Pages

Sunday, June 10, 2012

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா......!!! முடியல...!!!!



எப்பா ராசாக்களா.....கடவுளை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டு அப்போதான் நம்புவேன்னு சொல்ற நாத்திகவாதிகளே... டார்வினிஸ்ட்களே.... அக்காமார்களே... அண்ணன்மார்களே..... தம்பிமார்களே... தங்கச்சிமார்களே....!!!! (சுருக்கமா குழப்பவாதிகளே அப்டின்னு சொல்லிட்டு போயிரலாம் போல அவ்வ்வ்வ்வ்வ் )

இல்ல தெரியாமதான் கேக்குறேன்.. நீங்க எல்லாம் உலகம் உருவாக காரணம் என்று நம்பும், அறிவியல் அறிஞர்களால் இன்னும் நிரூபிக்கப்படாத தியரியான (நிருபிக்கப்படலன்னாதான் அது தியரி தெரியுமோ?? நிரூபிச்சிட்டா அத பேக்ட்ன்னு சொல்லுவாங்கோ..) பிக்பேங் என்று சொல்லப்படும் பெருவெடிப்பை லைவ் டெலிகாஸ்ட் ல பார்த்துட்டு அது உண்மைன்னு முடிவுக்கு வந்திங்களா? இல்ல பரிணாம வளர்ச்சி பத்தி ஆராய்ச்சி பண்ணற சைன்டிஸ்ட் பக்கத்துல உக்காந்து ஆராய்ச்சி பண்ணி நீங்களே கண்டுபுடிச்சீங்களா? இல்லாக்காட்டி குரங்கிலிருந்து குரங்கு போன்ற ஒன்றில் இருந்து(?!!!!) மனுஷன் பரிணாம வளர்ச்சி அடஞ்சத பார்த்தவங்க நேர்ல பாத்தவங்க  உங்ககிட்டே வாக்குமூலம் கொடுத்தாங்களா?? அப்புடி நேரடியா பார்த்தோ அல்லது நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள்படியோ நீங்க அத எல்லாம் நம்பி இருந்தா நீங்க கேக்குற கேள்வி நியாயம்...! ஆனா நீங்க மட்டும் எதையுமே பாக்காம ஆதாரம் எல்லாம் இல்லாம நம்புவிங்க ஆனா நாங்க மட்டும் நாங்க நம்புற கடவுள உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டனும்??? அப்பத்தான் நம்புவிங்க ஹ்ம்ம்??? எந்த ஊரு நியாயம்ப்பா இது??


இதுல என்ன ஒரு காமிடின்னா உலகம் எப்புடி தோணுச்சுன்னு விஞ்ஞானிகளுக்குள்ளேயே ஆயிரம் குழப்படி..!

ஒரு விஞ்ஞானி சொல்றார்... பெருவெடிப்பு தான் காரணம் உலகம் தோன்ற அப்டின்னு...

இன்னொருத்தர் சொல்றார் இல்லவே இல்லை... இதெல்லாம் தன்னால உருவாக்கி இருக்க வாய்ப்பே இல்ல... கண்டிப்பா... எதோ ஒரு சூப்பர் பவர் இருக்கு அதான் உலகம் உருவாக காரணம்ன்னு சொல்றாங்க.... (மறந்து கூட அந்த பவர கடவுள்ன்னு ஒப்புக்க மாட்டங்களாம்)

அதை எல்லாம் மிஞ்சி இன்னும் ஒரு சில விஞ்ஞானிகள் (நியூட்டன் உட்பட ) இந்த உலகம் உருவாக காரணம் கடவுள்தான்னு சொல்றாங்க....!!!

சரி இத்தனை குழப்பம் இருக்கே பரிணாமத்த நம்புற அறிவு ஜீவிங்களாச்சும் இத பத்தி சரியா புரிஞ்சு வச்சு இருக்காங்களான்னு பார்த்தா....!!!! ஹ்ம்ஹும் அவங்க அத விட குழப்பத்துல இருக்காங்க..! ஹிஹிஹி

ஹஹஹா ஒன்னும் வேணாங்க... !

