Pages

Wednesday, June 20, 2012

இஸ்லாத்தில் சிலதார மணம் அனுமதி ஏன்?

இரு வகைத் திருமணங்கள் உள்ளன. ஒன்றுஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது மற்றதுஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணப்பது. இரண்டாவது விடயம் இஸ்லாத்தில் முற்று முழுதாகத் தடுக்கப் பட்டுள்ள அதே நேரம், ஒருஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை அதாவது நான்கு பெண்கள் வரை மணம் முடிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.. 


 “ஒருவரை மாத்திரம் மணந்து கொள்ளுங்கள் ” என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாமே. வேறு எந்த மதம் சார்ந்த நூல்களும் ஒருவரை மாத்திரம் மணந்து கொள்ளுங்கள்  என்பதைக் கூறவில்லை. வேதாஸ்ராமாயணம்கீதாதல்முத் மற்றும் பைபிள் இல் ஒருவரை மாத்திரம் மணக்க வேண்டும்  என்றோ அல்லது எத்தனை பெண்களை மணக்க வேண்டும் என்ற விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ  குறிப்பிடப் படவே இல்லை. எனவேஇதன்மூலம் இஸ்லாம் அல்லாதோர்  ஒரு மனைவிக்கு மேல் மணக்க எந்த தடையும் இல்லை  என்பது உறுதியாகின்றது. அண்மைக் காலமாகவே ஒருவரை மாத்திரம் மணக்க முடியும்’ என்ற கட்டுப்பாட்டை ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் வரையருத்தனர்.

ஹிந்து மதத்தில்தசரதன்ராமனின் தந்தை ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை கொண்டிருந்ததுடன்கிருஷ்ணன் பல மனைவியரையும் கொண்டிருந்தது நாம் அறிந்ததே. அதே நேரம்பைபிள் இல் கட்டுப் பாடுகள் இருக்கவில்லை என்ற காரணத்தால்முன்னைய கால கட்டங்களில்கிறிஸ்தவர்கள் எத்தனை மனைவியரையும் மணக்க அனுமதிக்கப் பட்டனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாத்திரமே கிறிஸ்தவ தேவாலயங்கள் ஒருவரை மாத்திரம் மணக்க முடியும் என்ற கட்டுப் பாட்டைக் கொண்டு வந்தது. 


யூதர்களின் தல்முடிக்’ சட்டத்தின் அடிப்படையில்இப்ராஹீம் நபி மூன்று மனைவியரையும்சுலைமான் நபி நூறு மனைவிவியர் அளவில் கொண்டிருந்ததாகவும் குரிப்பிடப்பாட்டுள்ளது. இதுரப்பி கேர்ஷோம் பென் யேஹுடாஹ் (960 C.E to 1030 C.E) அதற்கு எதிராக ஒரு சட்டம் கொண்டுவரும் வரை தொடர்ந்தது. முஸ்லிம் நாடுகளில் வாசிக்கும் சில யூத செப்ஹர்டிக் சமூகங்கள் இந்தப் பழக்கத்தை 1950 இல் சில இஸ்ரவேல் ஆன்மீக அதிகாரங்கள் கட்டுப்படுத்தும்வரை வரை கொண்டிருந்தனர். 


[முக்கிய குறிப்பு:- 1975 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்இந்தியாவில் முஸ்லிம்களை விட ஹிந்துக்களே அதிகமாகப் பலதார மணம் செய்திருந்தனர். 1975 ம் ஆண்டு, ‘இஸ்லாத்தில் பெண்கள் நிலை பற்றிய குழு’ ‘Committee of The Status of Woman in Islam’ இன் அறிக்கையில் 66 மற்றும் ௬௭ ம் பக்கங்களின் அடிப்படையில், 1951 க்கும் 1961 க்கும் இடைப்பட்ட காலப் பகுதிகளில் ஹிந்துக்களின் பலதார மன விகிதாசாரம் 5.06% ஆக இருந்த அதே நேரம் முஸ்லிம்கள் 4.31% ஆக இருந்தனர். இந்திய சட்டத்தின் அடிப்படையில்முஸ்லிம்கள் மாத்திரமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்துகொள்ள முடியும். 1954 இல் மட்டுமே, ஹிந்து திருமண சட்டம், ஒருவருக்கு மேல் மணம் முடிப்பதை தடை செய்துசட்டம் கொண்டுவரப் பட்டது. இருந்தபோதும்விகிதாசார அடிப்படையில் ஹிந்துக்கள் அதிகமாக இருந்தனர். ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணப்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பது தெளிவு. ஒன்றுக்கு மேல் மணக்கக் கூடாது என்பது ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லைமாறாக மதத் தலைவர்களினால் கொண்டுவரப் பட்டதே.] 


