Pages

Saturday, January 26, 2013

சினிமாவ சினிமாவா மட்டும்ம்ம்ம்ம்ம் பாருங்க..!!

           இந்த பதிவு எழுத காரணமா இருந்த எதிர்குரல் ஆஷிக் அண்ணனுக்கு நன்றிகள்.. நீங்க மட்டும்  இந்த ஸ்டேடஸ் போடலன்னா எனக்கு இந்த பதிவு எழுத ஐடியாவே வந்து இருக்காது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நன்றி ஐயா நன்றி... :)

"உண்மை என்னானா சினிமாவ சினிமாவா எடுத்துக்கணும் என்ற விசயம் DAM 999 படத்த எதிர்த்தவங்களுக்கும் புரியாம போச்சு, ஆபாச போஸ்டர்களை மை பூசி அழிக்குற மகளிர் அமைப்புகளுக்கும் புரியாம போச்சு (ஏன்னா சினிமாவ சினிமாவா பார்த்து அந்த ஆபாசத்த புறம் தள்ளனும்), புகை பிடித்தல்/மது எச்சரிக்கை சினிமாவுல வரணும் போராடுனவங்களுக்கும் புரியாம போச்சு...இவ்ளோ ஏன் மூணு முதல்வர்களை திரைத்துறையில் இருந்து தேந்தேடுத்த மக்களுக்கும் புரியாம போச்சு. இப்ப முஸ்லிம்களுக்கு புரிய வைக்க முயற்சிகள் நடக்குது. :-)

ஸ்ப்பா.....நல்ல விசயங்களை கொடுக்க வேண்டும் என்று பாடுபடும் சில படைப்பாளிகளை இதுக்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. இவங்க என்ன சொல்ல வராங்கன்னா...சினிமாவ சீரியஸா எடுத்துக்க கூடாது. அதுல ஏதாவது நல்ல விசயம் வந்தாலும் அது சினிமால வந்த காரணத்தால அத உங்க உள்ளத்துள ஏத்திக்க தேவை இல்லை. இவ்ளோதான் மேட்டர். பினிஷ்.'


     முகநூல்ல எந்த பக்கம் திரும்பினாலும் இந்த படம் குறித்த விவாதங்களும் விமர்சனங்களும்.! ஒரு சிலர் சினிமாவ சினிமாவா பாருங்க... அதுல உள்ளத ஏன் சீரியஸா எடுத்துகிறிங்கன்னு அறிவாளித்தனமா கேக்குறாங்க..!! அது எப்புடிங்க?

நயன்தாராவ அவருடைய தனிப்பட்ட வாழ்கையோட சம்மந்தப்படுத்தி அவரு சினிமாவுல சீதையா நடிக்க கூடாதுன்னு போராடுனப்ப சினிமாவ சினிமாவா பாக்க தெரியாத உங்களுக்கு...கீதை அப்படின்னு பேரு வச்சதுக்கே அந்த படத்தோட பேர புதிய கீதைன்னு மாத்த வைக்க போராடுனப்ப்போ சினிமாவ வெறும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சினிமாவா மட்டும் பாக்க தெரியாத அல்லது விரும்பாத  உங்களுக்கு....ஒரு இஸ்லாமியன பத்தி எவ்ளோ கீழ்த்தரமா படம் எடுத்தாலும் எதிர்க்க கூடாதுன்னு சினிமாவ சினிமாவா மட்டும் பாருங்கன்னு சொல்ல எப்புடிங்க மனசாட்சி இடம் கொடுக்குது??? (அப்புடி ஒன்னு இருந்தா நீங்க எல்லாம் அப்படி சொல்லி இருப்பீங்க?? :)

மக்களே நீங்க எல்லாம் ஒன்னே ஒன்ன புரிஞ்சிக்கணும் நாங்களும் சினிமாவ சினிமாவா மட்டும் பார்க்க தயாரா இருக்கோம்..!! அவங்க  சினிமாவ சினிமாவா எடுக்குற பட்சத்தில் .!

சினிமா என்பது இந்த காலகட்டத்துல மிகப்பெரிய ஊடகம்..!  சினிமாவ சினிமாவா பார்க்கணும் என்பது  பெரியவர்களுக்கு வேண்டும் என்றால் தெரியும்..! ஆனால் சினிமாவை வயது வந்த சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் மாத்திரமா பார்க்கிறார்கள்?? தான் பார்ப்பதை அப்படியே நம்பி விட கூடிய குழந்தைகளும் பார்க்கிறார்கள்..! அதுதானே நம் கவலை..!! கொஞ்சம் கொஞ்சமாக நாளைய தலைமுறையின் மனதில் விஷத்தை இது போன்ற சினிமாக்கள் விதைத்து கொண்டு இருப்பதை நீங்கள் அறியவில்லையா?

       
ஒரு சில சாதி அமைப்புகளின் பேர்களை கூட சினிமாக்களில் சொல்ல விட மாட்டார்கள் அந்த இடத்தில் ஒலியை தடை செய்து விடுவார்கள் அப்படி இருக்க இஸ்லாமிய பெயருடன் அடையாளத்துடன் ஒருவன் காலம் காலமாக தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவது மட்டும் நியாயம்.. அதை நாங்கள் சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்..!?? வாழ்க ஜனநாயகம்..!

