Pages

Tuesday, November 13, 2012

நானும் விஞ்ஞானிதான்...!! (தொடர் பதிவு.)

                   பல நாட்களா என்ன எழுதன்னு தெரியாம மண்ட காஞ்சு போயி இருந்த நேரத்துல என்றும்பதினாறு அக்கா ( ஆமா உங்க நிஜப் பேரு என்ன? ) ஒரு பதிவப்போட்டு தொடர் பதிவு எழுத சொல்லி என்னையும் கோர்த்து விட்டுட்டாங்க..! திண்ணைல படுத்து கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்வு அப்படிங்குற மாதிரி... ஆத்தா டாபிக் கெடச்சுருச்சேன்னு ஒரு நிமிஷம் துள்ளி குதிச்சுட்டேன் :) நன்றி அக்கா நன்றி...! ( எந்த தைரியத்துல அக்கா ன்னு கூப்புடுறேன்னு சண்டைக்கு எல்லாம் வந்துரப்புடாது ஆமா சொல்லிப்புட்டேன் :))

அப்படி என்னத்துக்கு தொடர்பதிவுன்னு தெரியாம கூட்டத்துல தொலைஞ்ச பாப்பா மாதிரி முழிக்கிற சிலருக்காக ஒரு குட்டி வெளிச்சம் பின்னாடி இதோ..! (பிளாஷ்பேக் ன்னும் சொல்லிக்கலாம்..! ஹிஹிஹி :)

சின்ன வயசுல நம்ம பாக்குற விஷயங்கள நம்மளோட அப்போதைய அறிவ வச்சு ஓரளவுக்கு புரிஞ்சு வச்சு இருப்போம் அதே விஷயத்த பத்தி நம்மளோட பார்வை வளர வளர மாறும் அப்பறம் ஒரு நாள் நின்னு திரும்பி பார்த்தோம்ன்னா... சின்ன வயசுல நம்ம எவ்ளோ காமெடியா புரிஞ்சி வச்சு இருக்கோம் ஒரு விஷயத்தை அப்படின்னு தெரிய வரும் இல்லையா? அது பத்திதான் என்றும் பதினாறு நாம எல்லாரும் விஞ்ஞானி தான் அப்படின்னு ஒரு பதிவு எழுதி என் அறிவுக்கண்ண படார்னு திறந்துட்டாங்க ஹிஹிஹி

ஓகே மொக்க போட்டது போதும்ம்னு நீங்க எல்லாம் கதறுறது காதுல விழுந்துருச்சு...! என்ன பண்ண உங்க  தலை எழுத்து இந்த கொடுமை எல்லாம் நீங்க அனுபவிச்சு தான் ஆகணும் :)

எங்க ஊருல நிறைய பேரு வேலை அல்லது தொழில் விஷயமா மலேசியா விற்கு அதிகமாக பயணம் செய்த நேரம் அது...  அதுக்கு இப்ப என்னன்னு கேக்குரிங்களா? அங்கேதானே மேட்டரே இருக்கு..! சின்ன வயசுல பிளைட் பறந்தாலே அண்ணாந்து பாக்குறது டாட்டா காட்டுறதுன்னு அந்த வயசுல நீங்க எல்லாம் செஞ்சத தான் நானும் செஞ்சேன் ஆனா ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா? நான் அப்போவே பெரிய ஜீனியஸ் இல்லையா? (நோ நோ கல்ல கீழ வைங்க கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் என்னாகுறது அவ்வ்வ்வ் ) சோ நான் என்ன நெனசுக்குவேன்னா பிளைட் அப்படியே பறந்து போயி வானத்துல லேண்ட் ஆகும் போல...! மலேசியா அங்கதான் இருக்குது போல..! (வெயிட் வெயிட் அம்புட்டு அறிவாளியா நீயி அப்படின்னு இப்போவே ஆனந்த கண்ணீர் விட்டா எப்புடி? ) இப்புடி ஏகப்பட்ட கற்பனைகள் என் மனசுல..! அப்படி அங்க வானத்துல இருக்குற ??!! மலேசியா ல உள்ள மண்ணு எல்லாம் ஏன் நம்ம தலைல கொட்ட மாட்ட்டேன்கிறது அப்புடின்னு எல்லாம் யோசிச்சு என் மண்டை காஞ்சதுதான் மிச்சம்..! ஹிஹிஹி இப்போ நெனச்சாலும் அம்புட்டு அப்பாவியா நீயி பாவி..! அப்புடின்னு ஒரு மைண்டு வாய்சு கேக்கும் :)

