Pages

Tuesday, July 03, 2012

கிறுக்கிய கவிதைகள்..!!

மகளே ....!!

உன் கண்ணில் மின்னி மறையும்
அந்த சில நொடி
 சிரிப்புக்காகவே
ஒவ்வொரு முறையும்
உன்னுடன் விளையாடி தோற்க
தோணுதடி  என் செல்லமே..! _____________________________________________________
வலி உணர்ந்த தருணம்..!



எல்லாரும்
எல்லாரையும்
எல்லா நேரங்களிலும்..
திருப்திப்படுத்தி
எல்லாருக்கும் நல்லவராக
இருந்து விடுவது
சாத்தியமே இல்லை என்பதை
வாழ்கை சில நொடிகளில்
மவுனமாக உணர்த்திச் சென்று விடுகிறது.......!


______________________________________________________

தாயுமானவர்...!! 
காலம் முழுவதும் காய்ச்சலுடன்
இருக்க ஆசை என்றேன் நான்
ஏனடி பைத்தியமா உனக்கு என்றார்
இல்லை....
உன் மடியில் நான் உறங்க
இரவெல்லாம் கண்விழித்து
ஒரு தாயாய் நீ எனை
சுமக்க.....
உடலை வருத்திய
காய்ச்சலும் கூட எனக்கு
பிரியமான ஒன்றாகி போனதே
என் பிரியமானவனே என்றேன்..!
உன்னை வருத்தும் காய்ச்சலை
நான் வெறுத்து விட்டேனடி..!
ஆயுள் முழுவதும் உன்னை  என் மடியில்
நான் தாங்க காய்ச்சல் எதற்கு?
என்று அவர் உருகிய
தருணத்தில்  மீண்டும் விழுகிறேன்
அவருடனான என் காதலில்...!!
______________________________________________________

உயிர் உடைத்த தருணம்..!

பணி முடிந்து வீடு திரும்ப
வாகனத்தின் கதவை திறக்க
எத்தனிக்கையில் அருகில் நின்ற
துப்புரவு தொழிலாளியின் வெறுமை
நிறைந்த பார்வை...
என் உயிரை துளைத்து..
அன்றைய இரவிற்கான
என் உறக்கத்தில் கேள்விக்குறியை "
வரைந்து செல்ல போதுமானதாய் இருந்தது..!!

______________________________________________________

என் குட்டிப்பா..!!

குட்டிமா என்று எனை
நீ அழைக்கும் ஒவ்வொரு கணமும்
வயதை மறந்து உன் மடியில்
குழந்தையாய் தவழ்ந்திட
எண்ணுது என்  மனது..!
பெற்றவளுக்கே அன்பை கற்று தரும்
பல்கலைகழகம் நீ...!!
உன்னை பெற்றதால்
உனக்கு தாயாக மட்டுமே
ஆன எனக்கு ....
யாதுமாகி நின்ற என் உலகம் நீ ..!
ஒற்றை வார்த்தையில்
உலக சந்தோசத்தை
அள்ளித்தரும் பொக்கிஷம் நீ ..!
என் குட்டிப்பா...!!

6 comments:

  1. எல்லாருக்கும் நல்லவராக
    இருந்து விடுவது
    சாத்தியமே இல்லை என்பதை
    வாழ்கை சில நொடிகளில்
    மவுனமாக உணர்த்திச் சென்று விடுகிறது.......!

    ம்ம்ம் சரிதான்
    அருமை எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  2. சலாம்!

    எல்லாரும்
    எல்லாரையும்
    //எல்லா நேரங்களிலும்..
    திருப்திப்படுத்தி
    எல்லாருக்கும் நல்லவராக
    இருந்து விடுவது
    சாத்தியமே இல்லை என்பதை
    வாழ்கை சில நொடிகளில்
    மவுனமாக உணர்த்திச் சென்று விடுகிறது.......!//

    கவிதைகள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அட அட அட!

    எங்கக்கக்கான்னு அப்பப்ப நிரூபிக்கிற சர்மி!

    என்னை மாதிரியே (நான் எப்படி எழுதுவேன்னு ஒலகத்துக்கே தெரியும்) எழுதுற! ஆச்சர்யமா இருக்கு :-) ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்.

    பெற்றவளுக்கே அன்பை கற்று தரும்
    பல்கலைகழகம் நீ...!!
    உன்னை பெற்றதால்
    உனக்கு தாயாக மட்டுமே
    ஆன எனக்கு ....
    யாதுமாகி நின்ற என் உலகம் நீ ..!
    ஒற்றை வார்த்தையில்
    உலக சந்தோசத்தை
    அள்ளித்தரும் பொக்கிஷம் நீ ..!

    அருமையான வரிகள்! உண்மையான வார்த்தைகள்!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்...

    அக்காங்கச்சி அருமையான வரிகள்:

    "யாதுமாகி நின்ற என் உலகம் நீ ..!
    ஒற்றை வார்த்தையில்
    உலக சந்தோசத்தை
    அள்ளித்தரும் பொக்கிஷம் நீ ..!"

    ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)