மூலம் விளக்கினார்..!

உதாரணமாக இரட்டை கோபுர வெடிப்புக்கு பிறகு பாலஸ்தீனிய மக்கள் இனிப்பு கொடுத்து அதை கொண்டாடுவதாக மீடியாக்கள் ஒரு புகைபடத்தை வெளியிட்டன ஆனால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதோ 1991 ஆம் வருடம் வேறு எதோ ஒரு கொண்டாட்டத்தின் போது..! ஆனால் மீடியாக்கள் இஸ்லாமியர்கள் அமெரிக்காவின் வீழ்ச்சியை கொண்டாடுகிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்...அந்த புகைப்படம் மீடியாக்களில் வெளிவந்த போது இஸ்லாமியர் மீதான மாற்று மதத்தவர்களின் நல்லெண்ணத்தை தகர்த்தது..! மீடியாக்களின் இந்த DOUBLE STANDARD மாற்றப்பட வேண்டிய ஒன்று என்று அவர் கூறினார்..!

மேலும் பேசுகையில் அவர்..
இஸ்லாத்துக்கு எதிரான விஷ விதைகள் கருத்துகளாக மக்கள் மனதில் தூவ முயற்சிகள் எடுக்கப்படும் பொழுத நாம் உணர்ச்சி வசப்பட்டு அதை எதிர்க்கிற நேரம் அதுவே அவர்களுக்கு இலவச விளம்பரம் ஆகி விடுகிறது என்றார்..!

உண்மையை சொல்ல போனால்..

நீங்கள் வெறுக்கும் ஒன்றில் ஏராளமான நன்மைகள் இருக்க கூடும் என்ற இறைவனின் வசனத்துக்கு ஏற்ப.. இஸ்லாமொபோபியாவால் நமக்கு லாபமே தவிர நஷ்டம் இல்லை என்றும் நம்மை பற்றிய எதிர்மறை கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்பட்டாலும் சிந்திக்கும் திறன் பெற்ற அறிவுடைய மக்கள் உண்மையை அறிய இஸ்லாத்தை ஆழமாக உற்று நோக்க தொடங்குவார்கள் அதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம் ..! என்றும் கூறினார்...

தனது உரையை முடிக்கும் நேரம் அவர்கள் சொன்ன ஒரு கருத்து என்னவென்றால்..

இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு எதிர்வினைகள் புரிவதில் காலத்தை கழிக்காதீர்கள்.. உண்மையில் நம்மை நோக்கி வீசப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நம்மை திசை திருப்பும் முயற்சியே அன்றி வேறில்லை...இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.. நாம் மைனாரிட்டி சமூகம் என்ற என்னத்தை கை விடுங்கள் நாம் எல்லாம் மெஜாரிட்டி பை அவர் வேல்யூஸ்..! மீடியாக்களில் கவனம் செலுத்துங்கள்.. அல்ஜசீராவின் சாதனை நமக்கெல்லாம் ஒரு நல்ல உதாரணம்..! இஸ்லாத்தின் மீது இருக்கும் வெறுப்பை களைய வேண்டும் என்றால் அதற்கு முதலில் இஸ்லாத்தை தூய வடிவில் மற்றவர்க்கு எத்தி வைக்க வேண்டும்.! பொறுமையுடன் முயன்றால் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்... என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார்..!

அல்ஹம்துலில்லாஹ் அத்துடன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது..!

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டத்தோ இக்பால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மற்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து நினைவு பரிசினை வழங்கினார்கள்..! மாஷா அல்லாஹ் மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு அது..!

இரண்டு நாட்களுமே மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.. அல்ஹம்துலில்லாஹ்... நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கும், அதில் கலந்து கொண்டவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக...!! ஆமீன்..!வஸ்ஸலாம்
உங்கள் அன்பு சகோதரி
ஷர்மிளா ஹமீத்

Tuesday, July 17, 2012

தேசிய திருக்குர்ஆன் மாநாடு,மலேசியா -2

தேசிய திருக்குர்ஆன் மாநாடு,மலேசியா -1 ஐ காண இங்கே கிளிக்கவும்..! 


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோ'ஸ் சென்ற பதிவின் தொடர்ச்சி இனி....

டாக்டர் மரினா அவர்கள் பேசுகையில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட ஆண்களே காரணம் என்ற டாக்டர் சுமையா தாவூத்தின் கருத்துகளில் இருந்து முற்றிலும் முரண்படுவதாக கூறினார்.... அவர் மேலும் கூறியதாவது.. பெண்களுக்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகள் பற்றி போதிய தெளிவு இல்லாததே அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட காரணம் என்றார்... நம்மில் எத்தனை பேர் தனது தாய்மொழியில் குரான் ஹதீஸை வாசித்து விளங்கி கொண்டு இருக்கிறோம் என்று அவர் கேள்வி எழுப்பினார்..அவரது கேள்வி அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.. இப்படி பெண்கள் அறியாமையில் இருந்து கொண்டு ஆண்கள் உரிமை தரவேண்டும் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தம இல்லை என்பதை மிக தெளிவான முறையில் எடுத்து கூறி அவர் விடை பெற்ற போது எழுந்த கைதட்டல் அரங்கை அதிர செய்தது... மாஷா அல்லாஹ்...!!

தொடர்ந்து இஸ்லாம் கூறும் பெண்ணியம் என்ற தலைப்பில்  பேச வந்த DR.K.V.S. ஹபீப் முஹம்மது அவர்கள்... (இதற்கு முன் அவர்களுடைய சில உரைகளை யூட்யூபில்கண்டு இருந்தாலும் அவர் உரையை நேரில் காணும் வாய்ப்பு அன்று கிடைத்தது...) இஸ்லாம் கூறும் பெண்ணியம் பற்றி டாக்டர மரினா அவர்களும் டாக்டர் சுமையா அவர்களும் போதிய அளவில் பேசி விட்டாலும் பெண்ணியத்தை பற்றி பெண்கள் பேசுவதை விட ஒரு ஆணாகிய  நான் பேசுவதே சரி என்றார்..! பெண்களை இக்கால மீடியாக்கள் ஒரு வியாபார பொருளாக , காட்சிப் பொருளாக மாற்றி விட்டதென கடுமையாக சாடினார்.. பல மதத்திலும் பெண்கள் இழிவாக கருதப்படும் காரணங்களை பற்றி அவர்கள் பேசுகையில்.. ஆதிபாவத்துக்கு காரணம் பெண் எனவே பெண் என்பவள்  இழிவானவள் என கருதும் பழக்கம் கிறிஸ்துவ சமூகத்தில் உண்டு என்றார்...

