Pages

Thursday, May 22, 2014

உங்கள் குழந்தைகள் தட்டில் உணவா? விஷமா?


              அய்யே பாலா அதெல்லாம் என் பிள்ளைங்க குடிக்காதுங்க.. !!
            முட்டையா உவ்வே.... ஓடியே போயிருவாங்க...!
அப்போ காய்கறி?
அதெல்லாம் என் பசங்க கண்ணுல கூட பாக்காதுங்க.... !


                     இப்படி சொல்லிவிட்டு பிள்ளைகளுக்கு இன்ஸ்டன்ட் நூடுல்சும் , செயற்கை குளிர்பானங்களும்,பாக்கட்டில் அடைத்த உணவுப்பண்டங்களும், பிஸ்கட்டும் கேக்கும் தருவது இப்பொழுது பெற்றோர்கள் மத்தியில் ஒரு பேஷனாகவே ஆகி விட்டது.. இன்னும் சொல்லப்போனால் அது அவர்களுக்கு ஒரு பெருமை தரக்கூடிய விஷயம் என்று நினைத்துக்கொள்ளும் மனப்பான்மையை இன்று பெரும்பாலும் பார்க்க முடியுது...
           
               இந்த மாதிரி உணவுகள்ல உள்ள கெடுதல்கள், பற்றி எடுத்து சொல்லி இதெல்லாம் சாப்டாதிங்கன்னு சொல்லப்போனா நம்மள எதோ வேற்றுக்கிரகத்துல இருந்து வந்து இறங்குன வினோத உயிரினத்த பாக்குற மாதிரி பாக்குறாங்க..! :(
           
                    ஒரு சில வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு செயற்கை உணவுகள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்றவை அவர்கள் வேலைப்பளுவை குறைப்பதால்  யூஸ் செய்றதா சொல்றாங்க..! இன்னும் சிலரோ எப்போதாச்சும் ஒரு தடவை தானே.. ?? புள்ள ஆசைப்பட்டு கேக்கும் போது தராம இருக்க முடியுமா அப்படி எல்லாம் கேட்டு வாதாடுவாங்க.. அவங்ககிட்ட நான் ஒரே ஒரு கேள்விதான் கேப்பேன்... இப்புடி கேக்குறதுக்கு என்னை மன்னிக்கணும்..! வேலை அதிகமா இருக்குன்னு அல்லது பூச்சிக்கொல்லி மருந்து அழகான பாட்டில்ல ஊத்தி இருக்கு அத பார்த்து உங்க புள்ள ஆசைப்பட்டு கேக்குதுன்னு  கொஞ்சூண்டு தானேன்னு குடிக்க சொல்லுவிங்களா? கிட்டத்தட்ட இதே போல சொல்லப்போனா பூச்சிகொல்லியை  விட பல மடங்கு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் தான் நீங்கள் புள்ள ஆசப்படுதுன்னு வாங்கி கொடுக்கும் செயற்கை உணவுகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கு....!


       


                      ஏற்கனவே நம்ம சாப்புட்ற இயற்கையான உணவுகள் லேயே அளவுக்கு அதிகமான உரங்களும் பூசிக்கொல்லிகளும் சேர்த்து நம் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமா விஷமாக்கிக்கிட்டு இருக்காங்க.. இது போதாதுன்னு  இது போல செயற்கை உணவுகள நம்ம குழந்தைகளுக்கு கொடுத்து அவங்க உடம்ப விஷமாக்கி வேண்டாத நோய்களுக்கு வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமா?
                         
                                 நோய் வந்த பின் டாக்டர் தர்ற மருந்துகளை எவ்ளோ    சிரமப்பட்டு  எப்பாடுபட்டேனும்  குழந்தைகளை சாப்பிட வைக்க முயற்சி செய்யும் நாம்..,  அதே முயற்சியை, சிரமத்தை..நோய் வராமல் காக்க உதவும் இயற்கை உணவுகளை, காய்கறி,பழங்கள் போன்றவற்றை தருவதில் ஏன் எடுப்பதில்லை?
           
                             சிந்திங்க..! செயல்படுங்க..! முடிந்த வரை செயற்கை உணவுப்பொருட்களை உங்கள் குழந்தைகளுக்கு தராதிங்க..! நீங்களும் சாப்டாதிங்க.. ப்ளீஸ்..!!!!


உங்கள் சகோதரி ,
ஷர்மிளா ஹமீத்.

20 comments:

 1. பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க....

