Pages

Saturday, September 22, 2012

அடப்பாவிங்களா..! இதுல கூடவா போலி தயாரிப்பாங்க ??


மார்க்கெட்டில் இருக்கும் பிரபல பொருட்கள் போலவே  தரம் குறைவான பொருட்களை உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பது சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல..!! அது நமக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இவர்கள் தற்பொழுது சில காலங்களாக மக்களின் அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உணவுப்பொருட்களிலும் தங்கள் கை வரிசையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்??? இது சற்றே பழைய தகவல் என்றாலும் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவே இந்த பதிவு..!

கடந்த சில மாதங்கள் முன்பு இங்கே மலேசியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போலி முட்டைகள் விற்கப்படுகிறது என்ற தகவலை கேள்விப்பட்ட போது நான் அது வெறும் வதந்தி என்றே நினைத்துக்கொண்டு இருந்தேன் தொலைகாட்சியில் அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடும் வரை..! ( அந்த செய்தி பார்த்ததில் இருந்து வீட்ல இருந்த முட்டைய எல்லாம் ஒரு சைன்டிஸ்ட் ரேஞ்க்கு ஆராய்ச்சி பண்ணது எல்லாம் வேற விஷயம் :) அந்த முட்டை முழுக்க முழுக்க கெமிக்கல்கள் மூலமாக உருவாக்கப்பட்டதாம்..!

போலி முட்டையை கண்டறிவது எப்படி ??

இப்பொழுதுதான் அந்த முட்டை பற்றிய பரபரப்பு எல்லாம் ஓய்ந்து பலர் அதை மறந்தும் விட்ட நேரத்தில்..! இன்று ஒரு மாத இதழில் படித்த செய்தியால் ஒரு சில நிமிடங்கள்  மூச்சே நின்று விட்டது..!

ஆம்..! பலவேறு இன மக்களின் அன்றாட உணவான அரிசியிலேயே இவர்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்..!! கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!


மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!


என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??
எவன் எக்கேடு கெட்டால் என்ன ?? எனக்கு தேவை பணம் என்று சுயலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அடுத்தவரின் உயிருக்கும் அவருடைய உடல் நலத்திற்கும் கேடு வரும் என்று தெரிந்தே இது போன்ற செயல்களை செய்பவர்களை என்னவென்று சொல்வது..!!!? :(

வியாபாரம் செய்வதில் இஸ்லாம் கூறும் நெறிமுறைகள் என்ன??

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.
(அல்-குர்ஆன் 4:29)

அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!
அல்-குர்ஆன் 55: 7 8 மற்றும் 9
வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிக்கவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. உதாரணமாக நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தோமேயானால் அவர்களுக்கு அல்லாஹ் நபித்துவம் வழங்குவதற்கு முன்னரும், அவர்கள் மக்களிடையே பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தான் ஈடுபட்ட வியாபாரத்தில் காட்டிய நேர்மையும், மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் செயல்பட்ட காரணத்தினாலும்தான். எனவே அவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றும் நாமும் வியாபாரத்தில் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்.அல்லாஹ்வின் கோபத்திற்குறிய மூன்று நபர்களை பற்றி நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனையுமுண்டு என்று கூறினார்கள். நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? என கேட்டபோது செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன். தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன். தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.)


பொய் சத்தியம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி  தரமிழந்த பொருட்களை விற்பவர்கள், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டும் மறுமையில் தூரப்படுத்தப்படுவார்கள். கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்றபோது ஒரு வியாபாரியின் தானியக் குவியலுக்கருகே வந்து தனது கையை அந்த தானியக் குவியலில் விட்டபோது விரல்களில் ஈரம் பட்டது. அப்போது உணவு வியாபாரியே! இது என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள் மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்)
மேலும் சிலர் அதிக லாபத்துக்காக உணவுப்பொருட்களை பதுக்குவது உண்டு..! அப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது..!

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா). 
இறுதியாக வியாபாரம் செய்பவர்களே உங்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுததான் இறைவனை அஞ்சிகொள்ளுங்கள்..! வியாபாரப்பொருட்களில் கலப்படம் செய்து அல்லது போலிகள் தயாரித்து அடுத்தவரின் உயிரோடு விளையாடாதீர்கள்..!!

உங்களின் வியாபாரம் செழிக்க இறைவன் போதுமானவன்..!

வஸ்ஸலாம்
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி..!
ஷர்மிளா ஹமீது.