மலடி,விதவை,வாயாடி, வாழாவெட்டி என்றெல்லாம் பெண்ணை அழைத்து கேவலப்படுத்தும் இந்த சமூகம ஆண்களை அவ்வாறு கூப்பிட வார்த்தைகள் உருவாக்கவில்லை இதுதான் ஆணாதிக்கம் என்றும்... இதை எல்லாம் எதிர்க்காத பெண்கள்.. எப்படி மேற்குலக உலகமயமாக்கல் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தங்களை சிறுக சிறுக இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மிக நேர்த்தியாக ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினார்கள்..

ஆரம்ப காலங்களில் பெண்கள் ஆணுக்கு நிகராக உரிமைகளில் சமத்துவம் வேண்டும் என்று கோர ஆரம்பித்ததாகவும் காலங்கள் செல்ல செல்ல... ஆண் இல்லாமல் தன்னால் தனித்து இயங்க முடியும் என்ற தவறான முடிவின் பால் பெண்கள் செல்ல ஆரம்பித்ததாகவும் , காலப்போக்கில் பெண்கள் குழந்தை பெறுவதையே கூட சுமையாக நினைத்ததும் குடும்ப வாழ்கையை துறப்பதே பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் என்று மேலை நாட்டு எழுத்தாளர்களின் மூளைச்சலவைக்கு பெண்கள் கட்டுப்பட்டு தங்கள் சுயத்தை தொலைத்தார்கள் எனவும்...

மேலும் பெண்ணியம் பேசிய தந்தை பெரியார் அவர்களே உண்மையான பெண் விடுதலைக்கு பெண்கள் பிள்ளை பெரும் தொல்லை விடை பெற வேண்டும் என்று -பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் எழுதி  இருக்கிறார்  என்று DR.K.V.S கூறிய போது ஒரு கணம் என் மூச்சு நின்றுதான் போனது..!!

சம உரிமை கோருவதில் ஆரம்பித்த பெண்ணியவாதிகள்... இப்பொழுது தடம் மாறி..
விஞ்ஞான உதவியுடன்  குழந்தை பெற உரிமை கோருவதும்...
விரும்பியவருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு வைத்து கொள்ள உரிமை கோருவதும்...
இது எல்லாம் சமூக சீர்கேடுகளே அன்றி வேறில்லை என்று டாக்டர் அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்கள்...

இறுதியாக பெண் ஆணாக (தோற்றத்தில்,செயலில்,நடவடிக்கைகளில் ) மாறுவது அல்ல பெண்ணுரிமை ....!!!
பெண் தன சுயத்தை இழக்காமல் தனக்கான கடமைகளை நிறைவேற்றி பெண்ணாக வாழ்வதே உண்மையான பெண்ணுரிமை..!!!
எனகூறி தனதுரையை நிறைவு செய்தார்கள்...

அன்றைய மாநாட்டின் இறுதி நிகழ்வாக நம் முஸ்லிம்களின் வாழ்வில் தலைதூக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் மனித அறியாமையா மறை அறியாமையா என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது (ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி ,உத்தமபாளையம் ) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.. நகைச்சுவையான கருத்துக்கள் மூலம் சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கும் விதத்தில் பல அருமையான கருத்துக்களை தொகுத்து அரங்கை கலகலக்க செய்தனர் பங்கேற்பாளர்கள்..
மிகவும் அருமையாக இரண்டு பக்க வாதங்களும் முன்வைக்கப்பட்டன... இறுதியில் மறை அறியாமையே மனித சமூக வீழ்ச்சிக்கு காரணம் என்ற தீர்ப்பை நடுவர்  அவர்கள் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்...!

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை விரைவில் தொகுத்து வெளியிடுகிறேன்... !


உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாத்துல்லாஹி வபரக்காதுஹு... :)

Sunday, July 08, 2012

தேசிய திருக்குர்ஆன் மாநாடு,மலேசியா-௧

"ஏற்றமான வாழ்வுக்கு இறைமறை "என்னும் கருப்பொருளை மையமாக கொண்ட  தேசிய அளவிலான திருக்குர்ஆன் மாநாடு முதன் முறையாக முழுவதும் தமிழ் மொழியில்  மலேசிய தீபகற்பத்தில் ஜூலை 7&8 ஆகிய இரண்டு நாட்கள்  இனிதே நடந்து முடிந்தது..!

இந்தியா ,சென்னை,இலங்கை,சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருந்த மார்க்க அறிஞர்களும், இறை அழைப்பளர்களும் மிக அருமையான முறையில் மாநாட்டை வழி நடத்தி சென்றார்கள்..!

கிராத்துக்கு பின் தொடங்கிய மாநாட்டில் மாநாட்டு ஏற்பாட்டாளர் டத்தோஸ்ரீ ஹாஜி முஹம்மது இக்பால் (தலைவர் தேசிய ஒருங்கிணைப்பு குழு )அவர்கள் தம் துவக்க உரையில் நாட்டின் பல இடங்களில் அதிக அளவில் குரான் விளக்க கூட்டங்களும் மார்க்க விளக்க நிகழ்சிகளும் அடிக்கடி நடந்து கொண்டு இருந்தாலும் தேசிய அளவில் அனைத்து மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்து தமிழில் நடத்தப்படும் முதல் மாநாடு இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ..!

காலை 9 மணிக்கு ஆரம்பித்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களும் இறைநெறி அழைப்பாளர்களும் மிகச்சிறப்பான முறையிலே சொற்பொழிவு ஆற்றினார்கள்..!

"ஏற்ற மிகு வாழ்வுக்கு இறைமறை , மறைவழியில் நபி வாழ்ந்த வாழ்கை  "என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய அஷ் ஷேய்க் அகார் முஹம்மது (துணை இயக்குனர் ,நளீமியா பல்கலைக்கழகம் ) அவர்கள் மிகவும் சிறந்த முறையிலே எளிய விளக்கங்களோடு தன உரையை ஆற்றினார்... எவ்வாறு நாம் மீடியாக்களின் தாக்கத்தினாலும் ,நாகரிக மோகத்தினாலும் பணம் பண்ணும ஆசையினாலும்  சிறுகச்சிறுக சத்திய இஸ்லாத்தின் பாதையயை விட்டு விலகிகொண்டு இருக்கிறோம் என்பதை மிக அருமையான முறையில் எடுத்துரைத்தார்...  மீடியாக்கள் பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பல வித தேவையற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பண்பாட்டு வீழ்சிக்கு காரணம் ஆகின்றது என்று கூறினார்..!