கடவுள் இல்லவே இல்ல அப்டின்னு சொல்லிட்டு பரிணாமத்த துணைக்கு கூடிக்கொண்டு வந்த நாத்திகவாதிகளுடன் நடந்த இரண்டு குட்டியூண்டு விவாதங்கள்... கீழே

சம்பவம் நம்பர் -1
நண்பர் -கடவுளே இல்லை.. மதங்கள் தேவை இல்லை..!
நான் -சரி கடவுள் இல்லண்ணே வச்சுக்குவோம்... இந்த உலகம் எப்புடி உருவாச்சு சொல்லுங்க பாப்போம்...???
நண்பர்: பெருவெடிப்பு நிகழ்ந்ததால உருவாச்சு...!!
நான் :அப்புடியா? சரி... என்ன வெடிச்சுச்சு ??? ஏன் வெடிச்சுச்சு??

நண்பர்: ங்கே...!! ங்கே...!!! ங்கே...!! தெரியலங்க...!

சம்பவம்.-2

நான் - ஏன் கடவுள் இல்லன்னு சொல்றிங்க சகோ?
நண்பர்-சின்ன வயசுல இருந்தே அப்புடிதாங்க.. எனக்கு அறிவியல்ல ஈடுபாடு சாஸ்தி...!!
நான்- ஒஹ்ஹ் அப்டியா? சரி.. இந்த உலகம் எப்புடி தோன்றி இருக்கும்ன்னு நெனைக்கிரீங்க?
நண்பர்-ஹ்ம்ம் ஹ்ம்ம் evolution (பரிணாம வளர்ச்சி ) தான் காரணம்...!!
நான்- வாட்?? எனக்கு தெரிஞ்சு அதுல உயிர்கள் பரிணாம வளர்ச்சி படி எப்புடி உருவாச்சுன்னுதானே சொல்லி இருப்பாங்க?
நண்பர்-ஒவ்ஹ்ஹ் அப்படியா ஹ்ம்ம்ம் . bigbang (பெருவெடிப்பு)தான் காரணம்...!
நான்- அப்டியா? என்ன வெடிச்சுச்சு?
நண்பர்: ஒரு குறிப்பட்ட அணு வெடித்து சிதறியது அதனால் இந்த பேரண்டம் உருவானது...!
நான்: அந்த அணு எப்படி அங்க வந்துச்சி???
நண்பர்: ங்கே..! ஹிஹிஹி இல்ல நான் முழுமையான பரிணாமவாதி இல்ல...90% தான்...
நான்- ??!?!?!?!??!?!?!!?!?

ஒன்னு அந்த பக்கம் நிக்கணும் இல்ல இந்த பக்கம் நிக்கணும் ரெண்டும் இல்லாம ஆத்துல ஒரு கால சேத்துல ஒரு கால்ன்னு நின்னுகிட்டு இந்த பரிணாமவாதிகள் பண்ற கூத்து இருக்கே அப்பப்பா... சொல்லி மாளாது... :)

இப்புடித்தான் இருக்கு கடவுளை பார்த்தாதான் நம்புவேன்னு சொல்ற பெரும்பாலான கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுடைய அறிவியல் ஞானம்...!! சரி இவங்கதான் இப்புடி சராசரி மனிதர்கள்தானே பாவம் விட்டுடலாம்
ஆனா இந்த பரிணாமம், பெருவெடிப்பு அது இதுன்னு கண்டுபுடிச்சாங்களே நம்ம சைன்டிஸ்ட் அங்கிள்ஸ் அவங்களாச்சும் தெளிவா இருக்காங்களான்னு பார்த்தா............... ஸ்ஸ்ஸ்ஸப்பா....!!! அவங்க ஒவ்வொருத்தரும் சொல்ற விளக்கத்த பார்த்தா... அவங்க எல்லாம் நேரடியா எங்கேயோ இருந்து தப்பிச்சு வந்த கேஸ் மாதிரி பேசுறாங்க...!! அவ்வ்வ்வ்வ்வ்வ் ..... சாம்பிள்க்கு கொஞ்சம் கீழ..

God Almost Certainly Does not Exist.
கடவுள் ஏறக்குறைய நிச்சயமாக இல்லை

- டாகின்ஸ்

ஒன்னு கடவுள் இருக்குன்னு சொல்லு இல்ல இல்லன்னு சொல்லு இதென்ன ஏறக்குறைய இல்ல?? மனுசன குழப்பி விட்டு வேடிக்க பாக்குறதே இந்த விஞ்ஞானிகளுக்கு எல்லாம் பொழப்பா போச்சு.... :(

என்னன்னு சொல்ல இதைத் தான் தெளிவா கொழப்புறதுன்னு சொல்லுவாங்களோ?
புரியாதப் புதிர்தான்.!!!

