Pages

Wednesday, January 30, 2013

முஸ்லிம்களின் விஸ்வரூபம்...! காரணம் என்ன?
 • திரு கமல்ஹாசன் மீது முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது. அவரது திரைப்படத்தை அநியாயமாக தடுப்பதற்கு முஸ்லிம்களிடம் எந்த வஞ்சமும் இல்லை.

 • சமீப ஆண்டுகளில் ஒரு தரப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து ஊடகங்கள் சித்தரிப்பதால் பொதுவான முஸ்லிம்களின் வாழ்க்கை பெரும் சங்கட்த்திற்கு உள்ளாகியிருக்கிறது.

 • எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தரப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் ஒரு தரப்பாகவே காட்சிகளையும் செய்திகளையும் வெளியிடுகின்றன. அத்தோடு தங்களது கற்பனைக்கு தோன்றியதை உண்மை போல சித்தரிக்கின்றன,

 • இதனால் பொது இடங்களில் கோடிக்கணகான முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிற நிராகரிக்கப்படுகிற சூழல் அதிகரித்து வருகிறது. சாதாரண முஸ்லிம்கள் கல்விக் கூடம் தொடங்கி அரசு அலுவலம் வரை ஒரு வகை தீண்டாமைக்கு ஆளாகிவருகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் இதனால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது.

 • கமல் ஹாசனது திரைப்படம் முஸ்லிம்களை ஒரு தரப்பாக மேலும் அதிகமாக புண்படுத்தியிருப்பதாக சொல்வதை திரு கமல் ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கலைப்படைப்பு சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மரியாதை சம்பந்தப்பட்டது.

 • அவருடை வருமானம் அவருக்கு முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் மூலம் ஒரு பெரும் சமுகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படுவது எந்த வகைய்லும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 • இந்தப்படத்தில் தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் கோவை போன்ற நகரங்களில் தங்கியிருந்த்தாக காட்டப்படுகிறது.  பெரும் சோகத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக அமைதி நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற கோவை போன்ற நகரங்களில் அவநம்பிக்கையையும் மத நல்லிணக்கத்தையும் பாதித்து விடக்கூடியது.

 • கட்ட பொம்மன் என்றால் சிவாஜி கணேசனை நினைவு கூறுகிற அளவுக்கு நம்முடைய தமிழகத்து மக்கள் சினிமாவோடு ஒன்றிப்போனவர்கள். இத்தகைய மக்களிடையே கமல் ஹாசன் போன்ற மூத்த கலைஞர்கள் ஒரு சமூகத்திற்கு எதிரான வன்ம்மான கருத்துக்களை திணிப்பது நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலையை மேலும் சிரமப்படுத்தி விடும். ஏராளமான அப்பாவி பொதுமக்கள் மேலும்பாதிக்கப்படுவார்கள்

 • ஒரு தரப்பாக இந்த கொடுமையிலிருந்து அடுத்த தலைமுறையையாவது பாதுகாக்க வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இதை கமல்ஹாசனும் கலைத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 • இனிமேல் இத்தகைய கொடூரம் தொடராமல் தடுப்பதற்காக முஸ்லிம் சமுதாயம் நடத்துகிற போராட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்கான போராட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


  ஆக்கம் 
   கோவைஅப்துல் அஜீ பாகவி மற்றும் 
  ஷஃபாஅத் ரிஸ்வான் பின் புர்கான் அலி 

6 comments:

 1. சலாம் சகோ.சர்மிளா ஹமீத் ,

  //சாதாரண முஸ்லிம்கள் கல்விக் கூடம் தொடங்கி அரசு அலுவலம் வரை ஒரு வகை தீண்டாமைக்கு ஆளாகிவருகிறார்கள். //

  கொலை வெறியுடன் வழிமொழிகின்றேன்..! :-))

