Pages

Tuesday, April 24, 2012

பல்போ... பல்பு வாங்கிய.... திருமதி எக்ஸ்.....!!!!

மாற்று மதத்தை சேர்ந்த ஒரு அக்கா ஒரு நாள் நம்ம நிஷாக்கா கிட்டே வந்து
அக்கா அக்கா ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு 'க்கா அப்டின்னாங்களாம்.. அப்படி என்னதான்மா உன் உலக மகா டவுட்டு சொல்லு என்னால முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்னு சொன்னாங்கலாம் நம்மாளு உடனே அந்த அறிவாளி அக்கா கேட்டுச்சாம் ஏன் உங்க வீட்டு பொம்பளைங்கள முக்காடு போடுறிங்க மூடி மூடி வச்சு உங்கள நீங்களே இன்சல்ட் பண்ணிக்கிறீங்க இது உங்க சுதந்திரத்த பறிக்கிற மாதிரி இல்லையான்னு , கேட்டாங்களாம்.....

காதல் என்றால்....!!

காதல் என்றால்...
மரத்தை சுற்றி ஆடுவதும்,
கலர் கலராக பூக்களுடன்
பரிசுபொருட்களும் கொடுப்பது என்று
எண்ணி இருந்தேன்.....

Monday, April 23, 2012

அழகி

அழகு சாதன விளம்பரங்கள் சொல்லும்
ஒரே வாரத்தில் சிகப்பழகு,
ஒரே மாதத்தில் உடல் எடை குறைப்பு என்பதெல்லாம்

நம் மூளையை மழுங்க வைத்து
அவர்கள் பொருளை விற்க
நடத்தும் நாடகமடி பெண்ணே...
விழித்திடு இனியேனும்...!!
இறுக்கி பிடிக்கும் ஆடையிலும்...
முக ஒப்பனைகளிலும் ...

இஸ்லாத்தில் மறுக்கப்படும் பெண்ணுரிமை...!!!?????

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் எடுத்துகொள்ளும் தலைப்பு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது அடக்கி ஆள்கிறது என்பதாகும்....இதற்கெல்லாம் அவர்கள் கூறும் ஒரே ஒரு காரணம் இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் அணிய சொல்கிறார்கள் என்பதே...ஹிஜாப் என்பது அடக்கு முறை என்றும் ஹிஜாப் அணிய சொல்லி பெண்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் மாற்று மத சகோதர சகோதரிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது

Sunday, April 22, 2012

மனித உருவில் ஒருகொடிய மிருகம்..!!!

                 பெண் குழந்தைகளைக் காப்போம்!

பெங்களூருவைச் சேர்ந்த மூன்று மாத பெண் குழந்தை அப்ரீன், பெற்ற தகப்பனால் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, வெறித்தனமாக காயங்கள் ஏற்படுத்தப்பட்டு, குதறப்பட்டு கொல்லப்பட்டாள். இது இந்நாட்டு பெண் குலத்தின் மற்றொரு துயரக்கதை அவ்வளவுதான் என இந்த தேசம் மறந்து தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிச் சென்றுவிடும் கொடுமைதான் நிகழ்வுகளில் மிகக் கொடுமையானது.

Saturday, April 21, 2012

பத்திரமாயிருக்கிறேன்... எனக்குள் - நான் மிக மிகப்பத்திரமாய்....!!!

                                                                                                


ஹிஜாப் !!!  பத்திரமாயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!

எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!

டீக்கடை தாண்டி
நடந்து போகையில்...
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
பாவங்களால் நிரம்பிவழிய...
வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!

என்னைப்
பின்தொடர்ந்து வா...
விசிலடி..!!!!
கேலிசெய்....!!!
என யாரையும்...
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்...!!!

வகுப்பறைகளிலும்... பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!

விழிகளால் ஊரே ரசித்து...
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை - நான்!!!

அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்து நிற்கிறேன்...!!!

அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிறார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!

பாவம் அவர்கள்....;
.......................
அநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!


