Pages

Saturday, April 21, 2012

பாவங்களை அள்ளி தரும் பதினான்கு நாட்கள் (நாகூர் தர்கா கந்தூரி விழா)அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே!
இன்னும் சில தினங்களில் நாகூர் தர்கா கந்தூரியை எதிர்பார்த்த வண்ணம் தமிழகம் முழவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர்.  இந்த கந்தூரிக்கும்  இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்ப்பு என்ன கொஞ்சம் பார்ப்போம்  வாருங்கள்.

தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்ப டுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.நபி (ஸல்) அவர்கள் அவர்கள் மரணிப்பதற்கு முன்பு தெளிவாக சொல்லி விட்டு சென்றார்கள்,தனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள் என்று .
நபி (ஸல்) அவர்கள் எனது கப்றை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்’ என தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் எச்செரித்துளார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மத்,அபூதாவூது)
புனிதம் கருதி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் நாகூர் தர்கா கந்தூரிக்கு வருகின்றனர் இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பானது.  புனிதம் கருதி பிரயாணம் செய்வதாக இருந்தால் மூன்று இடங்களுக்கு செல்வதற்கு தான் நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுந் நபவீ மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று இடங்களை தவிர வேறெந்த இடத்திற்கும் (புனிதத்தை முன்னிட்டு) பயணம் மேற்கொள்ளதீர்கள் நூல் : புகாரி 1189


நாகூர் தர்கா கந்தூரி பதினான்கு நாட்களும் இஸ்லாத்திற்கு எதிரான செயல்கள் அந்த தர்காவில் நடத்துவது மட்டுமின்றி நாகூர் முழுவதும் இந்த அனாச்சார செயல்கள் அரங்கேற்ற படுகின்றன
பாம்பரம் என்கின்ற ஒரு மரத்தை தர்கா மினாரவில் எற்றுவதிலிருந்து இந்த அனாச்சாரங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. பிறகு வீதிகளில் ஆட்டம்,பாட்டம்களோடு தர்கா கொடி கொண்டு வரப்பட்டு தர்கா மினராக்களில் ஏற்றப்படும்,இதற்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் திருவிழா கோலம் தான் 8 ம் இரவு வான வேடிக்கை என்ற பெயரில் பல ஆயிரங்களை கரியாக்குவார்கள். இந்த அனாச்சாரங்களில் பீர் சாஹிப் என்று ஒரு நிகழ்வு உண்டு. அவருடைய பணி கந்தூரி விழா சிறப்பாக நடக்க  சில நாட்கள் தொடர்ந்து நோன்பிருப்பது .அவ்லியாவிர்க்கு மட்டும் அல்ல பீர் சாஹிபிர்க்கும் ஆற்றல் உண்டு என தர்காவிற்க்கு வரும் மக்கள் நம்புகின்றனர். விசேச தினத்தன்று இவர் வீசும் எலுமிச்சை பழத்தை பெற்றால் பரக்கத் என்று பெண்கள் மோதும் காட்சி அவலத்தின் உச்சம். 


இறுதியாக கப்ரில் சந்தனம் பூசுவது,கொடி இறக்குவது என்று இந்த அனாச்சாரங்கள் முடிவடைகின்றன.இந்த நிகழ்சிகள் அனைத்தும் ஒன்று கூட இஸ்லாத்திற்கும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களுக்கும் எள் முனை அளவு கூட சம்பந்தம் கிடையாது. இவை அனைத்தும் பிற மதங்களிலிருந்து கோப்பி அடிக்கபட்டவையாகும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் (மார்க்க விஷயத்தில்) பிற சமூகத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர்கள் அவர்களை சார்ந்தவர் நூல் : அபூ தாவூத் 3512

இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபிஅவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
பாவங்களிலேயே மிக பெரிய பாவமான அல்லாஹ்விற்கு இணை வைத்தல் என்ற ஒரு செயல் தர்காக்களில் அரங்கேறுகின்றன அவ்லியாக்களை அழைத்து பிரார்திப்பதனாலும்,அவர்களுக்காக நேர்ச்சை செய்வதன் மூலமும்.

