Pages

Wednesday, January 30, 2013

முஸ்லிம்களின் விஸ்வரூபம்...! காரணம் என்ன?
 • திரு கமல்ஹாசன் மீது முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது. அவரது திரைப்படத்தை அநியாயமாக தடுப்பதற்கு முஸ்லிம்களிடம் எந்த வஞ்சமும் இல்லை.

 • சமீப ஆண்டுகளில் ஒரு தரப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து ஊடகங்கள் சித்தரிப்பதால் பொதுவான முஸ்லிம்களின் வாழ்க்கை பெரும் சங்கட்த்திற்கு உள்ளாகியிருக்கிறது.

 • எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தரப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் ஒரு தரப்பாகவே காட்சிகளையும் செய்திகளையும் வெளியிடுகின்றன. அத்தோடு தங்களது கற்பனைக்கு தோன்றியதை உண்மை போல சித்தரிக்கின்றன,

 • இதனால் பொது இடங்களில் கோடிக்கணகான முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிற நிராகரிக்கப்படுகிற சூழல் அதிகரித்து வருகிறது. சாதாரண முஸ்லிம்கள் கல்விக் கூடம் தொடங்கி அரசு அலுவலம் வரை ஒரு வகை தீண்டாமைக்கு ஆளாகிவருகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் இதனால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது.

 • கமல் ஹாசனது திரைப்படம் முஸ்லிம்களை ஒரு தரப்பாக மேலும் அதிகமாக புண்படுத்தியிருப்பதாக சொல்வதை திரு கமல் ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கலைப்படைப்பு சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மரியாதை சம்பந்தப்பட்டது.

 • அவருடை வருமானம் அவருக்கு முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் மூலம் ஒரு பெரும் சமுகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படுவது எந்த வகைய்லும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 • இந்தப்படத்தில் தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் கோவை போன்ற நகரங்களில் தங்கியிருந்த்தாக காட்டப்படுகிறது.  பெரும் சோகத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக அமைதி நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற கோவை போன்ற நகரங்களில் அவநம்பிக்கையையும் மத நல்லிணக்கத்தையும் பாதித்து விடக்கூடியது.

 • கட்ட பொம்மன் என்றால் சிவாஜி கணேசனை நினைவு கூறுகிற அளவுக்கு நம்முடைய தமிழகத்து மக்கள் சினிமாவோடு ஒன்றிப்போனவர்கள். இத்தகைய மக்களிடையே கமல் ஹாசன் போன்ற மூத்த கலைஞர்கள் ஒரு சமூகத்திற்கு எதிரான வன்ம்மான கருத்துக்களை திணிப்பது நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலையை மேலும் சிரமப்படுத்தி விடும். ஏராளமான அப்பாவி பொதுமக்கள் மேலும்பாதிக்கப்படுவார்கள்

 • ஒரு தரப்பாக இந்த கொடுமையிலிருந்து அடுத்த தலைமுறையையாவது பாதுகாக்க வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இதை கமல்ஹாசனும் கலைத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 • இனிமேல் இத்தகைய கொடூரம் தொடராமல் தடுப்பதற்காக முஸ்லிம் சமுதாயம் நடத்துகிற போராட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்கான போராட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


  ஆக்கம் 
   கோவைஅப்துல் அஜீ பாகவி மற்றும் 
  ஷஃபாஅத் ரிஸ்வான் பின் புர்கான் அலி 

Saturday, January 26, 2013

சினிமாவ சினிமாவா மட்டும்ம்ம்ம்ம்ம் பாருங்க..!!

           இந்த பதிவு எழுத காரணமா இருந்த எதிர்குரல் ஆஷிக் அண்ணனுக்கு நன்றிகள்.. நீங்க மட்டும்  இந்த ஸ்டேடஸ் போடலன்னா எனக்கு இந்த பதிவு எழுத ஐடியாவே வந்து இருக்காது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நன்றி ஐயா நன்றி... :)

"உண்மை என்னானா சினிமாவ சினிமாவா எடுத்துக்கணும் என்ற விசயம் DAM 999 படத்த எதிர்த்தவங்களுக்கும் புரியாம போச்சு, ஆபாச போஸ்டர்களை மை பூசி அழிக்குற மகளிர் அமைப்புகளுக்கும் புரியாம போச்சு (ஏன்னா சினிமாவ சினிமாவா பார்த்து அந்த ஆபாசத்த புறம் தள்ளனும்), புகை பிடித்தல்/மது எச்சரிக்கை சினிமாவுல வரணும் போராடுனவங்களுக்கும் புரியாம போச்சு...இவ்ளோ ஏன் மூணு முதல்வர்களை திரைத்துறையில் இருந்து தேந்தேடுத்த மக்களுக்கும் புரியாம போச்சு. இப்ப முஸ்லிம்களுக்கு புரிய வைக்க முயற்சிகள் நடக்குது. :-)

ஸ்ப்பா.....நல்ல விசயங்களை கொடுக்க வேண்டும் என்று பாடுபடும் சில படைப்பாளிகளை இதுக்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. இவங்க என்ன சொல்ல வராங்கன்னா...சினிமாவ சீரியஸா எடுத்துக்க கூடாது. அதுல ஏதாவது நல்ல விசயம் வந்தாலும் அது சினிமால வந்த காரணத்தால அத உங்க உள்ளத்துள ஏத்திக்க தேவை இல்லை. இவ்ளோதான் மேட்டர். பினிஷ்.'


