Pages

Friday, November 02, 2012

உனக்கென நான் எனக்கென நீ...!

           
3-11-2000
     நேற்றுதான் என் மாமத்தா என் கையை பிடித்து அவர் கையில் கொடுத்தது மாதிரியும் இவர் கழுத்து நிறைய மாலையும் முகத்தில் வழியும் வியர்வையுமாக என் கழுத்தில் மகர் சங்கிலியை போட்டு விட்டது மாதிரியும்  இருக்கிறது... ஹ்ம்ம்ம்ம்ம்ம் அதற்குள் ஆகி விட்டது முழுதாக 12 வருடங்கள்...! அல்ஹம்துலில்லாஹ்...!
               கல்யாணம் என்றால் என்ன குடும்பம்  என்றால் என்ன என்று ஒரு சிறிய யோசனை/கற்பனை கூட பண்ணிப்பார்த்திராத  சிறு வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த உடனேயே திருமண ஏற்பாடு செய்து விட்டார்கள்..! மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையை கூட அழுத்தி சொல்ல தெரியாத அப்பிராணி நான் :)  ( அது அப்போ)         அவருக்கும் எனக்கும் பத்து வருட வயது வித்தியாசம் இதானலோ என்னவோ அவரிடம் இருந்த மெச்சூரிட்டி, புரிந்துணர்வு பொறுப்பு இதெல்லாம் அப்போ என்னிடம் பேருக்கு கூட இல்லை..! (இப்போ மட்டும்? )ஆனாலும் என் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களை நடவடிக்கைகளை பெரிய மனதுடன் பொறுத்து கொண்டார்... ( இன்னமும் அப்படித்தேன் வேற வழி?? )
                அவர் சாப்பிடும் போது நான் அருகில் அமர்ந்தால் நான் கேட்காமலே ஊட்டி விடும் அன்பாகட்டும்...!
நான் காலையில் எந்திரிக்க  தாமதமானால் என்னை தொந்தரவு பண்ணாமல் பிள்ளைகளை பள்ளிக்கு அவரே ரெடி பண்ணி அனுப்புவதாகட்டும்...!
தனது பிசியான வேலைக்கு மத்தியிலும் நேரத்திற்கு போன் பண்ணி சாப்பிட்டியா என்று கேட்பதும் இல்லை என்றால் அவரே அருகில் உள்ள கடைக்கு அழைத்து சாப்பாடு அனுப்ப சொல்லும் கனிவாகட்டும்...
எனக்கு உடம்பு சரி இல்லை என்றால் விடிய விடிய விழித்து இருந்து கவனிக்கும் கருணை ஆகட்டும்...
அவருக்கு நிகர் அவரே....! :)

எனக்கோ பிள்ளைகளுக்கோ எதுவும் தேவை (சில சமயங்களில் தேவை இல்லை என்றாலும்)என்றால் கேட்ட உடனே வாங்கி தரும் அவருக்கு தனக்கு என்று எதுவுமே வாங்கி கொள்ள தெரியாது அல்லது தோணாது...... கோபத்தை கூட கோபமாக காட்ட தெரியாத அப்பாவி  அவரது கோபத்தில் கூட அப்படி ஒரு நிதானம் இருக்கும்...!


இத்தனை வருடத்தில் எத்தனை சந்தோசங்கள், சண்டைகள், எத்தனை கருத்து வேறுபாடுகள் ,எத்தனை எத்தனை இம்சைகள் ( என்னால் அவருக்கு)இருந்தாலும் நான் இன்றி அவராலோ அவர் இன்றி என்னாலோ இருக்க முடியாது என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தி இருக்கிறான்.. அல்ஹம்துலில்லாஹ்..!

என் அம்மாவோ என் அண்ணனோ கூட என்னை கோவமாக ஒரு வார்த்தை சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமல் துடிக்கும் அவரை , என் கண்கள் கலங்கினால் தானும் சேர்ந்து கலங்கும் அவரை சில/பல முறைகள் காயப்படுத்தி இருக்கிறேன் நிதானம் அற்ற என் பேச்சால் என் செயல்களால்... அதற்கெல்லாம் சேர்த்து இப்பொழுது இங்கே மன்னிப்பு கேட்க தோன்றுகிறது எனக்கு...!

