Pages

Monday, April 23, 2012

அழகி

அழகு சாதன விளம்பரங்கள் சொல்லும்
ஒரே வாரத்தில் சிகப்பழகு,
ஒரே மாதத்தில் உடல் எடை குறைப்பு என்பதெல்லாம்

நம் மூளையை மழுங்க வைத்து
அவர்கள் பொருளை விற்க
நடத்தும் நாடகமடி பெண்ணே...
விழித்திடு இனியேனும்...!!
இறுக்கி பிடிக்கும் ஆடையிலும்...
முக ஒப்பனைகளிலும் ...

உதட்டுச் சாயங்களிலும்..
அழகு நிலையம் சென்று நீ ....
செய்து கொள்ளும் அலங்காரங்களிலும்
இல்லை பெண்ணே உன் அழகு...!!
ததும்பி வழியும் உன் தாய்மையிலும்
கருணை வழியும் உன் கண்களும் போதுமடி
நீ அழகி என்பதை மற்றவர் உணர்ந்திட....!!!!




டிஸ்கி: இதெல்லாம் ஒரு கவிதையான்னு எல்லாம் கேக்கப்படாது........ ஏதோ தோணுச்சு அத அப்புடியே கிறுக்கி இருக்கேன்... அம்புட்டுதேன்.... :)

2 comments:

  1. இதற்கு காரணம் இலாபவெறி பெண்கள் என்ன செய்வார்கள் இதுதான் அழகு என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர் இந்த மோசமான தன்மையை ஒழிக்க கம்யூனிசத்தால் மட்டுமே முடியும்

    ReplyDelete
  2. kavithai enpathaaa mukkiyam illai!

    karuthu ullathu

    makizhchi!

    ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)