34 comments:

 1. என்ன ரொம்ப பொங்கியிருக்க?? பொங்கல் சாப்டீயா? (உபயம்- சிமுக வைரஸ்)

  ReplyDelete
  Replies
  1. ஆமா சீன அரிசில பொங்கல் செஞ்சு சாப்பிட்டேன் அதான் இப்படி :))

   Delete
 2. //இன்று ஒரு மாத இதழில் படித்த செய்தியால் ஒரு சில நிமிடங்கள் மூச்சே நின்று விட்டது..!//

  இன்னுமா உயிரோட இருக்க :-)

  ஏன் எங்களுக்கு இன்னும் இன்னும் சோதனை கொடுக்குற !!!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹாஹ் எல்லாம் அவன் செயல்..! வாட் டூ டூ?

   Delete
 3. //அறிசியிலேயே//

  உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா அரிசி என்ற வார்த்தையை தப்பா எழுதியிருப்ப.. தமிழுக்கு செய்த துரோகமாக இதனை பார்க்கிறேன்!

  இரு போராட்டத்துக்கு ஏற்பாடு பண்றேன்

  ReplyDelete
  Replies
  1. என்ன போராட்டம் அம்மு... சீன அரிசில ஒரு வாரம் சோறு பொங்கி சாப்பிடும் போராட்டமா? ஹிஹிஹி

   Delete
 4. //கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! //


  என்ன ஊர்ரு வச்சு நடத்துறாய்ங்க?? சரியில்லையே...

  மலேசியால எப்ப தேர்தல்ன்னு சொல்லு! நான் போட்டி போடுறேன்!

  :-)))

  ReplyDelete
  Replies
  1. அட பக்கி தயாரிச்சது சீனாவுல.. அங்க போயி போட்டி போடு ஹஹாஹாஹ்

   Delete
 5. சரி சரி.. டென்ஷன் ஆகாத... மேட்டர்க்கு வரேன்...

  இந்த மாதிரி சாப்பாடு விஷயத்தில் மோசம் செய்வது ரொம்பவே கண்டிக்க வேண்டிய விஷயம்.. மக்கள் ரொம்ப அசால்ட்டா இருகுறாங்க !! :(

  உலக அரங்கில் விழிப்புணர்வு ஏற்பட்டு தற்சமயம் சீன இறக்குமதி என்றாலே பயத்துடன் ஒதுக்கி வருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் நிச்சயம் இவர்களின் சதி முடிவுக்கு வரும் !

  அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி சர்மி!

  (ஓட்டு போடுட்டேன்! அடுத்து திங்கள் கிழமை நான் போடுற போஸ்ட்க்கு மறக்காம ஓட்டு போட்டுடு! ஹி..ஹி..ஹி...)

  ReplyDelete
  Replies
  1. நீ தேர்தல்ல நிக்க சரியான ஆளுதான்.. எப்புடி விரட்டி விரட்டி ஓட்டு கேக்குறா பாரு..! :) நீ டோன்ட் வொர்ரி மை வோட் ஆல்வேயிஸ் தேர் பார் யூ :)

   Delete
 6. சலாம் சகோ...

  எதைத்தான் நம்பி சாப்பிடுவதோ...!

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி

  விழிப்புணர்வுட்டும் மிக தேவையான அவசியமான பதிவு

  அரிசி மாதிரியே மருந்திலும் கலப்படம் பன்னுகிறார்கள் அப்படி கலப்படம் செய்து அதில் made in india என்று போட்டு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்ததை இந்தியா கையும் களவுமாக பிடித்தது.

  இப்படி இவர்கள் மோசடி தொடர்கிரது

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோ நீங்கள் சொல்லுவாது உண்மை, இது வேதனையான செய்திம் கூட. மற்ற நாடுகளில் இவர்கள் செய்யும் செயல்களை கண்டுபிடிக்க எல்ல வசதியும் இருக்கிறாது. ஆதலால் வளந்த நாடுகளில் இவர்களின் பருப்பு வேகதால் இப்பொழு ஆப்பிரிக்கவில் தேர்வு செய்துயுள்ளார்கள்,

   Delete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி, அருமையான பதிவு எல்லோருடம் சென்றயடைய வேண்டும.

