Pages

Tuesday, September 18, 2012

உலக முஸ்லிம்களே..! உஷார்..!!!

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு "என்பார்கள் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிலும் அடிபடும் அந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை பற்றிய செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும்போதும்..!!

பதிவுக்கு செல்லும் முன் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிக்க எண்ணி அவரை பற்றிய அவதூறான படத்தை தயாரித்து வெளியிட்டவர்களுக்கு என் கண்டனங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் .!!

சம்மந்தப்பட்ட படத்தை பற்றிய தகவல்கள் கசிய தொடங்கியதும் ஒவ்வொரு சராசரி முஸ்லிமுக்கும் எந்த அளவு கோபம வந்ததோ அதை விட பன்மடங்கு  கோபம் எனக்குள்ளும் வந்தது..! ஆனால் அதை விட அதிகமான கோபம்  அந்த படத்திற்கு எதிரான வன்முறைகளில் இறங்கிய என் சகோதரர்கள் மீது வந்தது..!!

கோபப்பட்ட சகோதரர்களை குறை சொல்வதல்ல என் நோக்கம்..! அவர்களின் கோபம் நியாயமானதே..! ஆனால் அந்த கோபத்தை அவர்கள் வன்முறையாக வெளிப்படுத்திய விதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!!

இதுவா நம் மார்க்கம் நமக்கு சொல்லி தந்தது? இதுவா நம் தூதர் நமக்கு கற்று தந்தார்கள்???


அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்
 


இறைதூதரை இழிவுபடுத்தியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவே வன்முறையில் இறங்கினோம் என்பவர்கள் சிந்திக்க மாட்டார்களா?? இழிவுபடுதினால் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதான் நல்ல முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி இருக்க வேண்டியதுதான் அதுதான் ஒரு உண்மை முஸ்லிமின் கடமையும் கூட...! ஆனால் தேவையற்ற வன்முறையில் இறங்கி இதில் சம்மந்தப்படாத மனித உயிர்களை குடித்தது எந்த வகையில் இறுதி தூதர் மீதான உங்கள் அன்பை பிரதிபலித்திட முடியும்? அப்பாவியான ஒரு உயிரை கொல்வது மனித இனத்தையே கொன்றதற்கு ஒப்பாகும் என்ற இறை வசனம் கூட இவர்களுக்கு மறந்தது ஏனோ? கோபம் கண்ணை மறைத்த காரணம் தானோ?

அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134 
 

இந்த இறை வசனம் கூடவா நினைவுக்கு வரவில்லை சகோதரர்களே?

இது போன்ற அவசர நடவடிக்கைகளால் யூத அரசாங்கம் விரித்து வைத்துள்ள வலையில் தாங்களாக போயி  சிக்கிக் கொள்ளாதீர்கள் என் அன்பு சகோதர சகோதரிகளே..! அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இது போன்ற உங்கள் எல்லை மீறிய கோபத்தையும் அதன் மூலம் நீங்கள் அரங்கேற்றும் வன்முறைகளையும் தான்..! அதன் மூலமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் உலகின் பார்வையில் வன்முறையாளர்கள் என சித்தரித்து நாம் அனைவரும் தீயவர்கள் என்ற விஷ விதையை உலக மக்களின் மனதில் விதைப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்,...!
இதை உணராமல் அவசரகதியில் செயல்களில் இறங்கி விட்டு நீங்கள் சிக்கிக்கொள்வதொடு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்திற்கே தீவிரவாதிகள். என்ற பட்டத்தை உங்கள் முன்யோசனை இல்லாத செய்கையால் பெற்று தந்து விடாதீர்கள் என்பதே உங்கள் அன்பு சகோதரியின் தாழ்மையான வேண்டுகோள் ..!!

எவனோ ஒருவன் படம் எடுத்தான் என்பதால் அமெரிக்க தூதரகத்தை தாக்குகிறோம் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு அவர்களின் அரசாங்க காரியங்களுக்கு நாம் இடைஞ்சலாக இருந்து விட்டோம் சகோதர சகோதரிகளே.. அவர்களுக்கு எல்லாம்  ஏற்பட்ட பொருள் இழப்பு, உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இவை எல்லாம் சேர்ந்து இஸ்லாம் மீதான எதிர்மறையான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விடாதா?? யூதர்களின் கனவும் அதுதானே அதை நாமே முன்னின்று நிறைவேற்றியது போல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே..!

இதுவா நான் இஸ்லாத்தை மற்றவர்க்கு எடுத்து செல்லும் விதம்?? இதுவா இஸ்லாம் இனிய மார்க்கம் என்று மற்ற மக்களை நினைத்து அவர்களை இஸ்லாத்தின் பக்கம் நெருங்க வைக்கும்??