  என்னுடைய அனுபவம்....நான் படித்த கல்லூரியில் முகத்தில் தாடி வைக்க கூடாது என்பது சட்டமாம் ..ஆனால் நமக்குதான் அதில் உடன்பாடு கிடையாதே !!! இதனால் HOD க்கும் நமக்கும் ஆகாது...பலமுறை பிராக்டிகல் மதிப்பெண்ணில் கைவைத்துள்ளனர் ! விட்டு தள்ளுவோம் எங்கையுமே திறமைக்குதானே வேலை..! ஆனால் உடன் படித்தவர்களும் ஆரம்பத்தில் நம்மை தீவிரவாதியாகவே பார்த்தனர்..(ஹி ஹி.) பின்னால் அதுவெல்லாம் சரியாகிவிட்டது..ஆனாலும் இப்போது கூட ஒரு மாற்று மத நண்பன் என்னை செல்லமாக கூப்பிடுவது " தீவிரவாதி " என்றுதான்..! :-))

  காவி தீவிரவாதத்தை அவர்களிடம் சொன்னால் " அப்புடியா " என்கிறார்கள் (அடேய்)... ம்ம்ம்..யாரை சொல்லி என்ன செய்ய ! எல்லாமே ஊடகத்தின் மகிமை !!!

  ReplyDelete
 2. நல்ல பதிவு. பாதுகாப்பின்​மையும் அவமரியா​தையும் மிக முக்கிய பிரச்சி​னைகள் கவனப்படுத்துகிறீர்கள். வாதப் பிரதிவாதங்க​ளையும், தர்க்கங்க​ளையும் தாண்டியது வாழ்க்​கையும், எதார்த்தமும். இசுலாமியத் தரப்பு வாதங்களில் ​தோற்கலாம். ஆனால் நீங்கள் ​சொல்லும் விசயங்கள் மறுப்பதற்கில்​லை. நிரந்தரத் தீர்வு சமூகப் பிரச்சி​னைக​ளை எதிர்​கொள்வதற்கு இசுலாமியர்கள் இசுலாமியர்களாக​வே அணிதிரள்வதி​லோ, தலித்கள் தலித்களாக​வே அணிதிரள்வதி​லோ இல்​லை. ஒரு நாட்​டைச் ​​சேர்ந்த அ​னைத்து மனிதர்களும் மதம் சாதி இனம் கடந்து ஒன்றி​ணைவதில்தான் வாழ்வு இருக்கிறது.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  மிக அருமையான கருத்தை பதிவிட்டுருக்கிறீர்கள்.இனி படம் எடுப்பவர்கள் எந்த ஒரு சமுதாயத்தையும் மனம் புண்படுத்தாமலும் கேலிக்கு உட்படுத்தாமலும் கதை அமைத்து படம் எடுத்தால் நல்லது. இது போன்ற போராட்டங்கள் அவர்களுக்கு உணர்த்தி இருக்கும் என நினைக்கிறேன்
  kalam

  ReplyDelete
 4. You analysed everything in detail. You brought many hidden truths for our anger.
  Its a nice article.
  Thank u indeed.
  By
  Sheik Mujibur Rahman.

  ReplyDelete
 5. சலாம் தங்கச்சி...

  பதிவை படிக்கையிலே தோன்றியது, என்னடா எழுத்து நடை வேறு மாதிரி இருக்கேன்னே....

  பகிர்விற்கு நன்றி...

  ReplyDelete
 6. படம் பார்த்து விட்டு வந்து அதில் எங்கே தவறு இருக்கினது என்று கூறுங்கள்.

  (நான் என்னை சார்ந்த சமூகத்தினர் நாம் தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் இந்த சர்ச்சைக்கு பின் நாம் தமிழர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு முதல் முறையாக வந்துள்ளது. எனக்கு 30வயது.

  இந்த விடயத்துக்கு நாம் இஸ்லாமியருக்கு நன்றி செலுத்துகின்றோம். (எங்களுக்கு சூடு சொரணை வர பண்ணியதுக்கு)

  என்னுடன் படம் பார்த்த நண்பன் ஒருவனின் விமர்சனம்
  http://karundhel.com/2013/01/viswaroopam-2013-tamil.html

  படத்தில் சில திருத்தங்கள் செய்யலாம். ஆனால் முஸ்லிம் அமைப்புகள் கோரியது முற்றான தடை.
  எங்களுக்கும் ஒரு நேரம் வரும் அப்போது பார்த்து கொள்கின்றோம்

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)