டிஸ்கி: படித்ததில் மிகவும் பிடித்த கவிதை..... சகோதரி ரஹீமா பைசால் அவர்களின் ஒவ்வொரு வரியும் ஹிஜாபின் அருமையை நயமாக எடுத்துரைக்கின்றது  
,,,,!!
http://raheemafaizal.blogspot.com/2011/09/blog-post.html

பாவங்களை அள்ளி தரும் பதினான்கு நாட்கள் (நாகூர் தர்கா கந்தூரி விழா)அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே!
இன்னும் சில தினங்களில் நாகூர் தர்கா கந்தூரியை எதிர்பார்த்த வண்ணம் தமிழகம் முழவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர்.  இந்த கந்தூரிக்கும்  இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்ப்பு என்ன கொஞ்சம் பார்ப்போம்  வாருங்கள்.

தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்ப டுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.நபி (ஸல்) அவர்கள் அவர்கள் மரணிப்பதற்கு முன்பு தெளிவாக சொல்லி விட்டு சென்றார்கள்,தனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள் என்று .
நபி (ஸல்) அவர்கள் எனது கப்றை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்’ என தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் எச்செரித்துளார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மத்,அபூதாவூது)
புனிதம் கருதி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் நாகூர் தர்கா கந்தூரிக்கு வருகின்றனர் இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பானது.  புனிதம் கருதி பிரயாணம் செய்வதாக இருந்தால் மூன்று இடங்களுக்கு செல்வதற்கு தான் நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுந் நபவீ மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று இடங்களை தவிர வேறெந்த இடத்திற்கும் (புனிதத்தை முன்னிட்டு) பயணம் மேற்கொள்ளதீர்கள் நூல் : புகாரி 1189


நாகூர் தர்கா கந்தூரி பதினான்கு நாட்களும் இஸ்லாத்திற்கு எதிரான செயல்கள் அந்த தர்காவில் நடத்துவது மட்டுமின்றி நாகூர் முழுவதும் இந்த அனாச்சார செயல்கள் அரங்கேற்ற படுகின்றன
பாம்பரம் என்கின்ற ஒரு மரத்தை தர்கா மினாரவில் எற்றுவதிலிருந்து இந்த அனாச்சாரங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. பிறகு வீதிகளில் ஆட்டம்,பாட்டம்களோடு தர்கா கொடி கொண்டு வரப்பட்டு தர்கா மினராக்களில் ஏற்றப்படும்,இதற்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் திருவிழா கோலம் தான் 8 ம் இரவு வான வேடிக்கை என்ற பெயரில் பல ஆயிரங்களை கரியாக்குவார்கள். இந்த அனாச்சாரங்களில் பீர் சாஹிப் என்று ஒரு நிகழ்வு உண்டு. அவருடைய பணி கந்தூரி விழா சிறப்பாக நடக்க  சில நாட்கள் தொடர்ந்து நோன்பிருப்பது .அவ்லியாவிர்க்கு மட்டும் அல்ல பீர் சாஹிபிர்க்கும் ஆற்றல் உண்டு என தர்காவிற்க்கு வரும் மக்கள் நம்புகின்றனர். விசேச தினத்தன்று இவர் வீசும் எலுமிச்சை பழத்தை பெற்றால் பரக்கத் என்று பெண்கள் மோதும் காட்சி அவலத்தின் உச்சம். 


இறுதியாக கப்ரில் சந்தனம் பூசுவது,கொடி இறக்குவது என்று இந்த அனாச்சாரங்கள் முடிவடைகின்றன.இந்த நிகழ்சிகள் அனைத்தும் ஒன்று கூட இஸ்லாத்திற்கும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களுக்கும் எள் முனை அளவு கூட சம்பந்தம் கிடையாது. இவை அனைத்தும் பிற மதங்களிலிருந்து கோப்பி அடிக்கபட்டவையாகும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் (மார்க்க விஷயத்தில்) பிற சமூகத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர்கள் அவர்களை சார்ந்தவர் நூல் : அபூ தாவூத் 3512

இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபிஅவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
பாவங்களிலேயே மிக பெரிய பாவமான அல்லாஹ்விற்கு இணை வைத்தல் என்ற ஒரு செயல் தர்காக்களில் அரங்கேறுகின்றன அவ்லியாக்களை அழைத்து பிரார்திப்பதனாலும்,அவர்களுக்காக நேர்ச்சை செய்வதன் மூலமும்.