குர்ஆன் சிலதார மணத்தைக் கட்டுப் பாட்டுடன் அனுமதித்துள்ளது. 
ஏற்கனவே குறிப்பிடப் பட்டதுபோல், “ஒருவரை மாத்திரம் மணந்து கொள்ளுங்கள்” என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாமே. குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது: 


“..உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோமும்மூன்றாகவோநன்னான்காகவோஆனால்நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்) [4:3]” 

குர்ஆன் இரண்டுமூன்று அல்லது நான்கு என்ற கட்டுப் பாட்டை விதிப்பதற்கு முன்னர்எத்தனை மனைவியரை மணக்க வேண்டுமென்பதில் கட்டுப்பாடே இருக்கவில்லை. சிலர் நூறுக்கும் மேற்பட்ட மனைவியரையும் கொண்டிருந்தனர். இந்தக் கட்டுப் பாட்டுடன் கூடிய அனுமதியும்அவர்களிடையே நேர்மையாக நடந்துகொள்ள முடியுமாக இருக்க வேண்டிஎதை வலியுறுத்தியே கொடுக்கப் பட்டுள்ளது. 
மேலும் அல் குர்ஆனில்: 


“(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும்மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாதுஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்;..[4:129]” 


ஆகவே பலதாரமணம் அதிகாரமோ கடமையோ இல்லைமாறாக இது ஒரு விதிவிலக்கே. முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணப்பது கடமை என்று பலர் இதைத் தவறாகக் கருதி இருக்கின்றனர். 
இஸ்லாத்தில் செய்ய’ மற்றும் செய்யக்கூடாதவை’ யை ஐந்து பிரிவாக வகுத்து நோக்கலாம்: 
  1. ‘fபர்ல்’- கட்டாயம் அல்லது கடமை 
  2. முஸ்தஹாப்’- விரும்பத்தக்கது  அல்லது ஊக்குவிக்கப் பட்டது. 
  3. முபாஹ்’- அனுமதிக்கப் பட்ட அல்லது அனுமதி. 
  4. மக்ருஹ்’- அருவெறுக்கதக்கது  அல்லது ஊக்குவிக்கப் படாதது. 
  5. ஹராம்’- தடை செய்யப் பட்டது. 
இவற்றில் பலதாரமணம் அனுமதிக்கப் பட்ட’ என்ற நடுப்பகுதியைச் சேர்க்கிறது. அதே நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை உடைய ஒரு முஸ்லிம் ஆண் ஒரு மனைவியை உடைய ஒரு பெண்ணிலும் சிறந்தவர் என்று சொல்ல முடியாது. 

பெண்கள் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகமானது 
இயற்கையாக ஆண்களும் பெண்களும் ஒரே விகிதத்திலே பிறக்கின்றனர். பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகம் கொண்டவர்கள். இதனால் குழந்தைப் பருவத்திலேயே பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் இறந்துவிடுகின்றனர். யுத்த களங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகமாக இறக்கின்றனர். அன்றாடம் வெளியே நடக்கும் விபத்துக்களிலும் நோய்களாலும் ஆண்களே அதிகம் இறக்கின்றனர். அதே நேரம்ஆண்களை விடவும் பெண்களின் ஆயுள் காலம் அதிகமானது. 