அடுத்து "உம்மத்தன் வசத்தன் (நடு நிலைச்சமுதாயம்)"என்ற தலைப்பில் உரையாற்ற வந்த மௌவ்லவி முஹம்மது நூஹ் மஹ்ளரி (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்.சென்னை ) நடுநிலைச்சமுதாயம் என்றால் என்ன என்பதை மிக அழகான முறையில் எடுத்து சொன்ன்னர்கள்..
எவ்வாறு நாம் நடுநிலைச்சமுதாயமாக இருப்பதில் இருந்தும் விலகிபோய் கொண்டு இருக்கிறோம் என்றும் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்று இறைவன் விதித்த கட்டளைகளை மறந்து முஸ்லிமாக பிறந்ததால்.. நாங்கள் மட்டுமே சுவனம் செல்வோம் என்ற குருட்டு நம்பிக்கையில் ஏராளமான முஸ்லிம்கள் இருப்பதைப்பற்றி அவர் பேசுகையில் முஸ்லிமாக பிறந்ததால் மட்டும் ஒருவன் சொர்கத்துக்கு செல்லும் தகுதியை அடைந்து விட முடியாது என்றும் எப்பொழுது ஒருவன் தன் வாழ்கையில் இஸ்லாத்தை முறையாக அல்லாஹ்வும் அவன் தூதரும் சொன்னபடியே கடைப்பிடிகிறானோ அப்பொழுதுதான் அவன் சுவர்க்கம் செல்லும் பாதையை அடைய முடியும் என்பதை வலியுறுத்திக்கூறினார்..!

தொடர்ந்து "பறிபோகும் அக்கீதா பலவீனமாகும் ஈமான் "என்ற தலைப்பில் பேராசிரியர் முஹம்மது  கான் பாகவி அவர்களும் அவர்களை தொடர்ந்து பிறப்பால் இந்துவாக இருந்தாலும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஹாஜி அப்துல் லத்தீப் அப்துல்லாஹ் அவர்களும்.. இறுதியாக உஸ்தாத் ஜமால் அப்துல் ஹமீது அவர்களும் உரையாற்றினார்கள்.

பேராசிரியர் முஹம்மது  பாகவி அவர்கள்
 (மொழி பெயர்ப்பு குழு தலைவர் ,ரஹ்மத் அறக்கட்டளை,சென்னை )
பேசுகையில் இந்த காலகட்டத்தில் ஈமான் பறிபோக மிக முக்கியமான காரணியாக ஊடகங்கள் திகழ்வதாக மிகவும் வருத்தத்துடன் பேசினார்..
சினிமா சீரியல்களில் காட்டப்படும் ஆண் பெண் நட்புகள், குடும்ப வன்முறைகள், முறைதவறிய உறவுகள் எப்படி சிறுக சிறுக நம் மனதில் பதிய வைக்கபடுகின்றன என்பது பற்றியும், இதன் தாக்கத்தால் அந்நிய ஆண் பெண் கலந்து நட்புறவு கொண்டாடுவது தவறில்லை என்ற எண்ணம நமக்குள் விதைக்கப்படுவதையும் அதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விளக்கினார்..! சென்னையில் தன் சக தோழர்களாலேயே மானபங்கம் செய்யப்பட்ட பெண்ணை உதாரணமாக கூறினார்..! என்னதான் ஆணும பெண்ணும் தங்கள் நட்பு புனிதமானது என்று சாதித்தாலும் அங்கே கண்டிப்பாக தவறு நடக்க சாத்தியங்கள் அதிகம் என்பதை நாம் மறக்க கூடாது என்றார்..! சினிமா மோகத்தில் காதல் என்பது தெய்வீகம் என்று சினிமா ஏற்படுத்திய மாயையில் சிக்கி தன்னை இழந்து சீரழியும் பெண்களின் நிலை பற்றியும்.. இந்த காதலும் ஈமானை வலுவிழக்க செய்யும் ஒரு காரணி என்று கூறி அரங்கை  ஹாஜி அப்துல் லதீப் அப்துல்லாஹ் (தலைவர்,அல்ஹிதாயாஹ், மலேசியா ) அவர்களிடம் ஒப்படைத்தார்... அவர்களுக்கு உடல் நலக்குறைவினால் அதிகம் பேச முடியவில்லை என்றாலும் அவர்கள் சொன்ன மிக முக்கியமான கருத்து என்னவெனில்.. இஸ்லாத்தை புதிதாக ஏற்பவர்களுக்கு போதிய வழிகாட்டுதல் இல்லை என்பதுதான்.. மேலும் ஒரு சில இஸ்லாமியர்களே எவ்வாறு மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு இஸ்லாத்தை விட்டு விலகி போக காரணம் ஆகின்றனர் என்பது பற்றியும் , அக்கீதா பறிபோக சில இஸ்லாத்தில் இல்லாத வழிகேடுகளை பின்பற்றுவதுவும் முக்கிய காரணங்கள் என்பதை அவர் தனது தரப்பு பேசி விட்டு விடை பெற்றார்...

தொடர்ந்து பேசிய உஸ்தாத் ஜமால் அப்துல் ஹமீது (தலைவர்,மின்நூடகம் -தமிழ்ப்பிரிவு ஜாக்கிம் ) அவர்கள் கலை கலாச்சாரம் என்ற பெயரில் ஊடகங்களில் நடக்கும் சீரழிவுகள் பற்றி மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்தார்கள்..
கலை என்பது ஒரு மனிதனை பண்படுத்துவதாக இருக்க வேண்டும்.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கலை என்ற பெயரில் நடக்கும் கூத்துகளை நம் வீட்டுக்குள் அனுமதிப்பதே நம் அக்கீதா பறிபோக மிக முக்கியமான காரணம் என்றார் அவர்..! மேலும் சமூக ஊடகங்களின் மூலம் ஏற்படும் தீங்குகள் பற்றியும் அவர் பேசினார்..! தன் வீட்டினர் நாடகம் பார்க்க விடாததால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணை பற்றி அவர் பேசுகையில் நாடகத்துக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு அந்த பெண்ணின் ஈமான் பலவீனப்பட்டு போய்  இருக்க இந்த ஊடகம்தானே முக்கிய காரணம் எனும் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார்..!

