Pages

Monday, September 24, 2012

யூட்யூப் புறக்கணிப்பு.. !! சாத்தியமா??!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே..!
                    சர்ச்சைக்குரிய திரைப்படமான innocense of muslimsஎன்ற திரைப்படத்தின் ட்ரைலரை யூட்யூப் நீக்கும் வரை யூட்யூபை முழுவதுமாக  புறக்கணிக்குமாறு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்படுகிறது..! என்னை பொறுத்தவரையில் இது தவறான முடிவாகவே தோன்றுகிறது.. ஏன் என்பதை பார்ப்பதற்கு  முன் ஒரு சின்ன  பிளாஷ் பேக்..! 

                                 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட youtube தளம் ஆரம்பம் முதலே சூடு பிடிக்கத் தொடங்கியது...நிறுவனத்தை தொடங்கிய மூன்று இளைஞர்களில் ஒருவர் முஸ்லிம் என்பது கூடுதல் தகவல் :) . 2006 ஆம் ஆண்டு , அதாவது youtube தொடங்கி  ஒன்றரை வருடம் ஆன உடனே , Google நிறுவனம் அதை வாங்கியது...ஒன்றரை வயதான நிறுவனத்துக்கு google கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? 1 .65 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பின் படி சுமார் 7000 கோடி ரூபாய்க்கும் மேல். அந்த நேரம் வெறும் 100 பேர் கூட அந்த நிறுவனத்தில் பணிபுரியவில்லை... அப்படியெனில் ஒரு பணியாளருக்கு தலைக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பு...!!!

                                வெறும் ஒன்றரை வயதான, நூறு பேர் கூட மொத்த பணியாளர்கள் இல்லாத, மூன்று கத்துக்குட்டிகளால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு ஏன் இவ்வளவு தொகையை கூகிள் அள்ளிக் கொடுத்தது ??? இதுதான் இன்டர்நெட் இன் அடுத்த பரிணாமம் என்பதை கூகிள் யூகித்தது தான் காரணம். நினைத்தபடியே youtube அசுர வேகத்தில் வளர்ந்தது. லாபத்தை அள்ளிக் கொடுத்தது.
google அல்லது youtube நிறுவனம் காணொளிகளை போட்டு யாரையாவது பார்க்கச் சொன்னதா? "இல்லை.. காணொளிகளை போடுவதும் பொதுமக்கள் தான்...அதைப் பார்ப்பதும் பொதுமக்கள் தான்" அதுதான் youtube இன் பலம்.

                                   இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த ஊடகத்தை முஸ்லிம்கள் கொஞ்சம் சரியாகப் பயன்படுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்...மைக், ஆடியோ, வீடியோ, தொலைக்காட்சி , சினிமா என்று உலகில் அவ்வப்போது தோன்றிய எல்லா ஊடங்கங்களையும் கொஞ்சம் மெதுவாகவே பயன்படுத்த ஆரம்பித்த முஸ்லிம்கள் இந்த youtube தளத்தை நன்றாகவே பயன்படுத்தினார்கள். மாஷா அல்லாஹ்..!  எல்லா விஷயங்களிலும் இங்கே கிடைக்காத மார்க்க அறிஞர்களின் கருத்தே இல்லை எனலாம்...!

தற்போதைய நிலவரம்..

                                 Innocence of muslims என்ற பெயரில் பெருமானார் ஸல் அவர்களை இழிவுபடுத்த முயன்ற ஒரு வீடியோ இன்று நம்மை இந்த தளத்துக்கு எதிராக திரும்ப வைத்துள்ளது. உண்மையில் இந்தப் படம் வெறும் ஒரு சாம்பிள் மட்டுமே...பெருமானாரை பற்றிய மோசமான கருத்துடைய காணொளிகள் ஆயிரக்கணக்கில் இந்த தளம் முழுவதும் கிடைக்கிறது... பெருமானார் ஸல் அவர்கள் மட்டுமல்ல , ஈசா (அலை) , மூஸா (அலை) தொடங்கி இந்துக்களின் கடவுள்கள் என்று தொடங்கி எல்லா கடவுள் கொள்கைகளையும் விமர்சிக்கும், இடித்துப் பேசும், இழிவுபடுத்தும் வீடியோ க்கள் இந்த தளத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை நாம் கண்டுகொண்டால் இதற்கே ஆயுள் முழுவதும் போகும் சகோஸ்..அது தான் உண்மை...!!

                                சர்ச்சைக்குரிய படம் முழுவதும்(சுமார் இரண்டு மணி நேரத் திரைப்படம் ) எடுக்கப்பட்டு கலிபோர்னியா மாகாணத்தில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது...படம் முழுவதும் விஷம் என்பதால் அமெரிக்கர்கள் இந்தப் படத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை... முழுக்க முழுக்க காலியான திரையரங்குகளில் சில நாள் மட்டுமே ஓடி பெட்டியில் படுத்துக் கொண்டது...இந்த விஷ சினிமாவுக்கு (இப்போது பிரபலமாக உள்ள 14 நிமிட வீடியோ அல்ல...முழுத் திரைப்படம் ) அமெரிக்கர்கள் கொடுத்த பேராதரவு அவ்வளவு தான்...!! இது புரியாமல் அமெரிக்கா என்றாலே இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் ஒரு கொடுங்கோல் கூட்டம் என்று ஒரு சில  சகோக்கள் சொல்கிறார்கள்... சின்னப் படங்களுக்கு கூட review எழுதுபவர்கள் கூட இதனை கண்டு கொள்ளவில்லை.

                                  திரைப்படம் ஓடவில்லை என்றவுடன் படம் எடுத்த விஷமிகளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. திரைப்படத்தை விட சிறந்த ஊடகமான youtube தளத்தை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது? உ டனே களத்திலிறங்கி திரைப்படத்தின் சில பகுதிகளை வெட்டி ஒட்டி ஒரு பதினான்கு நிமிட கிளிப்பிங் ஆக்கி youtube தளத்தில் உலாவ விட்டார்கள்...மறுபடியும் யாருமே கண்டு கொள்ளவில்லை...!!
              என்ன youtube தளத்தில் கூட யாருமே கண்டு கொள்ளவில்லை...என்ன செய்யலாம் என்று யோசித்த சதிக் கும்பல் மெகா திட்டம் ஒன்றை தீட்டியது...அதுதான் அதனை அரபியில் மொழி பெயர்த்து வெளியிடுவது என்பது...!!
                அரபியில் வெளியான திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக மின்னஞ்சல்கள் மூலமாகவும் facebook போன்ற தளங்கள் மூலமாகவும் பிரபலம் அடைய துவங்கியது...நெஞ்சைத் தொட்டுச் சொன்னால் பிரபலம் அடைய வைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும்...உச்ச கட்டமாக எகிப்தின் சில முன்னோடி தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ வின் பகுதிகள் காட்டப் பட்டன...
                       விளம்பரம் இல்லாமல் சதிகாரர்களின் வீடியோ வுக்கு நாமே விளம்பரம் செய்து, நமது தொலைக்காட்சியிலேயே காமித்து பெரும் விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம்...பின்னர் நடந்தவை அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்...