என்னை மன்னிச்சுடுங்க மச்சான்....! (இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்னு உறுதியா சொல்ல முடியாது ஏன்னா என்னைப்பத்தி என்ன விட உங்களுக்கு நல்லா தெரியும்... :) ஆனாலும் என்னால முடிஞ்ச வரை உங்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன்..! உங்க மேல எனக்கும்  ஒரு சில வருத்தங்கள் இருந்த்துச்சு ஆனா அதெல்லாம் தங்கு தடையின்றி நீங்க காட்டும் அன்பின் முன்னால் தூள் தூளா ஆகிடுச்சு..! அல்ஹம்துலில்லாஹ்..!

டிஸ்கி : ஆனந்த கண்ணீரால் நிறைந்த கண்களை தவிர வேறொன்றும் இல்லை இந்த பதிவை எழுதி முடிக்கும் வேளையில்...!

இது என் சுயவாழ்க்கையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல..!! என் வாழ்க்கையின் பக்கங்களில் பதியப்பட வேண்டிய ஒன்று என நான் விரும்பியது..! என்னவரை பற்றி அவரிடம் நான் கூற வேண்டும் என விரும்பி நேரடியாக கூற முடியாமல் போனது ..!அட வெக்கம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க சில விஷயங்கள் நேரில் சொல்வதை விட எழுத்தில் சொல்வதுதான் நல்லா இருக்கும்...! அதுக்காக ஒரே வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு நான் அவருக்கு லெட்டரா போட முடியும்?? அதான் இப்படி ஹஹஹ்ஹா :)) பின்னாளில் இதை என் பிள்ளைகளே பார்க்க நேரலாம்...! (பார்க்க வேண்டும்..) என்பதே என் ஆசை...!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

20 comments:

 1. நோ டா செல்லம் அயம் பாவம் :)

  ReplyDelete
 2. அலைக்கும் ஸலாம் (வரஹ்)

  ம்ம்ம்... வீட்டுக்கு வீடு அதே வாசப்படி..!
  // 3-11-2000 //
  அப்போ ஓகே சீனியர்... பதிவு தூள்..!

  (அசத்திட்டிங்க சகோ.ஷர்மிளா ஹமீத்)

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. உண்மைதான் என் மாமா உங்கள் மச்சிய கைபிடிச்சி தரும் போது ஒன்னும் தெரியாத பொன்னு நல்ல பார்த்துக்குங்கன்னு சொன்னாறு. ஆனால் என் பொண்ணுக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்லவே இல்லை. இந்த பனிரெண்டு வருஷத்தில் அதிக நாள் எனக்கு புளி சாதம்தான்.

  என்ன செய்ய அப்படியே. மச்சான இந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட சொல்லுங்க.
  வாழ்துக்கள் சகோ நீங்கள் இருவரும் மறுமையிலும் ஒன்றினைய துவா செய்கிறேன்.
  நேரம் இருந்தால் எனது பதிவை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்க சகோ. சொல்ல மறந்துட்டேன் என் அன்பு மச்சானுக்கு வாழ்துக்கள் மச்சான் நீங்க ரொம்ப பொறுமைசாலின்னு தங்கச்சி சொல்லுது.

  http://www.kaleelsms.com/2012/02/blog-post_03.html

  ReplyDelete
 5. இங்கு சொல்வதைவிட அவரிடம் சொன்னால் பலன் இன்னும் அதிகமா இருக்குமே சகோதரி.....

  ReplyDelete
 6. ஃபேஸ்புக் ஸ்டேடஸ் பாத்துட்டு...எதாவது கலாய்க்கலாம்ன்னுதான் வந்தென்....ஆனால் இதை படிக்கும்போது ஏனோ கண்களில் நீர் நிறம்புவதை தவிர்க்க முடியவில்லை...

  மாஷா அல்லாஹ்...அல்லாஹ்வுக்கு நன்றி செழுத்த ஒருபோதும் மறவாதீர்கள்..