அடுத்ததாக "திருக்குர் ஆனில் மகளிர் உரிமைகள் "
திருக்குர் ஆன் வருகைக்கு முன்னும் பின்னும் என்ற தலைப்பில் டாக்டர் சுமையா தாவூத் (முதல்வர் தாசீம் பீவி மகளிர் கல்லூரி ,கீழக்கரை ,தமிழ்நாடு )
அவர்கள் உரையாற்றினார்கள்... இஸ்லாம் நமக்களித்துள்ள உரிமைகளை ஆண்களிடம் அடகு வைத்து நம் பெண்கள் இன்னும் தங்களை தாழ்த்தி கொண்டு இருப்பதாகவும்.. இஸ்லாம் நம் பெண்களுக்கு திருமணத்தில் அனுமதி கேட்பதில் இருந்து , திருமண ரத்தில் அளித்து இருக்கும் உரிமை,சொத்துரிமை,கல்வி உரிமை,வணக்க வழிபாடுகளில் உரிமை, என்று ஒரு சில விஷயங்கள் தவிர ஆண்களுக்கு நிகரான உரிமை வழங்கப்பட்டுள்ள பெண்கள் இது குறித்த அறியாமையில் இருக்கின்றனர் என்றும் நம் ஆண்களும் அதை தவறாக பயன்படுத்தி பெண்களை அடக்கி வைத்து உள்ளனர் என்றும்  அவர் வருத்தத்துடன் கூறினார்..! முதலில் நம் பெண்கள் மார்க்கம் அவர்களுக்கு அளித்துள்ள உரிமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆண்கள் பெண்களின் உரிமைகளை தர மறுக்க கூடாது
என்பதையும்  வலியுறுத்திச் சென்றார்..!

அவரை தொடர்ந்து "முஸ்லிம் சமூக அமைப்பில் பெண்கள் பங்கு "என்ற தலைப்பில் டாக்டர் மரீனா தாஹா ரிபாய் (எழுத்தாளர் ,அழைப்பாளர்,இலங்கை ) அவர்கள் பேசினார்கள்...! மிகவும் நேர்த்தியாக அழகிய முறையிலே அவர் பேசிய பேச்சு அரங்கில் இருந்த பெண்களை மெய்மறக்கச் செய்து கட்டிப்போட்டது ..!பேசி முடிக்கும் முன்பே பெண்கள் பலர் அவருக்கு அபிமானியாகி போனார்கள் என்றால் மிகை இல்லை.. நான் உட்பட...!! மாஷா அல்லாஹ் என்ன ஒரு தெளிவான சொற்பொழிவு..!
இவ்வளவுக்கும் கையில் ஒரு சிறு குறிப்பு தாள் கூட இல்லாமல் அவர் தங்கு தடை இன்றி பேசியதில் இருந்தே இஸ்லாத்தின் மீதான அவரின் ஈடுபாடும் இலங்கையில் இருபது வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கான தாவா அமைப்பை தொடங்கிய அவரின் உழைப்பும் புரிந்தது...! டாக்டர் மரினா அவர்கள் பேசுகையில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட ஆண்களே காரணம் என்ற டாக்டர் சுமையா தாவூத்தின் கருத்துகளில் இருந்து முற்றிலும் முரண்படுவதாக கூறினார்.... அவர் கூறிய காரணங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறேன் இன்ஷா அல்லாஹ்..!

டிஸ்கி1 : இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டை ஒரே பதிவில் கொணடு வருவது சாத்தியம் இல்லை என்பதால் இந்த பதிவை இத்துடன் நிறைவு செய்கிறேன்..! இறை நாடினால்.. இதன் தொடர்ச்சியை விரைவில் வெளியிடுகிறேன்..!

டிஸ்கி 2 : என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு நாட்களாக இந்த மாநாடு அமைந்து இருந்தது..!! ஒவ்வொரு நொடியும் பொக்கிஷமாக போற்றப்பட வேண்டிய நொடிகள்...! இந்த மாநாட்டில் நான் கலந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இறைவனுக்கே எல்லாப்புகழும்..!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு..!

மாநாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காண >>> இங்கே <<

தேசிய திருக்குர்ஆன் மாநாடு புகைப்படங்கள்..!

அஷ்ஷேய்க் அகார் முகம்மது (இலங்கை) , DR.K.V.S.ஹபீப் முஹம்மது (சென்னை ) மற்றும் நான் :)
என் அடையாள அட்டை..

பகலிலே நட்சத்திரங்கள் பூமிக்கு வந்ததைபோன்ற அரங்கின்  மேற்புற அலங்காரம் மலேசிய பிரதமரின் மார்க்க ஆலோசகர் விழாவை நிறைவு செய்து சிறப்பித்த போது...

டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் அவர்களுடன் நான் 
மாநாடு நடைபெற்ற அரங்கின் மேடை 


Tuesday, July 03, 2012

கிறுக்கிய கவிதைகள்..!!

மகளே ....!!

உன் கண்ணில் மின்னி மறையும்
அந்த சில நொடி
 சிரிப்புக்காகவே
ஒவ்வொரு முறையும்
உன்னுடன் விளையாடி தோற்க
தோணுதடி  என் செல்லமே..! _____________________________________________________
வலி உணர்ந்த தருணம்..!எல்லாரும்
எல்லாரையும்
எல்லா நேரங்களிலும்..
திருப்திப்படுத்தி
எல்லாருக்கும் நல்லவராக
இருந்து விடுவது
சாத்தியமே இல்லை என்பதை
வாழ்கை சில நொடிகளில்
மவுனமாக உணர்த்திச் சென்று விடுகிறது.......!


______________________________________________________

தாயுமானவர்...!! 
காலம் முழுவதும் காய்ச்சலுடன்
இருக்க ஆசை என்றேன் நான்
ஏனடி பைத்தியமா உனக்கு என்றார்
இல்லை....
உன் மடியில் நான் உறங்க
இரவெல்லாம் கண்விழித்து
ஒரு தாயாய் நீ எனை
சுமக்க.....
உடலை வருத்திய
காய்ச்சலும் கூட எனக்கு
பிரியமான ஒன்றாகி போனதே
என் பிரியமானவனே என்றேன்..!
உன்னை வருத்தும் காய்ச்சலை
நான் வெறுத்து விட்டேனடி..!
ஆயுள் முழுவதும் உன்னை  என் மடியில்
நான் தாங்க காய்ச்சல் எதற்கு?
என்று அவர் உருகிய
தருணத்தில்  மீண்டும் விழுகிறேன்
அவருடனான என் காதலில்...!!
______________________________________________________

உயிர் உடைத்த தருணம்..!

