Pages

Wednesday, May 30, 2012

நான் பாதுகாக்கப்பட்டவள்...........!!!!





ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணாம்
ஹிஜாப் அணிந்திருக்கும் நான்...!!
ஏளன பார்வையுடன் என்னை கடந்து செல்கிறாள்..
தொடை தெரிய உடை அணிந்த
நவநாகரீக நங்கை ஒருத்தி...
என் மார்க்கம் எனக்களித்த
சுதந்திரத்தின் எல்லை பற்றி
அவளுக்கெங்கே தெரிந்திருக்க போகிறது.... பாவம்....!
கண்ணியம் காக்க நான் அணியும் உடை...
உன் கண்ணை உறுத்துகிறதே பெண்ணே...
உன் நாகரிக உடையால்
பல ஆண்களின் கண்களுக்கு இரையாகி....
அவர்களின் கனவில் தற்காலிக
மனைவியாகி போகின்றாயே...!!
இதுதான் உன் சமுதாயம்
உனக்களித்த சுதந்திரமா?
இல்லை அந்நிய ஆண்களை கவர வேண்டும் என்ற
நோக்கில் உடல் அழகை கடை விரித்து
காட்டும் கூட்டத்தை சேர்ந்தவளா நீ ?
அப்படி என்றால் எந்த அருகதையும் இல்லை"
உனக்கு என் ஹிஜாப் பற்றி பேச.....!!!!
ஆண்களின் கண்களுக்கு நீ ஒரு காட்சி பொருள்.....
ஆனால் நானோ பாதுகாக்கப்பட்ட பொக்கிஷம்....!!
வக்கிர புத்தி கொண்ட ஆண்களின் கழுகு பார்வையில்
இருந்து என்னை தற்காத்து கொள்ள.....
என் மார்க்கம் எனக்களித்த கேடயம் ஹிஜாப் ...!!
என் அறிவும் திறமையும் போதும் உலகை வெல்ல.....!!!!
தெரிந்து கொள் முட்டாள் பெண்ணே....
நான் ஒடுக்கப்பட்டவள் அல்ல...
பாதுகாக்கப்பட்டவள்...........!!!!!!

10 comments:

  1. ஸலாம் சகோ சர்மிளா...

    கவிதை அருமை.... எங்க சுட்டீங்க...??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
    Replies
    1. சிராஜ் சகோ ஏன் இப்படி.. :(

      நானே எழுதுனேன் :))

      Delete
  2. /* இல்லை அந்நிய ஆண்களை கவர வேண்டும் என்ற
    நோக்கில் உடல் அழகை கடை விரித்து
    காட்டும் கூட்டத்தை சேர்ந்தவளா நீ ? */

    இது தான் உண்மை.... கவர்ச்சியாக ஆடை அணியும் பெண்கள் ஆண்களை கவரவே அவ்வாறு அணிவதாக பல் வேறு ஆய்வுகளில் கருத்து தெரிவித்து உள்ளார்கள்...அதுவன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்??? எந்த மதமும் கவர்ச்சியாக ஆடை அணிய சொல்லவில்லை...

    ReplyDelete
  3. கவர்ச்சியானா ஆடை அணிவதில் உச்சம் தொட்ட மேற்கத்திய கிருத்தவர்கள் கூட மேரி மாதாவை கவர்ச்சி உடையில் காட்ட மாட்டார்கள்....

    ReplyDelete
    Replies
    1. மேரி மாதா அணிந்தா அது ஒழுக்கம்
      இஸ்லாமிய பெண்கள் அணிந்தால் அது ஆணாதிக்கம்.. பெண்ணடிமைத்தனம்... என்ன கொடும சகோ இது??

      Delete
  4. கரக்டா சொன்னீங்க ஷர்மிளா... அரைகுறை ஆடை அணிபவர்கள் நம்மள ஒரு லுக் விடுவாங்க பாருங்க... அப்ப நான் நினக்கிறத எல்லாம் நீங்க எழுதித் தள்ளிட்டீங்க.... கலக்குறீங்க ஷர்மிளா...

    ReplyDelete
    Replies
    1. இது என் அனுபவத்தில் நான் கண்டதுதான் சகோ... இப்போ எல்லாம் அரைகுறை ஆடை அணிபவர்களை நான் லுக்கு விட ஆரம்பிச்சிட்டேன்... (கேவலமா) ஹா ஹா ஹா

      Delete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)