  அதே போல்...உங்களுக்கு கிடைத்த சிறந்த வாழ்வு போல நம் சகோதரிகளுக்கும் “சகோதரர்களுக்கும்” வாய்க்க துஆ செய்யுங்கள்...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 7. வலைக்கும் ஸலாம் (வரஹ்) என்றுமே எல்லா வளமும் நலமும் பெற்று வாழ பிராத்திக்கிறேன் (அமீன்) வாழ்த்துக்கள் சகோதரி,


  //அதே போல்...உங்களுக்கு கிடைத்த சிறந்த வாழ்வு போல நம் சகோதரிகளுக்கும் “சகோதரர்களுக்கும்” வாய்க்க துஆ செய்யுங்கள்...// Nice Brother

  ReplyDelete
 8. அல்லாஹ்வின் அருளால் இம்மையிலும்,மறுமையிலும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 9. அல்ஹம்துலில்லாஹ். அருமையான வாழ்க்கையை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.


  @ ரஜின்:

  //"சகோதரர்களுக்கும்" //

  அதென்ன அடைப்புக்குறிக்குள்? இதுக்கு பேர் தான் ஆணாதிக்கமா? :)  ReplyDelete
 10. என்ன சொல்லி பாடுவதோ... என்ன வார்த்தை தேடுவதோ... ஹி..ஹி..ஹி...

  எக்கா... நீயும் மச்சானும் இதே ஒற்றுமையுடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சகோதரி! மிகவும் அருமையான பதிவு! உங்கள் மச்சானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்!

  ReplyDelete
 12. சலாம்! அழகிய பதிவு!

  உங்களுக்கு கிடைத்த வாழ்வு போல அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 13. ஷர்மிளா ஹமீத் சகோ .. என் அம்மாவோ என் அண்ணனோ கூட என்னை கோவமாக ஒரு வார்த்தை சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமல் துடிக்கும் அவரை , என் கண்கள் கலங்கினால் தானும் சேர்ந்து கலங்கும் அவரை சில/பல முறைகள் காயப்படுத்தி இருக்கிறேன் நிதானம் அற்ற என் பேச்சால் என் செயல்களால்... அதற்கெல்லாம் சேர்த்து இப்பொழுது இங்கே மன்னிப்பு கேட்க தோன்றுகிறது எனக்கு...!

  இதை உங்கள் கணவரிடம் சொன்னால் இன்னும் உங்கள்மேல் பாசம் அதிகரிக்கும் .அவருக்கு .ஹா ...ஹா ..:-)

  ReplyDelete
 14. masha allah sister....we all wish da same happiness
  throaugh out da life....

  ReplyDelete
 15. சலாம் சகோ. அருமையான நெகிழ்வான பதிவு. சரி இதை படித்து விட்டு மச்சான் என்ன சொன்னாருன்னு அடுத்த பதிவில் சொல்லுவீங்க தானே?

  ReplyDelete
 16. ஷர்மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ......

  லெட் மீ ஹக் யூஊஊஊஊஊஊஊ......:)))))

  என்ன அழகான பதிவுப்பா.... படிக்க படிக்க ஒரு பூங்காவில நடப்பது போல.... இன்னும் மிச்சமிருக்கும் சிறுசிறு தடைக்கற்களும் பொடியாகி வாழ்க்கை இன்னும் சிறப்பாய் இஙேயும், ‘அங்கேயும்’ வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்ப்பா.... செம செம செம பதிவு....

  #பசங்களா இதைப் படிச்சீங்கன்னா... ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையவும் இப்படி அழகானதா வெச்சுக்குங்க..... இன்ஷா அல்லாஹ் அம்மா அத்தாக்கு து’ஆ செய்ங்க :))

  ReplyDelete
 17. மாஷா அல்லாஹ்,
  மிகவும் அழகான பதிவு !!!!!!

  ReplyDelete
 18. மாஷா அல்லாஹ்... நீங்கள் சொல்லும் அனைத்தும் (10 வருட இடைவெளி முதல்) எங்கள் வாழ்க்கைக்கும் பொருந்திப் போவது ஆச்சரியமாக இருக்கிறது. இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)