பணி முடிந்து வீடு திரும்ப
வாகனத்தின் கதவை திறக்க
எத்தனிக்கையில் அருகில் நின்ற
துப்புரவு தொழிலாளியின் வெறுமை
நிறைந்த பார்வை...
என் உயிரை துளைத்து..
அன்றைய இரவிற்கான
என் உறக்கத்தில் கேள்விக்குறியை "
வரைந்து செல்ல போதுமானதாய் இருந்தது..!!

______________________________________________________

என் குட்டிப்பா..!!

குட்டிமா என்று எனை
நீ அழைக்கும் ஒவ்வொரு கணமும்
வயதை மறந்து உன் மடியில்
குழந்தையாய் தவழ்ந்திட
எண்ணுது என்  மனது..!
பெற்றவளுக்கே அன்பை கற்று தரும்
பல்கலைகழகம் நீ...!!
உன்னை பெற்றதால்
உனக்கு தாயாக மட்டுமே
ஆன எனக்கு ....
யாதுமாகி நின்ற என் உலகம் நீ ..!
ஒற்றை வார்த்தையில்
உலக சந்தோசத்தை
அள்ளித்தரும் பொக்கிஷம் நீ ..!
என் குட்டிப்பா...!!

Friday, June 29, 2012

அமெரிக்க ராணுவத்தினரின் அத்து மீறல்..!!

அமெரிக்க ராணுவத்தை தலை குனிய செய்து இருக்கிறது சமீபத்தில் வெளியான தி இன்விசிபிள் வார் என்ற ஆவணப்படம்..!!

ஏன் அப்படி என்ன அந்த படத்துல இருக்கு அமெரிக்க இராணுவம் தலை குனியுற அளவுக்குன்னு கேக்குறீங்களா? .. வேற என்ன வழக்கம் போல அமெரிக்க ராணுவத்தின் மீது எழும் பாலியல் வன்முறை குற்றசாட்டுதான் ..இம்புட்டு நாளும் இப்புடி குற்றச்சாட்டு வந்தப்ப தலை குனியாதவங்க இப்போ ஏன் குனிஞ்சாங்க? அங்கதான் இருக்கு மேட்டர் இந்த முறை வெளிச்சத்துக்கு வந்து இருப்பது அவர்கள் படை எடுத்து சென்ற நாட்டினர் மீதான அத்து மீறலோ அல்லது பாலியல் புகாரோ பற்றியது அல்ல... !! பின்ன வேற எங்கன்னு நினைக்கிறீங்களா?

தன்னுடன் வேலை செய்யும் பெண்களை அமெரிக்க இராணுவத்தினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண்களே விவரிப்பதுதான் இந்த ஆவணப்படம்...! இந்த படம் அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது..!

இந்த படம் 2012ஆம் ஆண்டுக்கான SUNDANCE FILM FESTIVAL இல் ஆடியன்ஸ் தேர்வுக்கான பிரிவில் விருதை தட்டி சென்றது...!

இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கிரபி டிக்  அமெரிக்க ராணுவத்துல ஒரு பெண் எதிரியோட குண்டுக்கு பலியாவதை விட  பாலியல் ரீதியான வல்லுறவுக்கு ஆளாக்கபடுவதே அதிகம் என புள்ளி விவர ஆதாரத்தோட தெரிவிச்சு இருக்கார்..!

இன்விசிபிள் வார் ' ட்ரெய்லர்1950களில் பெண்களை இராணுவத்தில்சேருவது நாட்டுக்கு செய்யும் சேவை என்று சொல்லியும்  ..வீடும் நாடும் வேறல்ல என்று பரவலாக செய்யப்பட்ட விளம்பரங்களின் மூலமும் பெண்களை கவர்ந்து அதிக அளவில் இராணுவத்தில் சேர ஊக்கபடுத்திய அமெரிக்க அரசு... அவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பதில் தவறி விட்டது...!! பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து மேலதிகாரியிடம் முறையிட்ட பொழுது கூட மிகவும் மோசமான வார்த்தைகளால் இந்த பெண்கள் அவமானபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்..!உலகின் மிக வலுவான இராணுவம் என்று பீற்றி கொள்ளும் இவர்களிடம் பணிபுரியும் பெண்களுக்கே சக தோழர்களிடம் பாதுகாப்பு இல்லை....!!! என்னத்த சொல்ல?

இந்த பெண்களின் நிலையை நினைத்து மனம் வருந்தினாலும்... ஒரு பக்கம் இவர்களாக தேடிகொண்டதுதானே என்றுதான் நினைக்க தோன்றுகிறது..! பெண் விடுதலை ,ஆணும பெண்ணும் சமம் என்பதும் போராட்டம் பண்ணுவதும் எல்லாம் வெறும் வாய் சவடாலுக்கு உதவுமே தவிர நடைமுறைக்கு வந்தால் இப்படிதான் பல்லிளிக்கும்..! என்பதற்கு இது கண்கூடான சாட்சி..!

இதற்கும் இஸ்லாம் தீர்வு சொல்லி இருக்கிறது......
என்னன்னு?? பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. அது மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் அடிப்படை.

ஆணும பெண்ணும் தனித்து இருக்கும் சூழ்நிலைகளை தவிர்க்க சொல்லி மிகவும் கண்டிப்பாக அறிவுறுத்துகிறது... மேலும் ஒரு மஹரமான (திருமணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள ஆண் )ஆண் துணை இன்றி தொலை தூரபயணம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை..!! ஏன்? இது போன்ற இன்னல்கள் நம் பெண்களுக்கு ஏற்பட கூடாது என்பதால்...! சுப்ஹானல்லாஹ்...!

டிஸ்கி : ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா உன் புள்ள தானா வளரும் இது பழ மொழி..

ஊரான் ஊட்டு பொண்ண நீ கையபுடிச்சு இழுத்தா உன் ஊட்டு பொண்ணு மானமும் ஒரு நாள் கப்பலேரும் இது புதுமொழி...!

THE INVISIBLE WAR.. ஆவணப்படத்தின் அஃபீசியல் வெப்சைட் 

Wednesday, June 20, 2012

இஸ்லாத்தில் சிலதார மணம் அனுமதி ஏன்?

