Pages

Tuesday, July 17, 2012

தேசிய திருக்குர்ஆன் மாநாடு,மலேசியா -2

தேசிய திருக்குர்ஆன் மாநாடு,மலேசியா -1 ஐ காண இங்கே கிளிக்கவும்..! 


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோ'ஸ் சென்ற பதிவின் தொடர்ச்சி இனி....

டாக்டர் மரினா அவர்கள் பேசுகையில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட ஆண்களே காரணம் என்ற டாக்டர் சுமையா தாவூத்தின் கருத்துகளில் இருந்து முற்றிலும் முரண்படுவதாக கூறினார்.... அவர் மேலும் கூறியதாவது.. பெண்களுக்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகள் பற்றி போதிய தெளிவு இல்லாததே அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட காரணம் என்றார்... நம்மில் எத்தனை பேர் தனது தாய்மொழியில் குரான் ஹதீஸை வாசித்து விளங்கி கொண்டு இருக்கிறோம் என்று அவர் கேள்வி எழுப்பினார்..அவரது கேள்வி அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.. இப்படி பெண்கள் அறியாமையில் இருந்து கொண்டு ஆண்கள் உரிமை தரவேண்டும் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தம இல்லை என்பதை மிக தெளிவான முறையில் எடுத்து கூறி அவர் விடை பெற்ற போது எழுந்த கைதட்டல் அரங்கை அதிர செய்தது... மாஷா அல்லாஹ்...!!

தொடர்ந்து இஸ்லாம் கூறும் பெண்ணியம் என்ற தலைப்பில்  பேச வந்த DR.K.V.S. ஹபீப் முஹம்மது அவர்கள்... (இதற்கு முன் அவர்களுடைய சில உரைகளை யூட்யூபில்கண்டு இருந்தாலும் அவர் உரையை நேரில் காணும் வாய்ப்பு அன்று கிடைத்தது...) இஸ்லாம் கூறும் பெண்ணியம் பற்றி டாக்டர மரினா அவர்களும் டாக்டர் சுமையா அவர்களும் போதிய அளவில் பேசி விட்டாலும் பெண்ணியத்தை பற்றி பெண்கள் பேசுவதை விட ஒரு ஆணாகிய  நான் பேசுவதே சரி என்றார்..! பெண்களை இக்கால மீடியாக்கள் ஒரு வியாபார பொருளாக , காட்சிப் பொருளாக மாற்றி விட்டதென கடுமையாக சாடினார்.. பல மதத்திலும் பெண்கள் இழிவாக கருதப்படும் காரணங்களை பற்றி அவர்கள் பேசுகையில்.. ஆதிபாவத்துக்கு காரணம் பெண் எனவே பெண் என்பவள்  இழிவானவள் என கருதும் பழக்கம் கிறிஸ்துவ சமூகத்தில் உண்டு என்றார்...

மலடி,விதவை,வாயாடி, வாழாவெட்டி என்றெல்லாம் பெண்ணை அழைத்து கேவலப்படுத்தும் இந்த சமூகம ஆண்களை அவ்வாறு கூப்பிட வார்த்தைகள் உருவாக்கவில்லை இதுதான் ஆணாதிக்கம் என்றும்... இதை எல்லாம் எதிர்க்காத பெண்கள்.. எப்படி மேற்குலக உலகமயமாக்கல் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தங்களை சிறுக சிறுக இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மிக நேர்த்தியாக ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினார்கள்..

ஆரம்ப காலங்களில் பெண்கள் ஆணுக்கு நிகராக உரிமைகளில் சமத்துவம் வேண்டும் என்று கோர ஆரம்பித்ததாகவும் காலங்கள் செல்ல செல்ல... ஆண் இல்லாமல் தன்னால் தனித்து இயங்க முடியும் என்ற தவறான முடிவின் பால் பெண்கள் செல்ல ஆரம்பித்ததாகவும் , காலப்போக்கில் பெண்கள் குழந்தை பெறுவதையே கூட சுமையாக நினைத்ததும் குடும்ப வாழ்கையை துறப்பதே பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் என்று மேலை நாட்டு எழுத்தாளர்களின் மூளைச்சலவைக்கு பெண்கள் கட்டுப்பட்டு தங்கள் சுயத்தை தொலைத்தார்கள் எனவும்...

மேலும் பெண்ணியம் பேசிய தந்தை பெரியார் அவர்களே உண்மையான பெண் விடுதலைக்கு பெண்கள் பிள்ளை பெரும் தொல்லை விடை பெற வேண்டும் என்று -பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் எழுதி  இருக்கிறார்  என்று DR.K.V.S கூறிய போது ஒரு கணம் என் மூச்சு நின்றுதான் போனது..!!

சம உரிமை கோருவதில் ஆரம்பித்த பெண்ணியவாதிகள்... இப்பொழுது தடம் மாறி..
விஞ்ஞான உதவியுடன்  குழந்தை பெற உரிமை கோருவதும்...
விரும்பியவருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு வைத்து கொள்ள உரிமை கோருவதும்...
இது எல்லாம் சமூக சீர்கேடுகளே அன்றி வேறில்லை என்று டாக்டர் அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்கள்...

இறுதியாக பெண் ஆணாக (தோற்றத்தில்,செயலில்,நடவடிக்கைகளில் ) மாறுவது அல்ல பெண்ணுரிமை ....!!!
பெண் தன சுயத்தை இழக்காமல் தனக்கான கடமைகளை நிறைவேற்றி பெண்ணாக வாழ்வதே உண்மையான பெண்ணுரிமை..!!!
எனகூறி தனதுரையை நிறைவு செய்தார்கள்...

அன்றைய மாநாட்டின் இறுதி நிகழ்வாக நம் முஸ்லிம்களின் வாழ்வில் தலைதூக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் மனித அறியாமையா மறை அறியாமையா என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது (ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி ,உத்தமபாளையம் ) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.. நகைச்சுவையான கருத்துக்கள் மூலம் சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கும் விதத்தில் பல அருமையான கருத்துக்களை தொகுத்து அரங்கை கலகலக்க செய்தனர் பங்கேற்பாளர்கள்..
மிகவும் அருமையாக இரண்டு பக்க வாதங்களும் முன்வைக்கப்பட்டன... இறுதியில் மறை அறியாமையே மனித சமூக வீழ்ச்சிக்கு காரணம் என்ற தீர்ப்பை நடுவர்  அவர்கள் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்...!

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை விரைவில் தொகுத்து வெளியிடுகிறேன்... !


உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாத்துல்லாஹி வபரக்காதுஹு... :)

10 comments:

 1. நன்றாக இருந்தது...........

  ReplyDelete
  Replies
  1. ஜசாக்கல்லாஹ் பிரதர் :)

   Delete
 2. சிறந்த பகிர்வு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. நல்ல தொகுப்பு சர்மிளா... நல்லதொரு கூட்டத்தில் கலந்துகொண்டு அதில் நீங்கள் கற்றுக்கொண்டதை பகிர்ந்ததுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

   Delete
 4. நல்ல தொகுப்பு சர்மிளா... நல்லதொரு கூட்டத்தில் கலந்துகொண்டு அதில் நீங்கள் கற்றுக்கொண்டதை பகிர்ந்ததுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா :)

   Delete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)