Pages

Monday, April 23, 2012

இஸ்லாத்தில் மறுக்கப்படும் பெண்ணுரிமை...!!!?????

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் எடுத்துகொள்ளும் தலைப்பு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது அடக்கி ஆள்கிறது என்பதாகும்....இதற்கெல்லாம் அவர்கள் கூறும் ஒரே ஒரு காரணம் இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் அணிய சொல்கிறார்கள் என்பதே...ஹிஜாப் என்பது அடக்கு முறை என்றும் ஹிஜாப் அணிய சொல்லி பெண்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் மாற்று மத சகோதர சகோதரிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது



ஹிஜாப் என்றால் என்ன ? அதை அணிவதன் அவசியம் என்ன என்பதை பற்றி ஏற்கனவஹிஜாப் ஆணாதிக்கமா..? பெண்ணடிமைத்தனமா ? இல்லை பெண்மைக்கு கொடுக்கப்படும் கௌரவமா?

என்ற தலைப்பில் எழுதி உள்ளேன்.... அந்த பதிவை காண கீழ காணும் லிங்க் ஐ சொடுக்கவும் ....
http://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_18.html

அடுத்ததாக இஸ்லாம் என் பெண்களுக்கு மட்டும் விதிமுறைகளை வலியுறுத்துகிறது ஆண்களுக்கென்று எதுவும் சட்டங்கள் இல்லையா? என்று கேட்பவரகளுகாக இந்த பதிவு....!!

இந்த பதிவின் அவசியம் என்னவென்றால்... மீடியாக்கள் இஸ்லாம் என்னவோ பெண்களை வதைக்கிற ஒரு மதம் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.... ஆண்கள் பற்றிய இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை , ஒரு ஆண் பெண்ணை எவ்வாறு மதிக்க வேண்டும் , அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது போன்ற விஷயங்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்,....

இஸ்லாத்தில் ஒரு கணவன் தன் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கட்டளை இடுகிறது என்று பாருங்கள்...!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்களை கீழ்க்கண்டவாறு எச்சரிக்கிறார்கள்:

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும், அவளை மதித்து நல்ல முறையில் பழக வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறது.......ஒரு கணவன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள், மனைவியை கண்ணியமாக நடத்துவது, மனைவியின் உணவு உடை விஷயத்தில் ஒரு கணவனின் பங்கு ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் வழிமுறைகளை நாம் பார்க்கும் போது அவை மிகவும் ஆச்சரியத்தை அளிக்க கூடிய வகையில் இருக்கிறது... சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக தெளிவாக உபதேசித்து உள்ளது . பெண்ணுக்கு இன்றைய கால கட்டத்தில் கூட உலகின் வேறு எந்த மதத்திலும் கொடுக்கப்படாத உயர்வான அந்தஸ்தை பதின்நான்கு நூற்றாண்டுகள் முன்பே இஸ்லாம் வழங்கியுள்ளது ...!!!


“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)






“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
பெண் என்பவள் ஆணின விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவள்... எனவே அவள் சற்று வளைந்து தான் இருப்பாள் அவளை நேராக்க முயன்று ஒடித்து விடாதீர்கள் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்

இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் கணவருக்கு பிடிக்காத சில  பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை ஒரேயடியாக மாற்றிவிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.எனவே அமைதியான முறையில் கணவன் மனைவியுடனான பிரச்சினைகளை கையாள வேண்டும் என்பதை இதன் மூலம் அறிவுறுத்துகிறார்கள்......!!

 இந்த வழிகாட்டுதலை புரிந்து முழுமனதோடு உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத சந்தோசம் , அமைதி, நிம்மதி நிறைந்த அழகிய பூங்காவாகத் திகழும்.

சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை கூர்ந்து கவனித்தால் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். பிறகு , மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்!!! இஸ்லாம் தவிர வேறு எந்த மதத்திலும் பெண்களுக்கு இத்தகைய மரியாதையை  எதிர்பார்க்க இயலாது..!!

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசித்தார்கள்  முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, பெண்களுக்கு இஸ்லாத்தில் இருக்கும் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.


நபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களைகாயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். 
மானக்கேடான விஷயங்களில் மனைவி ஈடுபட்டால் கூட காயம் ஏற்படாமல் அடிக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது...!! மற்றபடி வேறெந்த காரணத்துக்காகவும் மனைவியை கணவன் அடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை....அவ்வாறு அடிப்பதற்கும் கூட சில விதிமுறைகள் இருக்கிறது ... முகத்தை தவிர மற்ற இடங்களில் காயம் எதுவும் ஏற்படாமல் அடிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கிறது....!!!!
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.

பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி கூறியுள்ளார்கள்.
நபி அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)

இந்த நபிமொழி நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் மார்கத்தில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
சத்திய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப்படுத்துவதிலும், பெண்ணுக்கு உரிய உரிமைகளை போதிப்பதிலும் உலகில் உள்ள மற்ற மதங்களை காட்டிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. மனைவியை கணவன் ஏதோவொரு காரணத்தினால் வெறுத்தாலும் அந்த வெறுப்பை அவள் மீது காட்டாமல்  அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது...!!!

மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிம் தன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.... அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது...... தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் திருமணங்கள் முறிவதில் இருந்தும், விவாகரத்துகள பெருகுவதில் இருந்தும் இஸ்லாம் பாதுகாக்கிறது. மனித மனம் இயல்பாகவே அலைபாயும் தன்மை உடையது.......இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் மனிதனின் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவுகளில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள்.
ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் இருக்க கூடும் 
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்க வேண்டும் .
உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்ற வேண்டும் 
மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிக்க வேண்டும். 
                         “முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து
ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி
கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம்

"உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள்".
           உணவு உடை ஆகிய விஷயத்தில் உங்களை போன்றே உங்கள் மனைவியை நடத்துங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.... அதாவது உங்களை விட பெண் எந்த விதத்திலும் தாழ்ந்தால் இல்லை என்பதே இதில் உள்ள மறைமுகமான கருத்து......

"மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்."அறிவிப்ாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத்

ஒரு இஸ்லாமிய கணவன் மனைவியின் மீது தன் வெறுப்பை அதாவது கோவத்தை வீட்டிலே தவிர மற்ற போது இடங்களில் வெளிப்படுத்துவாதை இஸ்லாம்  வன்மையாக கண்டிக்கிறது....இதல்லவா பெண் உரிமை???... இதை புரியாத சிலர் மீடியாக்கள் பரப்பும் சில தவறான தகவல்களின் அடிப்படையில் இஸ்லாம் பெண்களை அடக்கி ஆள்கிறது..... அவர்கள் உரிமைகளை பறிக்கிறது என்று முட்டாள்தனமாக கூப்பாடு போடுகிறார்கள்..... உண்மையில் இஸ்லாத்தில் தான் பெண் உரிமை மிக சரியான முறையில் பின்பற்றபடுகிறது..... பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படுகின்றன,.......என்பது மேற்காணும் நபி மொழி உங்களுக்கு உணர்த்தி இருக்கும்,....
மேலும்
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” 
என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி


மனைவிக்கு ஒரு வாய் சோறு ஊட்டுவதை கூட இஸ்லாம் நன்மையான காரியம் என்று குறிப்பிடுகிறது.... இதன் மூலம் கணவன் மனைவி இடையே ஒரு அன்நியோண்யம் உருவாக வழிவகுக்கிறது.... கணவன் உண்ட பின்தான் மனைவி உன்ன வேண்டும் என்று இன்று வரை சமூகத்தில் பரவலாக இருந்து வரும் மூட பழக்கத்தை.... இஸ்லாம் அன்றே தகர்த்து எறிந்து விட்டது.....

ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்குஅணிவிப்பதும் இருப்பதும் வீட்டில் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் , அஹ்மத்

இதுதானே இன்றைய பெண்களின் கனவான சம உரிமை???  பெண் விடுதலை??

நீங்கள் எத்தனையோ ஆண்டுகளாக போராடி கூட கிடைக்காத பெண் விடுதலையும், சம உரிமையும் எங்கள் இஸ்லாமிய பெண்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிடைத்து விட்டது சகோதர சகோதரிகளே...!!!!!

 வெறும் சதை திரட்சியாக , குழந்தை பெரும் எந்திரமாக,சமைத்து போடும் சமையல் காரியாக மொத்தத்தில் அடிமையாக 
பெண்களை பார்க்கும் இந்த சமூகத்தில் பெண்களை இந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி அவர்களை ஒரு அடிமையாக பார்க்காமல் அவளை அவள் உடம்புக்காக எடை போடாமல் பெண்ணை அவள் பெண்மைக்காக மதித்து ,பெண்களுக்கு....,பெண்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் இஸ்லாத்தை பற்றிய உங்களின் தவறான கருத்துகளை அடியோடு புரட்டி போடும் பதிவுகளை அடுத்தடுத்து தர இருக்கிறேன்....!!

                      காத்திருங்கள் உறவுகளே..!!                                          

 அஸ்ஸலாமு அலைக்கும்..... எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக...!! ஆமீன்....!!!



8 comments:

  1. Please read it again and you can find flaws on your logic. Islam and most of the religions doesnt give equal rights to women.