  பாராட்டவும் செய்வேன்........திட்டவும் செய்வேன் ..ஒகேயா :)

  ReplyDelete
  Replies
  1. நீங்க தானே இந்த விஷயத்துல எனக்கு வழிகாட்டி மேடம்.. நன்னா திட்டுங்கோ :)

   Delete
 2. ஷர்மிமா இன்றைய காலத்துக்கு ஏத்தபதிவு இது ஒருபடிப்பினையா எல்லோர்வீட்டிலும் எடுக்கனும்

  ReplyDelete
  Replies
  1. இன் ஷா அல்லாஹ் ம்மா...

   Delete
 3. ஷார்ட் அண்ட் ஸ்கேரிங் பதிவு... எங்க வீட்டில் நூடுல்ஸ் நிறுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டன.... பிறரும் சிந்திக்க வேண்டும். நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டிலும் நிறுத்தி ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்கும் க்கா... ஆனா நம் உறவுகளிடம் சொல்லி புரிய வைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. :(

   Delete
 4. நல்ல பதிவு ஷர்மிளா. இப்ப நானும் நிறைய unrefined சீனி, உப்பு எண்ணெய் போன்றவைகளுக்கு மாறிட்டே. வீட்டிற்கு உறவுகள் நட்புகள் வரும்போது, டீ போட்டுகிட்டே பேசும்போது, சீனியைப் பார்த்து இது என்ன அப்படின்னு கேப்பாங்களா, உடனே நம்ம புராணத்தை எடுத்து விட்டு... அப்படியே அவங்களையும் “உஜாலாவுக்கு மாற” வைக்க யோசிக்க வைக்க வேண்டியது...

  உறவுகள், நட்புகளிடம் இப்ப ஓரளவுக்கு விழிப்புணர்வு இருக்குது. ஆனா மாற விடாம தடுப்பது ஒண்ணு சோம்பல் அல்லது இயற்கை உணவுகளின் அதிபயங்கர விலை!!

  //இன்னும் சிலரோ எப்போதாச்சும் ஒரு தடவை தானே.. ?? புள்ள ஆசைப்பட்டு கேக்கும் போது தராம இருக்க முடியுமா அப்படி எல்லாம் கேட்டு வாதாடுவாங்க//

  இதை என் மகன்கள்தான் என்னிடம் கேட்பாங்க. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் - ஹராமானதை ஒருமுறை மட்டும்தானே என்று சாப்பிடுவோமா என்றுகூட கேட்டுவிட்டேன் - சில விஷயங்களில் ‘இந்த ஒருமுறைதான்’ என்று சொல்கிறார்கள். ரொம்பக் கஷ்டமாருக்கு. இருந்தாலும் நூடுல்ஸ் போன்றவை நிறுத்தி ரொம்ப காலமாச்சு. இன்ஷா அல்லாஹ் மீதியையும் அப்படியே சீக்கிரம் நிறுத்திவிடணும்.

  வாங்காமல் இருந்துவிட முடிகிறது. ஆனால், சில சமயம் வீட்ட்ற்கு வருபவர்கள் பரிசாக வாங்கி வரும்போது என்ன் செய்ய?? இப்படிப் பல தடைகள் இருந்தாலும்... பின்வாங்குவதாக இல்லை. :-)

  ReplyDelete
  Replies
  1. /அப்படியே அவங்களையும் “உஜாலாவுக்கு மாற” வைக்க யோசிக்க வைக்க வேண்டியது...

   உறவுகள், நட்புகளிடம் இப்ப ஓரளவுக்கு விழிப்புணர்வு இருக்குது. ஆனா மாற விடாம தடுப்பது ஒண்ணு சோம்பல் அல்லது இயற்கை உணவுகளின் அதிபயங்கர விலை!! //
   ஒரு சிலர் நம்ம சொல்றத பாசிடிவ்வா எடுத்துக்குறாங்க சிலர் இப்படி ஒன்னு ஒண்ணா பார்த்து சாப்புடுறது இந்த அவசர உலகத்துல சாத்தியம் இல்ல அப்படின்குற மாதிரியும், தேவை இல்லாம நம்ம அதிக பணம் செலவழிக்கிற மாதிரியும் பேசி ஒரு வித கில்டியா பீல் பண்ண வச்சு நம்மள டிஸ்கரேஜ் பண்ணு வாங்க... :(