இரு வகைத் திருமணங்கள் உள்ளன. ஒன்றுஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது மற்றதுஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணப்பது. இரண்டாவது விடயம் இஸ்லாத்தில் முற்று முழுதாகத் தடுக்கப் பட்டுள்ள அதே நேரம், ஒருஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை அதாவது நான்கு பெண்கள் வரை மணம் முடிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.. 


Sunday, June 10, 2012

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா......!!! முடியல...!!!!எப்பா ராசாக்களா.....கடவுளை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டு அப்போதான் நம்புவேன்னு சொல்ற நாத்திகவாதிகளே... டார்வினிஸ்ட்களே.... அக்காமார்களே... அண்ணன்மார்களே..... தம்பிமார்களே... தங்கச்சிமார்களே....!!!! (சுருக்கமா குழப்பவாதிகளே அப்டின்னு சொல்லிட்டு போயிரலாம் போல அவ்வ்வ்வ்வ்வ் )

இல்ல தெரியாமதான் கேக்குறேன்.. நீங்க எல்லாம் உலகம் உருவாக காரணம் என்று நம்பும், அறிவியல் அறிஞர்களால் இன்னும் நிரூபிக்கப்படாத தியரியான (நிருபிக்கப்படலன்னாதான் அது தியரி தெரியுமோ?? நிரூபிச்சிட்டா அத பேக்ட்ன்னு சொல்லுவாங்கோ..) பிக்பேங் என்று சொல்லப்படும் பெருவெடிப்பை லைவ் டெலிகாஸ்ட் ல பார்த்துட்டு அது உண்மைன்னு முடிவுக்கு வந்திங்களா? இல்ல பரிணாம வளர்ச்சி பத்தி ஆராய்ச்சி பண்ணற சைன்டிஸ்ட் பக்கத்துல உக்காந்து ஆராய்ச்சி பண்ணி நீங்களே கண்டுபுடிச்சீங்களா? இல்லாக்காட்டி குரங்கிலிருந்து குரங்கு போன்ற ஒன்றில் இருந்து(?!!!!) மனுஷன் பரிணாம வளர்ச்சி அடஞ்சத பார்த்தவங்க நேர்ல பாத்தவங்க  உங்ககிட்டே வாக்குமூலம் கொடுத்தாங்களா?? அப்புடி நேரடியா பார்த்தோ அல்லது நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள்படியோ நீங்க அத எல்லாம் நம்பி இருந்தா நீங்க கேக்குற கேள்வி நியாயம்...! ஆனா நீங்க மட்டும் எதையுமே பாக்காம ஆதாரம் எல்லாம் இல்லாம நம்புவிங்க ஆனா நாங்க மட்டும் நாங்க நம்புற கடவுள உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டனும்??? அப்பத்தான் நம்புவிங்க ஹ்ம்ம்??? எந்த ஊரு நியாயம்ப்பா இது??


இதுல என்ன ஒரு காமிடின்னா உலகம் எப்புடி தோணுச்சுன்னு விஞ்ஞானிகளுக்குள்ளேயே ஆயிரம் குழப்படி..!

ஒரு விஞ்ஞானி சொல்றார்... பெருவெடிப்பு தான் காரணம் உலகம் தோன்ற அப்டின்னு...

இன்னொருத்தர் சொல்றார் இல்லவே இல்லை... இதெல்லாம் தன்னால உருவாக்கி இருக்க வாய்ப்பே இல்ல... கண்டிப்பா... எதோ ஒரு சூப்பர் பவர் இருக்கு அதான் உலகம் உருவாக காரணம்ன்னு சொல்றாங்க.... (மறந்து கூட அந்த பவர கடவுள்ன்னு ஒப்புக்க மாட்டங்களாம்)

அதை எல்லாம் மிஞ்சி இன்னும் ஒரு சில விஞ்ஞானிகள் (நியூட்டன் உட்பட ) இந்த உலகம் உருவாக காரணம் கடவுள்தான்னு சொல்றாங்க....!!!

சரி இத்தனை குழப்பம் இருக்கே பரிணாமத்த நம்புற அறிவு ஜீவிங்களாச்சும் இத பத்தி சரியா புரிஞ்சு வச்சு இருக்காங்களான்னு பார்த்தா....!!!! ஹ்ம்ஹும் அவங்க அத விட குழப்பத்துல இருக்காங்க..! ஹிஹிஹி

ஹஹஹா ஒன்னும் வேணாங்க... !

கடவுள் இல்லவே இல்ல அப்டின்னு சொல்லிட்டு பரிணாமத்த துணைக்கு கூடிக்கொண்டு வந்த நாத்திகவாதிகளுடன் நடந்த இரண்டு குட்டியூண்டு விவாதங்கள்... கீழே

சம்பவம் நம்பர் -1
நண்பர் -கடவுளே இல்லை.. மதங்கள் தேவை இல்லை..!
நான் -சரி கடவுள் இல்லண்ணே வச்சுக்குவோம்... இந்த உலகம் எப்புடி உருவாச்சு சொல்லுங்க பாப்போம்...???
நண்பர்: பெருவெடிப்பு நிகழ்ந்ததால உருவாச்சு...!!
நான் :அப்புடியா? சரி... என்ன வெடிச்சுச்சு ??? ஏன் வெடிச்சுச்சு??

நண்பர்: ங்கே...!! ங்கே...!!! ங்கே...!! தெரியலங்க...!

சம்பவம்.-2

நான் - ஏன் கடவுள் இல்லன்னு சொல்றிங்க சகோ?
நண்பர்-சின்ன வயசுல இருந்தே அப்புடிதாங்க.. எனக்கு அறிவியல்ல ஈடுபாடு சாஸ்தி...!!
நான்- ஒஹ்ஹ் அப்டியா? சரி.. இந்த உலகம் எப்புடி தோன்றி இருக்கும்ன்னு நெனைக்கிரீங்க?
நண்பர்-ஹ்ம்ம் ஹ்ம்ம் evolution (பரிணாம வளர்ச்சி ) தான் காரணம்...!!
நான்- வாட்?? எனக்கு தெரிஞ்சு அதுல உயிர்கள் பரிணாம வளர்ச்சி படி எப்புடி உருவாச்சுன்னுதானே சொல்லி இருப்பாங்க?
நண்பர்-ஒவ்ஹ்ஹ் அப்படியா ஹ்ம்ம்ம் . bigbang (பெருவெடிப்பு)தான் காரணம்...!
நான்- அப்டியா? என்ன வெடிச்சுச்சு?
நண்பர்: ஒரு குறிப்பட்ட அணு வெடித்து சிதறியது அதனால் இந்த பேரண்டம் உருவானது...!
நான்: அந்த அணு எப்படி அங்க வந்துச்சி???
நண்பர்: ங்கே..! ஹிஹிஹி இல்ல நான் முழுமையான பரிணாமவாதி இல்ல...90% தான்...
நான்- ??!?!?!?!??!?!?!!?!?