நாளையே இந்த படம் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு விடுகிறது என்றே வைத்துக்கொள்வோம்.. வன்முறையில் சிக்கி பலியான  உயிர்களுக்கு நாம் என்ன பதில் வைத்து இருக்கிறோம்??

எனவே சகோதர்களே இது போன்ற சென்சிடிவான எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் முன் நம் மனதின் கூச்சலிடும் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இது போன்ற சம்பவங்கள் நடக்க என்ன காரணம் என்பதை நம் மூளைக்கு அதாவது நம் அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்து யோசிப்போம்..! யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் அவர்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் நம் அருமை நாயகம் கண்மணி (ஸல்) அவர்களுடைய கண்ணியத்துக்கு எவராலும் இழுக்கு ஏற்படுத்தி விட முடியாது.. அவர்களின் நயவஞ்சக எண்ணம எல்லாம் இஸ்லாமியர்களை மற்ற மதத்தவர்களிடம் இருந்து பிரித்து ஒதுக்குவதே..! அதற்கு அவர்களிடம் தகுந்த காரணம் இல்லாத காரணத்தாலேயே நம்மை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தி ஒதுக்கும் வேளையில் இரகசியமாக பல திரைமறைவு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன..விவேகமில்லாத வீரம் ஒன்றுக்கும் உதவாது என்பதை நினைவில் வைத்து அடுத்த அடியை கவனமாக எடுத்து வையுங்கள் என் அருமை சகோதர சகோதரிகளே ...!

நம் கண்மணி நாயகம் மீது நமக்குள்ள அன்பை வெளிப்படுத்த அவர்கள் கற்றுதந்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது... அவர்கள் காட்டி தராத வன்முறையில் இறங்கி நம் சமுதாயத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என் அருமை சொந்தங்களே..! 

என் அருமை சகோதர சகோதரிகளே மீண்டும் சொல்கிறேன் கண்மணி நாயகம் அவர்கள் மீதான நம் அன்பை நாம் வெளிபடுத்தும் விதம் அவர்களின் வாழ்கையை இம்மி பிசகாமல் பின்பற்றி வாழ்வதே ஆகும்..! அதுவே உலகிற்கு சிறந்த தாவா என்பதை நினைவில் வையுங்கள்..!


யார் மனதும் புண்படும்படி என் கருத்துகள் அமைந்து இருந்தால் ஏக இறையின் பொருட்டால் என்னை மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..!

இறுதியாக சமூக வலை தளத்தில் சகோதரர் ஒருவர் பதிந்து இருந்த துவாவுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்

யா அல்லாஹ் !!! சர்வ சக்தியும் படைத்த ரஹ்மானே...இதயங்களைப் புரட்டக் கூடியவனே ...

டெர்ரி ஜோன்ஸ் , நகுலா போன்றவர்களின் இதயங்களை இஸ்லாத்தின்பால் புரட்டுவாயாக !!

எங்கள் பொக்கிஷத்தை கொல்லப் புறப்பட்ட உமரின் இதயத்தை புரட்டியவனே !!! கண்மணி நாயகத்தின் குட்டியாப்பாவின் இதயத்தை அறுத்து தின்ற ஹிந்தாவின் இதயத்தைப் புரட்டியவனே !! கயமைத் தனனத்தில் மூழ்கிப் போயிருக்கும் இந்த இருவரின் இதயங்களை சத்திய இஸ்லாத்தின் பால் புரட்டுவாயாக !!!
எங்கள் வாட்கள், எங்கள் கோஷங்கள், எங்கள் போராட்டங்கள், எங்கள் இருபது கோடிகள் இதை சாதிக்காது ரஹ்மானே...உனது அருள், உனது வல்லமை மட்டுமே இதைச் செய்ய முடியும் யா அல்லாஹ் !!!

 ஆமீன் ஆமீன் .. யாரப்பல் ஆலமீன்..!


வஸ்ஸலாம்
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி

ஷர்மிளா ஹமீது

டிஸ்கி : இங்கே மலேசிய அரசாங்கமே யூட்யூபில் சம்மந்தப்பட்ட தரப்பிடம் பேசியதில் அந்த வீடியோவை இங்கே தடை செய்து விட்டார்கள்.. இருந்தாலும் யுட்யூபில் இருந்து அந்த வீடியோவை  நீக்காமல் இருப்பது குறித்து அரசாங்கம் வருத்தம் தெரிவித்து உள்ளது..! அந்த வீடியோவை நீக்க வலியுறுத்தி அரசாங்க தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது..! விரைவில்  அந்த வீடியோ நீக்கப்படவேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..!