  இவர்கள் இந்த மூட்டையில் மட்டும் இல்லை, சின்ன சின்ன பொருள்களிலும் இப்போது இறங்கிவீட்டார்கள். 2 ரூபாய் மதிப்புள்ள தக்காளி பேஸ்ட. 1 ரூபாய் மதிப்புள்ள நூடில்களில் சேர்த்தும் கலவை அதுவும் எப்படி ஓர்ஜினால் இவர்களிடம் தோற்றுவிடும். இவர்கள் புது பிராண்ட் வெளியே மார்க்கெட்டிங் செய்தால் தவறுயில்லை. ஏற்கனவே மார்கெட்டில் இருக்கும் பொருள்களை அப்படி டுப்பிளிக்கெட் விற்பனை செய்து மக்களிடம் பணம் கொள்ளையடிக்கிறார்கள்,

  ReplyDelete
 9. வியாபாரம் பற்றி இஸ்லாம் சொல்லும் விளக்கங்களை சொன்னதற்கு நன்றி.
  இங்கே காத்தான்குடி என்று ஒரு நகரம் உள்ளது .அதை இலங்கையின் சீனா
  என்றுதான் சொல்லுவார்கள் .காரணம் பெப்சி, கோலா , விலையுயர்ந்த சிக்கிறேட்,
  அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம்,,,, இப்படிப் பல
  எது வேண்டுமானாலும் காத்தான்குடியில் டுப்பிளிக்கேட் கிடைக்கும்.
  அந்த மக்களுக்கு அவர்கள் மார்க்கம் தெரியாமல் போனதில்
  ஆச்சரியமாக இருக்கின்றது ?

  ReplyDelete
 10. குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் குண்டு போட்டு ஒரேயடியாக கொல்கிறார்கள்

   இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் நஞ்சை கலந்து கொல்கிறார்கள்..! :/

   Delete
 11. //Sala Deen: சீனப் பெருஞ்சுவர் ஏன் ஒலக அதிசயத்தில் இடம் பெற்றது தெரியுமா? ஆமா அவுங்க தயாரிப்பிலேயே அது ஒன்னு தான் ஸ்ட்ராங்கா இருக்கிறதால் தான்...!
  சுவரு மட்டும் எப்படியோ தெரியாத்தனமா ஒரிஜினலா கட்டிட்டானுங்க..!ஹிஹிஹி//

  (இந்த கமென்ட் சகோ.சலாதீன் அவர்கள் நமது பேஸ்புக் குழுமத்தில் பதிந்தது... நான் இதை சர்மிளாவின் ப்ளாக்கில் போடுங்கன்னு சொன்னேன். ஆமினா போன்ற ஜாம்பவான்கள், ஆமினா போன்ற பிரபல பதிவர்கள், ஆமினா போன்ற அதிபுத்திசாலிகள் இருக்குற எடத்துக்கு வரதுக்கு அவருக்கு கொஞ்சம் வெட்கமா இருக்காம் அவரே சொன்னார் :-)))).. அதுனால நானே பெரிய மனசு பண்ணி, என் வேலைபளுவிற்கு மத்தியிலும் இதை காப்பி பேஸ்ட்டுறேன் :-)

  ReplyDelete
 12. /. நான் இதை சர்மிளாவின் ப்ளாக்கில் போடுங்கன்னு சொன்னேன். ஆமினா போன்ற ஜாம்பவான்கள், ஆமினா போன்ற பிரபல பதிவர்கள், ஆமினா போன்ற அதிபுத்திசாலிகள் இருக்குற எடத்துக்கு வரதுக்கு அவருக்கு கொஞ்சம் வெட்கமா இருக்காம் அவரே சொன்னார் :-)))).. அதுனால நானே பெரிய மனசு பண்ணி, என் வேலைபளுவிற்கு மத்தியிலும் இதை காப்பி பேஸ்ட்டுறேன் :-)// அம்மு உன் அளப்பரைக்கு ஒரு அளவே இல்லையா? உனக்கெல்லாம் ஒரு வருஷத்துக்கு பிளாஸ்டிக் அரிசில சோறாக்கி போலி முட்டையை பொரிச்சு தரனும்..! ஹிஹிஹி :)

  ReplyDelete
 13. ஆமாம் சகோ ராவணன்... குண்டு வைக்கும் முஸ்லிம் தீவிரவாதிகள், குண்டு வைக்கும் RSS தீவிரவாதிகள், குண்டு வைக்கும் நக்ஸலைட் தீவிரவாதிகள், குண்டு வைத்த எல்லா விடுதலைப் போராட்ட வீர தீவிரவாதிகள், குண்டு வைக்கும் ராணுவ தீவிரவாதிகள், குண்டு வீசும் அமெரிக்க தீவிரவாதிகள், குண்டு வீசும் மற்ற எல்லா நாட்டு தீவிரவாதிகள், குறிப்பா குண்டு வீசும் தாலிபான் தீவிரவாதிகள்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...முடியல...

