Pages

Tuesday, September 25, 2012

இப்புடித்தான் இருக்க வேண்டும் ஆம்பளை ...!!

அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்..!

என்னடா இது எப்போ பார்த்தாலும் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்குற உரிமைகள் , கடமைகள் பத்தியே பேசிக்கிட்டு இருக்கோமே..! ஆனா ஒருத்தர் கூட இந்த இஸ்லாமிய ஆண்கள் எப்படி இருக்கணும்? அவங்களோட உரிமைகள் கடமைகள் என்னன்னு சொல்ல மாட்டேன்கிறாங்களே அப்படின்னு மிகப்பெரிய குறை ஒன்னு இம்புட்டு நாளா மனச அரிச்சுகிட்டே இருந்துச்சுங்க..!

                      இன்னிக்கு சகோதரி நாசியா அவர்கள் இஸ்லாமிய பெண்மணியில் பகிர்ந்த பதிவு அந்த குறையை எல்லாம் அடிச்சு தூள் தூளாக்கிடுச்சு போங்க..!

ஒரு சில ஆண்கள் என்னதான் இஸ்லாம் இஸ்லாம் ன்னு வாய் கிழிய பேசுனாலும் நடைமுறைன்னு வரும் பொது சில விஷயங்கள்ல அலட்சியமா இருந்துர்றாங்க..! அதுல முதலாவதா வர்றது தாடி..! அது சுன்னத் தானே வாஜிப் இல்லையே என்ற அலட்சிய மனப்பான்மை பெரும்பான்மை ஆண்களிடம் இருக்கிறது..! மேலும்   வீட்டு வேலை என்றாலே எல்லா வேலையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்..! ஆண் என்பவன் பெண்ணுக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருக்க தேவை இல்லை என்று அசால்டாக (ஆணாதிக்க திமிருடன்) இருப்பவர்களும் உண்டு.. அது போன்ற ஆண்களுக்கெல்லாம் நறுக்கென்று தலையில் கொட்டு வைத்தது போல் இருக்கும் இந்த சகோதரியின் பதிவை பார்த்தால்..! அதிலும் மனிதர்குல மாணிக்கம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்... அவர்களே வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருந்தார்கள் என்பதை படிக்கும் உண்மையான முஸ்லிம் ஆண்கள் இனிமேல் மனைவிக்கு, தாய்க்கு, சகோதரிக்கு உதவியாக இருக்க போட்டி போட்டு வேலை செய்வார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை..!!

முஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?! "உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே"

சகோதரி நாஸியாவின் பதிவை முழுவதும் வாசிக்க... >>இங்கே <<<

20 comments:

 1. சலாம் சகோ....

  அவசியமான தகவல்கள்....பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் சகோ... ஜசாக்கல்லாஹு க்ஹைர் :)

   Delete
 2. சர்மி...

  :) :-) :-))

  குட் வொர்க்.....

  ReplyDelete
 3. Jazakallahu khair sister.. thanks to sis Amina too.. sorry for typing in english

  ReplyDelete
  Replies
  1. வ இயக்கும் சிஸ்.... :) தட்ஸ் ஓகே...இ கேன் டாக் இங்க்லீஷ் வாக் இங்க்லீஷ் :))

   Delete
 4. //மிகப்பெரிய குறை ஒன்னு இம்புட்டு நாளா மனச அரிச்சுகிட்டே இருந்துச்சுங்க..!//

  ச்சூ...ச்சூ...ச்சூ...ச்சூ...ச்சூ...

  ReplyDelete
 5. //அந்த குறையை எல்லாம் அடிச்சு தூள் தூளாக்கிடுச்சு போங்க..!//

  ஓ.. அந்த தூளை இனி சமையலுக்கு பயன்படுத்தலாமா? ;-)

  ReplyDelete
  Replies
  1. அத பயன்படுத்தியாச்சும் இனிமே சமைக்க கத்துக்கோ..! :))

   Delete
 6. //உண்மையான முஸ்லிம் ஆண்கள் இனிமேல் மனைவிக்கு, தாய்க்கு, சகோதரிக்கு உதவியாக இருக்க போட்டி போட்டு வேலை செய்வார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை..!!//

  ஆமா ஆமா... ஹஸ் கிட்ட வாசிச்சு காமிச்சேன்! தலையாட்டியிருக்கார்..

  அப்படியும் கேட்கலைன்னா சர்மி வீட்டுக்கு சாப்பாடுக்கு கூடிட்டு போவேன்னு மிரட்டினேன்னா... வேண்டாவே வேண்டாம் தாயின்னு கெஞ்சுறார் :-)))

  ReplyDelete
  Replies
  1. /கேட்கலைன்னா சர்மி வீட்டுக்கு சாப்பாடுக்கு கூடிட்டு போவேன்னு மிரட்டினேன்னா... வேண்டாவே வேண்டாம் தாயின்னு கெஞ்சுறார் :-)))// அஹ்ஹு அஹ்ஹு நோ டா செல்லம் :((

   Delete
 7. தாங்கள் சொன்னது 100% சரி, சகோதரி. இன்ஷா அல்லாஹ் பின் பற்ற முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 8. உற்று நோக்குகிறாய் ஊடுருவிப் பார்க்கிறாய்,
  பார்வையில் உக்கிரம்;உன் மனதிலோ வக்கிரம்.
  ஹிஜாபிலும் என் உடல் கூசுகிறது.

  ஆண்களே.. உங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது "பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்" என்று.

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ... அருமையான வரிகள்...! வருகைக்கும் கருத்த்துக்கும் நன்றி.. :)

   Delete
 9. உங்களின் தளத்துக்கு முதல் முறையாக வந்து இருக்கின்றேன் ....வரவேட்பதர்க்காக யாருமே வரல ..சரி வந்த வேலைய முடித்துவிட்டு செல்கின்றேன் ......சகோ உங்களின் பதிவு நலம் ஆனா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல இன்ஷா அல்லாஹ் கல்யாணம் ஆனா பிறகு என் துணைவியாரிடம் வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ ரினாஸ்...! வாங்க வாங்க :)) கொஞ்சம் லேட்டா வரவேற்குறேன் :)

   //எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல இன்ஷா அல்லாஹ் கல்யாணம் ஆனா பிறகு என் துணைவியாரிடம் வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பேன் /// அட பார்ரா இப்போ அம்மாவுக்கும் சகோதரிக்கும் ஹெல்ப் பண்ணி பழகுங்க..!! அப்போதான் ஆப்டர் கல்யாணம் உங்களுக்கு ஹெல்ப்புல்லா இருக்கும் ஹிஹிஹி :)

   Delete
  2. ஆமல . ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

   Delete
 10. இப்படித்தான் இருக்கனும் ஆம்பளைங்க.. கேட்டுக்கோங்கப்பா. ஆண் சிங்கங்களா..

  நல்லதொரு பதிவு சகோதரி..

  ReplyDelete
 11. உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

  http://enrenrum16.blogspot.com/2012/10/blog-post_18.html

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)