ஒன்னு அந்த பக்கம் நிக்கணும் இல்ல இந்த பக்கம் நிக்கணும் ரெண்டும் இல்லாம ஆத்துல ஒரு கால சேத்துல ஒரு கால்ன்னு நின்னுகிட்டு இந்த பரிணாமவாதிகள் பண்ற கூத்து இருக்கே அப்பப்பா... சொல்லி மாளாது... :)

இப்புடித்தான் இருக்கு கடவுளை பார்த்தாதான் நம்புவேன்னு சொல்ற பெரும்பாலான கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுடைய அறிவியல் ஞானம்...!! சரி இவங்கதான் இப்புடி சராசரி மனிதர்கள்தானே பாவம் விட்டுடலாம்
ஆனா இந்த பரிணாமம், பெருவெடிப்பு அது இதுன்னு கண்டுபுடிச்சாங்களே நம்ம சைன்டிஸ்ட் அங்கிள்ஸ் அவங்களாச்சும் தெளிவா இருக்காங்களான்னு பார்த்தா............... ஸ்ஸ்ஸ்ஸப்பா....!!! அவங்க ஒவ்வொருத்தரும் சொல்ற விளக்கத்த பார்த்தா... அவங்க எல்லாம் நேரடியா எங்கேயோ இருந்து தப்பிச்சு வந்த கேஸ் மாதிரி பேசுறாங்க...!! அவ்வ்வ்வ்வ்வ்வ் ..... சாம்பிள்க்கு கொஞ்சம் கீழ..

God Almost Certainly Does not Exist.
கடவுள் ஏறக்குறைய நிச்சயமாக இல்லை

- டாகின்ஸ்

ஒன்னு கடவுள் இருக்குன்னு சொல்லு இல்ல இல்லன்னு சொல்லு இதென்ன ஏறக்குறைய இல்ல?? மனுசன குழப்பி விட்டு வேடிக்க பாக்குறதே இந்த விஞ்ஞானிகளுக்கு எல்லாம் பொழப்பா போச்சு.... :(

என்னன்னு சொல்ல இதைத் தான் தெளிவா கொழப்புறதுன்னு சொல்லுவாங்களோ?
புரியாதப் புதிர்தான்.!!!

அடுத்த அங்கிள் என்ன சொல்றாருன்னா...

ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.

எங்க இருந்தோ வந்து இறங்குச்சாம் எப்பா ராசா நாங்களும் அதைத்தானே சொல்றோம் ... இறைவன் மனிதனையும் மற்ற உயிர்களையும் முழுமையாக படைத்த பின்தான் பூமிக்கு அனுப்புனான்னு ..... இத நீங்க புதுசா கண்டுபுடிச்சா மாதிரி போடுறீங்களே... அவ்வ்வ்வ்வ்

அடுத்த அங்கிள் கொஞ்சம் நியாயமா பேசுறாரு...

உயிரின் தோற்றத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்ற கருத்தை ஆமோதிக்கின்றேன். உயிரின் தோற்றத்தை அலசும் பல யூகங்கள் உள்ளன. ஆரம்ப கால பூமியை போன்ற சூழ்நிலையை வேறொரு கிரகத்தில் உருவாக்கி சோதித்தால் ஒழிய நம்மால் உயிரின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது. அறிவியலில் சிலவற்றை நிரூபிக்க முயற்சிக்கலாம். ஆனால், சுமார் 3.5-4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வை விவரிக்கும் யூகங்களை நிரூபிப்பதென்பது முடியாத காரியம் - வென்டர்.


இன்னொரு கிரகத்துல பூமியுடைய சூழ்நிலைய உருவாக்கி ஆராய்ச்சி பண்ண போறாராமா..??!!?? பண்ணுங்க பண்ணுங்க என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. சாரி வாழ்த்துக்கள்...!!

இப்படி அறிவியல் அறிஞர்களே பெரும் குழப்பத்துல இருக்குற... ஒரு நிலையான முடிவுக்கு வர முடியாம தவிக்கிற ஒரு விஷயத்த உலக மகா ஆதாரமா எடுத்துகிட்டு கடவுள் இல்லன்னு என்கிட்டே வாதம் பண்றவங்களுக்கு ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட் போங்க பாஸ் போயி மொதல்ல அறிவியல பத்தி பரிணாமத்த பத்தி முழுசா படிங்க.... கண்டிப்பா கொலம்புவிங்க... அப்புறம் கீழே தமிழ் குரான் லிங்க் கீழே கொடுத்து இருக்கேன் முழுமையா படிங்க.... புரியாத பல விஷயம் புரியும் நீங்க திறந்த மனசோட எந்த முன்முடிவும் எடுக்காம படிச்சீங்கன்னா மட்டும் .... என்ன டீல் ஓகே வா??

அதெல்லாம் படிச்சுட்டு வாங்க தாரளாமா விவாதம் பண்ணலாம்... அது வரைக்கும் மூச்..!

தமிழ் குரான் முழுமையாக வாசிக்க 
குரானில் விஞ்ஞானம்


டிஸ்கி : இது அறிவியலை துணைக்கு அழைத்து வந்து கடவுள் இல்லை என சொல்லும் புத்திசாலிகளுக்கு மட்டும்
நீங்க நம்புற அறிவியல விட மிக தெளிவான ஆதாரங்கள எங்க இறைவன் அருளிய குரான் எங்களுக்கு தந்து இருக்கும் போது நாங்க குரான தந்த கடவுள நம்புவமா ? இல்ல உலகம் உருவானத பத்தி சரியா நிருபிக்க கூட முடியாம பல நூறு வருஷமா  திணறிகிட்டு தியரிகளை மட்டுமே வைத்து விளையாட்டு காட்டி கொண்டு இருக்கும் அறிவியலை நம்புவோமா? எது புத்திசாலித்தனம் என்பது புத்திசாலிகளுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்


இறை நாடினால் மீண்டும் சந்திப்போம் ...