சம்மந்தப்பட்ட இந்த பிரச்சனைக்கு எவ்வாறு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்பதை என் சகோதரி அன்னு அருமையாக விளக்கி ஒரு பதிவிட்டு உள்ளார் அதையும் தவறாமல் வாசிக்கவும் அந்த பதிவிற்கான லிங்க் கீழே ..!

எப்படி பதில் தந்திருக்க வேண்டும்? 

இது போன்ற அவதூறுகளை எதிர்கொள்வது எப்படி என்பதை மிக தெளிவான முறையில் விளக்கிய என் சகோதரி நாசியாவின் பதிவு..!

அவதூறை எதிர்கொள்வது எப்படி?


46 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

  ///நம் கண்மணி நாயகம் மீது நமக்குள்ள அன்பை வெளிப்படுத்த அவர்கள் கற்றுதந்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது... அவர்கள் காட்டி தராத வன்முறையில் இறங்கி நம் சமுதாயத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என் அருமை சொந்தங்களே..! ///

  நியாயமான கவலை

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் அண்ணே..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே :)

   Delete
 2. Replies
  1. ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ :)

   Delete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நானும் என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

  அழகிய முறையில், அமைதியான வழியில் கண்டனங்கள் தெரிவிப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது.. அதைவிடுத்து வன்முறையில் இறங்குவது வேதனைக்குரிய விஷயம்... தயவுசெய்து யாரும் அதை ஆதரிக்காதீர்கள்!

  ஜஸக்கல்லாஹ் ஹைர் சர்மி

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் வரஹ்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா :)

   Delete
 4. Replies
  1. ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ :)

   Delete
 5. இறைதூதரை இழிவுபடுத்தியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவே வன்முறையில் இறங்கினோம் என்பவர்கள் சிந்திக்க மாட்டார்களா?? இழிவுபடுதினால் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதான் ஆனால் தேவையற்ற வன்முறையில் இறங்கி இதில் சம்மந்தப்படாத மனித உயிர்களை குடித்தது எந்த வகையில் இறுதி தூதர் மீதான உங்கள் அன்பை பிரதிபலித்திட முடியும்? அப்பாவியான ஒரு உயிரை கொல்வது மனித இனத்தையே கொன்றதற்கு ஒப்பாகும் என்ற இறை வசனம் கூட இவர்களுக்கு மறந்தது ஏனோ? கோபம் கண்ணை மறைத்த காரணம் தானோ?

  சிறந்த வார்த்தைகள் சகோதரி... இந்த மனப்பான்மை வளர்ந்தால் மட்டுமே மதங்களின் பெயரிலான பிளவுகள் நீங்கி மனித குலத்தில் சகோதரத்தன்மை நீடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.. :)

   Delete
 6. சலாம் சகோ.ஷர்மிளா.

  //எத்தனை ஆயிரம் பேர்களுக்கு அவர்களின் அரசாங்க காரியங்களுக்கு நாம் இடைஞ்சலாக இருந்து விட்டோம்//

  //அவர்களுக்கு எல்லாம் ஏற்பட்ட பொருள் இழப்பு, உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இவை எல்லாம் சேர்ந்து இஸ்லாம் மீதான எதிர்மறையான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விடாதா??//

  // யூதர்களின் கனவும் அதுதானே அதை நாமே முன்னின்று நிறைவேற்றியது போல் ஆகாதா? //


  //இதுவா நான் இஸ்லாத்தை மற்றவர்க்கு எடுத்து செல்லும் விதம்?? இதுவா இஸ்லாம் இனிய மார்க்கம் என்று மற்ற மக்களை நினைத்து அவர்களை இஸ்லாத்தின் பக்கம் நெருங்க வைக்கும்??//

  மேலும் பல நல்ல சிந்தனைகளை தரும் பதிவு. நன்றி சகோ.

  மக்கள் உணர வேண்டும்..! கூட்டத்தில் உள்ள எவன் குற்றத்தில் ஈடுபட்டாலும் பழி என்னவோ நம்மீதுதான்..! மீடியா இல்லாதவர்களுக்கு... இந்த முன்னெச்செரிக்கை மிகவும் அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் சகோ சிட்டிசன்

   //மக்கள் உணர வேண்டும்..! கூட்டத்தில் உள்ள எவன் குற்றத்தில் ஈடுபட்டாலும் பழி என்னவோ நம்மீதுதான்..! /// அதே கவலை தான் எனக்கும் சகோ... !! நம் மக்கள் என்று இதை எல்லாம் உணர போகிறார்களோ தெரியவில்லை..!! :(

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.. :)

   Delete
 7. அருமையான பதிவுக்கு நன்றி தனிமனித ஒழுக்கத்தை உங்கள் பதிவு போதிக்கிறது இது போன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் உங்கள் போன்ற சிந்த்தனை மற்றவர்களை நல்வழி குறித்து சிந்தனை செய்விக்கும் என்பது திண்ணம்.......