அடுத்த அங்கிள் என்ன சொல்றாருன்னா...

ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.

எங்க இருந்தோ வந்து இறங்குச்சாம் எப்பா ராசா நாங்களும் அதைத்தானே சொல்றோம் ... இறைவன் மனிதனையும் மற்ற உயிர்களையும் முழுமையாக படைத்த பின்தான் பூமிக்கு அனுப்புனான்னு ..... இத நீங்க புதுசா கண்டுபுடிச்சா மாதிரி போடுறீங்களே... அவ்வ்வ்வ்வ்

அடுத்த அங்கிள் கொஞ்சம் நியாயமா பேசுறாரு...

உயிரின் தோற்றத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்ற கருத்தை ஆமோதிக்கின்றேன். உயிரின் தோற்றத்தை அலசும் பல யூகங்கள் உள்ளன. ஆரம்ப கால பூமியை போன்ற சூழ்நிலையை வேறொரு கிரகத்தில் உருவாக்கி சோதித்தால் ஒழிய நம்மால் உயிரின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது. அறிவியலில் சிலவற்றை நிரூபிக்க முயற்சிக்கலாம். ஆனால், சுமார் 3.5-4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வை விவரிக்கும் யூகங்களை நிரூபிப்பதென்பது முடியாத காரியம் - வென்டர்.


இன்னொரு கிரகத்துல பூமியுடைய சூழ்நிலைய உருவாக்கி ஆராய்ச்சி பண்ண போறாராமா..??!!?? பண்ணுங்க பண்ணுங்க என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. சாரி வாழ்த்துக்கள்...!!

இப்படி அறிவியல் அறிஞர்களே பெரும் குழப்பத்துல இருக்குற... ஒரு நிலையான முடிவுக்கு வர முடியாம தவிக்கிற ஒரு விஷயத்த உலக மகா ஆதாரமா எடுத்துகிட்டு கடவுள் இல்லன்னு என்கிட்டே வாதம் பண்றவங்களுக்கு ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட் போங்க பாஸ் போயி மொதல்ல அறிவியல பத்தி பரிணாமத்த பத்தி முழுசா படிங்க.... கண்டிப்பா கொலம்புவிங்க... அப்புறம் கீழே தமிழ் குரான் லிங்க் கீழே கொடுத்து இருக்கேன் முழுமையா படிங்க.... புரியாத பல விஷயம் புரியும் நீங்க திறந்த மனசோட எந்த முன்முடிவும் எடுக்காம படிச்சீங்கன்னா மட்டும் .... என்ன டீல் ஓகே வா??

அதெல்லாம் படிச்சுட்டு வாங்க தாரளாமா விவாதம் பண்ணலாம்... அது வரைக்கும் மூச்..!

தமிழ் குரான் முழுமையாக வாசிக்க 
குரானில் விஞ்ஞானம்


டிஸ்கி : இது அறிவியலை துணைக்கு அழைத்து வந்து கடவுள் இல்லை என சொல்லும் புத்திசாலிகளுக்கு மட்டும்
நீங்க நம்புற அறிவியல விட மிக தெளிவான ஆதாரங்கள எங்க இறைவன் அருளிய குரான் எங்களுக்கு தந்து இருக்கும் போது நாங்க குரான தந்த கடவுள நம்புவமா ? இல்ல உலகம் உருவானத பத்தி சரியா நிருபிக்க கூட முடியாம பல நூறு வருஷமா  திணறிகிட்டு தியரிகளை மட்டுமே வைத்து விளையாட்டு காட்டி கொண்டு இருக்கும் அறிவியலை நம்புவோமா? எது புத்திசாலித்தனம் என்பது புத்திசாலிகளுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்


இறை நாடினால் மீண்டும் சந்திப்போம் ...