     முகநூல்ல எந்த பக்கம் திரும்பினாலும் இந்த படம் குறித்த விவாதங்களும் விமர்சனங்களும்.! ஒரு சிலர் சினிமாவ சினிமாவா பாருங்க... அதுல உள்ளத ஏன் சீரியஸா எடுத்துகிறிங்கன்னு அறிவாளித்தனமா கேக்குறாங்க..!! அது எப்புடிங்க?

நயன்தாராவ அவருடைய தனிப்பட்ட வாழ்கையோட சம்மந்தப்படுத்தி அவரு சினிமாவுல சீதையா நடிக்க கூடாதுன்னு போராடுனப்ப சினிமாவ சினிமாவா பாக்க தெரியாத உங்களுக்கு...கீதை அப்படின்னு பேரு வச்சதுக்கே அந்த படத்தோட பேர புதிய கீதைன்னு மாத்த வைக்க போராடுனப்ப்போ சினிமாவ வெறும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சினிமாவா மட்டும் பாக்க தெரியாத அல்லது விரும்பாத  உங்களுக்கு....ஒரு இஸ்லாமியன பத்தி எவ்ளோ கீழ்த்தரமா படம் எடுத்தாலும் எதிர்க்க கூடாதுன்னு சினிமாவ சினிமாவா மட்டும் பாருங்கன்னு சொல்ல எப்புடிங்க மனசாட்சி இடம் கொடுக்குது??? (அப்புடி ஒன்னு இருந்தா நீங்க எல்லாம் அப்படி சொல்லி இருப்பீங்க?? :)

மக்களே நீங்க எல்லாம் ஒன்னே ஒன்ன புரிஞ்சிக்கணும் நாங்களும் சினிமாவ சினிமாவா மட்டும் பார்க்க தயாரா இருக்கோம்..!! அவங்க  சினிமாவ சினிமாவா எடுக்குற பட்சத்தில் .!

சினிமா என்பது இந்த காலகட்டத்துல மிகப்பெரிய ஊடகம்..!  சினிமாவ சினிமாவா பார்க்கணும் என்பது  பெரியவர்களுக்கு வேண்டும் என்றால் தெரியும்..! ஆனால் சினிமாவை வயது வந்த சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் மாத்திரமா பார்க்கிறார்கள்?? தான் பார்ப்பதை அப்படியே நம்பி விட கூடிய குழந்தைகளும் பார்க்கிறார்கள்..! அதுதானே நம் கவலை..!! கொஞ்சம் கொஞ்சமாக நாளைய தலைமுறையின் மனதில் விஷத்தை இது போன்ற சினிமாக்கள் விதைத்து கொண்டு இருப்பதை நீங்கள் அறியவில்லையா?

       
ஒரு சில சாதி அமைப்புகளின் பேர்களை கூட சினிமாக்களில் சொல்ல விட மாட்டார்கள் அந்த இடத்தில் ஒலியை தடை செய்து விடுவார்கள் அப்படி இருக்க இஸ்லாமிய பெயருடன் அடையாளத்துடன் ஒருவன் காலம் காலமாக தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவது மட்டும் நியாயம்.. அதை நாங்கள் சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்..!?? வாழ்க ஜனநாயகம்..!

              இன்னும் சிலரோ ஒரு படி மேலே போய் இஸ்லாத்துலதான் சினிமா பாக்க கூடாதுன்னு இருக்குல அப்பறம் ஏன் நீங்க பாக்குறீங்கன்னு கேக்குறாங்க..! மொதல்ல நீங்க இஸ்லாத்தை ஒழுங்கா பின்பற்றுங்க அத விட்டுட்டு இப்ப ஒரு படத்துக்கு இப்டி குதிக்கிறிங்களே ன்னு கேக்குறாங்க..! என்னங்க இது எந்த முஸ்லிமும் பாக்கலன்னா நீங்க இஸ்லாமியர்களை பத்தி என்ன வேணா எடுத்து பணம் பண்ணுவீங்களா??
ஒருத்தன் தன் அம்மா சொல்ற சில விஷயங்கள பின்பற்றாம இருக்குறதால அவன் அம்மாவ யார் கீழ்த்தரமா பேசுனாலும்  கோபப்படக்கூடாதுன்னு ஆயிடுமா? எந்த ஊரு நியாயம் சார் இது??


வாழ்க உங்கள் சிந்திக்கும் திறன்.. வளர்க உங்கள் கருத்து சுதந்திரம்..!!!

டிஸ்கி : இவ்ளோ சொல்லியும் சினிமா தனிமனிதனை பாதிக்காதுன்னு போர்க்கொடி தூக்க போறிங்களா? இந்த வாரம் இந்த வாரம் ஆனந்த விகடனில் "ராஜு முருகன்" எழுதிய"வட்டியும் முதலும்" தொடரை பாருங்கள், சினிமா தனி மனிதனை எப்படி பாதிக்கிறது என்று அழகாக விளக்கி இருக்கிறார்....!

ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக..!

உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்