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ பாபு..! :)

   Delete
 8. //எவனோ ஒருவன் படம் எடுத்தான் என்பதால் அமெரிக்க தூதரகத்தை தாக்குகிறோம் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு அவர்களின் அரசாங்க காரியங்களுக்கு நாம் இடைஞ்சலாக இருந்து விட்டோம் சகோதர சகோதரிகளே.. அவர்களுக்கு எல்லாம் ஏற்பட்ட பொருள் இழப்பு, உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இவை எல்லாம் சேர்ந்து இஸ்லாம் மீதான எதிர்மறையான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விடாதா?? //
  Very True Sharmi !!
  இதைத்தான் நானும் எதிர்க்கிறேன். பாமரர்கள் செய்திருந்தாலும் கூட பரவாயில்லை. மன்னித்து விடலாம். படித்தவர்களும் உடனிருந்து செய்ததுதான் கொடுமையிலுங்கொடுமை.

  //நாளையே இந்த படம் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு விடுகிறது என்றே வைத்துக்கொள்வோம்.. வன்முறையில் சிக்கி பலியான உயிர்களுக்கு நாம் என்ன பதில் வைத்து இருக்கிறோம்??//
  இதுவும் சரியான கேள்வி சகோ. But mostly, the consequences of our anger is worse than the causes of it :(.

  உங்களின் து’ஆவிற்கும் ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்.
  இனியும் இது போன்ற தருணங்களில்தான் நாம் இஸ்லாமை தெளிவாக எடுத்திக் காட்ட முடியும் என்பதை மக்கள் நினைவு கொண்டால், இயக்கங்களும் அமைப்புக்களும் அரசுகளும் அந்த பக்குவத்தை மக்களிடம் பரப்பினால் போதும், அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் நன்றிமா அன்னு :)

   Delete
 9. salam akka....!
  arumaiyana aakam....!
  "vanmurai" ellatha porattankal than vetri perum....!

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் தம்பி..

   சரியாக சொன்னீர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

   Delete
 10. ஏற்கனவே இரண்டு நாட்களாக போராட்டம் செஞ்சதுபோக, இன்று மாலையும் பல அமைப்புகள் சேர்ந்து பேரணி நடத்திருக்காங்க. மறுபடி மறுபடி செய்யும்போது பாக்கிறவங்களுக்கு சலிப்புதான் வரும்.

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம் வெறுமனே போராட்டம் நடத்துறத விடுத்து எவ்வளவோ ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்து இருக்கலாம் அக்கா..!! என்ன செய்ய.. இவை எல்லாம் பார்த்து கவலைப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நாம் :/ :/

   முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுசைனம்மா அக்கா :P

   Delete
 11. Muhammad ah thappa padam eaduthadhuku ivlo poratam panra neega aandha padam eaduthadhuku kaaraname pala muslims nu theriyama pesurigala? Ippo ulagathula theviravadhi naale muslims nu thaan aadhegam solraga aadhuku kaaranam yaaru hindhu va? Christions ah? Illave illa ellam neegale thaan oru madhatha parapavum aandha madhatha aasiga paduthi aazhikavum andha madhathula irukavagalala mattum thaan mudiyum. Iedhu thaan unmai.

  ReplyDelete
 12. சலாம் தங்கச்சி...

  அருமையான பதிவு...ரொம்ப நாளைக்கு பிறகு எழுதி இருந்தாலும், தரமான பதிவா வந்து இருக்கு. போராட்டங்கள் கண்டிப்பாக வேண்டும் தான்...பட் வன்முறை கூடாதென்பது முற்றிலும் சரியே... குட் வொர்க்..

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் அண்ணே :)

   வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி :)

   Delete
 13. உங்கள் கருத்தை முழுமையாக ஏற்று கொள்ள முடியவில்லை. அவர்கள் தெரிந்தேதான், வேண்டும் என்றேதான் தொலைநோக்குடன் எல்லா காரியங்களையும் செய்கிறார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு

  ReplyDelete
  Replies
  1. don't you have clear future thoughts?

