Pages

Friday, June 29, 2012

அமெரிக்க ராணுவத்தினரின் அத்து மீறல்..!!

அமெரிக்க ராணுவத்தை தலை குனிய செய்து இருக்கிறது சமீபத்தில் வெளியான தி இன்விசிபிள் வார் என்ற ஆவணப்படம்..!!

ஏன் அப்படி என்ன அந்த படத்துல இருக்கு அமெரிக்க இராணுவம் தலை குனியுற அளவுக்குன்னு கேக்குறீங்களா? .. வேற என்ன வழக்கம் போல அமெரிக்க ராணுவத்தின் மீது எழும் பாலியல் வன்முறை குற்றசாட்டுதான் ..இம்புட்டு நாளும் இப்புடி குற்றச்சாட்டு வந்தப்ப தலை குனியாதவங்க இப்போ ஏன் குனிஞ்சாங்க? அங்கதான் இருக்கு மேட்டர் இந்த முறை வெளிச்சத்துக்கு வந்து இருப்பது அவர்கள் படை எடுத்து சென்ற நாட்டினர் மீதான அத்து மீறலோ அல்லது பாலியல் புகாரோ பற்றியது அல்ல... !! பின்ன வேற எங்கன்னு நினைக்கிறீங்களா?

தன்னுடன் வேலை செய்யும் பெண்களை அமெரிக்க இராணுவத்தினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண்களே விவரிப்பதுதான் இந்த ஆவணப்படம்...! இந்த படம் அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது..!

இந்த படம் 2012ஆம் ஆண்டுக்கான SUNDANCE FILM FESTIVAL இல் ஆடியன்ஸ் தேர்வுக்கான பிரிவில் விருதை தட்டி சென்றது...!

இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கிரபி டிக்  அமெரிக்க ராணுவத்துல ஒரு பெண் எதிரியோட குண்டுக்கு பலியாவதை விட  பாலியல் ரீதியான வல்லுறவுக்கு ஆளாக்கபடுவதே அதிகம் என புள்ளி விவர ஆதாரத்தோட தெரிவிச்சு இருக்கார்..!

இன்விசிபிள் வார் ' ட்ரெய்லர்1950களில் பெண்களை இராணுவத்தில்சேருவது நாட்டுக்கு செய்யும் சேவை என்று சொல்லியும்  ..வீடும் நாடும் வேறல்ல என்று பரவலாக செய்யப்பட்ட விளம்பரங்களின் மூலமும் பெண்களை கவர்ந்து அதிக அளவில் இராணுவத்தில் சேர ஊக்கபடுத்திய அமெரிக்க அரசு... அவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பதில் தவறி விட்டது...!! பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்து மேலதிகாரியிடம் முறையிட்ட பொழுது கூட மிகவும் மோசமான வார்த்தைகளால் இந்த பெண்கள் அவமானபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்..!உலகின் மிக வலுவான இராணுவம் என்று பீற்றி கொள்ளும் இவர்களிடம் பணிபுரியும் பெண்களுக்கே சக தோழர்களிடம் பாதுகாப்பு இல்லை....!!! என்னத்த சொல்ல?

இந்த பெண்களின் நிலையை நினைத்து மனம் வருந்தினாலும்... ஒரு பக்கம் இவர்களாக தேடிகொண்டதுதானே என்றுதான் நினைக்க தோன்றுகிறது..! பெண் விடுதலை ,ஆணும பெண்ணும் சமம் என்பதும் போராட்டம் பண்ணுவதும் எல்லாம் வெறும் வாய் சவடாலுக்கு உதவுமே தவிர நடைமுறைக்கு வந்தால் இப்படிதான் பல்லிளிக்கும்..! என்பதற்கு இது கண்கூடான சாட்சி..!

இதற்கும் இஸ்லாம் தீர்வு சொல்லி இருக்கிறது......
என்னன்னு?? பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. அது மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் அடிப்படை.

ஆணும பெண்ணும் தனித்து இருக்கும் சூழ்நிலைகளை தவிர்க்க சொல்லி மிகவும் கண்டிப்பாக அறிவுறுத்துகிறது... மேலும் ஒரு மஹரமான (திருமணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள ஆண் )ஆண் துணை இன்றி தொலை தூரபயணம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை..!! ஏன்? இது போன்ற இன்னல்கள் நம் பெண்களுக்கு ஏற்பட கூடாது என்பதால்...! சுப்ஹானல்லாஹ்...!

டிஸ்கி : ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா உன் புள்ள தானா வளரும் இது பழ மொழி..