      சரி துவக்கத்திற்கு மீண்டும் வருகிறேன்...சர்ச்சைக்குரிய வீடியோ "சாம் பசிலே " என்ற பெயரில் upload செய்யப்பட்டது...இன்றும் நம்மில் சிலர் சொல்வதைப் போன்று அல்லாமல் அந்த காணொளியை youtube நீக்கி பல நாட்கள் ஆகி விட்டது...
This video has been removed as a violation of YouTube's policy against spam, scams, and commercially deceptive content 
என்று தெரிவித்திருக்கிறது... ஆனாலும் இந்த தருணத்தை எதிர்பார்த்து இஸ்லாமிய எதிரிகள் இதனை டவுன்லோட் செய்து வைத்திருந்தனர்... அதனை இன்று வெவ்வேறு பெயர்களில் upload செய்கின்றனர்... copyright பிரச்சினைகளால் youtube தினமும் ஆயிரக்கணக்கில் வீடியோ க்களை நீக்குகிறது...நீக்கப்படும் ஒவ்வொரு வீடியோ வும் அடுத்த வினாடி மற்றொரு பெயரில் வெளி வருகிறது...இது அவர்களால் தடுக்க முடியாத ஒன்று...ஏன் தடுக்க முடியாத ஓன்று என்று அறிய அவர்கள் தளத்தின் புள்ளி விவரம் நான் தரவேண்டும்...youtube தளம் ஒவ்வொரு நாளும் மூன்று பில்லியன்(சுமார் முன்னூறு கோடி ) தடவை ஹிட் ஆகிறது... ஒவ்வொரு நிமிடமும் ..ஆம் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 48 மணி நேரம் நீளும் வீடியோக்கள் upload செய்யப்படுகின்றன...!
              இதே யூட்யூபில் எத்தனையோ தாவா செய்திகள் அனுதினமும் பதியப்படுகின்றன..! எத்தனையோ ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பகிரப்படுகின்றன..! அதை நமக்கு சாதகமாக உபயோகிப்போமே..!? நாம் உண்ணும உணவில் சிறு கல் தென்பட்டால் வீசி எறிய வேண்டியது அந்த கல்லைத்தானே ஒழிய ஒட்டு மொத்த உணவையும் அல்ல..! 

                 ஒரு பிரச்சனை என்று வந்த உடன் அந்த இடத்தை விட்டு ஒதுங்குவது விவேகமாகாது..! அதே இடத்தில் இருந்து அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப வேண்டும் அதுதான் நம் இப்போதைய கடமையும் கூட..! 
                                         அதெப்படி இந்த மோசமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப இயலும் என்கிறீர்களா?
இதுக்கும் ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கு..!
                   சர்ச்சைக்குரிய படம் வெளியாகி  ஒரு வித பதட்டமான சூழலில் உலகம் இருந்த போது கடந்த வாரம் உலகின் பிரசித்தி பெற்ற அமெரிக்க சஞ்சிகைகளில் ஒன்றான NEWSWEEK  கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டது. அதன் தலைப்பு  MUSLIM RAGE (முஸ்லிம் வெறி அல்லது முஸ்லிம் கொலை வெறி ). எழுதியவர் அயான் ஹிர்சி அலி.. இந்தப் பெண்மணி கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பாளர்.   போராட்டங்கள் நடந்த உடன் இஸ்லாத்தை விமர்சிக்கும் முன்னாள் முஸ்லிம் பெண்மணி ஒருவரை வைத்து பிரபல பத்திரிகை கட்டுரை வெளியிடுகிறது என்றால் எந்த அளவு முஸ்லிம்கள் மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..!
                அதன் தலைப்பின் கீழ் " நான் எப்படி முஸ்லிம் வெறியிலிருந்து தப்பித்தேன்? எப்படி இந்த வெறியை முடித்து வைக்கலாம் " என்றெல்லாம் கேள்விகள் வைக்கப்பட்டுள்ளது... ஆனா மேட்டர் அதுவல்ல..! NEWS WEEK இன் இந்த சதியை எப்படி சமயோசிதமாக நம் சகோதரர்கள் முறியடித்தார்கள் என்பதுதான் ஹைலைட்..!

                           நியூஸ் வீக் பத்திரிக்கையின் கட்டுரை வந்த உடனே ஆரம்பித்தார்கள் வேலையை. twitter தளத்தில் நீங்கள் ஒரு தலைப்பிற்கு உடைப்பது நீங்கள் tweet செய்தால் # குறி போட்டு அந்த தலைப்பை நீங்கள் குறிப்பிட வேண்டும். இதே தலைப்பில் வேறு பலரும் tweet செய்தால் அது எல்லாமே ஒரு இடத்தில் வரும். #muslimrage என்ற தலைப்பில் உலக அளவில் தூதரகங்கள் எதிரில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் , வன்முறைகள் குறித்தும் கருத்து பகருங்கள் என்று நியூஸ் வீக் கூறியிருந்தது,
உடனே சுதாரித்த முஸ்லிம்கள் (மிகக் குறிப்பாக அமெரிக்க முஸ்லிம்கள் :)) இந்த தலைப்பில் நகைச்சுவை கலந்த செய்திகளை எழுதிக் குவித்தார்கள். அதில் பல செய்திகள் உண்மை . பல செய்திகள் நகைச்சுவை... இந்த தலைப்பு பிரபலம் அடைந்ததும் நிறைய மாற்று மத சகோஸ் கூட கருத்துத் தெரிவித்தார்கள்.

சில சாம்பிள்கள் உங்கள் பார்வைக்கு :


Man next to me on subway reading Koran on his Samsung Galaxy tablet just offered his seat to an older lady. #MUSLIMRAGE truly affects us ஆல்
சுரங்கப் பாதை train (Subway ) பயணத்தில் குரானை சாம்சுங் சிலேட்டுக் கணினியில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் தனது இருக்கையை ஒரு வயதான பெண்மணிக்கு விட்டுக் கொடுத்தார். #muslimrage முஸ்லிம் வெறி எல்லாரையும் பாதிக்கிறது :)


எனது நண்பரின் சின்ன வயது மகன் விமான நிலையத்தில் தொலைந்து விட்டான்...எப்படி கத்தி அவனை கூப்பிடுவது? அவனோட பேரு வேற ஜிஹாத் :) #muslimrage


குழந்தைகளுடன் பூங்கா ஒன்றில் அமர்ந்து ஒரு பெரிய முஸ்லிம் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது..எல்லோரும் ஒரே தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுகிறார்கள். நிறைய முஸ்லிம் வெறி இங்கே தென்படுகிறது என்று ஒருவர் அந்த புகைப்படம் போட்டு நக்கல் அடிக்கிறார்.
"There's a lot of #MuslimRage going on in this photo,")


நியூஸ் வீக் பத்திரிக்கையை இப்படி முஸ்லிம்கள் கோமாளி ஆக்கியது யாருக்குத் தெரியும் என்று நீங்கள் கேக்கலாம். எல்லோருக்குமே தெரிந்தது என்பது தான் சூப்பர் டூப்பர் வெற்றி :)

உலகின் பிரபல பத்திரிக்கைகள் இதனை கவர் செய்தன :)

உதாரணம்
http://www.salon.com/2012/09/17/newsweeks_muslim_rage_invites_muslim_humor/


அறிவியல் கட்டுரைகளில் உலகின் பிரதான பத்திரிகைகளில் ஒன்றான WIRED சஞ்சிகை கூட இவ்வாறு செய்தி வெளியிட்டது... (எதிர்க்குரல் Aashiq Ahamed இன் பதிவுகளில் WIRED பத்திரிக்கையை அவர் நிறைய மேற்கோள் காட்டுவார். ) http://www.wired.com/threatlevel/2012/09/muslimrage/

Comedy Ensues as Twitter Users Hijack Newsweek's #MuslimRage Hashtag | Threat Level | Wired.comwww.wired.com

                                     நாம் செய்யவேண்டியது எல்லாம் இதுதான் அவர்கள் நமக்கெதிராக செய்யும் சதிகளை கண்டு உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக யோசித்து அந்த சதிகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விடுவதும் அதனை நகைப்புக்கு உள்ளாக்கி அவர்களை காமெடி பீசாக்குவதும் தான் 

வன்முறைகள் நமக்குத் தேவையே இல்லை.. !!!
                        இணையம் என்பது மாபெரும் கடல்...சந்தேகமே இல்லை... இந்த மாபெரும் கடலில் தான் நாம் மீன் பிடிக்க வேண்டும்...சுறாக்களையும் திமிங்கலத்தையும் கூட பிடிக்கலாம். நாம் சில குப்பைகளைப் பார்த்து விலகப் போகிறோமா? அது சரியா?
நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது எனதருமை சகோதர சகோதரிகளே..! சிந்தியுங்கள்..! செயல்படுங்கள்..!

டிஸ்கி : சமூக வலைத்தளத்தில் எங்கள் டீக்கடை குழுமத்தில் பதிவர் பீர் முஹம்மது அவர்கள் பகிர்ந்த பதிவை அவரின் வேண்டுகோளுக்கிணங்க சிலபல மாற்றங்களுடன் இங்கே மீள்பதிவாக இட்டு இருக்கிறேன்..! 