உங்கள் அன்பு சகோதரி
ஷர்மிளா ஹமீட்

Wednesday, May 30, 2012

நான் பாதுகாக்கப்பட்டவள்...........!!!!

ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணாம்
ஹிஜாப் அணிந்திருக்கும் நான்...!!
ஏளன பார்வையுடன் என்னை கடந்து செல்கிறாள்..
தொடை தெரிய உடை அணிந்த
நவநாகரீக நங்கை ஒருத்தி...
என் மார்க்கம் எனக்களித்த
சுதந்திரத்தின் எல்லை பற்றி
அவளுக்கெங்கே தெரிந்திருக்க போகிறது.... பாவம்....!
கண்ணியம் காக்க நான் அணியும் உடை...
உன் கண்ணை உறுத்துகிறதே பெண்ணே...
உன் நாகரிக உடையால்
பல ஆண்களின் கண்களுக்கு இரையாகி....
அவர்களின் கனவில் தற்காலிக
மனைவியாகி போகின்றாயே...!!
இதுதான் உன் சமுதாயம்
உனக்களித்த சுதந்திரமா?
இல்லை அந்நிய ஆண்களை கவர வேண்டும் என்ற
நோக்கில் உடல் அழகை கடை விரித்து
காட்டும் கூட்டத்தை சேர்ந்தவளா நீ ?
அப்படி என்றால் எந்த அருகதையும் இல்லை"
உனக்கு என் ஹிஜாப் பற்றி பேச.....!!!!
ஆண்களின் கண்களுக்கு நீ ஒரு காட்சி பொருள்.....
ஆனால் நானோ பாதுகாக்கப்பட்ட பொக்கிஷம்....!!
வக்கிர புத்தி கொண்ட ஆண்களின் கழுகு பார்வையில்
இருந்து என்னை தற்காத்து கொள்ள.....
என் மார்க்கம் எனக்களித்த கேடயம் ஹிஜாப் ...!!
என் அறிவும் திறமையும் போதும் உலகை வெல்ல.....!!!!
தெரிந்து கொள் முட்டாள் பெண்ணே....
நான் ஒடுக்கப்பட்டவள் அல்ல...
பாதுகாக்கப்பட்டவள்...........!!!!!!

Tuesday, April 24, 2012

பல்போ... பல்பு வாங்கிய.... திருமதி எக்ஸ்.....!!!!

மாற்று மதத்தை சேர்ந்த ஒரு அக்கா ஒரு நாள் நம்ம நிஷாக்கா கிட்டே வந்து
அக்கா அக்கா ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு 'க்கா அப்டின்னாங்களாம்.. அப்படி என்னதான்மா உன் உலக மகா டவுட்டு சொல்லு என்னால முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்னு சொன்னாங்கலாம் நம்மாளு உடனே அந்த அறிவாளி அக்கா கேட்டுச்சாம் ஏன் உங்க வீட்டு பொம்பளைங்கள முக்காடு போடுறிங்க மூடி மூடி வச்சு உங்கள நீங்களே இன்சல்ட் பண்ணிக்கிறீங்க இது உங்க சுதந்திரத்த பறிக்கிற மாதிரி இல்லையான்னு , கேட்டாங்களாம்.....

காதல் என்றால்....!!

காதல் என்றால்...
மரத்தை சுற்றி ஆடுவதும்,
கலர் கலராக பூக்களுடன்
பரிசுபொருட்களும் கொடுப்பது என்று
எண்ணி இருந்தேன்.....

Monday, April 23, 2012

அழகி

அழகு சாதன விளம்பரங்கள் சொல்லும்
ஒரே வாரத்தில் சிகப்பழகு,
ஒரே மாதத்தில் உடல் எடை குறைப்பு என்பதெல்லாம்

நம் மூளையை மழுங்க வைத்து
அவர்கள் பொருளை விற்க
நடத்தும் நாடகமடி பெண்ணே...
விழித்திடு இனியேனும்...!!
இறுக்கி பிடிக்கும் ஆடையிலும்...
முக ஒப்பனைகளிலும் ...

இஸ்லாத்தில் மறுக்கப்படும் பெண்ணுரிமை...!!!?????

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் எடுத்துகொள்ளும் தலைப்பு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது அடக்கி ஆள்கிறது என்பதாகும்....இதற்கெல்லாம் அவர்கள் கூறும் ஒரே ஒரு காரணம் இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் அணிய சொல்கிறார்கள் என்பதே...ஹிஜாப் என்பது அடக்கு முறை என்றும் ஹிஜாப் அணிய சொல்லி பெண்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் மாற்று மத சகோதர சகோதரிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது

Sunday, April 22, 2012

மனித உருவில் ஒருகொடிய மிருகம்..!!!

                 பெண் குழந்தைகளைக் காப்போம்!

பெங்களூருவைச் சேர்ந்த மூன்று மாத பெண் குழந்தை அப்ரீன், பெற்ற தகப்பனால் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, வெறித்தனமாக காயங்கள் ஏற்படுத்தப்பட்டு, குதறப்பட்டு கொல்லப்பட்டாள். இது இந்நாட்டு பெண் குலத்தின் மற்றொரு துயரக்கதை அவ்வளவுதான் என இந்த தேசம் மறந்து தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிச் சென்றுவிடும் கொடுமைதான் நிகழ்வுகளில் மிகக் கொடுமையானது.

Saturday, April 21, 2012

பத்திரமாயிருக்கிறேன்... எனக்குள் - நான் மிக மிகப்பத்திரமாய்....!!!

                                                                                                


ஹிஜாப் !!!  பத்திரமாயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!

எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!

டீக்கடை தாண்டி
நடந்து போகையில்...
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
பாவங்களால் நிரம்பிவழிய...
வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!

என்னைப்
பின்தொடர்ந்து வா...
விசிலடி..!!!!
கேலிசெய்....!!!
என யாரையும்...
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்...!!!

வகுப்பறைகளிலும்... பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!

விழிகளால் ஊரே ரசித்து...
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை - நான்!!!

அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்து நிற்கிறேன்...!!!

அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிறார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!

பாவம் அவர்கள்....;
.......................
அநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!


டிஸ்கி: படித்ததில் மிகவும் பிடித்த கவிதை..... சகோதரி ரஹீமா பைசால் அவர்களின் ஒவ்வொரு வரியும் ஹிஜாபின் அருமையை நயமாக எடுத்துரைக்கின்றது  
,,,,!!
http://raheemafaizal.blogspot.com/2011/09/blog-post.html