   Delete
  2. /, வேண்டும் என்றேதான் தொலைநோக்குடன் எல்லா காரியங்களையும் செய்கிறார்கள். // சலாம் சகோ தாரிக் அதேதான் நானும் சொல்கிறேன்..!! அவர்களின் தொலைநோக்கு என்பது இஸ்லாமியர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அவர்களை வன்முறையில் இறங்க வைத்து தீவிரவாத முத்திரை குத்துவதுதான்..! எனவே பிரச்சனைகள் வரும்போது உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி சிறிதேனும் யோசிக்க வேண்டும் என்கிறேன் நான்...!!

   மாற்றுக்கருத்து இருப்பின் பிறகு தொடர்கிறேன்..!

   Delete
 14. தங்கள் கருத்து மிகச்சரியானதே சகோதரி, இன்று நான் தொலைகாட்சியில் ஆர்ப்பாட்டம் நேரலை பார்த்துகொண்டிருந்தபோது ஒவ்வொரு நொடியும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் நல்ல படியாக முடிய துவா செய்தேன்.
  எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அமைதியாக முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ அசீம்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

   Delete
 15. //வன்முறையில் சிக்கி பலியான உயிர்களுக்கு நாம் என்ன பதில் வைத்து இருக்கிறோம்??//
  சரியான கேள்விகள் சகோதரி. இது போல் இராக்கில் பெருழிவு அணு அயுதம் இருப்பதாக அவதுறை பறப்பி படையெடுத்து பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கான மக்கள்களை கொன்று குவித்தார்களே. இது பலி இல்லைய சகோதரி. இதுதோடு விடமால் பத்து வருடங்கள் மேலக இன்னும் கூடறத்தை காளி செய்யமல் இருக்கிறார்களே. இவர்களுக்கு என்ன பதில் இருக்கிறாது அவர்களிடத்தில். தவறுகள் யார் செய்தாலும் தவறுதான் சகோதரி. இந்த உலகத்தில் குற்றம் சுமத்தபடுவதும், தண்டனை அனுபவிப்பதும் நம்மவார்கள் தான் இருக்க வேண்டும் என்று ஏட்டில் எழுதாத சட்டம் இருக்கிறாது.

  ReplyDelete
  Replies
  1. //இந்த உலகத்தில் குற்றம் சுமத்தபடுவதும், தண்டனை அனுபவிப்பதும் நம்மவார்கள் தான் இருக்க வேண்டும் என்று ஏட்டில் எழுதாத சட்டம் இருக்கிறாது./ நம்மவர்கள் மேல் குற்றம் சுமத வேண்டும் எனவே திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன சகோ..! அதுதான் வேதனைக்குரியது..!!


   //. இது போல் இராக்கில் பெருழிவு அணு அயுதம் இருப்பதாக அவதுறை பறப்பி படையெடுத்து பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கான மக்கள்களை கொன்று குவித்தார்களே. இது பலி இல்லைய சகோதரி/// அவர்கள் செய்த செயலுக்கான கூலியை அல்லாஹ் கொடுப்பான்..! அவர்கள் பதில் சொல்ல வேண்டியதும் அவனிடமே...!

   Delete
  2. இவற்றை எல்லாம் நடக்க விட்டு விட்டு கடவுள் என்ன காய் பறித்துக் கொண்டிருக்கின்றாரா !!! வாய்ப் பார்த்துக் கொண்டிருக்கின்றாரா !!!

   கையாலாகதது அது !!!

   Delete
 16. மிக மிக நல்ல எச்சரிக்கை. பிறர் தூண்டுதலுக்கு இரையாகி கெட்ட பேர் வாங்கிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..! :)

   Delete
 17. PART 1. வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி

  ஊடகங்களின் திரித்தலுக்கும் மறைத்தலுக்குமான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கான விதை வரலாற்று காலம் தொட்டே விதைக்கப்பட்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

  இந்திய வரலாற்றைத் தொகுத்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உண்டாக்குமாறு வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த நன்மைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறைத்தும் திரித்தும் வரலாற்றைச் சிதைத்துள்ளனர்.

  அதனால்தான் இன்றும் நம் வரலாற்றுப் பாடங்களில்,

  ஆரியர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஆரியர் வருகை" என்றும் "முஸ்லிம்கள் படையெடுப்பு" என்றும் பதிந்துள்ளதைப் பார்க்கலாம்.

  சுயநலனுக்காக மதச் சண்டைகளை உருவாக்கி, மக்களைக் கொன்று குவித்த இந்து மன்னர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களை உன்னதமானவர்களாகத் திரித்துக் காட்டுகிறது நாம் பயிலும் வரலாறு.