சகோதரர் பீர் உடைய வலைப்பூ முகவரி >>>இங்கே  <<<<

68 comments:

 1. //இணையம் என்பது மாபெரும் கடல்...சந்தேகமே இல்லை... இந்த மாபெரும் கடலில் தான் நாம் மீன் பிடிக்க வேண்டும்...சுறாக்களையும் திமிங்கலத்தையும் கூட பிடிக்கலாம். நாம் சில குப்பைகளைப் பார்த்து விலகப் போகிறோமா? அது சரியா?//

  சரியா சொன்ன சர்மி.. அதன் மூலமாக கேட்ட பயான்கள் அதிகம். அடைந்த பயன்கள் அதிகம். மார்க்க விஷயங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள முடிந்தது... யூடூப் புறக்கணிப்பு என்பது முற்றிலும் தவறான முடிவு!

  பகிர்வுக்கு நன்றி... பீர் அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. //அதன் மூலமாக கேட்ட பயான்கள் அதிகம். அடைந்த பயன்கள் அதிகம். மார்க்க விஷயங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள முடிந்தது... யூடூப் புறக்கணிப்பு என்பது முற்றிலும் தவறான முடிவு!
   // அதுவேதான் என் நிலைப்பாடும் அம்மு..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா :)

   Delete
 2. யூ டியூபுக்கு பதிலடி கொடுக்க உதவுங்கள்

  பீஜேயின் முக்கிய அறிவிப்பு

  யூ டியூப் என்ற அயோக்கிய நிறுவனம் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற விதியின் கீழ் செயல்படுவதாக சொல்லிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கீழ்த்தரமான வீடியோவை நீக்க முடியாது. எங்கள் விதிமுறைக்கு உட்பட்டே அது உள்ளது என்று திமிராக பதில் சொல்கிறது.

  இதன் தயாரிப்பில் யூ டிய்ய்புக்கும் பங்கு உண்டு என்ற சந்தேகம் இதனால் வலுப்படுகிறது.

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

  இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது.

  இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.

  எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதர்ர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

  எனது உரைகள் கேள்வி பதில்கள் இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதர்ர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர்.

  யாரெல்லாம் எனது உரைகளை யு டியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை.

  இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள்.

  இதை மற்றவர்களும் கடைப்பிடித்து இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்ப்வுகிறேன்.

  அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

  மீண்டும் சொல்கிறேன்.

  எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம்.

  பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


  கூகுளுக்கும் ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன்.

  இன்ஷா அல்லாஹ்

  ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும்.


  பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  அன்புடன்

  பீ.ஜைனுல் ஆபிதீன்.

  http://www.onlinepj.com/

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்
  அருமையான செய்திய பகிர்ந்து இருக்கீங்க தொடரட்டும் உங்களது எழுத்துப்பணி ....

  சுருங்க சொன்னால் முள்ளை முள்ளாலே எடுக்க முற்படவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..! :)

   Delete
 4. #ஒரு பிரச்சனை என்று வந்த உடன் அந்த இடத்தை விட்டு ஒதுங்குவது விவேகமாகாது..! அதே இடத்தில் இருந்து அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப வேண்டும் அதுதான் நம் இப்போதைய கடமையும் கூட..! #

  சலாம் சகோ....

  அருமையான விளக்கம்....இதுதான் சரியான முடிவாக இருக்கும்....இந்த நேரத்தில் அவசியமான பதிவு...நன்றி

  ReplyDelete
  Replies
  1. வ அழைக்கும் சலாம் சகோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

   Delete
 5. ///// நாம் செய்யவேண்டியது எல்லாம் இதுதான் அவர்கள் நமக்கெதிராக செய்யும் சதிகளை கண்டு உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக யோசித்து அந்த சதிகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விடுவதும் அதனை நகைப்புக்கு உள்ளாக்கி அவர்களை காமெடி பீசாக்குவதும் தான்

  வன்முறைகள் நமக்குத் தேவையே இல்லை.. !!!////

  பொன் எழுத்துக்களால் எழுத வேண்டிய வார்த்தை.
  எக்காலத்திற்கும் பொருத்தமானதும் கூட!

  ஜஸாக்கல்லாஹ் கைர்
  சகோ.ஷர்மிளாஹமீது & சகோ. பீர்முஹம்மது

  ReplyDelete
  Replies
  1. வ இய்யக்கும் சகோ ஜபருல்லாஹ்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

   Delete
 6. நல்ல பதிவு .....

  ReplyDelete
 7. // சமூக வலைத்தளத்தில் எங்கள் டீக்கடை குழுமத்தில் பதிவர் பீர் முஹம்மது அவர்கள் பகிர்ந்த பதிவை அவரின் வேண்டுகோளுக்கிணங்க சிலபல மாற்றங்களுடன் இங்கே மீள்பதிவாக இட்டு இருக்கிறேன்..! //

  சகோ சர்மிளா...

  டீக்கடையில் சகோ பீர் அவர்களின் அந்த ஸ்டேடஸும் அதைத் தொடர்ந்து நடந்த சமது சகோதரர்களின் காத்திரமான விவாதமும்.... வாவ்.... சொல்ல வார்த்தைகள் இல்லை... எவ்வளவு அழகா கருத்துக்கள பதிஞ்சாங்க....???? அந்த விவாதம் நமது சகோதர, சகோதரிகள் மீது மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. /டீக்கடையில் சகோ பீர் அவர்களின் அந்த ஸ்டேடஸும் அதைத் தொடர்ந்து நடந்த சமது சகோதரர்களின் காத்திரமான விவாதமும்.... வாவ்.... சொல்ல வார்த்தைகள் இல்லை... // உண்மை சகோ சிராஜ்... நமது குழுமம் இப்பொழுது மிகவும் சிறப்பான நிலையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.! அல்ஹம்துலில்லாஹ்.. இது போன்ற ஆக்கபூர்வமான விவாதங்கள் இன்னும் தொடர வேண்டும்.. இன்ஷா அல்லாஹ்..!

   Delete
 8. // எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம்.

  பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். //

  சகோ பீ.ஜே அவர்களின் இந்த அறிவிப்பு மார்க்கத்தின் மீதான அவர் பற்றை காண்பிக்கிறது... இருந்தாலும் இது தேவை இல்லை என்று அவரை தொடர்ந்து வற்புறுத்துவோம்... அண்ணின் பேச்சுக்கள் பொக்கிஷங்கள்..அது அனைவரையும் சென்று அடைய வேண்டும்..இதை டி.என்.டி.ஜெ சகோதரர்கள் அண்ணனிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்....

  ReplyDelete
 9. மாஷா அல்லாஹ் நல்ல தொகுப்பு.

  உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

  ReplyDelete
  Replies
  1. ஜசாக்கல்லாஹ் சகோ..!

   //உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக// ஆமீன்

   Delete
 10. மாஷா அல்லாஹ் நல்ல தொகுப்பு.

  உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

  ReplyDelete
 11. MASHA ALLAH
  GOOD MESSAGE

  ReplyDelete
  Replies
  1. ஜசாக்கல்லாஹு க்ஹைர் பிரதர்..! :)

   Delete
 12. அப்ப அண்ணன் சொன்னதுக்கு என்னை பதில் ... அண்ணன் சொல்லிட்டாரு , நான் அதைதான் நம்புவேன் - பீ ஜெ ரசிகன்

  இப்ப எனது கருத்து!!?
  எதையுமே இந்த மாதிரிதான் அணுகனும் என்று எனது சிறைய வயதிலேயே நண்பரளிடம் சொல்வேன், அவர்கள் உணர்ச்சி வசப்படுவதிலேயே குறியாக இருப்பார்கள், முக்கிய காரணம் உலக அறிவு இல்லாமல் இருப்பது., இதோ அமெரிக்காவில் நடந்ததை வைத்துதான் ( உலக அறிவு ) நமது பிரச்னையை தீர்க்க வழிகண்டு பிடிக்கிறோம், அது போலவே அவர்களும் தேவைபட்டால், நம்மை கண்டு காபி அடித்து பிரச்சனைகளை தீர்துகொல்வார்கள்!

  பீ ஜெ ரசிகர்களிடம் இதெல்லாம் காதில் விழுமா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம சகோ சர்புதீன்...