அல்லாஹ் கூறுகிறான்: -நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)

மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்! 
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23) 

“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்……(அல்குர்அன் 4:48)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”(அல்-குர்ஆன் 2:159)

சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?”(அல்-குர்ஆன் 3:71)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவறவே மாட்டார்கள்.

(உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)


நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்..!!!

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)

ஆமீன்....!!!

Friday, April 20, 2012

பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை...!!கண்ணாடியா? ரகசிய கேமராவா??
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். 

காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பொழுதும்  ஏற்படுத்த வேண்டும

 இந்த வகை கண்ணாடிகளை சுலபமாக கண்டறியும் முறை

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது உங்கள் விரலுக்கும் கண்ணாடிக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி தெரிந்தால் அது சாதாரணமான முகம் பார்க்கும கண்ணாடிதான்...!! அச்சம் கொள்ள தேவை இல்லை.....
ஒரு வேலை இடைவெளி இல்லாமல் உங்கள் விரல்நுனி படும் இடத்திற்கு அருகிலேயே கண்ணாடியின் பிம்பம் தெரிந்தால் அது உங்களை வேவு பார்க்கும் கண்ணாடி என்று தெரிந்து கொள்ளலாம்...~!!


Wednesday, April 18, 2012

ஹிஜாப் ஆணாதிக்கமா..? பெண்ணடிமைத்தனமா ? இல்லை பெண்மைக்கு கொடுக்கப்படும் கௌரவமா?

என் கேள்விக்கான உங்கள் பதில் ஆணாதிக்கம் என்றோ பெண் அடிமைத்தனம் என்றோ இருக்குமானால்...இந்த பதிவின் முடிவில் உங்கள் கருத்தை மாற்றி கொள்வீர்கள் என நம்புகிறேன்...!!


பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.
இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.


முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும்
முக்கியமானதாகத் திகழ்கின்றது.'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.


'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
   
கீழ் கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பாருங்கள்.. இந்த இஸ்லாமிய சகோதரி எவ்வளவு அருமையாக விளக்குகிறார்... ஹிஜாப் அணிவது பெண் அடிமைத்தனம் அல்ல... பெண் உடம்பை போகப்    பொருளாக பார்க்க விரும்பும் ஆண்கள் தான் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடுக்க மீடியாக்கள் மூலம் இது போன்ற தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள்...சுயமாக சிந்திக்க கூடிய அறிவாற்றல் பெற்ற எவரும் ஹிஜாப் பெண்களை காக்கும் கேடயம் என்றுதான் கூறுவார்கள்...!!
மீடியாக்களின் தாக்கத்தால் சுய சிந்தனைகளை இழந்தவர்கள் மட்டுமே இதை பெண்ணடிமைத்தனம் என்பார்கள்...
பெண் என்பவள் அவளுடைய அறிவுக்கும் பண்புகாகவும் மட்டுமே மதிக்க பட வேண்டும்... அவள் உடல் அழகை கொண்டு எடை போடுவது அவளை இழிவு படுத்தும் செயல் என்று இந்த சகோதரி கூறுகிறார்... அதுதான் உண்மை.... சிந்தியுங்கள் சகோதரிகளே...!!

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்
ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.


அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.


'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.


ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர்.

தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.


பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை  உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும்  இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும்  தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம்.

அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

Tuesday, April 17, 2012

ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி !!!

நீதி மன்றத்தில் நீதிபதிகள் பார்த்திருக்க அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்காவல் துறை கண்முன்பு
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?

இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்'நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினிஇஸ்லாமிய முறையில்,ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

கொலையாளி கைதான பொழுது

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது . குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காகவன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல்ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

சிந்தியுங்கள்...!!!
உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காகவன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?!!!!!!!!!!!