   // சில விஷயங்களில் ‘இந்த ஒருமுறைதான்’ என்று சொல்கிறார்கள். ரொம்பக் கஷ்டமாருக்கு// இத எங்க வீட்டுக்காரரு சொல்லுவாரு.. ரொம்ப எல்லாம் யோசிக்க கூடாதுன்னு.. இன் ஷா அல்லாஹ் சீக்கிரமே அவரும் மாறனும்.. இல்லன்னா மாத்தணும் :)

   //இப்படிப் பல தடைகள் இருந்தாலும்... பின்வாங்குவதாக இல்லை. :-)// இன் ஷா அல்லாஹ் அக்கா...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

   Delete
 5. எங்க வீட்டிலும் நூடுல்ஸ் சாப்பிடுவதை நிறுத்தியாச்சு. :) :) குட் இன்ஃபர்மேஷன். ஜஸக்கல்லாஹ் ஹைரன்

  ReplyDelete
  Replies
  1. குட் முபி... வ இய்யகும் மா..

   Delete
 6. ஜங் புட்ஸ் (குப்பை உணவுகள்) குறித்த விழிப்புணர்வு இன்னும் நிறைய ஏற்படுத்தப் பட வேண்டியது இருக்கிறது.

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அண்ணே.. இன் ஷா அல்லாஹ் நம்மால் ஆன விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்..!

   வருகைக்கும் கருத்துக்கும் ஜசாக்கல்லாஹு க்ஹைரா அண்ணே..! :)

   Delete
 7. மாஷா அல்லாஹ் நல்ல விழிப்புணர்வு பதிவு. சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கீங்க அக்கா.

  ஏற்கனவே நீங்க சொல்லி தான் சர்க்கரையை நிறுத்திட்டு வெல்லத்துக்கு மாறினேன். அல்லாஹ் நாடினால் இனி எப்போவாவது சாப்பிடும் நூடுல்ஸையும் நிறுத்திட வேண்டியதுதான். :)

  அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக அக்கா.

  ReplyDelete
  Replies
  1. //ஏற்கனவே நீங்க சொல்லி தான் சர்க்கரையை நிறுத்திட்டு வெல்லத்துக்கு மாறினேன். அல்லாஹ் நாடினால் இனி எப்போவாவது சாப்பிடும் நூடுல்ஸையும் நிறுத்திட வேண்டியதுதான்.//
   அல்ஹம்துலில்லாஹ்..!! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷர்மிளா

   /அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக //
   ஆமீன் தம்பி அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலி வழங்க போதுமானவன். வெல்லத்தை விட கருப்பட்டி நல்லதுன்னு நம்மாழ்வார் சொல்லி இருக்கார்... கருப்பட்டியும் சேர்த்துக்கோங்க தம்பி.. இன் ஷா அல்லாஹ்

   வருகைக்கும் கருத்துக்கும் ஜசாக்கல்லாஹ் தம்பி..

   Delete
 8. மாஷா அல்லாஹ் நல்ல விழிப்புணர்வு பதிவு. சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கீங்க அக்கா.

  ஏற்கனவே நீங்க சொல்லி தான் சர்க்கரையை நிறுத்திட்டு வெல்லத்துக்கு மாறினேன். அல்லாஹ் நாடினால் இனி எப்போவாவது சாப்பிடும் நூடுல்ஸையும் நிறுத்திட வேண்டியதுதான்.

  அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக அக்கா.

  ReplyDelete
 9. உம் நூட்லஸ் இல்லாம வேற ஒண்ணுமே சாப்புடற மாதிரி தெரியல.. முயற்சி செய்வோம்.. :)

  ReplyDelete
 10. > இந்த மாதிரி உணவுகள்ல உள்ள கெடுதல்கள், பற்றி எடுத்து சொல்லி இதெல்லாம் சாப்டாதிங்கன்னு சொல்லப்போனா நம்மள எதோ வேற்றுக்கிரகத்துல இருந்து வந்து இறங்குன வினோத உயிரினத்த பாக்குற மாதிரி பாக்குறாங்க..!

  பொறாமையால் சொல்லுவதாக ஒரு சிலர் நினைக்கிறாங்க!

  > பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க....

  இப்படி எழுத Room போட்டு சிந்திப்பீங்களோ?!

  ReplyDelete
 11. ASssalaamu alaikum varahmathullaah!

  அவசியமான பதிவு சிஸ். பட் பழக்கத்தை மாத்றதுதான் ரொம்ப கஷ்டம் :(

  ReplyDelete

பதிவு பிடிச்சிருந்தா பாராட்டுங்க...!! இல்லன்னா திட்டுங்க..!! ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)