              இன்னும் சிலரோ ஒரு படி மேலே போய் இஸ்லாத்துலதான் சினிமா பாக்க கூடாதுன்னு இருக்குல அப்பறம் ஏன் நீங்க பாக்குறீங்கன்னு கேக்குறாங்க..! மொதல்ல நீங்க இஸ்லாத்தை ஒழுங்கா பின்பற்றுங்க அத விட்டுட்டு இப்ப ஒரு படத்துக்கு இப்டி குதிக்கிறிங்களே ன்னு கேக்குறாங்க..! என்னங்க இது எந்த முஸ்லிமும் பாக்கலன்னா நீங்க இஸ்லாமியர்களை பத்தி என்ன வேணா எடுத்து பணம் பண்ணுவீங்களா??
ஒருத்தன் தன் அம்மா சொல்ற சில விஷயங்கள பின்பற்றாம இருக்குறதால அவன் அம்மாவ யார் கீழ்த்தரமா பேசுனாலும்  கோபப்படக்கூடாதுன்னு ஆயிடுமா? எந்த ஊரு நியாயம் சார் இது??


வாழ்க உங்கள் சிந்திக்கும் திறன்.. வளர்க உங்கள் கருத்து சுதந்திரம்..!!!

டிஸ்கி : இவ்ளோ சொல்லியும் சினிமா தனிமனிதனை பாதிக்காதுன்னு போர்க்கொடி தூக்க போறிங்களா? இந்த வாரம் இந்த வாரம் ஆனந்த விகடனில் "ராஜு முருகன்" எழுதிய"வட்டியும் முதலும்" தொடரை பாருங்கள், சினிமா தனி மனிதனை எப்படி பாதிக்கிறது என்று அழகாக விளக்கி இருக்கிறார்....!

ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக..!

உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்


6 comments:

 1. சினிமாவை சினிமாவாக பார்க்க சொல்கிற எவரும் இதுவரை அப்படிப் பார்த்ததில்லை.

  நீங்கள் தொகுத்த லிஸ்டில் விடுபட்ட சில

  தெய்வத் திருமகன் என்று எடுத்த படத்தை ஐயா முத்துராமலிங்க தேவரை அச்சொல் குறிக்கிறது என்று சொல்லி தெய்வத்திருமகளாக மாற்றினார்கள்.

  பாபா பாடலில் பெரியாராக இருந்த நீ ராஜாஷியாக மாறிதென்ன என்ற வரியை நீக்கவில்லையென்றால் தியேட்டர் கிழிக்கப்படும் என்றார்கள் நீக்கப்பட்டது.

  டவின்ஸிகோட் கிறிஸ்தவ நம்பிக்கையை பாதிக்கிறது என்று முழுமையாக தடை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

  ReplyDelete
 2. சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்பவர்களுக்கு

  ரோஜா படத்தில் ஒரு காட்சி வரும் தாடி வைத்து தொப்பி வைத்த காஷ்மீர் முஸ்லிம்கள் தேசியக் கொடியை கொளுத்துவார்கள் உடனே கதாநாயகன் கொடியின் மீது விழுந்து புரண்டு தீயை அணைப்பார்.

  அதாவது முஸ்லிம்கள் தேசபக்தியற்று கொடியை எரிக்கும்போது தேசபக்தியுள்ள இந்து இளைஞன் அதை உயிரைக் கொடுத்து அணைக்கிறார்.

  இந்த காட்சிப் படிமங்கள் படம் எடுக்கப்பட்ட 1992 ஆம் வருடத்தோடு அழியக் கூடியவை அல்ல ஒவ்வொரு ஆண்டு சுகந்திர தினம் வரும்போதும் இந்திய தொலைக்காட்சிகளில் (தூர்தர்ஷனில்) இந்த தேசபக்திப் படம் காட்டப்படுகிறது ஒவ்வொரு வ்ருடமும் முஸ்லிம்கள் நம் வீட்டு வரவேற்பரையில் தேசியக் கொடியை கொளுத்துகிறார்கள் இது சினிமா ஊடகம் இப்ப சொல்லுங்க நேர்மையானவர்களே நாங்கள் சினிமாவை தவறான காட்சிகளை எதிர்ப்பது தவறா???

  ReplyDelete
 3. //தெய்வத் திருமகன் என்று எடுத்த படத்தை ஐயா முத்துராமலிங்க தேவரை அச்சொல் குறிக்கிறது என்று சொல்லி தெய்வத்திருமகளாக மாற்றினார்கள்./ //கீதை அப்படின்னு பேரு வச்சதுக்கே அந்த படத்தோட பேர புதிய கீதைன்னு மாத்த வைக்க //

  இவங்க பண்ணா பற்று.... நாம பண்ணா வெறி..... என்ன ஒரு கொலைவெறி இவங்களுக்கு.....

  //பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! /// ஷர்மி.... உன்னைத் தான திட்டச் சொன்ன... இங்க ஒரு அனானி தன்னைத் தானே திட்டிட்டுப் போயிருக்கு பாரு.... ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
 4. ஹைதர் அண்ணே வருகைக்கும் தங்கள் தகவல் பகிர்விற்கும் நன்றி :)

  என்றென்றும் அக்கா..! ஒவ்ஹ் அவரு அவர திட்ட்டிகிறாரா? நான் அவரு பேர சொல்றாரோன்னு நெனச்சேன்..! :)


  /இவங்க பண்ணா பற்று.... நாம பண்ணா வெறி..... என்ன ஒரு கொலைவெறி இவங்களுக்கு...../ இவங்களுக்கு வந்தா ரத்தம் அதே நமக்கு வந்தா தக்காளி சட்னி :)

  ReplyDelete
 5. sandiyar.. ngra peyar kuda vaukka vidala..
  virumaandi nu matha vachanga...
  inge peyar illanalum.. payarin vadivame solldhu idhu muslimghalai patri na padam than nu...
  yet pple blindly says that the film nowhere affects muslims....

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)