  அதுபோல முஸ்லிம் மன்னர்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான புதிய மதமொன்றை உருவாக்கிய அக்பர், மனைவியின் கல்லறைக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்த ஷாஜஹான் போன்ற மன்னர்களை - மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப்புரங்களில் கோலோச்சியவர்களை - நல்லவர்களாக, மகாபுருஷர்களாக, கலைநயம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் வரலாறு,

  தன் சொந்தச் செலவுக்கு அரசாங்க கஜானாவிலிருந்து நிதி எடுக்காமல் குர்ஆனை எழுதி, தொப்பி நூற்று, எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர் ஒளரங்கசீப்பை மதவெறியராகவும்

  ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த துக்ளக்கை ஒரு கோமாளியாகவும்

  நம் உள்ளத்தில் பதிய வைத்ததில் நெஞ்சில் வஞ்சகம் குடிகொண்டிருந்த வரலாற்றாசிரியர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் திப்புசுல்தான், கேரளத்து நாயர் பெண்களின் சீர்திருத்திற்காகப் பாடுபட்டதைத் திரித்த வரலாறு,

  18 தடவையும் படையெடுத்து வென்ற முஹம்மது பின் கஜ்னவியை முஸ்லிம்களின் உள்ளங்களில்கூட தோற்றுப்போன ஒரு வில்லனாக சித்தரிப்பதில் நம் பாடத் திட்டத்தில் இப்போதும் பயிற்றுவிக்கப்படுகின்ற வரலாறு வென்றிருக்கின்றது.


  இறைமறை குர்ஆனும், "நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்.

  (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும்.

  பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்"
  (49 : 6) என்று கூறுகிறது.

  "தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

  அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலை

  Print media என்று சொல்லப்படும் அச்சு ஊடகம், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் - குறிப்பாகத் தமிழக அளவில் - பத்திரிகை தர்மத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.

  இன்று பத்திரிகைகள் - குறிப்பாக நாளிதழ்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இரண்டு வகையான உத்திகளைத்தான் கையாளுகின்றன.

  அவை, 'பரபரப்புப் பத்திரிகையியல்' மற்றும் 'மஞ்சள் பத்திரிகையியல்' (Sensational Journalism and Yellow Journalism).

  குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு 'சந்தோஷ்' எனும் பத்திரிகை இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியது தெரிந்ததே.

  முஸ்லிம்கள் மீதோ கிருஸ்த்துவர்கள் மீதோ தாக்குதல் நடந்தால், "இரு பிரிவுகளுக்கு மத்தியில் பிரச்னை" என மென்மையாய் செய்தி தரும் பத்திரிகைகள், நேரெதிர் நிகழ்வுகளில் காட்டும் வேகம் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்!

  எவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும் சற்றும் யோசிக்காமல் "முஸ்லிம் தீவிரவாதி", "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை.

  Continued .....

  ReplyDelete
 18. PART 2.. வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி

  விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு, "தீவிரவாதி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம்.

  பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

  குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும்,

  ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.

  பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

  குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும்,

  ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.


  டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி, இஸ்லாத்தைத் தூற்றிய இந்தியாடுடே முதல்,

  பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் "வைக்கப்பட்டிருந்த" குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிகை தினமலர்வரை,

  அவற்றில் எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்புப் பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை.

  காரணம், வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் சொந்த கோர முகங்கள்!

  பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளி வந்திருக்கிறார் இம்ரான்.

  ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை பக்கம் பக்கமாக வெளியிட்ட பத்திரிகைகள் நிரபாரதியாக வெளிவந்த செய்தியில் அக்கறை காட்டவில்லை.

  அவை அடுத்து ஒரு முஸ்லிமைக் குற்றவாளியாக, தீவிரவாதியாகக் காட்ட வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கக் கூடும்..


  இன்னொரு புறம் சமீபத்தில் தினமலர் செய்ததைப் போல் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் தலைவரைப் பற்றி அவதூறுகளை,

  நையாண்டி செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டி,
  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையையும் பத்திரிகைகள் செய்து கொண்டிருக்கின்றன.

  அதுபோல இஸ்லாத்தைக் குறித்துத் தவறான செய்திகளைக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மூலம் பதியும் பத்திரிகைகள் அவற்றுக்கான மறுப்புகளை அனுப்பினால் அவற்றைப் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம்.