உங்கள் அன்பு சகோதரி
ஷர்மிளா ஹமீட்

20 comments:

  1. நல்ல பதிவு.. நல்ல கேள்விகள்..
    سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ
    [07:146]
    எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள். [07:146]

    ReplyDelete
    Replies
    1. //அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; /// உண்மைதான் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. நல்ல பதிவு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  3. ஸலாம் சகோ சர்மிளா,

    ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்... ஓடி ஓடி விவாதம் பண்ணைலே நினைச்சேன் பதிவு வரும்னு...வந்தேவிட்டது. உண்மைய சொன்னா பெரும்பாலானவர்கள் நாத்திகர்கள் ஆனது, evolution தியரிய நம்பி இல்ல. உலகத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை பார்த்து கடவுள் இல்லை என்று நம்பி, அதற்கு எதிராக இருக்கும் கருத்தை ஆதரிக்கும் நோக்கில் தான். இதான் எதார்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சிராஜ் அண்ணே... :)

      //பெரும்பாலானவர்கள் நாத்திகர்கள் ஆனது, evolution தியரிய நம்பி இல்ல. உலகத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை பார்த்து கடவுள் இல்லை என்று நம்பி, அதற்கு எதிராக இருக்கும் கருத்தை ஆதரிக்கும் நோக்கில் தான். /// அப்டி சொன்னாதான் நம்ம ஒழுங்கா புரிய வைக்கலாமே.. ஆனா அத சொல்லாம அறிவியல துணைக்கு கூட்டிகொண்டு வருபவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு...

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோ எதார்த்த நடையில் தெளிவான ஆக்கம்.

    இன்று சமூகத்தில் தம்மை நாத்திகராக அடையாளப்படுத்திவோரிடம் நாம் கேட்டால் இஸ்லாமிய எதிர்ப்புக்கு சொல்லும் பிரதான காரணம் குர்-ஆனில் குறைப்பாடு

    இஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று

    நான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..?

    இப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்

    ஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,
    அல்லது அறியாமை.

    வேறன்ன சொல்ல முடியும்???



    அருமையானதொரு ஆக்கத்திற்கு
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ் சகோ குலாம்...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. :)

      Delete
  5. உங்கள் தலத்தில் தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை அதை கொஞ்சம் சரி செய்யலாமே

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ அப்படியா? எனக்கு அவ்வளவு தொழிநுட்ப விபரங்கள் தெரியாது கூடிய சீக்கிரம் சரி செய்து விடுகிறேன்... :)


      தளத்தை பார்வை இட தாங்கள் என்ன ப்ரௌசெர் உபயோகிக்கிறீர்கள் என்று சொன்னால் உதவியாக இருக்கும்..!

      Delete
  6. Good post with simple questions !!!

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்....

    அருமையான் ஆக்கம் சர்மி!

    செமையா பொரிஞ்சு தள்ளியிருக்க :-)

    ReplyDelete
    Replies
    1. ஜசாக்கல்லாஹ் டா செல்லம்... :)

      எல்லாம் உன் சமையல் எக்ஸ்ப்ரஸ்ல பார்த்து பழகுனதுதான்... பொரிச்சு தள்ள... ஹிஹிஹிஹஈ

      Delete
  8. இது பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் சகோதரி http://sathik-ali.blogspot.in/2009/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஆக்கம்... மாஷா அல்லாஹ்.. பகிர்வுக்கு நன்றி சகோ.. :)

      Delete
  9. Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

    எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


    விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



    www.tamilpanel.com







    நன்றி

    ReplyDelete
  10. Na kadavul irukarnu othukuren...ana antha kadavula padachathu yaaru..???

    ReplyDelete
    Replies
    1. வாங்க திவாகரன்.. என் யூகம் சரின்னா உங்க பேரு திவாகரன்..! :)

      சரி கடவுள் இருக்காருன்னு ஒத்துக்கொள்கிரீர்கள்? சரி உங்களை பொருத்தவரை கடவுள் என்பது என்ன? அல்லது யார்???

      அப்படி கடவுளை ஒருவர் படைத்து இருக்க முடியுமானால்..! படைத்தவர்தான் கடவுள்.. படைக்கப்பட்டவர் கடவுள் ஆக முடியாது...!

      உலகில் எல்லாமே ஒருவர் இல்லாமல் படைக்கப்பட்டு இருக்க முடியாது என்றால் கடவுளும் அந்த விதியில் பொருந்த வேண்டும் என்ற அடிப்படையில் கேட்கிறீர்கள்..!


      கடவுள் என்பவர் மனித வரையறைகள். கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர்... நம் வரைமுறைக்குள் வந்து விட்டால் கடவுள்தன்மைக்கு அர்த்தம் ஏது? கொஞ்சமாச்சும் யோசிங்க பாஸ்...!! :)

      Delete
  11. சலாம், நல்ல கேள்விகள். நல்ல விளக்கங்கள்..

    ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)