நான்தான்  சின்ன வயசுல உலக மகா அறிவாளியா இருந்துருக்கேன்ன்னு பார்த்தா எங்க மம்மி என்னை எல்லாம் விட பெரிய விஞ்ஞானியா இருந்துருப்பாங்க போல.. இதோ அவங்களோட வெளிச்சம் பின்னாடி...! அட அதாங்க பிளாஷ்பேக் :))

எங்க அம்மா சின்ன வயசுல அப்போதான் ரேடியோ வந்த புதுசுன்னு நெனைக்கிறேன்... அப்போ அவங்க இந்த பொட்டிக்குள்ள  இருந்து பேசுற குட்டி குட்டி மனுஷங்க (??) எல்லாம் எப்படி சாப்புடுவாங்க.... இயற்கை தேவைக்கு எல்லாம் என்ன பண்ணுவாங்க.... இப்புடி எல்லாம் யோசிப்பாங்கலாம்.... ரொம்ப யோசிச்சு மண்டை குழம்பாம ஒரு வேளைநம்ம தூங்குனதுக்கு அப்பறமா நைசா வெளில வந்து சாப்ட்டுட்டு போயிடுவாங்க போல அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாங்களாம்..... ஹஹஹஹஹா :)

டிஸ்கி: பதிவே டிஸ்கி சைஸ்ல தான் இருக்கு..இதுல டிஸ்கி வேறயா?? ஐயோ அய்யோ :))

22 comments:

 1. இப்டிலாம் கதற வைக்கனும் எத்த்னை நாள் ஆசை

  ReplyDelete
 2. என்றென்றும் பதினாறுக்கு இது தேவையா?? அவங்க பாட்டுக்கு பதிவு போட்டுட்டு போக வேண்டியது தானே??? ஏன் எங்கள வேற மாட்டி விடணும்????

  நல்ல அருமையான, கருத்தாழம் மிக்க பதிவு தங்கச்சி... தொடரட்டும் உங்கள் பணி... பழக்க தோஷம்.. விட்டு போகுமா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 3. நானும் அப்படி தான் நெனச்சு வச்சிருந்தேன்:)நீங்க எழுதின விதம் அருமை..ரொம்ப சிரிச்சுட்டேன்

  Thalika

  ReplyDelete
 4. ஒரு தொடர்பதிவு எழுத சொன்னதுக்கு இத்தன பல்பு எனக்கு கொடுத்திருக்கக்கூடாது.... அவ்வ்வ்...... என்ற பேரு பானுங்க... பரவாயில்ல.... நான் அக்காவாகவே இருந்துட்டு போறேன்... (அக்காவா இருக்கும்போதே பல்ப்ஸ் தாங்க முடியல...இதுல தங்கச்சின்னு தெரியவந்தா... அவ்வளவுதான்)

  //அப்படி அங்க வானத்துல இருக்குற ??!! மலேசியா ல உள்ள மண்ணு எல்லாம் ஏன் நம்ம தலைல கொட்ட மாட்ட்டேன்கிறது/// தலையில் ஏற்கனவே அதானே இருக்கு... வானத்துல இருந்து வேற விழுந்து நிறையணுமா? ;))

  உங்க ஆர்ராய்ச்சிய பார்த்து எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...தொண்டக்குழி அடைக்குது..... கண்கள் குளமாகுது..ஒண்ணுமே டைப் பண்ன முடியல.....

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  ஹா ஹா..என்ன சொல்ல..?? எழுத்தின் நடை இயல்பாகவும்,சிரிப்பாவும் இருந்துச்சு ஷர்மி..:)

  ReplyDelete
 6. ஹாய்..ஹாய்..ஹாய்...