  அதுபோல ஆதிக்க சாதி எழுத்தாளர்கள் மூலமும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பெயர்தாங்கிகளாக வாழும் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்கள் மூலமும் "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவதைப் பார்க்கின்றோம்.

  எதற்கெடுத்தாலும் "புலனாய்வுப் பத்திரிகையியல் (Investigative Journalism)" என்ற பெயரில் "மதரஸாக்களில் ஆயுதப் பயிற்சி" போன்ற பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பும் பத்திரிகைகள்,

  முஸ்லிம் அமைப்புகளின் பேரணிகளைக்கூட தீவிரவாதப் பயிற்சிகளாகச் சித்தரிக்கும் புலனாய்வு(?)ப் பத்திரிகைகள், சங் பரிவாரங்கள் நடத்தும் வெளிப்படையான ஆயுதப் பயிற்சியை வெறும் செய்தியாகக்கூடத் தராது.


  Continued…..

  ReplyDelete
 19. PART 3. வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி

  தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் தற்போதைய நிலை

  அச்சு ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் - இன்னும் சொல்ல போனால் - அதை மேலும் மோசமாக்கும் வகையில்தான் தொலைக்காட்சி சானல்களும் உள்ளன.

  புராண புளுகுகளை உண்மை வரலாறாகத் திரிக்கும் தொலைக்காட்சிகள் திப்புவின் உண்மை வரலாற்றை ஒளிபரப்பும்போது நூலை அடிப்படையாகக் கொண்ட "கற்பனை கதை" என்று அறிவிப்புச் செய்து ஒளிபரப்பியது நினைவிருக்கலாம்.

  அதுபோல் "பகுத்தறிவுப் பகலவன்"களால் நடத்தப் படும் தொலைக்காட்சிகளில் மூட நம்பிக்கைகளைப் பார்வையாளர்களின் மனதில்,

  குறிப்பாகப் பெண்களின் மனதில் விதைக்கும் நாடகங்களை ஒளிபரப்புவது,

  அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மேற்கத்திய கலாசாரத்தைத் திணிப்பது,

  எங்குக் குண்டுவெடிப்பு நடந்தாலும் Breaking News எனும் பெயரில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவது,

  போன்ற சமுதாயச் சேவை(?)யாற்றும் தொலைக்காட்சிகள்,

  "தீவிரவாதிகள்" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என விடுதலை செய்யப்படும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன.

  பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை.

  மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை.

  நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, "அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்?" என கேள்வி எழுப்பி முஸ்லிம் விரோதப் போக்கை விதைக்கின்றனர்.

  சமீபத்தில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே நடுநிலை ஆங்கிலத் தொலைக்காட்சிகள்கூட நிகழ்வை நான்கு நாட்கள் நேரடி ஒளிபரப்புச் செய்தன.

  அதிலொன்றும் தவறில்லை.

  ஆனால், ஆங்காங்கே இஸ்லாமிய விரோதப் போக்கை விதைக்க முயன்றதுதான் தவறு.

  அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்.

  தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் கார்கரே முதலாவதாகக் குறி வைத்து சுடப்பட்டது,

  அதற்கு முன்னர் அவருக்கிருந்த பரிவாரங்களின் கொலை மிரட்டல்,

  இஸ்ரேலியர்களின் நரிமன் ஹவுஸின் பங்களிப்பு என ஏராளமான சந்தேகங்கள் சங்பரிவார – மொஸாத் – அமெரிக்க பங்களிப்பை நோக்கி விரல் நீட்டினாலும் அவை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மறைக்கப்பட்டதை உணரலாம்.

  இணையத்தளங்களில் ஓப்பீட்டளவில் முஸ்லிம்கள் முன்னேறியிருந்தாலும் இஸ்லாத்தின் பெயரில் திட்டமிட்ட போலி வலை தளங்கள், தவறான பிரசாரங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.

  முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு,

  பத்திரிகைகளில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்தல்,

  தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுத்தல்,

  செய்தி நிறுவனங்களையும் ஊடகங்களையும் உருவாக்கல்,

  பத்திரிகை உலகில் புகுதல் என, தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் தங்களை மட்டுமல்ல, ஓட்டு மொத்த உலகையும் காப்பாற்ற முடியும்.

  சிறந்த சமுதாயம் என அருள்மறை வர்ணிக்கும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இச்சமுதாயத்துக்கு மட்டும்தான் அந்த ஆற்றல் இருக்கிறது.

  நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் தன் தூக்கத்தைக் களைந்து அறிவாயுதத்தை கையில் ஏந்தி அநீதிகளுக்கெதிராய் போராடும் காலம் நெருங்கி விட்டது.