  இவங்க மாதிரியே தான் இந்த கலப்படக்காரர்களும்... ரொம்ப சரியா சொன்னீங்க... தான் நல்லா இருக்க அடுத்தவன் வீட்டு தாலிய அறுக்க நினைக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்....

  ReplyDelete
 14. சலாம் சகோ.ஷர்மிளா,
  ம்ம்ம்... எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க..!
  முதல் வீடியோவில் உள்ளதை எடுத்து எழுதி இருக்கலாம் சகோ.

  //போலி முட்டையை கண்டறிவது எப்படி ??//

  1-ரொம்ப பெரிய சைஸா இருக்கும்.
  2-அதிக சொரசொரப்பான ஓடு உடையதாக இருக்கும்.
  3-உடைத்தல் "ச்சலாசே" என்ற மஞ்சள் கருவையும் கலர் இல்லாத(வெள்ளை)கருவையும் தாங்கி நிற்கும் வெள்ளை இழை ( http://4.bp.blogspot.com/_JP-HxmSmRuw/TI_nR74vTiI/AAAAAAAAAW0/vUR6U97rRqQ/s1600/eggchalaze.jpg ) இருக்காது.
  4-கலக்கிவிட வேண்டிய அவசியம் இன்றி உடனே மஞ்சள் கரு உடைந்து கலந்து விடும்.
  5-சாதாரண மஞ்சள் நிறத்தை விட கருத்த மஞ்சள் நிறம் உடையதாக இருக்கும்.

  பயனுள்ள பதிவு சகோ. ஜசாக்கல்லாஹு க்ஹைர்.

  ReplyDelete
 15. சென்ற வருடம் குழந்தைகள் பால்மாவில் கலப்படம் செய்தவர்களுக்கு இது தூசு.

  ReplyDelete
 16. எல்லாம் வெறித்தனம் தான் !!! மனிதனுக்கு எதோ ஒரு வெறித் தேவைப்படுகின்றது, பணம், அதிகாரம், மதம், மது, மாது ..... !!! சீ மனித ஜென்மங்களைப் படைத்தவன் மட்டும் கையில் கிடைத்தால் செருப்பாலேயே அடிக்க வேண்டும் அவனை !!!

  ReplyDelete
  Replies
  1. Padaiththavan yaarumillai enru sollum neengal illaatavanai yeppadi adippeerkal? Chumma polampuvathai vittuttu poi uruppadiya ethavathu eluthunga

   Delete
 17. poli thayarika rules eadhavadhu iruka? poli thayarichu ellaam nalla thaan sambathuchu nalla irukanuga. kadavul aavagaluku eppo thandana kodupaaru nu solla mudiyuma? :p

  ReplyDelete
 18. varthai vilayatu thaan unga vaalka marandhudadhiga. (iedhuku meaning therichurukum nu nenaikuran.)

  ReplyDelete
 19. போலி முட்டையா?அதிர்ச்சித்தகவல்!இதைத் தயாரிப்பவர் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்!

  ReplyDelete
 20. விழிப்புணர்வுட்டும் மிக தேவையான அவசியமான பதிவு

  ReplyDelete
 21. விழிப்புணர்வுட்டும் மிக தேவையான அவசியமான பதிவு

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,என்ன பண்றது உலகம் முழுவதும் கலப்படமில்லா பொருள்களே இல்லை எனலாம்.உலகம் மிகவும் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது என்று சொல்லி பெருமை பட்டுகொள்கிறோம் மனித ஆயுளும் ரொம்ப வேகமாகவே குறைந்துகொண்டிருக்கிறது.

  ReplyDelete
 23. சமூக அக்கரையுள்ள பதிவு

  ReplyDelete
 24. அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே
  அருமையான பதிவு
  உமது எழுத்துப்பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !
  அன்புடன்
  ரஹ்மான் சாதிக் பின் இஸ்மாயில்

  ReplyDelete
 25. இந்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி.
  உணவுப்பொருட்களிலும் அதுவும் முட்டை மற்றும் அரிசியிலும் எல்லாம் வல்ல இறைவன் நிச்சயமாக இந்த கலப்படதாரிகளை தண்டிப்பனாக.(ஆமின்)

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)