சிசு கொலை காரணமாக இந்தியாவில் ஆண்களின் அளவு அதிகம். 
ஒப்பீட்டின் அடிப்படையில் இந்தியாவில் ஆண்களின் விகிதம் பெண்களை விடவும் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம்சிசுக் கொலையாகும். ஒரு வருடத்துக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கருச் சிதைக்கப் படுகிறார்கள் அல்லது சிசு கொலை செய்யப் படுகிறார்கள். இது ஆரம்ப நிலையிலேயே ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைக் கண்டரிவதன் மூலம் செய்யப் படுகிறது. இந்தக் கொடிய பழக்கம் நிறுத்தப் பட்டால்இந்தியாவிலும் ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக காணப படுவார்கள். 


உலக பெண்கள் தொகை ஆண்கள் தொகையை விட அதிகம். 
அமெரிக்காவில் பெண்கள் ஆண்களை விட 78 லட்சம் அதிகமாக இருக்கின்றனர். நியூயார்க் இல் மட்டும் 10 லட்சம் பெண்கள் அதிகமாக உள்ளனர். இருக்கும் ஆண் தொகையில் மூன்றில் ஒரு மடங்கினர் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கின்றனர். யூ. எஸ். ஏ இல் மொத்தமாக இரண்டரைக் கோடிக்கு மேற்பட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கின்றனர். இது இவர்கள் பெண்களை மனப்பதில்லை என்பதை உறுதிப் படுத்துகின்றது. மேலும்கிரேட் பிரித்தானியா வில் 40 லட்சம் பெண்கள் ஆண்களை விட அதிகமாகவும்ஜெர்மனியில் 50 லட்சமும்ரஷ்யாவில் 90 லட்சமும் உள்ளனர். உண்மையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களை விட அதிகமாக இந்த உலகத்தில் உள்ளனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். 


ஒரு ஆண் ஒரு மனைவியையே மணக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு ஒவ்வாது. 
எல்லா ஆண்களும் ஒவ்வொரு பெண்ணையே மணக்க வேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தால்அமெரிக்காவில் உள்ள கோடி பெண்களுக்கு கணவன்மார் இல்லாத நிலை ஏற்படும் (அமெரிக்காவில் 2.5 கோடி ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களைக் கருத்திட் கொள்ளும் பட்சத்தில்). மேலும்கிரேட் பிரித்தானியா வில் 40 லட்சம் பெண்களும்ஜெர்மனியில் 50 லட்சமும்ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் ஆண் துணை தேட முடியாது. 
எனது சகோதரி அல்லது உங்களது சகோதரி அமெரிக்காவில் வாசிக்கும் திருமணம் ஆகாதவர்களில் ஒருவராக இருந்தால்அவர் ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் அல்லது ஒரு பொதுச் சொத்தாக’ மாற வேண்டும். பொதுவாக பெண்களுக்கு தமது கணவனை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்வது பிடிக்காது. ஆனால்இஸ்லாத்தில்இவ்வாறு இக்கட்டான நிலையில் ஒரு முஸ்லிம் சகோதரி பொதுச் சொத்தாக” மாறுவது போன்ற பெரிய இழப்பைத் தடுக்கஇஸ்லாமியப் பெண்கள் தமது தனிப்பட்ட இழப்பை மறந்து செயல்படுவர். 


ஏற்கெனவே திருமனமானவரை மணப்பதுபொதுச் சொத்தாக’ மாறுவதை விட சிறந்தது. 
ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துவேறு பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது பொதுவான மேற்கத்திய கலாசாரம். இப்படியான சந்தர்ப்பத்தில் பெண்கள் அவமரியாதை செய்யப் படுவதோடு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். இந்த விடயத்தை இலகுவாக ஏற்று செயல்படும் இந்த சமுதாயம் ஆண்கள் கண்ணியமான முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை சட்டப் படி திருமணம் செய்துஅவர்களுக்கு அந்தஸ்தையும் பாதுகாப்பையும் வழங்கித் தீய வழியில் செல்வதைத் தடுப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 
எனவேபெண்களுக்கு இரண்டு தேர்வுகள் மாத்திரமே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொள்ளுதல் அல்லதுபொதுச் சொத்தாக’ மாறுதல். இங்கு இஸ்லாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய சமுக அந்தஸ்தையும் பாதுகாப்பையும் கொடுத்து தீய வழியில் அவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் வண்ணம் அழகான முறையில் பலதார திருமணத்தைக் கட்டுப் பாட்டுடன் அனுமதித்துள்ளது. 