   // எதையுமே இந்த மாதிரிதான் அணுகனும் என்று எனது சிறைய வயதிலேயே நண்பரளிடம் சொல்வேன், அவர்கள் உணர்ச்சி வசப்படுவதிலேயே குறியாக இருப்பார்கள், முக்கிய காரணம் உலக அறிவு இல்லாமல் இருப்பது., //

   உங்க அளவுக்கு உங்க நண்பர்களிடம் உலக அறிவ எதிர்பார்க்கலாமா??? கிடைக்குமா??? நீங்க யாரு??? உங்க அளவுக்கு யாரும் வர முடியாது சகோ...

   Delete
  2. //ரசிகன்// என்ற பெயரில் பிளாக் வைத்து இருக்கும் சகோ.ஷர்புதீன்...

   வீண் வார்த்தைகள் போட்டு ஒரு கமென்ட் இங்கே அவசியமே இல்லையே. ஏன் சகோ.இப்படி...???

   மவுலவி சகோ பீ.ஜே அவர்களின் மார்க்க ஞானமும், ஆய்வுத்திறனும், சொற்பொழிவாற்றலும், மொழியாக்கத்திறனும் அளப்பரியன. அவரால் கடந்த 27 வருடங்களில் தமிழகம் அடைந்த விழிப்புணர்வுக்கும், பெற்ற மார்க்க அறிவுக்கும் வரையறையே இல்லை.

   அவரால் நற்பயன் பெற்ற லட்சக்கணக்கானவர்களில்....
   அ டி யே னு ம்
   ஒருவன்.

   அன்னாரின் இந்த அறிவிப்புக்கு காரணம்....

   ///எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. ///

   ---என்று அவரே தெளிவாக குறிப்பிட்டும் உள்ளார்.

   இது நம்மால் ஏற்கத்தக்க ஒன்றல்ல. நாம் அவரின் உரைகளை மட்டும் யு ட்யூபில் தேடி எடுத்து பயன் பெரும் போது... நம்மால் அவருக்கு எந்த பாவமும் வரப்போதில்லை. அப்படியே நம்மில் எவரேனும் தவறு செய்தாலும்... 'ஒருவரின் பாவச்சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார்'..! இப்படி அவர் கவலை கொள்வது அவரின் அதிக இறையச்சத்தையே காட்டுகிறது. அவரது மார்க்க சொற்பொழிவால் சரியாக வார்த்தெடுக்கப்பட்டோர் இன்ஷாஅல்லாஹ் யு டியூபில் சருக்கிட மாட்டார்கள்.

   எனவே...
   சகோ.சிராஜ்...
   ///சகோ பீ.ஜே அவர்களின் இந்த அறிவிப்பு மார்க்கத்தின் மீதான அவர் பற்றை காண்பிக்கிறது... இருந்தாலும் இது தேவை இல்லை என்று அவரை தொடர்ந்து வற்புறுத்துவோம்... அண்ணின் பேச்சுக்கள் பொக்கிஷங்கள்..அது அனைவரையும் சென்று அடைய வேண்டும்..இதை டி.என்.டி.ஜெ சகோதரர்கள் அண்ணனிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்....///---சொன்னதை நானும் வழிமொழிகிறேன்..!

   Delete
 13. மாஷா அல்லாஹ் ..!! அருமையான விளக்கம் . ஜஸாக்கலாஹ் க்கைர் :-)

  ReplyDelete
  Replies
  1. ஜெய்லானி...

   முடிவா என்ன சொல்றீங்க?? கடுப்பா இருக்கு.. இன்னும் 3 நாள் தான் உங்களுக்கு டைம்..அதுக்குள்ள வந்திடுங்க...இல்லாட்டி பின் விளைவுகளுக்கு நாங்க பொறுப்பு இல்ல...

   Delete
  2. //
   முடிவா என்ன சொல்றீங்க?? கடுப்பா இருக்கு.. இன்னும் 3 நாள் தான் உங்களுக்கு டைம்..அதுக்குள்ள வந்திடுங்க...இல்லாட்டி பின் விளைவுகளுக்கு நாங்க பொறுப்பு இல்ல... //

   அஹ்ஹூ அஹ்ஹூ

   இப்பவே பின்விளைவுகள் தெரியுதா ஜெய்? :-))))))))))))))

   Delete
 14. உங்க பதிவால் YOUTUBE க்கு நல்ல வருமானம் ...

  உங்க பதிவு கடுப்பேற்றுகிறது என்னை ...

  ReplyDelete
 15. மாஷா அல்லாஹ், நல்லா சொன்னீங்க,

  அன்னலாரை யாரும் இழிவு செய்திட இயலாது, அவர்களை வல்ல அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட்டான் ...

  மேலும் நாம் அன்னலாரின் சொல், செயல், அங்கிகாரத்தை பின்பற்றுவது தான், நாம் செய்ய வேண்டிய முதல் கடமை

  ReplyDelete
 16. Salaam Sister,

  Masha Allah! First different and very Good approach for this issue.

  I as a software professional, completely agree with you on this. Emails, Blogs, Search engines (google, bing), Facebook, Twitter and Youtube, etc. are technologies, or otherwise we can call them as Scientific inventions to advance human lives which are same like TV, Cell phones, Cars, etc. All these scientific inventions can be used for its real purpose (good purpose) or for Evil activities. Best Eg. is Facebook, Blogs and TVs. These medias can be used for making Dawah and also for porn activities. So, It is completely in our hand that how we use them whether for our own and others' benefits or for destroying oneself and others.

  This film is not Youtube which produced, directed or helped for producing this video. As you said, If youtube has such videos against all beleifs, then we should not blame youtube for that, but we can only recommend and send our comments to youtube for not publishing vidoes which is insulting any beliefs or criticizing without any proofs.

  Without looking at these factors, whether such videos available in Youtube about all religions or only about Islam, and motive and their policies, and just trying to avoid YouTube and Google sites may make us isolated and may hinder Muslims communities growth.

  God knows the best!
  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்,

  மாஷா அல்லாஹ் மிக அருமையான ஆக்கம்!, ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

  //நாம் செய்யவேண்டியது எல்லாம் இதுதான் அவர்கள் நமக்கெதிராக செய்யும் சதிகளை கண்டு உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக யோசித்து அந்த சதிகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விடுவதும் அதனை நகைப்புக்கு உள்ளாக்கி அவர்களை காமெடி பீசாக்குவதும் தான்//

  சூப்பர், உணர்ச்சிவசப்படும் காலம்தோறும் இழப்பு நமக்குத்தான்.


  யூட்யூப்பில் இஸ்லாம் அனுமதிக்காத காட்சிகளும் உண்டு, அனுமதிக்கும் காட்சிகளும் உண்டு, இது இன்று நேற்றல்ல அது தொடங்கிய காலம் முதல் இதுதான் நிலை,

  இஸ்லாம் அனுமத்திகாத காட்சிகள் யூட்யூபில் இருக்கிறது என அப்பொழுதே புறக்கணித்திருக்க வேண்டியதுதானே?. அப்படியென்றால், அது உண்மையான புறக்கணிப்பு.

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மிக அருமையான பதிவு. அருமை நண்பன் பீர் முஹம்மதுவிற்கும். பதிந்த உங்களுக்கும் ஜசாக்கல்லாஹ். இன்றைய முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாராரில் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விவேகமாக நடவடிக்கைகளை காண்கின்றேன். உதாரணத்திற்கு, தற்போது இங்கிலாந்தின் IERA ஆரம்பித்துள்ள "Don't shoot the messenger" போன்ற பிரச்சாரங்கள்.

  கிடைக்கும் சந்தர்பங்களில் விவேகமாக செயல்படுவது காலத்தின் கட்டாயம். அதனை சரியாக புரிந்துக்கொண்டால் அழைப்பு பணியில் இன்னும் வெற்றி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 19. மிக அருமையான பதிவு சகோதரி, அருமையாக விளக்கம்.
  இதை விட தெளிவாக யாராலும் விளக்க முடியாது.
  மிக்க நன்றி. அதுவும் சரியான நேரத்தில் வந்திருக்கிறது.

  ReplyDelete
 20. மாஷா அல்லாஹ் நல்ல தொகுப்பு.

  உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

  ReplyDelete
 21. மாஷா அல்லாஹ் நல்ல தொகுப்பு.

  உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

  ReplyDelete
 22. மாஷா அல்லாஹ் நல்ல தொகுப்பு.

  உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

  ReplyDelete
 23. நல்ல தீர்வு நான் யூ ரியூப்பில் இருந்து இதை அகற்றுவதுதான் நல்லது என்று எனது பதிவில் இட ஒரு முஸ்லீம் நண்பர்//முகமட் சல் உனக்கு மட்டுமில்லையெடா உலகத்துக்கே தூதர் எவன் அவர அவமானப்படுத்தினாலும் உடம்பில் தலை இருக்காது கேயார் புல்.....// கொமெண்ட் செய்திருந்தார் நான் என்ன செய்ய முடியும் சிலர் இன்னும் தெளிவில்லாது உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.http://www.venkkayam.com/2012/09/innocence-of-muslims-100000.html

  ReplyDelete
 24. சலாம்! அழகிய பகிர்வு சகோதரி. தொடருங்கள்.

  ReplyDelete
 25. அஸ்ஸலமு அழைக்கும் . சகோ உங்களின் கருத்து சரியானதே . இருப்பினும் ஏன் தாமதம் நமக்கான ஒரு வலைதளத்தினை ஆரம்பிப்பதில் ? எதுக்கு எல்லாம் நாம் காலத்தினை செலவளிகின்றோமே ? அல்லா வுக்கஹா முஸ்லிம்கள் சமூகப் பணிக்காக you tube போன்ற ஒரு காத்திரமான படைப்பு எம்மூடாய் வரக் கூடாது . அதை முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப் படுத்தாது அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் ஆரம்பிக்க கூடாது ? சும்மாவே you tube விழுந்து விடும் நடுநிலை வலைப் பின்னல் அமைப்பின் . முஸ்லிம் எனும் எனும் வருடல் ஆங்கே கணப் படாது இருக்க வேண்டும் அப்போது தான் அனைவரும் அதனை நோக்கி வருவார்கள் . எல்லா இடத்திலும் மஸ்ஜித் கட்டுவதை விட்டு இது மாதிரியான வலையமபினை உருவாக்குவதில் கரிசனை காடக் கூடாது ???

  ReplyDelete
 26. அஸ்ஸலமு அழைக்கும் . சகோ உங்களின் கருத்து சரியானதே . இருப்பினும் ஏன் தாமதம் நமக்கான ஒரு வலைதளத்தினை ஆரம்பிப்பதில் ? எதுக்கு எல்லாம் நாம் காலத்தினை செலவளிகின்றோமே ? அல்லா வுக்கஹா முஸ்லிம்கள் சமூகப் பணிக்காக you tube போன்ற ஒரு காத்திரமான படைப்பு எம்மூடாய் வரக் கூடாது . அதை முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப் படுத்தாது அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் ஆரம்பிக்க கூடாது ? சும்மாவே you tube விழுந்து விடும் நடுநிலை வலைப் பின்னல் அமைப்பின் . முஸ்லிம் எனும் எனும் வருடல் ஆங்கே கணப் படாது இருக்க வேண்டும் அப்போது தான் அனைவரும் அதனை நோக்கி வருவார்கள் . எல்லா இடத்திலும் மஸ்ஜித் கட்டுவதை விட்டு இது மாதிரியான வலையமபினை உருவாக்குவதில் கரிசனை காடக் கூடாது ???

  ReplyDelete
 27. பெரியவர் பீ ஜே அவர்களின் முடிவு சரியானதல்ல ....
  வீட்டில் மூட்டை பூச்சிகளின் தொல்லை இருந்தால் ,
  வீட்டையே எரிப்பதா ...!!??

  ReplyDelete
 28. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சரியான விளக்கம்.
  அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றிலும் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும்.
  நாம்தான் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  அவற்றைக் கொண்டு நல்ல விஷயங்களை நாலு பேருக்கு எடுத்து சொல்ல உபயோகப்படுத்தலாம்.
  எல்லாம் அல்லாஹ்வின் அருட்கொடைகள்.
  இங்கு இந்தப் பிரச்னையை கையிலெடுத்துக் கொண்டு நாள் தோறும் ஊர்தோறும் போராட்டங்கள்.
  போராட்ம் என்பதையே கேளிகஊத்தாக்கி வட்டார்கள் நம்மவர்கள். நான் பெரியவனா, என் கூட்டம் பெரியதா என்று ஆளுக்காள் பலம் காட்டத்தான் இதை உபயோகிக்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது.
  அல்லாஹ் நம்மவர் எல்லோருக்கும் வீரத்தையும் கூடவே விவேகத்தையும் கொடுப்பானாக

  நூர்தீன்

  ReplyDelete
 29. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சரியான விளக்கம்.
  அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றிலும் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும்.
  நாம்தான் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  அவற்றைக் கொண்டு நல்ல விஷயங்களை நாலு பேருக்கு எடுத்து சொல்ல உபயோகப்படுத்தலாம்.
  எல்லாம் அல்லாஹ்வின் அருட்கொடைகள்.
  இங்கு இந்தப் பிரச்னையை கையிலெடுத்துக் கொண்டு நாள் தோறும் ஊர்தோறும் போராட்டங்கள்.
  போராட்ம் என்பதையே கேளிகஊத்தாக்கி வட்டார்கள் நம்மவர்கள். நான் பெரியவனா, என் கூட்டம் பெரியதா என்று ஆளுக்காள் பலம் காட்டத்தான் இதை உபயோகிக்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது.
  அல்லாஹ் நம்மவர் எல்லோருக்கும் வீரத்தையும் கூடவே விவேகத்தையும் கொடுப்பானாக

  நூர்தீன்

  ReplyDelete
 30. மொஹமட் ஜாமிSeptember 25, 2012 at 8:58 AM

  நான் நினைத்தேன் நான் மட்டும்தான் இந்த விளம்பர ஊர்வலங்களுக்கு எதிரி என்று. என்னோடு அநேக முஸ்லீம்கள் இருப்பதை காணும் போது மிகவும் சந்தோஷமாகவுள்ளது.
  மேலும் சகோதரி ஷர்மிளா ஹமீதின் தெளிவான சிந்தனைக்காக அல்லாஹ்வை புகழுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete
 31. அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு உதவி செய்வானாக . மாஷா அல்லாஹ் அருமையான கருத்து .
  யூட்யூப் புறக்கணிப்பு.. !! சாத்தியமா??!!
  மனசு வச்ச சாத்தியமே அல்லாஹ் உதவா மாட்டனா?? அவனிடம் உதவி தேடுவோம் . அதனை புறக்கணிப்பதா இல்லையா என்ற வாதம் வேண்டாம். அதுக்கு நிகரான ஒரு ஊடகத்தை நாம் ஆரம்பிப்பம் . நிறுவனத்தை தொடங்கிய மூன்று இளைஞர்களில் ஒருவர் முஸ்லிம் என்பது கூடுதல் தகவல் இவரிடம் அதற்கான அடிப்படைகளை எடுக்கலாமே ? ஒரு நடுநிலை வலைப் பின்னலை
  யூட்யூப் இணை விட நன்றாய் உருவாக்கலாமே ? இதை பற்றியும் சிந்திக்கலாமே ? துஷ்டனை கண்டால் துறை விலகலாமே(??)

  ReplyDelete
 32. அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு உதவி செய்வானாக . மாஷா அல்லாஹ் அருமையான கருத்து .
  யூட்யூப் புறக்கணிப்பு.. !! சாத்தியமா??!!
  மனசு வச்ச சாத்தியமே அல்லாஹ் உதவா மாட்டனா?? அவனிடம் உதவி தேடுவோம் . அதனை புறக்கணிப்பதா இல்லையா என்ற வாதம் வேண்டாம். அதுக்கு நிகரான ஒரு ஊடகத்தை நாம் ஆரம்பிப்பம் . நிறுவனத்தை தொடங்கிய மூன்று இளைஞர்களில் ஒருவர் முஸ்லிம் என்பது கூடுதல் தகவல் இவரிடம் அதற்கான அடிப்படைகளை எடுக்கலாமே ? ஒரு நடுநிலை வலைப் பின்னலை
  யூட்யூப் இணை விட நன்றாய் உருவாக்கலாமே ? இதை பற்றியும் சிந்திக்கலாமே ? துஷ்டனை கண்டால் துறை விலகலாமே(??)