குற்றவாளிகளை அடையாளம் காட்டும் மூக்கு!

ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்தி துல்லியமாக கண்டுபிடிக்க கைரேகையைதான் நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.... ஏன் என்றால் ஒருவரின் கைரேகையை போல் இன்னொருவரின் கைரேகை இருப்பதில்லை........ முக்கியமான ஆவணங்களில் கைரேகை பதிப்பதும் இதனால்தான்.....
                 கைரேகையை வைத்து மட்டும் சமூக விரோதிகளை அடையாளம் காணுவது கடினம். உடனடி பலனும் கிடைக்காது. இதற்கு மாற்றுவழியைத் தேடி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அவர்களின் முயற்சிக்கு பலன் தந்து புதிய துப்பறியும் உறுப்பாக அமைந்துவிட்டது மூக்கு. முகத்தில் எல்லா நேரத்திலும் பளிச்சென்று முன்நோக்கி அமைந்திருக்கும் உறுப்பு மூக்கு. அதனாலோ என்னவோ ஒருவரை அடையாளம் காட்டுவதிலும் முன்னோடியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கண், காது, ரேகை இவற்றைவிட மூக்கு ஒருவரை துல்லியமாக அடையாளம் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பலவித மாதிரி மூக்குகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் உள்ள மூக்குகளை 6 விதமாக வகைப்படுத்தி உள்ளனர்.
                       ரோமன், கிரேக்கம், பியாக், வாக், ஸ்நப் மற்றும் டர்ன்அப் போன்றவை அந்த 6 வகையாகும். மூக்குகளை பல்வேறு கோணங்களில் முப்பரிமாண (3 D) வடிவில் படம் பிடித்து ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 160 விதமான சோதனைகளுக்குப் பிறகு, மூக்கின் வடிவம், அவற்றின் நிழல் அமைப்பு, சுவாசம் செய்யும் முறையை ஒப்பிட்டு ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டது. இது குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண உதவியது. எனவே இந்த புதிய முறையைக் கொண்டு புதுவித பாதுகாப்பு கருவியை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
              இது குறித்து தினகரன் கோவை பதிப்பில் (07-03-2010) வெளி வந்த செய்தி இதை உறுதி படுத்துகிறது....
                                        இங்கிலாந்தைச் சேர்ந்த பாத் பல்கலைக் கழகம் இந்த நவீன யுக்தியை கண்டுபிடித்தது. ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, ''குற்றவாளிகளை பார்வையை வைத்து கண்டுபிடிப்பது கடினம். கண்ணின் கருவிழியின் தெளிவற்ற தன்மை, கண் விரிவதற்கேற்ப ஏற்படும் மாற்றம் போன்றவை குற்றவாளியை தெளிவாக அடையாளம் காண சிக்கலாக அமைகிறது. காதுகளையும் எளிதில் அடர்ந்த தலைமுடி மறைத்துவிடுகிறது. ஆனால் முக்கானது எளிதில் மறைக்க முடியாத உறுப்பு. அறுவைச் சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டாலும் சுவாசமுறை தீவிரவாதியை எளிதில் காட்டிக் கொடுக்கும். எனவே வருங்காலங்களில் குற்றத்தைக் குறைக்கும் அதிமுக்கிய கருவியாக 'சுவாச ஸ்கேனிங்' பயன்படும்'' என்றார்.

மனிதனை தனித்து அடையாளம் காண்பது குறித்து குரானில் கூறப்படுவது என்ன?என்னது..!!இன்றைய நவீன கால ஆராய்ச்சி பற்றி அறிவியல் வளர்ச்சி அறவே இல்லாத காலத்தில் அதாவது ஆயிரத்து நானூறு ஆண்டுகள் முன்பே எழுதப்பட்டு இருக்கிறதா என்று ஆச்சரியபடுகிரீர்களா ?                                          

             அதுதான் இஸ்லாம் தந்த குரானின் மகத்துவம்....!!!!

         அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் "முன்னோர்களின் கட்டுக் கதைகள்" எனக் கூறுகிறான் (திருக்குர்ஆன், 68:15)

 ''அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.'' (திருக்குர்ஆன், 68:16)

                        அல்லாஹு அக்பர்.... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!  

அல்லாஹ் சுபானஹு வ தஆலா நம்அனைவர் மீதும் அருள் புரிவானாக. நம் அனைவர்க்கும் நேர்வழியை எளிதாக்கிவைப்பானாக. ஆமீன்..!!      இந்த பதிவில் நான் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அனைத்தும் சில வலைபூக்களில் நான் திரட்டிய தகவல்களின் தொகுப்பே  ஆகும்..!!!ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் சகோதர சகோதரிகளே திருத்தி கொள்கிறேன்....!! :)
            அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Saturday, April 14, 2012

ஹதீஸை உண்மைபடுத்தும் சம்பவம்...!!!

 இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)


நிச்சயமாக என்றொரு நாளாவது இவ்வுலகம் அழிந்தே தீரும் என்பது  நாம் யாவரும் அறிந்த ஒரு 
விஷயம் .  ஆனால் அதனைப்பற்றி நாம் சிந்திக்காமல் உலக விஷயங்களில் மூழ்கி நம்மை படைத்தவனை அவன் நமக்கு ஏவிய விஷயங்களை மறந்து திரிகிறோம்... நாம் வாழும் காலம் வரை இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு அடிபணிந்து  நன்மை செய்து வாழ வேண்டும்.. 

உலக முடிவின் அடையாளங்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஆதாரங்களில் ஒன்று...... 
        யூப்ரடீஸ் நதி தங்கபுதையலை வெளியே தள்ளும் என்பதாகும்...!!

  யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

7119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக 'தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது' என்று இடம் பெற்றுள்ளது.
Volume :7 Book :92


மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

     சிந்திப்போம்!! ஈருலக வெற்றியினைப் பெறுவோம்!!!.

எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் நேர் வழியை காட்டுவானாக ஆமீன்.. !!

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?

மனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) - இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:
மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் - அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் - சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் விபச்சாரம் வல்லுறவு கொள்ளுதல் தகாதவர்களிடம் உடல் உறவு கொள்ளுதல் எய்ட்ஸ் போன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் ஒரு பிரிவான தேசிய குற்றவியல் புலனாய்வுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்தது. மேற்படி புள்ளி விபரத்தின்படி வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டோரில் பொரும்பாலானோர் போதையில் இருந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. அது போன்றுதான் சமுதாயத்திற்கு தொல்லை தரும் பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்படி புள்ளிவிபர அறிக்கையின்படி 8 சதவீத அமெரிக்கர்கள் தகாத உறவு கொள்பவர்களாக இருக்கின்றனர். தகாத உறவு கொள்ளும் குற்றத்தில் ஈடுபடும் அனைவரும் - போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள். தகாத உறவில் ஈடுபடும் ஒருவரோ அல்வது இரண்டு பேருமோ போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.

உலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழக்கம் அமைந்துள்ளது.

குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் 'கௌரவத்திற்காக குடிக்க துவங்கியவர்களே!'
குடிப்பழக்கம் உள்ள பலரும் - மது பானங்களுக்கு ஆதரவாக தங்களை 'கௌரவ குடிகாரர்கள்' என்று அழைத்துக் கொள்வார்கள். தாங்கள் எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு பெக் மாத்திரம் குடிப்பதாகவும் அதனால் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தாங்கள் ஒருபோதும் குடிபோதையால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் வாதிடுவார்கள். ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் 'கௌரவ குடிகாரரராகத்தான்' ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு குடிகாரரும் - ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை - நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.

ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து - பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் - அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.