நன்றி: டாக்டர் ஜாகிர் நாயக் http://www.irf.net/

28 comments:

  1. நல்லா இருக்கு....மாஸா அல்லாஹ்....

    ReplyDelete
  2. நல்லா இருக்கு....மாஸா அல்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆஷா.. :)

      Delete
  3. பலதார மணத்தில் உள்ள நன்மை தீமைகளை ஒரு பெண் அலசுவது அதிலும் சிறந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே.. :).

      Delete
  4. நான் இஸ்லாமிய பெண் தான். இந்த காலத்திலும் இந்த மாதிரி எழுதும் பெண்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. நல்லா சிரிங்க... வேணும்னா தனியா ரூம் போட்டு சிரிங்க.. ஆனா இஸ்லாம் பத்தி தெளிவான புரிதல் இருந்தா உங்களுக்கு சிரிப்பு வராது இந்த பதிவு பார்த்தா...


      அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்..

      Delete
    2. ஃபாத்திமா...நீங்கள் சிரிப்பது இந்தப்பதிவைப் பார்த்து அல்ல. எக்காலத்திற்கும் பொருந்தும் இறைவசனத்தைப் பார்த்து. அது இறைவசனம் என்பதற்காக அதை அப்படியே கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள் என சொல்லவில்லை. அச்சட்டத்தினால் தடுக்கப்படும்/ஒழிக்கப்படும் குற்றங்குறைகளை இவ்வளவு விளக்கமாக இக்காலத்தில் நடைபெறுவதை வைத்து ஒப்பிட்டு சொல்லியும் உங்களுக்கே சிரிப்பு வருகிறதென்றால் அனானிகளை என்னவென்று சொல்வது? :(((

      Delete
  5. திருமணம் அல்லது 'பொதுசொத்து' என்ற கட்டுப்பாடு ஏன்?

    சுதந்திர வாழ்கை கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. பொது சொத்து என்ற கட்டுப்பாடு ஏன்?? /// என்ன கேக்க வரிங்க? கொஞ்சம் தெளிவா குழம்பாம கேளுங்க..!! பொது சொத்து ஆகணும்னு இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்குதுன்னு நீங்க புரிஞ்சிக்கிட்டா நான் என்ன பண்ண???

      Delete
  6. அற்புதமான விளக்கம்....

    ReplyDelete
  7. அற்புதமான விளக்கம்...
    அருமையா இருக்கு

    ReplyDelete
  8. //ஒன்று ஏற்கெனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொள்ளுதல் அல்லது‘பொதுச் சொத்தாக’ மாறுதல்//

    ஏன் இதெல்லாம் இல்லாம தனியாக வாழ அவங்களால முடியும்ன்னா அப்பவும் அவங்களை இந்த ரெண்டுல ஒன்னுக்கு நிர்பந்திப்பீங்களா? நல்லா இருக்குங்க உங்க நியாயம்!

    எங்க ஊருல ஆண்கள் அதிகம் பெண்கள் குறைவு, ஊருக்குள்ளயே ரெண்டு மூன்று ஆண்களை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க உங்க பதிவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். நன்றி, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. //அப்பவும் அவங்களை இந்த ரெண்டுல ஒன்னுக்கு நிர்பந்திப்பீங்களா? /// இங்க யாரு இஸ்லாம் நிர்பந்தப்படுத்துதுன்னு சொன்னாங்க???

      //ஏன் இதெல்லாம் இல்லாம தனியாக வாழ அவங்களால முடியும்ன்னா// அது வாதத்திற்கு உதவலாம்.. நடைமுறையில் ஒரு சிலரை தவிர மற்றவரால் சாத்தியம் இல்லை..! உலகத்தின் ஒரு ஆணும பெண்ணும் இணைவதன் அடிப்படையே இனப்பெருக்கம்..! இனப்பெருக்கம் தடைபட்டால் மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..!