  ReplyDelete
  Replies
  1. அதற்கு மாற்றான நிறைய தளங்கள் இருக்கிறது சகோ...ஆனால் எதுவுமே அதன் பக்கத்தில் நெருங்கக் கூட முடியவில்லை...
   பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் ஏற்கனவே youtube தளத்தை புறக்கணித்து தங்கள் நாடுகளில் தடை செய்து வைத்திருக்கின்றன...அதனால் அந்த நிறுவனத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை...உண்மையில் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை..
   youtube தளத்தில் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழங்களின் பாடங்கள் இலவசமாக கிடைக்கின்றன...அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். நாம் ஒரு முயற்சி எடுத்து அது உலகம் பூராவும் பரவி உலகின் தலைசிறந்த பலகளிக்கழங்கள் எல்லாம் நமது தளத்துக்கு வந்து பாடம் நடத்தும் வரை மாணவர்கள் இருட்டிலேயே இருக்கட்டும் என்று சொன்னால் அது நல்ல முடிவா சகோ? பத்ருப் போர்க்களத்தில் கைது செய்யப்பட எதிரிகளிடமிருந்து கூட கல்வியை கற்றுக் கொள்ளச் சொன்ன பெருமானார் ஸல் அவர்களின் வழிமுறையை அல்லவா நமக்கு முக்கியம்? ஆத்திரமும் கோபமும் அதில் இருந்து நம்மை பிசகச் செய்துவிடக்கூடாது சகோ !!!

   Delete
  2. உங்களின் கருத்தில் வேறுபாடு இல்லை சகோ எனினும் அவ்வாறான பலமான நடுநிலை வலை பின்னல் உருவாக்க முடியும் . அல்லாஹ் வின் உதவி நிச்சயம் கிட்டும் எமக்கு .அதோடு இஸ்லாமிய லேபல் இடப் பட்டமை தான் பாகிஸ்தானின் வலைப் பின்னல் முனேற தடையை இருந்தது அதை விட்டு எம்மால் செய்யவே முடியாது எனும் நிலைப் பாட்டிற்கு வருவது வேதனை தருகிறது . அல்லாஹ் உதவா மாட்டானா ??

   ""நாம் ஒரு முயற்சி எடுத்து அது உலகம் பூராவும் பரவி உலகின் தலைசிறந்த பலகளிக்கழங்கள் எல்லாம் நமது தளத்துக்கு வந்து பாடம் நடத்தும் வரை மாணவர்கள் இருட்டிலேயே இருக்கட்டும் என்று சொன்னால் அது நல்ல முடிவா "" இல்லை

   Delete
  3. முயற்சிகள் செய்யப்படுவது வரவேற்ப்புக்கு உரியதே...சந்தேகமே இல்லை...முயற்சிகள் பலவாறாக தொடங்கப்பட்டு பல திசைகளில் சென்றுகொண்டு தான் இருக்கிறது..(Example HalalTube ,TubeIslam போன்றவை )
   ஆனால் அதனைக் காரணம் காட்டி நிறைய மாணிக்கங்கள் கிடைக்கும் ஒரு சுரங்கத்தை கொஞ்சம் குப்பைக்காக விட்டு விடக்கூடாது என்பது தான்...youtube மற்றும் google இரண்டும் ஒரே நிறுவனம் தான்,,,புறக்கணிக்கிறோம் என்று கூறி google தளத்தையும் புறக்கணிப்போமா? தேடுபொறியில் அது தான் மிகச்சரியான விடைகளைத் தருகிறது (யாஹூ,பிங் எல்லாம் இருந்தும் கூட )
   இன்று உலகம் முழுவதும் பெருவாரியான முஸ்லிம் பதிவர்கள் பயன்படுத்தும் blogspot கூட அவர்களுடையது தான்..அதையும் புறக்கணிப்போமா?
   இவ்வளவு ஏன்? இன்று உலகில் மிகப் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும் கைப்பேசி இயங்குதளம் andriod கூட அவர்களுடையது தான்...அதற்காக நவீன் வசதிகள் கொண்ட கைப்பேசிகள் பயன்படுத்தாமல் இருந்தால் யாருக்கு நட்டம் சகோ...
   புறக்கணிப்பு என்பதை விட, சமயோசிதமாக இந்த கருவிகளை, வாய்ப்புகளை நமக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்பதை யோசிப்போம் சகோ

   Delete
 33. Was there a film show at all? what i heard is that it is just the trailer which has been repeated ad nauseam in the so called "film". Anyone knows to the contrary?
  Dr.Reffai

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும் மா..!

   ஆமா... அவர்களுடைய திரைப்படத்திற்கு அவர்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் வேண்டுமென்றே விஷமத்தனமாக அதை அரபி மொழியில் டப் செய்து சில நிமிடங்கள் மட்டும் ஓடும ட்ரைலராக வெளியிட்டு.. அவர்கள் எதிர்பார்த்தது போலவே விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள்.. அதுவும் நம் மூலமாக என்பதுதான் வேதனைக்குரிய விஷயம் .. :((

   Delete
 34. மிகவும் சரியே ,யு ட்யுபை புறக்கணிப்பதைவிட அதையே நமக்கு சாதகமாக பயன்படுத்துவதே சரி .innocence of muslims என்ற பெயரிலே முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் முஸ்லிம்களின் அறியாமை பயன்படுத்தி நடக்கும் அடாவடிகளையும் படம்பிடித்து நூற்றுக்கணக்கான படங்களை வெளியிட்டு சாம்பாசிலை வெளியே தெரியாமல் மறைத்திருக்கலாம்.அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு படம் காட்டினால் அதற்கு பதிலடியாக ஆயிரம் படங்களை வெளியிட்டு அவர்களை ஓட,ஓட விரட்டலாம்

  ReplyDelete
 35. Not only Youtube, we have to abandon all the following:
  Jobs in MNC companies,
  KFC, McDonalds, Burger King
  Aeroplane, electricity
  Anything American / european.

  Please, Please

  ReplyDelete
 36. அஸ்ஸலாமு அலைக்கும்.
  சகோ.ஷர்மிளா & சகோ.பீர்,
  மிகச்சரியான முடிவு. தெளிவான விளக்கம். இதற்கு எனது முழு ஆதரவு. ஜசாக்கல்லாஹு க்ஹைர்.

  உங்கள் பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தேன். அதில் ஒரு யூ ட்யூப் புறக்கணிப்பு ஆதரவு சகோதரர் ஒருவர் வந்து...

  // நாம் உண்ணும உணவில் சிறு கல் தென்பட்டால் வீசி எறிந்து விடலாம்! அது விஷமாக இருந்தால்? முழுவதையும் தான்..//---இப்படி கமென்ட் போட்டு இருந்தார்.

  அவருக்கான எனது பதில்...//உணவில் கல் கலந்தால்... சோறு எல்லாம் கல்லாக ஒன்றும் ஆகாது. அது தனது நிலை மாறாமல் அப்படியேதான் இருக்கும். ஆனால், விஷம் விழுந்தால்.. அது மற்ற உணவின் தன்மையை மாற்றி உணவை விஷமாக்கி விடுகிறது.

  யூ ட்யூபில் இதற்கு முன்னர் எத்தனயோ ஆபாசங்கள் பிறமத பிரச்சாரங்கள் இருந்தும்,,, நமது தாவா விடியோக்கள் ஒன்றும் கெட்டுப்போக வில்லை. அதேபோல, இப்போது இந்த குப்பை படம் கோடி குப்பையுடன் இன்னொன்றாக யு டியூபில் ஏறும்போது இப்போது மட்டும் நமது தாவா விடியோக்கள் குப்பைகள் ஆகிவிடுமா..? நீங்கள் சொல்வது பொருந்த வில்லையே சகோ.//

  குழுமத்தில் விவாதித்து பின்னர் இங்கே இடப்பட்ட இப்பதிவின் கருத்தில்.... நாம் சரியான வழியில் செல்வதாகவே உளமார நம்புகிறேன் சகோஸ். அனைவருக்கும் இறைவன் நேரான வழியை காட்ட்வானாக. ஆமீன்.