ஊரான் ஊட்டு பொண்ண நீ கையபுடிச்சு இழுத்தா உன் ஊட்டு பொண்ணு மானமும் ஒரு நாள் கப்பலேரும் இது புதுமொழி...!

THE INVISIBLE WAR.. ஆவணப்படத்தின் அஃபீசியல் வெப்சைட் 

26 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மாஷா அல்லாஹ்...

  அருமையாய் தொடங்கி அழகாய் நடைமுறைக்கு உதவும் இறைவனின் வாக்கோடு முடித்திருக்க சர்மி மாஷா அல்லாஹ்

  இறைவனின் கட்டளை என்னைக்கும் தப்பாவே போகாது! எக்காலத்துக்கும் அது பொருந்தக்கூடியது.... நாகரிகம்னு சொல்லிட்டு பலர் அதை பிற்போக்குத்தனமா நினைக்கிறாங்க... பட் மனிதனின் மனநிலை இன்னும் அப்படியேதான் இருக்கு! ஒரு பெண்ணை கண்டால் அவனுக்கு ஈர்ப்பு வரவே செய்யும்... நாகரிகத்தின் உச்சியில் இருந்தாலும் இதே நிலை தான்... என்ன தான் இருந்தாலும் பெண் பெண் தான்... ஆண் ஆண் தான் !

  ஆக இஸ்லாம் கூறிய ஹிஜாப் (ஆண் பெண்ணின் ஒழுக்க பேணுதல்) எல்லாருக்கும் பொருந்த கூடியதே!

  ஆண் பெண் சமம் பத்தி வாய் கிழிய பேசுபவர்கள் இதுக்கு என்ன சொல்ல போறாங்க? எதுக்கெடுத்தாலும் அமெரிக்க பாரு அமெரிக்கவ பாருன்னு சொல்றைங்களாம் இனி எந்த நாட்டை எடுத்துக்காட்ட சொல்ல போறாய்ங்க்??? ஹி..ஹி..ஹி... ஒரு ஆவணபடம் பலரோட வாயை பேச முடியாதபடி ஊமையாக்கிடிச்சே

  வாழ்த்துகள் சர்மிக்கா
  இது போல் இன்னும் பல ஆக்கங்கள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்

  வஸ்ஸலாம்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம்..

   வருகைக்கும் தொடர்ந்து நீ எனக்கு அளித்து வரும் ஊக்கத்திற்கும் நன்றி அம்மு.. :)

   ஜசாக்கல்லாஹ்

   Delete
 2. இன்னைய தேதிக்கு உலகத்திலே அயோக்கிய ராணுவம் அமெரிக்க ராணுவம் தான்.... அயோக்கியர்களிடம் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம் தானே... எனக்கு இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சிராஜ் அண்ணே.. ஆனால் இவ்வளவு நாளா அடுத்த ஊருக்குள்ள அக்கிரமம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க இப்போ அவங்க வீட்டுக்குள்ளேயே குண்டு வச்சிக்கிட்டாங்க.. அவ்வ்வ்வ் :)

   Delete
 3. ////டிஸ்கி : ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா உன் புள்ள தானா வளரும் இது பழ மொழி..

  ஊரான் ஊட்டு பொண்ண நீ கையபுடிச்சு இழுத்தா உன் ஊட்டு பொண்ணு மானமும் ஒரு நாள் கப்பலேரும் இது புதுமொழி...!/////

  Superrrrrrrrrma !!!

  M.Syed
  Dubai

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி syed :)

   Delete
 4. மாசா அல்லாஹ்! சிறந்த பகிர்வு சகோ. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி அண்ணே.. :)

   Delete
 5. பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)

  மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.......

  ReplyDelete
  Replies
  1. ஜசாக்கல்லாஹு ஹைர் அண்ணே..

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கு சகோ...

  அருமையான பகிர்வு.. வல்ல அரசு என்ற பெயரில் உலகத்துக்குள் உலாவும் கேடு கெட்ட அரசு அமெரிக்கா..

  இஸ்லாத்தை தவிர வேறு யாராலும் பெண்களுக்கு சிறந்தது ஒரு பாதுகாப்பான சுதந்திரத்தை தர இயலாது என்பதை இது போன்ற காரியங்கள் உலகுக்கு நிருபித்து வருகிறது..

  ஜசக்கல்லாஹ் ஹைரன் சகோ..