    ReplyDelete
    Replies
    1. எதில் எதில் பெண்களுக்கு ரைட்ஸ் கொடுக்கப்பட வேண்டுமோ அதில் அதில் சரியாகவே தான் இஸ்லாம் தீர்மானித்திருக்கிறது.

      ஒரு ஆணால் பிள்ளை பெற முடியாது. பெண்ணால் மட்டுமே முடியும்! இதில் எப்படி சமம் காண முடியாதோ அதே போல் தான் பல விஷயங்களிலும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ள்ளது..

      இஸ்லாத்தில் பல விஷயங்களீல் ஆண்ணை விட பெண்ணுக்கும் பெண்ணை விட ஆணுக்கும் என்ற விகிதத்தில் அவரவர்க்குரிய சரியான உரிமைகளும் கடமைகளும் கொடுக்கப்பட்டுள்ளது!

      Delete
  2. ஸலாம் சகோ ஷர்மிலா..
    இது குறிப்பாக பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அறியச்செய்ய முன்னெடுக்கப்பட்டதாக இருந்தாலும்,இது முஸ்லிம் சகோதரர்களான எங்களுக்கு எங்களது கடமைகளையும்,நாங்கள் எங்கள் பெண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகளையும் நினைவுபடுத்த போதுமான ஒன்றாக இருக்கிறது..

    மாஷா அல்லாஹ்..ஜஸாக்கல்லாஹ் சகோ...

    (வேர்ட் வெரிஃபிசாஷனை எடுத்துவிடுங்கள்...பின்னூட்டம் போடுபவர்களின் ஆர்வத்தை குறைத்துவிடும்...)

    பதிவு சற்றே நீளமாக உள்ளது..பதிவின் நீளத்தை அவதானித்துக் கொள்ளுங்கள்... படிப்பவர்களுக்கு அயற்சியைத்தரலாம்..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ... ரஜின்

      வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ....

      வேர்ட் வேரிபிகசனை எப்படி நீக்குவது என்று தெரியவில்லை கூடிய விரைவில் நீக்கி விடுகிறேன்...

      //பதிவு சற்றே நீளமாக உள்ளது..பதிவின் நீளத்தை அவதானித்துக் கொள்ளுங்கள்... படிப்பவர்களுக்கு அயற்சியைத்தரலாம்.///.

      எனது அடுத்த அடுத்த பதிவுகளில் இதை நினைவில் கொள்கிறேன் சகோ.... :)

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
    மாஷா அல்லாஹ்! மிகச் சிறந்த, அவசியமான ஒரு பதிவு.
    ஒரு பெண்ணை எவ்வாறு கண்ணியமான முறையில் நடத்துவது என்று இறைவன் கற்றுத்தரும் முறை இஸ்லாம் தான் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு மார்க்கம் என்று மீண்டும் நிரூபிக்கிறது. அதை அழகான முறையில் கூறியிருக்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
      மிக்க நன்றி சகோதரி... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...!! :)

      Delete
  4. அப்பா..எவ்ளோ பெரிய்ய்ய்ய பதிவு..இதை பொறுமையா எழுதினீங்க பாருங்க...அந்த பொறுமைக்கு ஒரு சபாஷ்...சேர்க்கப்பட்ட படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

    இஸ்லாத்தில் உள்ள உரிமைகளும் கடமைகளும் அனைவராலும் பின்பற்றப்பட்டால் உலகில் பெண்களுக்கெதிரான எத்தனையோ வன்கொடுமைகள் நடக்காமல் இருந்திருக்கும். ஹ்.ம்...

    ReplyDelete
    Replies
    1. ///அப்பா..எவ்ளோ பெரிய்ய்ய்ய பதிவு..இதை பொறுமையா எழுதினீங்க பாருங்க...அந்த பொறுமைக்கு ஒரு சபாஷ்.//
      இவ்ளோ பெரியய்ய பதிவ பொறுமையா படிச்சிங்க பாருங்க உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய தேங்க்ஸ்... :)

      //இஸ்லாத்தில் உள்ள உரிமைகளும் கடமைகளும் அனைவராலும் பின்பற்றப்பட்டால் உலகில் பெண்களுக்கெதிரான எத்தனையோ வன்கொடுமைகள் நடக்காமல் இருந்திருக்கும். ஹ்.ம்.../// மறுக்க முடியாத உண்மை சகோ... இஸ்லாம் போதித்ததை அனைவரும் பின்பற்ற தொடங்கினால்.....
      பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை, ஈவ டீசிங்..போன்ற பெண்களுக்கு எதிரான எத்தனையோ விஷயங்கள் எல்லாம் இருந்த இடமே தெரியாமல் கூண்டோடு அழிந்து விடும்...!!!

      Delete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)