  ReplyDelete
 37. உங்களின் இந்த பதிவை நினைத்து உண்மையில் வேதனையாக இருக்கிறது சகோதரி. உங்களின் இந்த பதிவை ஆரம்பல் முதல் இறுதி வரை படித்தேன் , இதில் youtube நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக போராடின முஸ்லிம்களை நீங்கள் குறை கண்டு உள்ளீர்கள். வன்முறை என்பது இஸ்லாமிய வழிமுறை கிடையாது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு பிரச்னை பற்றி நாம் இது தவறான வழிமுறை என்று சொல்லும்போது, இது இஸ்லாமிய வழிமுறை கிடையாது, இதை நாம் இப்படி செய்ய வேண்டும் என்று வலியையையும் சேர்த்து கூற வேண்டும். அதை நான் காணவே இல்லை. முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். youtube என்ற நிறுவனம். லிப்யா , எகிப்து போன்ற நாடுகளில் இந்த பிரச்னை வந்த பிறகு. இதை நீக்கும் மாறு அமெரிக்கா அந்த நிறுவனத்திடம் சொன்னது. அதற்க்கு இவர்களின் பதில் என்ன தெரியுமா. ??? இந்த எங்களின் policy படி எந்த மதத்தையும் புண்படுத்த வில்லை. எனவே இதை நீக்க முடியாது என்று சொன்ன பிறகுதான் மற்ற நாடுகளில் இந்த போராட்டம் வெடித்தது. என்னமோ இந்த வீடியோ youtube நீக்கி விட்டது போன்றும், முஸ்லிம்கள் அறியாமல் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது போன்றும் நீங்கள் சொல்லுவது வேதனை. சில நாடுகளில் மட்டுமே அந்த வீடியோ நீக்க பட்டு இருக்கிறது. இன்னும் ஏராளமான நாடுகளில் இன்னும் அந்த பெயரில் தான் உள்ளது. இந்த youtube நிறுவனம் மூலம் மட்டுமே சிலர் மார்க்கம் அறிவது போலவும் பேசுகிறார்கள் . இது இல்லை என்றால் எவ்வளவோ வீடியோ தளங்கள் உள்ளது . அதை பயன்படுத்தி கொள்ளலாம். அவருடைய வீடியோ வை மட்டும்தான் அவர் சொல்லி உள்ளார். அதனால் சில வாடிக்கை ஆளர்கள் குறைவார்கள் என்று சொல்லி உள்ளார். இதை மற்ற முஸ்லிம்கள் உலமாக்களும் . மற்ற முஸ்லிம்களும் கடைபிடித்தால் பெரிய இழப்பீடு இந்த நிறுவனம் சந்திக்கும் . இது தான் அதில் சொல்ல பட்ட கருத்து . இதில் வெற்றியும் கிடைக்கலாம் ,தோல்வியும் கிடைக்கலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

  அமெரிக்கா என்றாலே இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் ஒரு கொடுங்கோல் கூட்டம் என்று ஒரு சில சகோக்கள் சொல்கிறார்கள்../////

  இந்த படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்ய பட்டு விட்டது. இந்த படத்தை எடுத்தவர்கள் கைது செய்யப்பட வில்லை. வெறும் விசாரணையோடு அனுப்பி வைக்க பட்டு விட்டார்கள். இதை நீங்கள் கொஞ்சம் வெட்கம் இல்லையா. பிறகு இவர்கள் அளிக்க துடிக்காமல் என்ன செய்கிறார்கள் . இதற்க்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. இவர்களின் இந்த எதிர்ப்பில் தான் அங்கு இஸ்லாம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதுவே உங்களுக்கு கேள்வி குறியாக இருக்கும்போது சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

  "அல்லாஹ்வுடைய ஜோதியை தங்களுடைய வாய்களால் ஊத்தி அணைக்கலாம் என்று நினைகிறார்கள். அவர்கள் வெறுத்தாலும் அதை முழுமை படுத்தாமல் அவன் விடமாட்டன். அல்குரான்.

  ReplyDelete
  Replies
  1. //அமெரிக்கா என்றாலே இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் ஒரு கொடுங்கோல் கூட்டம் என்று ஒரு சில சகோக்கள் சொல்கிறார்கள்//
   சகோ. அப்துல் ஜப்பார்
   அமெரிக்காவின் foreign policy நிறைய முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக இருக்கிறது. சந்தேகமே இல்லை...
   ஆனால் அதே அமெரிக்காவில் முஸ்லிங்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் ...பள்ளிகளில் தொழுகிறார்கள்...இவ்வளவு ஏன் ? தெருக்களிலும் பொது இடங்களிலும் அழைப்பு பணி வேறு செய்கிறார்கள்...
   மேற்கண்ட இரண்டும் முரணாக தெரிந்தாலும் அதுதான் உண்மை...அதுதான் அமெரிக்கா.

   ஒன்றிற்காக மற்றொன்றை வெறுப்பதோ கிடைக்கும் வழிகளை அடைப்பதோ புத்திசாலித்தனம் அல்ல...அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை எப்போது எமக்கு சாதகமாக வருகிறதோ அன்று தான் நான் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வேன் என்று நாம் வாழா விருந்தால் தோல்வி நமக்கே...
   அதைவிட மேலாக, புறக்கணிப்பின் மூலமும் கோபப்படுவத்தின் மூலமும் நாம் அறிவுசார் சொத்துக்களில் இருந்து விலகிச் செல்வதையே நமது எதிரிகளும் விரும்புகின்றனர்...இப்போது சொல்லுங்கள் உங்கள் ஆதரவு youtube யை ஆதரிக்கும் முஸ்லிம்களுக்கா ? அல்லது அதை விட்டும் நம்மை தூரமாக்க நினைக்கும் எதிரிகளுக்கா?

   Delete
  2. சகோதரர் பீர் முஹம்மத் அவர்களுக்கு என்னுடைய சலாம்.

   நண்பரே அமெரிக்க மக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. அதை நாம் ஏற்று கொள்ளுகிறோம். அந்த நாட்டுடைய சட்டமும் அப்படி இல்லை. இவ்வளவு ஏன் அந்த நாட்டில் ராணுவத்தில் பனி புரியும் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியும். இது ஜனநாயக நாட்டின் சட்டங்கள் நண்பரே. அதை நாம் குறை கூறவில்லை. நீங்கள் எங்கு வசுகிரீர்கள் என்று தெரியவில்லை ஆனால் இந்தியாவிலும் நீங்கள் குறிப்பிட்டு சொன்ன எல்லா முறை படியும் நாம் செய்து கொண்டுதானே இருக்கிறோம். மேடை போட்டு நட்டு பிரதமரை திட்டுகிறோம இல்லையா? அது விஷயம் இல்லை. நாம் கேட்டது அந்த நாட்டின் முஸ்லிம் விரோதோ போக்கு . அவர்கள் நாட்டில் உள்ள மக்கள் யாரும் இஸ்லாத்திற்கு போய்விட கூடாது. அதற்குதான் அவர்களின் foreign policy மூலம் வேலை செய்கிறார்கள். அந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை கூடி கொண்டே வருகிறது . என்று நிறைய புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இவர்களின் இது போன்ற செயல்கள் மூலம் அந்த நட்டு மக்கள் ஆர்வத்துடன் இஸ்லாத்தை படித்து ஏற்று கொள்ளுகிறார்கள். இஸ்லாத்துடைய வருகையை அவர்கள் நாட்டில் ஒழிக்க வேண்டும். அதற்க்கு இவர்களின் இது போன்ற வழிமுறை. அதற்க்கு இப்போது இவர்கள் பயன்படுத்தும் ஒரு வழிமுறை இந்த youtube இதற்க்கு பதில் கொடுப்பது எவ்வாறு? அவன் கட்டுரை இட வில்லை. விவாததிற்கு அழைக்கவில்லை. அப்பட்டமான பொய்யான ஒரு வீடியோ படமே எடுத்து இருக்கிறான். அதை இந்த தளத்துக்கு நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால். இதை நீக்க முடியாது என்று சொன்ன பிறகு. வேறு என்ன வழி, இந்த தளம் இல்லை என்றால் வேறு நிறைய தளங்கள் உள்ளது. vimeo பயன்படுத்தாலாம். ஒரு சாதாரண முஸ்லிம் அவனுடைய இந்த பனி மூலம் நிச்சயம் இறைவனிடத்தில் கூலி இருக்குது . என்று நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ் ,