  THANKS TO SOURCE: http://www.ottrumai.net/TArticles/30-MisleadingMedia-1.htm

  ReplyDelete
  Replies
  1. அருமையான கருத்து பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.. :)

   Delete
 20. //எவனோ ஒருவன் படம் எடுத்தான் என்பதால் அமெரிக்க தூதரகத்தை தாக்குகிறோம் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு அவர்களின் அரசாங்க காரியங்களுக்கு நாம் இடைஞ்சலாக இருந்து விட்டோம் சகோதர சகோதரிகளே.. அவர்களுக்கு எல்லாம் ஏற்பட்ட பொருள் இழப்பு, உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இவை எல்லாம் சேர்ந்து இஸ்லாம் மீதான எதிர்மறையான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விடாதா?? யூதர்களின் கனவும் அதுதானே அதை நாமே முன்னின்று நிறைவேற்றியது போல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே..!//

  மாசா அல்லாஹ்....மிக அருமையான கண்ணோட்டம் சர்மி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா... :)

   Delete
 21. ஜஸகல்லாஹு க்ஹைர் சகோதரி...

  \எவனோ ஒருவன் படம் எடுத்தான் என்பதால் அமெரிக்க தூதரகத்தை தாக்குகிறோம் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு அவர்களின் அரசாங்க காரியங்களுக்கு நாம் இடைஞ்சலாக இருந்து விட்டோம் சகோதர சகோதரிகளே.. அவர்களுக்கு எல்லாம் ஏற்பட்ட பொருள் இழப்பு, உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இவை எல்லாம் சேர்ந்து இஸ்லாம் மீதான எதிர்மறையான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விடாதா?? யூதர்களின் கனவும் அதுதானே அதை நாமே முன்னின்று நிறைவேற்றியது போல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே..! \

  100% நியாயமான கேள்வி.. நம் சகோதரர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கிறார்களே ஒழிய குரான் வழிப்படி சிந்திப்பவர்களாக இல்லை.. நேற்று அண்ணா சாலையில் கூடிய ஐயாயிரம் பேரில் எத்தனை பேர் ஃபஜர் தொழுகையை பள்ளியில் சென்று தொழக்கூடியவர்கள்? நம்முடைய எதிர்ப்பை நபிவழிப்படி பொறுமையின் மூலம் காண்பிப்போம். இது மாதிரி அல்ல.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ நாசியா

   // நேற்று அண்ணா சாலையில் கூடிய ஐயாயிரம் பேரில் எத்தனை பேர் ஃபஜர் தொழுகையை பள்ளியில் சென்று தொழக்கூடியவர்கள்? நம்முடைய எதிர்ப்பை நபிவழிப்படி பொறுமையின் மூலம் காண்பிப்போம். இது மாதிரி அல்ல.// சரியாக சொன்னீர்கள் சகோதரி.. ! இனி வரும் காலங்களிலாவது நம் சகோதர சகோதரிகள் பொறுமையை கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்ப்போம்.!

   Delete
 22. ALLAHU AKBAR

  Thanks to my sister

  ReplyDelete
 23. சலாம் ஷர்மிளா! வன்முறைகளை இஸ்லாம் கண்டிக்கிறது என்பதை மக்கள் புரிந்துக் கொண்டால் சம்ப‌ந்தமில்லாத அப்பாவிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். அறிவுரையான நல்லதோர் பதிவு! என் பதிவிலும் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

  மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கார்ட்டூன் செய்தி பார்த்திருப்பீர்கள். திருந்தாத ஜென்மங்களை அல்லாஹ்விடமே ஒப்படைப்போம்! முடியும்போது என் பதிவைப் பாருங்கள்!

  ReplyDelete
 24. வ அழைக்கும் சலாம் அக்கா..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா..!


  உங்கள் பதிவை வாசித்தேன்.. அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள்..
  எனது பதிவு லிங்க் இணைத்தமைக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் அக்கா..!

  உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் திணிக்கப்படும் போதெல்லாம் முன்னெப்போதையும் விட அதிகமாகவே இஸ்லாம் வளர்ந்து வந்துள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை..! இம்முறையும் அதையே எதிர்பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்..!

  ReplyDelete
 25. தெளிவான அறிவுரை.கச்சிதமான படைப்பு . பாராட்டுக்கள் .
  உங்கள் கருத்தை ஒத்ததாகவே எனது சிறிய படைப்பும் இருந்தது .
  பின்வரும் இணைப்பில் பார்வை இடலாம்
  http://jazeem.tumblr.com/post/31890457913
  நன்றி

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)