அல்லாஹ் கூறுகிறான்: -நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)

மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்! 
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23) 

“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்……(அல்குர்அன் 4:48)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”(அல்-குர்ஆன் 2:159)

சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?”(அல்-குர்ஆன் 3:71)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவறவே மாட்டார்கள்.

(உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)


நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்..!!!

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)

ஆமீன்....!!!

14 comments:

 1. இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? இஸ்லாமிய நாடுகளில் செய்வதைப்போல வெடிகுண்டு வீசி தர்காக்களை அழிக்கவேண்டியதுதானே.

  ReplyDelete
 2. இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? இஸ்லாமிய நாடுகளில் செய்வதைப்போல வெடிகுண்டு வீசி தர்காக்களை அழிக்கவேண்டியதுதானே..///

  வெடிகுண்டு வீசி அழித்து விடலாம் சகோ.. அழிவது கல்லும் மண்ணும் மட்டுமே.... ஆனால் அதற்கு பிறகும் இந்த மூடர்கள் மூடநம்பிக்கைகளை கைவிட மாட்டார்கள்....

  எனவே சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்... :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்...
  சரியான தருணத்தில் அமைந்த அருமையான, அவசியமான பதிவு.. தொடருங்கள் உங்கள் சேவையை இஸ்லாத்திற்காக..நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் சகோ... :)
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.....
   இன்ஷா அல்லாஹ்.... கண்டிப்பாக தொடருவேன் சகோ....

   Delete
 4. சலாம் சகோ சர்மிளா,

  ஆஹா...நாகூர் கந்தூரி விழா நாட்கல்லாம் சரியா நியாபகம் வச்சி இருக்கீங்களே....
  முன்னாடி அடிக்கடி கந்தூரிக்கு போன அனுபவம் உண்டோ????
  பட்..பதிவு ரொம்ப நல்லா இருக்கு சகோ..அதை விட அனோனி அண்ணனுக்கு கொடுத்த பதில் அதை விட நன்று...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் சகோ சிராஜ்... :)
   //முன்னாடி அடிக்கடி கந்தூரிக்கு போன அனுபவம் உண்டோ????///
   உண்மைய சொல்லனும்னா நாகூர் தர்ஹாவுக்கு, ஏர்வாடி தர்காவுக்கு விவரம் தெரியாத வயசில போயிருக்கேன்... பட் கந்தூரிக்கு போனதில்லை.... எப்போ இதெல்லாம் இஸ்லாத்துக்கு புறம்பான ஒண்ணுன்னு தெரிய வந்துச்சோ.. அப்போவே தர்கா டூர்க்கு எல்லாம் டாட்டா காட்டிட்டேன்.... வழிகேட்டின் பாதையில் இருந்து என்ன திசை திருப்பி நேரான வழியை காட்டிய அல்லாஹு சுபுஹானஹு வதஆலாவிற்க்கே எல்லாப்புகழும்....!!

   உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ... :)

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்,

  நெத்தி பொட்டில் அறைந்தது போன்ற கட்டுரை. அனானிக்கு கொடுத்த பதிலும் அருமை. உங்கள் இறைப்பணி தொய்வில்லாமல் தொடரவும், வெற்றி பெறவும் என் பிரார்த்தனைகள்..

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் ...
   கருத்துக்கும் தங்கள் பிரார்த்தனைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ..... :)
   இந்த கட்டுரை முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்து இருந்தார்... கட்டுரையின் அவசியம் உணர்ந்து அவரின் அனுமதியுடன் இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன் சகோ.... ... :)

   Delete
 6. வ அலைக்கும் சலாம் சகோதரி

  தொடருங்கள் உங்கள் சத்திய பணியை............! அல்லாஹ் உங்கள் அருள் புரியட்டும்!!

  ReplyDelete
 7. யா அல்லாஹ்! நீ பரிபூரணமாக்கி வைத்த உன் சத்திய மார்கத்தை அசிங்கபடுத்தும் இம்மக்களிடமிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் -முனவ்வர் ஹுசைன் (அல்லாவின் அடிமை ),சென்னை

  ReplyDelete
 8. your articles will create awarness and teach true islam.
  your answer for whom want insult to you is very nice
  your will become a good and popular blogger(InshaAllah)

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ்,.. ஜசாக்கல்லாஹ் பிரதர்... :)

   Delete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)