   புறக்கணிப்பின் மூலமும் கோபப்படுவத்தின் மூலமும் நாம் அறிவுசார் சொத்துக்களில் இருந்து விலகிச் செல்வதையே நமது எதிரிகளும் விரும்புகின்றனர்..///

   youtube ஒரு தளம் அதனுடைய வரலாறு மேலே நீங்கள் சொல்லி இருந்தீர்கள். வீடியோ இடுவதற்கு உண்டான ஒரு தளம். இந்த தளத்தை புறக்கணித்தால் அறிவு மழுங்கி விடுமா? இன்றைய காலத்தில் இன்டர்நெட் நீங்கள் தவிர்க்க முடியாது. ஆனால் இது போன்ற தளத்தை தவிர்த்தல் நீங்கள் சொல்லுவது போன்று நிகழும் என்பது வேடிக்கையாக உள்ளது. youtube மாதிரி வளர்ந்து வரும் தளங்கள் நிறைய உள்ளது.

   அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை எப்போது எமக்கு சாதகமாக வருகிறதோ அன்று தான் நான் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வேன் என்று நாம் வாழா விருந்தால் தோல்வி நமக்கே.//////

   youtube ஒன்றே இன்டர்நெட்டில் தாவ செய்ய ஒரே வழி என்பது போன்று உள்ளது. உங்களின் இந்த கமெண்ட்.

   இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். நான் கருதுவது ரசூல் ஸல் அவர்களை இழிவு படுத்தி நடந்த இந்த அயோக்கியர்களுக்கு. சாதகமாக பேசும் இந்த தளத்தை நாம் புறக்கணித்து இந்த மார்க்க வீடியோ அனைத்தும் வேறு தலத்தில் பயன்படுத்தினால் . இந்த அயோக்கிய தனத்துக்கு எதிராக நாம் செய்ததற்கு இறைவன் மறுமையில் கூலி உண்டு என்றே நான் கருதுகிறேன். (இறைவனுக்காகவே செய்தால்)

   Delete
  3. வ அலைக்குமுஸ்ஸலாம்.
   //நாம் கேட்டது அந்த நாட்டின் முஸ்லிம் விரோதோ போக்கு . அவர்கள் நாட்டில் உள்ள மக்கள் யாரும் இஸ்லாத்திற்கு போய்விட கூடாது. அதற்குதான் அவர்களின் foreign policy மூலம் வேலை செய்கிறார்கள்.//

   அப்படி எதுவும் தெரியவில்லை சகோ. நான் இங்கே தான் வசிக்கிறேன். அப்படி எல்லாம் இங்குள்ள அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்து நான் கேள்விப்படவில்லை...இந்தியா குறித்து சொல்லி அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு சொல்லி இருந்தீர்கள்...கண்டிப்பாக இல்லை...குஜராத் கலவரங்கள் நமக்கு மறந்து போனவை அல்ல..ஒரு அரசாங்கமே கொலைவெறித் தாக்குதலுக்கு துணை நின்ற சம்பவம்...பாபரி மஸ்ஜித் ஒரு மதிய அரசாங்கமே ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழைக்குத் துணை நின்ற சம்பவம்...இந்தியாவை விட அமரிக்காவில் அதிக சுதந்திரமும் அழைப்பு பணிக்கான எதிர்ப்பின்மையும் இருக்கிறது அன்பது தான் உண்மை,,,
   vimeo ,dailymotion போன்ற தளங்களை youtube உடன் ஒப்பிட்டு சொல்லமுடியாது சகோ. அதுவெல்லாம் மிகச் சிறய தளங்கள் யூடுபே உடன் ஒப்பிடும்போது...
   சரி, உங்கள் வாதப்படியே எல்லா இஸ்லாமிய உரைகள், கருத்துகள் போன்றவற்றை vimeo தளத்துக்கு மாற்றி நாமும் அதற்கு மாறிவிடுவோம்...உலகின் மிகப் பெரும்பான்மையான மாற்று மத சகோதரர்கள் youtube மட்டுமே பயன்படுத்துவார்கள்...அவர்களுக்கு யார் எப்படி எந்த தளம் வழி இஸ்லாத்தை எடுத்து சொல்வது?
   இவ்வளவு முயற்சிகள் நாம் செய்தும்கூட இஸ்லாம் பற்றி தவறான தகவல்கள் மட்டுமே மாற்று மதச் சகோதரர்களுக்கு போய்க்கொண்டிருக்க இருக்கின்ற வழிகளையும் அடைத்து புறக்கணித்து நாம் வெளியே வந்தால் அது இஸ்லாத்திர்க்குச் செய்யும் நன்மையா தீமையா என்பதி நீங்கள் முடிவு செய்யுங்கள் சகோ..கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள்...அல்லாஹ் போதுமானவன்,,,

   //நான் கருதுவது ரசூல் ஸல் அவர்களை இழிவு படுத்தி நடந்த இந்த அயோக்கியர்களுக்கு.//
   இந்தக் கட்டுரை முழுவதும் பெருமானாரை இழிவுபடுத்தும் நோக்கில் என்று தான் வார்த்தை பயன்படுத்தி இருக்கிறோம்...நீங்கள் சொல்வது போல் இழிவு படுத்தி என்று சொல்ல மாட்டோம்...பல வழக்குகளில் கைதாகி, நீலப்படம் எடுக்கும் தொழில் செய்யும் ஒரு கேடுகெட்ட நபர் அகிலத்தின் அருட்கொடை பெருமானார் ஸல் அவர்களை இழுபடுத்த முடியாது ..அவர்களின் புகழ் ஜோதியின் புகையை கூட நெருங்க முடியாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு...youtube தளமும் சரி திரைப்படத்தை எடுத்தவர்களும் சரி அவர்களை அவர்களே இழிவுபடுத்திக் கொண்டார்கள் எம்பெருமானாரை அல்ல !!!!


   Delete
  4. இதோ உங்களின் இந்த பதிவை உங்களுக்கு நியாபகதுக்காக சொல்லுகிறேன். இதற்க்கு மேல் இதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்றே நினைக்கிறன்.

   http://viralnuni.blogspot.com/2012/08/blog-post_7.html

   Delete

  5. இதோ உங்களின் இந்த பதிவை உங்களுக்கு நியாபகதுக்காக சொல்லுகிறேன். இதற்க்கு மேல் இதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்றே நினைக்கிறன்.

   http://viralnuni.blogspot.com/2012/08/blog-post_7.html

   Delete
  6. http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/youtube-anit-islam-video/

   Delete
 38. நாம் ஒரு செயலை வெறுக்கலாம் ஆனால் அதில் இறைவன் என்ன நன்மையை வைத்திருக்கிறான் என்று நம்மால் அறிய முடியாது .அந்த யூ டியூப் குப்பையில் நல்ல மாணிக்கங்களும் நிறையவே இருக்கு . அதே நேரத்தில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்ற போர்வையில் ஏதோ ஒரு லூசுவின் செயலால் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பதால் அங்கே குப்பைகளே அதிகம் சேர்ந்து வருங்கால சந்த்திகளுக்கு ,தேடல் உள்ளவர்களுக்கு மானிக்கங்கள் கிடைகாமலேயே போய்விடும் சாத்தியக்கூறுகளே அதிகம் . :-)

  இதற்கு மாற்றமாக இன்னும் அதிக மதிகம் தாவா செய்திகள் , இஸ்லாமிய சிந்தனை வீடியோ , ஆடியோகள் அதிகம் அப்லோட் செய்வது ஒன்றே புத்திசாலித்தனம் .:-)

  ReplyDelete
 39. சரியான நேரத்தில் சரியான தகவல்.

  ReplyDelete
 40. நீங்கள் சொன்ன மாதிரி youtube எந்த வீடியோவையும் அழிக்கவில்லை

  ReplyDelete
 41. http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/youtube-anit-islam-video/

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)