      //எங்க ஊருல ஆண்கள் அதிகம் பெண்கள் குறைவு, ஊருக்குள்ளயே ரெண்டு மூன்று ஆண்களை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க உங்க பதிவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். நன்றி, வாழ்த்துக்கள்!//// உங்கள் தவறான புரிந்துணர்விற்கு ஏன் ஆழ்ந்த அனுதாபங்கள்... முதலில் உங்கள் பெயரையாவது தைரியமாக போடுங்கள்.. அனானி பெயரில் வந்து வீர வசனம் பேசுபவர்களை பார்த்தல் எனக்கு சிரிப்புதான் வருகிறது...

      Delete
    2. அட அநாநியாக இருப்பதும் முக்காடு போடுவது போல் தாங்க. பெயரைச் சொல்லி பொது இடத்தில் உரையாடக் கூடாது என்பது எங்க ஊர் வழக்கம், அதற்கு கட்டுப்பட்டு வாழ்வதே சிறப்பு என்று கருதுபவர்கள் நாங்கள். ஆனால் அதை சாக்காக வைத்து கண்ணியம் இல்லாம எல்லாம் பேசிட மாட்டோம்.

      //அது வாதத்திற்கு உதவலாம்.. நடைமுறையில் ஒரு சிலரை தவிர மற்றவரால் சாத்தியம் இல்லை..!//

      சாத்தியமா இல்லையா ன்னு ஒருத்தங்களுக்கு நீங்க முடிவு செய்து சொல்லத் தேவையில்லை!

      //இனப்பெருக்கம் தடைபட்டால் மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..!//

      அடடா! மனித இனப்பெருக்கம் குறைந்து குறைந்து தான் இன்று இத்தனை பாரம் ஏறிப்போய்ருக்கோ பூமிக்கு!

      Delete
  9. Replies
    1. அத உங்க ஒரிஜினல் பேருல வந்து சொல்லுங்க அனானி

      Delete
  10. அருமையான பகிர்வு

    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மு செல்லம் :)

      Delete
  11. //அனானி பெயரில் வந்து வீர வசனம் பேசுபவர்களை பார்த்தல் எனக்கு சிரிப்புதான் வருகிறது...//

    உண்மைதான் சகோ, அதே போல் முக்காடு (பர்தா)
    போட்டுகிட்டு வந்து பெண்ணுரிமை பேசுபவர்களையும்
    அதாவது உங்களை போன்றவர்களையும் பார்த்தாலும் பார்ப்பவர்க்கு சிரிரிப்புதான் வரும் :)))

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய அனானி சகோ... என் திறமைக்கும் அறிவுக்காகவும் மட்டுமே நான் மதிக்கப்பட வேண்டும் என் உடை மறைத்திருக்கும் என் தோற்றத்திற்காக நான் மதிக்கப்படுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது..!

      பெண் உடை என்பது அவளுடைய விருப்பம்.. உடலை காட்டி உடை அணிவது எப்படி பெண்ணுரிமை ஆகும்?? கொஞ்சம் விளக்குங்களேன் சகோ..!

      என்னை யார் பார்க்க வேண்டும் என்பது என் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் எனக்கான சுதந்திரம்.. எனக்கான பெண்ணுரிமை...! :))

      Delete
  12. maasha alla!

    nalla pakirvu!

    ReplyDelete
  13. உலக சனத்தொகை கணிப்பின்படி 1000 ஆண்களுக்கு 700 பெண்கள் என்றுதான் உள்ளது. அப்படியானால் ஒரு பெண் பல ஆண்களைதான் மனர்க்கவேண்டும். இதனடிப்படையில் குர்ஆன் போதனை இந்த காலத்துக்கு ஏற்றதாக தோன்றவில்லை சகோதரி

    ReplyDelete
  14. NICE .....PLS UPLOAD DIS TYPE OF MORE QUOTES OF ISLAM

    ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)