உதாரணத்திற்கு ஒரு 'கௌரவ குடிகாரர்' தனது சுய கட்டுப்பாட்டை ஒரு நாளாவது இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாளில் அவர் ஒரு வல்லுறவு குற்றம் செய்துவிட்டாரெனில் அல்லது ஒருவரிடம் முறைகேடான உறவு கொண்டுவிட்டார் எனில் செய்த அந்த குற்றத்திற்காக அவர் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டிய நிலை உருவாகும். பாதிப்புக்கு உள்ளானவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படக் கூடிய நிலையும் - பாதிப்புக்கு உள்ளாக்கியவர் தான் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:
மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள் இஸ்லாமிய செய்திப் பேழைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:
'தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்'
 என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3371 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

'அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் - குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளத
ு' என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3392 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள் அதாவது மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக உலகில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன எனில் - அந்த நோய் மதுபானம் அருந்துவதால்தான் இருக்கும். மதுபானம் அருந்துவதால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்கிறார்கள். மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. ஏனெனில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் எல்லா நோய்களையும் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான். இத்துடன் நான் வரிசைப்படுத்தியிருக்கும் - நோய்கள் - அனைத்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தவதால் - குறிப்பாக மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்களாகும்.

1. மதுபானங்கள் அருந்துவதால் ஈரலரிப்பு நோய் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
2. மனித உடலின் இரப்பை - தலை - கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
4. இரத்த அழுத்தநோய் - மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
5. வாதம் - கைகால் முடக்கம் - வலிப்பு போனற் நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
6. நரம்பு மண்டலம் பாதிக்கப்படல் - நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
7. நினைவிழத்தல் - மூளைக் கோளாறு போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது மதுபானங்களே.
8. தோல் வெடித்தல் - தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
9. கை - கால் பதற்றம் - உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைவது மதுபானங்களே.
10. உடலில் பல பகுதியிலும் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்கச் செய்வது மதுபானங்களே.
11. மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உருவாக காரணமாக அமைவது மதுபானங்களே.
12. மதுபானங்களால் ஆண்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்புகளைவிட பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் பாதிப்பும் அதிகம். கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது. மது அருந்துவதால் கரு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேரை மருத்துவ உலகம் அடையாளம் கண்டுள்ளது.

இவ்வாறு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் ஏராளம் . தாராளம்.அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:
அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:

'விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)
            மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

மது பழக்கம் ஒரு தீய நோய்.
மது அருந்துபவர்கள் மீது தம் தாராள மனப்போக்கை கைவிட்டுவிட்டார்கள் தற்போதைய மருத்துவர்கள். அது ஒரு கெட்ட பழக்கம் என்று அழைக்கப்பட்டது பழங்கதையாகி இப்போது மதுப்பழக்கத்தை ஒரு தீய நோய் என்று அழைக்கிறார்கள்.

மதுப்பழக்கம் ஒரு தீய நோய்
புட்டிகளில் அடைத்து மக்கிடையே விற்கப்படும் ஒரு தீய நோய்
தினசரி செய்தித் தாள்களில் - வாராந்திர மாதாந்திர பத்திக்கைகளில் வானொலியில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய்
உரிமம் வழங்கப்பட்ட விற்பனை கேந்திரங்களில் விற்கப்படும் ஒரு தீய நோய்
அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு தீய நோய்
நெடுஞ்சாலைகளின் கோர மரணங்களுக்கு காரணமான ஒரு தீய நோய்
குடும்ப வாழ்க்கையைச் சீரழித்து சமூகக் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ஒரு தீய நோய்
எந்தவித நோய் எச்சரிக்கையோ - அல்லது நோய்க்கிருமிகள் பற்றிய எச்சரிக்கையோ இல்லாமல் மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய் எது என்றால்,  மதுபானம் என்ற தீய நோயே. 
என்பது மதுபானங்களின் பொடுமை பற்றி இஸ்லாமிய ஆய்வு மையம் - மும்பையிலிருந்து வெளியிட்டிருக்கும் ஒரு பிரசுரத்தின் வாசகமாகும்.

Thursday, April 12, 2012

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது ஏன்?
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும்அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)


மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

                 பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

               பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

              ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.


மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஹலாலானதும் சுத்தமானதுமான பண்டங்களையே புசியுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான். (அல்பகரா:168)தூதர்களே! பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றேன்.(அல்முஃமினூன்: 51)