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம்...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.. :)

   Delete
 7. அதெல்லாம் சரி முஸ்லிம் பொம்பளைய படிக்க உடுங்க அப்புறம் இந்த தலாக் தலாக் தலாக்ன்னு சொல்லி நினைச்சா அறுத்து உடறத நிறுத்துங்க அப்புறம் அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லலாம்

  ReplyDelete
  Replies
  1. திரு இந்தியன் சகோ..

   இஸ்லாமிய சட்டம் குறித்து உங்கள் தவறான புரிதலையே தங்கள் கமென்ட் காட்டுகிறது..!!

   இஸ்லாம் குறித்த தவறான புரிதலையும், முன் முடிவுகளையும் தூக்கி எறிந்து விட்டு தெளிந்த சிந்தனையோடு பாருங்கள்...பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்துள்ள பாதுகாப்பும், சுதந்திரமும் எப்பேற்பட்டது என விளங்கும்..!

   நன்றி

   Delete
 8. மாஷா அல்லாஹ் நல்ல பதிவு....உங்கள் தளத்திற்கு என் முதல் வருகை follower ஆகிவிட்டேன்

  அமெரிக்காவின் அத்துமீறலை இதுல பாத்தாச்சி இஸ்ரேலின் அத்துமீறலை பார்க்க-tvpmuslim.blogspot.com

  புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.. தங்கள் ப்ளாக் பார்த்தேன்..

   உயிரை உடைத்தது தாயை இழந்து கதறிய அந்த சிறுவனின் முகம் .. :(

   Delete
 9. அன்பின் சகோ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  அருமையான ஆக்கம் ... வாழ்த்துக்கள்..
  உமது எழுத்து பணி தொடர எனது பிரார்த்தனைகள் ...
  கருத்துரைக்கு வரும் எந்த கருத்தாயினும் அதை அழகாக எதிர்கொள்ளல் வேண்டும் . இஸ்லாமிய பெண்மணி எப்போதும் பக்குவபட்டவர்களே என்பதை உமது பதிலுரையிலும் காட்டுங்கள் ..
  விமர்சனங்களை அழகாக எதிர்கொள்ளுங்கள் ...அதிலும் உங்களின் அழைப்பு பணி வெளிப்படலாம் ..

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் சகோ..

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

   உங்கள் அறிவுரையை இனி வரும் காலங்களில் என் நினைவில் நிறுத்தி செயல்படுகிறேன் இன்ஷா அல்லாஹ்..

   ஜசாக்கல்லாஹ் சகோ... :)

   Delete
 10. அன்பின் சகோ அஸ்ஸலாமு அலைக்கும்
  உமது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அல்லாஹ் உமது பணியை மென்மேலும் சீர்படுத்தி வைப்பானாக .உமது எழுத்துப்பணி மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன் .
  ஒரு சின்ன கருத்து - கருத்துரைக்கு பதில் தரும்போதும் நளினத்தை காட்டுங்கள். எல்லா விதமான விமர்சனங்களையும் அழகாகவே எதிர்கொள்ள வேண்டும். அதிலும் உமது இஸ்லாமிய நாகரீகம் வெளிப்பட வேண்டும் .அப்போது தான் அந்த நபர் உமது தொடர் வாசகராக மாறுவர் அல்லாஹ் அவருக்கும் நேர்வழியை காட்டுவான் இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம்

   //அல்லாஹ் உமது பணியை மென்மேலும் சீர்படுத்தி வைப்பானாக ./ ஆமீன் ஆமீன்

   //அதிலும் உமது இஸ்லாமிய நாகரீகம் வெளிப்பட வேண்டும் .அப்போது தான் அந்த நபர் உமது தொடர் வாசகராக மாறுவர் அல்லாஹ் அவருக்கும் நேர்வழியை காட்டுவான் இன்ஷா அல்லாஹ்// இன்ஷா அல்லாஹ்.. என் தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி சகோ..
   அந்த கமேன்ட்டுகளை நீக்கி விட்டேன்..! இனிமேல் இப்படி என் வார்த்தைகள் தடிக்காமல் கவனமாக இருப்பேன்.. இன்ஷா அல்லாஹ்

   ஜஸாக்கல்லாஹ் :)

   Delete
 11. maasha allah!

  sariyaana thakaval!

  ReplyDelete
 12. ஊரான் ஊட்டு பொண்ண நீ கையபுடிச்சு இழுத்தா உன் ஊட்டு பொண்ணு மானமும் ஒரு நாள் கப்பலேரும் இது புதுமொழி...! ///

  மாஷா அல்லாஹ் நல்ல மொழி

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)