  என்னையும் பானு எழுத சொன்னாங்க... அவ்வ்வ்

  நல்லா யோசிக்கிற சர்மி! குட் ! என்னை மாதிரியே எழுத ஆரம்பிச்சுட்ட! கூடியவிரைவில் நீ பெரிய எழுத்தாளரா வருவ பாரேன் :-)

  ReplyDelete
 7. அறிமுகம் சூப்பர்! ஆமா, பதிவு எங்கே?

  ReplyDelete
 8. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  மிக வேகமான திரட்டி
  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 9. நானும் சின்னதில் ஏரோபிளேன் ஒரு வேளை கடலுக்குள்ளோ, வானத்துக்க்குள்ளோ போய் நிற்குமோஒன்னு நினைச்சிக்குவேன்.

  முன்பு ரேடியோ தான் பொழுது போக்கே எப்படி உள்ளே இருந்து பேசுகிறார்கள் என்று ரொம்ப் யோசிச்சதுண்டு.

  //சின்ன வயசுல நம்ம எவ்ளோ காமெடியா புரிஞ்சி வச்சு இருக்கோம்// ம்ம்ம்

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்!
  நீங்க நன்றாக எழுதுகிறீர்கள். இஸ்லாமிய மாத இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதலாமே?!

  ReplyDelete
 11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 12. தொடர்பதிவுன்னா நீங்க யாரையாவது கோர்த்து விடணுமே..? ஆக, முக்கியமானதை மறந்துட்டீங்க. அப்போ, நீங்கதான் சிறந்த விஞ்ஞானி..!

  ReplyDelete
 13. /தொடர்பதிவுன்னா நீங்க யாரையாவது கோர்த்து விடணுமே..?// அட அது வேறயா?? இது கூட தெரியாம அப்பாவியா இருந்துட்டேனே :( :(

  / முக்கியமானதை மறந்துட்டீங்க. அப்போ, நீங்கதான் சிறந்த விஞ்ஞானி..!// அதான் இந்த உலகத்துக்கே தெரியுமே சகோ :)

  ReplyDelete
 14. /நல்லா யோசிக்கிற சர்மி! குட் ! என்னை மாதிரியே எழுத ஆரம்பிச்சுட்ட! கூடியவிரைவில் நீ பெரிய எழுத்தாளரா வருவ பாரேன் :-)/// ஹே ஹேய் நான் இன்னும் பெரிய எழுத்தாளரா ஆகலன்னு சொல்றியா :(

  ReplyDelete
 15. //2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்// வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ மதுரை தமிழன் :)

  ReplyDelete
 16. //அஸ்ஸலாமு அலைக்கும்!
  நீங்க நன்றாக எழுதுகிறீர்கள். இஸ்லாமிய மாத இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதலாமே?!/ வ அழைக்கும் சலாம் சகோ.. இன்ஷா அல்லாஹ் வாய்ப்புகள் கிடைத்தால் எழுதலாம் :)

  ReplyDelete
 17. /அறிமுகம் சூப்பர்! ஆமா, பதிவு எங்கே?// கிரேட் இன்சல்ட் ஆப் இன்டியா :(

  ReplyDelete
 18. //ஹா ஹா..என்ன சொல்ல..?? எழுத்தின் நடை இயல்பாகவும்,சிரிப்பாவும் இருந்துச்சு ஷர்மி..:)/ வ அழைக்கும்சலாம் ஜசாக்கல்லாஹ் :)

  ReplyDelete
 19. /உங்க ஆர்ராய்ச்சிய பார்த்து எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...தொண்டக்குழி அடைக்குது..... கண்கள் குளமாகுது..ஒண்ணுமே டைப் பண்ன முடியல.....// இருக்காதா பின்னே? உங்கள விட பெரிய அறிவான விஞ்ஞானிய பார்த்தா அப்டி எல்லாம் ஆகுறது சகஜம் தான் :)

  ReplyDelete
 20. உங்க பதிவ படிச்சுட்டு சிரிக்க மட்டும் தான் முடியும் .. விஞ்ஞானிலாம் முடியாது ..

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)